ருவருடைய வெற்றி- தோல்வியை, இன்ப- துன்பத்தைத் தீர்மானிப்பது அவரவர் மனமே யாகும். அந்த மனதின் எதிர்மறை எண்ணத்தை, நேர்மறை சக்தியாக மாற்றுவதே மணி. அந்த மணிக்கு உயிரூட்டி சக்தியைத்தருவதே மந்திரம். மணியும் மந்திரமும் ஒன்றுசேர துணைபுரிவதே ஔஷதம். மணியாகிய ஸ்படிக லிங்கத்தில் மந்திரங்களால் அர்ச்சிக்கப்பட்ட விபூதியை, பன்னீர் இலையென்னும் ஔஷதத்தில் வைத்துத் தரும்போது, அது அளவில்லாத பலன்களை வாரிவழங்குகிறது.

stone

வாதம், பித்தம், சிலேஷ்மம் மாறுபடும் போது, உடலுக்கு நோய் உண்டாவதைப் போல், மனிதர்களின் மூன்று குணங்களான ஸத்வ, ரஜோ, தமோ குணங்கள் சமநிலை தவறும்போது, மனம் துன்பப்படுகிறது. மூன்று குணங்களையும் சமன்படுத்துவதற்காக, சந்திரகாந்தக்கல், நவரத்தினங்கள், உப ரத்தினங்கள் போன்றவற்றை அணிகிறோம்.

நவரத்தினங்களிலிருந்து ஒன்பதுவிதமான வண்ணக் கதிர்வீச்சுக்கள் வெளியேறிக் கொண்டிருப்பது சாதாரணமாகப் பார்த்தால் தெரியாது. ஆனால் முப்பட்டைக் கண்ணாடியைக்கொண்டு பார்த்தால் நவரத்தினங்கள் வெளியிடும் வண்ணக் கதிர்வீச்சுக்களைக் காணலாம். அவை நவகிரகங்களின் அருளைப் பெற்றுத்தரும். முறையான மந்திரங்களை ஓதி உயிரூட்டப்படும் மணியே பலன்தரும்.

Advertisment

ஒவ்வொரு ரத்தினக் கல்லுக்கும் யார் அதிதேவதை என்று வராஹமிகிரரின் பிருஹத் சம்ஹிதா சொல்கிறது:

வெள்ளை நிற அறுகோண வைரம்- இந்திரன்.

பாம்பின் வாய்போன்ற கறுப்புநிற வைரம்- யமன்.

Advertisment

வாழைத் தண்டு நிறம்- விஷ்ணு.

கர்ணிகார பூவின் நிறம்- வருணன்.

நீலம், சிவப்பு கலந்தது- அக்னி.

அசோக மலர் வண்ணம்- வாயு.

ராசியை மட்டும் வைத்து ரத்தினங்களைத் தேர்ந்தெடுப்பது ஒரு தவறான அணுகுமுறை. உதாரணத்திற்கு மேஷ ராசியும், கும்ப லக்னமுமுடைய ஒரு ஜாதகருக்கு பவழம் மரணத்திற்கு ஒப்பான கண்டத்தைத் தரும். கும்ப லக்னத்திற்கு செவ்வாய் மாரகாதிபதி. முழுமையாக ஜனன ஜாதகத்தையும் நடப்பு தசாபுக்தியையும் கணக்கில் கொள்ளாமல், ஜோதிடம் அறியாத வர்த்தக ரீதியிலானவர்களிடம் ராசிக்கல் மோதிரம் வாங்கி அணிவது கெடுதலையே தரும். இதுதவிர, குறையுள்ள ரத்தினங்களை அணிவது வாழ்க்கையையே பாதிக்கும்; செல்வம், குழந்தை, குடும்பத்தையே பாதிக்கும் என்பதே வராஹமிகிரரின் பிருஹத் சம்ஹிதாவில் கூறப் படும் கருத்து.

ரத்தினப் பரிட்சை

*மாணிக்கக் கல்லை பாலில் போட்டால் பாலில் சிவப்பு நிறம் படரவேண்டும்.

*நுரையுள்ள பாலில் முத்தைப் போட்டால் அது மிதக்க வேண்டும்.

*பவளம் பாலில் விழுந்தவுடன் பால் சிவப்பாக மாறவேண்டும்.

*நல்ல மரகதத்தை குதிரையின் மூக்கின் அருகே கொண்டு சென்றால் அது தும்ம வேண்டும்.

*சந்தனம் அரைக் கும் கல்லின்மீது புஷ்ப ராகத்தை வைத்தால் தாமரைப் பூவின் வாசம் வரும்.

*வைரத்தின் கீழ்ப்பகுதியில் விரல் வைத்தால், விரலின் பிம்பம் மேல்புறத்தில் தெரியக்கூடாது.

*பசும்பாலில் நீலக்கல்லைப் போட்டால் பால் நீலநிறமாக மாறவேண்டும்.

*நல்ல முத்தை மேல்நோக்கி உற்றுப்பார்த்தால் வானவில்லைப்போல ஏழு நிறங்கள் தெரியும்.

*மச்சங்கள், புள்ளிகள், விரிசல்கொண்ட முத்துகள் குறைபாடுள்ளவை.

*மெல்லிய கோடுகள் மற்றும் ஒளியற்ற தன்மை கொண்ட முத்துகளும் குறையுடையவை.

*பசும்பாலில் கோமேகத்தைப் போட்டால் பால் கோமியத்தின் வண்ணத் தைப் பெறவேண்டும்.

*இருட்டில் வைடூரியத்தை வைத்தால் அது பூனைக்கண்போல் ஜொலிக்கவேண்டும்.

*பொருத்தமற்ற வடிவம்கொண்ட வைரங்கள், முனைகள் உடைந்த துவார முள்ள வைரங்கள், ஒளியற்ற வைரங்கள், குமிழ்கள் உள்ள வைரங்கள், நிற பேதமுள்ள வைரங்கள், கீறல் உள்ள வைரங்கள் ஆகியவை குறைபாடுள்ளவை.

*சிவப்பு நிறமில்லாத பால் படிந்த மாணிக்கங்கள், புகை படிந்ததுபோல் தோற்றம்கொண்ட மாணிக்கங்கள், உடைந்த கரடுமுரடான ஒழுங் கற்ற வடிவம்கொண்ட மாணிக்கங்கள், துவார முள்ள மாணிக்கங்கள் குறைபாடு கொண்டவை.

stone

*மேடுபள்ளம் உடையவை, துவாரங் கள், கரும்புள்ளிகள், விரிசல் கொண்ட மரகதகற்கள் குறைபாடுள்ளவை. மேலும் ஒளியற்ற கற்களுள் குறைபாடுள்ளவை.

*கலங்கலான புஷ்பராகம், ஒளியில்லாத, கருநிறம் கொண்ட, மேடு பள்ளமான, வெண்மையான நீரோட்டம் கொண்ட புஷ்பராகக் கற்கள் குறையுடையவை.

*சில நாட்கள் நீலக்கல்லை வைத்துப் பார்த்து நல்ல பலனளிக்கிறதா என்பதை அறிந்தபிறகே மோதிரத்தில் பதித்து அணியவேண்டும். தீயபலன் அளித்தால் அவை குறையுடையவை.

*பவழங்கள் பிளவுபட்டோ, கரும்புள்ளிகளுடனோ, நிறம் வெளிறிப் போயோ, ஓரங்கள் ஒடிந்தோ, துளை களுடனோ இருந்தால் அவை குற்றமு டையவை.

*கரும்புள்ளிகளுடைய மாணிக்கத்தை அணிந்தால் நிறைய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பழுதடைந்த மாணிக்கம் இறப்பைக்கூட தந்துவிடும்.

ஆயகலை அறுபத்தி நான்கில் ஒன்றாகிய மணிநோட்டம் (ரத்தினப் பரீட்சை) பார்ப்பவர்கள் குறைந்துவிட்டபடியால் தோஷமில்லாத நவரத்தினங்களை வாங்குவது கடினம். இதுதவிர, ராசிக்கல் என்று விற்கப்படுவை பெரும்பாலும் கண்ணாடிக் கற்களாக இருப்பதால், அவை வாங்குபவர்களுக்குப் பலனளிக்காமல், விற்பவருக்கே பயனளிக்கிறது.

வைரம், நீலம், மரகதம், பச்சைக்கல் (அகேட்), மாணிக்கம், சிவப்புக்கல் (பிளட் ஸ்டோன்), வைடூரியம், அமெதிஸ்ட், விமலக, ராஜமணி (க்வார்ட்ஸ்), ஸ்படிகம், சந்திரகாந்தம், சௌகந்திகம், ஓபல், சங்கு, நீலநிறக்கல், புஷ்பராகம், பிரம்ம மணி, ஜோதிரஸ, சஸ்யக, முத்து, பவளம் ஆகிய இருபத்தியிரண்டும், வளமான வாழ்வைத் தருபவையே. நவரத்தினங்களைப் பயன்படுத்தும்போது, அதிக எச்சரிக்கைத் தேவைப்படுகிறது. எல்லாராலும், விலையுயர்ந்த ரத்தினங்களை வாங்கவும் முடியாது. ஜோதிடர்களின் ஆலோசனையைப்பெற்று, பக்க விளைவுகள் இல்லாத, விலை குறைந்த, உபரத்தினங்களை அணிந்து பயனடைவதே நல்லது.

ஸ்படிகம்

இது மனோகாரகனாகிய சந்திரனுடன் தொடர்புடையது என்பதால், எல்லா ராசிக்காரர்களும், ஸ்படிகத்தை அணிந்து பயன்பெறலாம். பூமிக்கடியில் புதைந்துபோன நீர், பாறைகளாக உருமாறி இருக்கும்.

அந்த நீர்ப்பாறைகளை வெட்டியெடுத்து, அதற்குள் அழுக்குகள் இல்லாத தூய்மையான கற்களைத் தேர்ந்தெடுத்து, அதனை பலவித அளவுகளில் பட்டை தீட்டி உருண்டையாகத் தயாரிக்கப்பட்ட ஸ்படிகத்தை வெள்ளியில் மாலையாக்கி அணியலாம். ஸ்படிக மாலையை ஆண்- பெண் என்ற வேறுபாடில்லாமல் யார் வேண்டுமானாலும் அணியலாம். ஸ்படிகமணி மாலையுடன் வேறு எந்த மணிகளையும் சேர்த்து அணியக்கூடாது. குளிக்கும்பொழுது, கழுத்தில் ஸ்படிக மாலையோடு குளிப்பது நல்லது. சுத்த ஸ்படிகம் அமைதியான சூழ்நிலையில் எழும் சப்தங்களை கிரகித்துக்கொள்ளும்.

ஸ்படிக மாலையை கையில் வைத்து தியானத்தில் ஈடுபடலாம். ஸ்படிக மாலையில் கை வைத்தவுடன் ஒருவித குளிர்ச்சியை உணர்ந்தால், அது நல்ல உயர்தர ஸ்படிக மாலை. இந்த உயர்வகை ஸ்படிக மாலையை நீரில் போட்டால் ஸ்படிகம் கண்ணுக்குத் தெரியாது. ஸ்படிகத்தைத் தூய்மையாக்க, வாரம் இரு முறையாவது தண்ணீருக்குள் குறைந்தது நான்குமணி நேரம் ஊறவிடவேண்டும். ஸ்படிக மாலையை இரவில் கழற்றித் தரையில் வைக்கவேண்டும்.

அப்போதுதான் பூமியின் ஈர்ப்பு சக்தியினால் மறுபடியும் ஈர்ப்புப்பெறும். தினமும் இதைச் செய்யவேண்டும். பௌர்ணமி, நிலவொளியில், பிரதி மாதம் வைத்திருப்பது மிகவும் சிறந்தது.

யஜுர் வேதம், "சிவன் ஜோதியாகவும், லிங்க ரூபமாகவும், ஸ்படிக ரூபமாகவும் இருக்கிறார்' என்று கூறுகிறது. ஸ்படிக விநாயகர், சிவலிங்கம் போன்றவற்றைப் பூஜையறையில் வைத்துப் பூஜிக்கும்போது அபரிதமான சக்தி ஏற்படும். மகாமேரு ஸ்படிகத்தை வெள்ளி அல்லது தாமிரத் தட்டில் வைத்து பூஜையறையில் வைத்து அபிஷேகம் செய்துவந்தால் சகல செல்வத்துடன் லட்சுமி கடாட்சம் சேரும்.

முக்திலிங்கமாக கேதார்நாத்திலும், வரலிங்கமாக நீலகண்ட ஷேத்திரத்திலும் , மோட்ச லிங்கமாக சிதம்பரத்திலும், போக லிங்கமாக சிருங்கேரியிலும், யோகலிங்கமாக காஞ்சியிலும், ஸ்படிக லிங்க வடிவில் ஈசன் அருள்பாலிக்கிறார். திருவெண்காட்டிலும், திருநெல்வேலி சங்கரன்கோவிலிலும் நடைபெறும் ஸ்படிக லிங்க வழிபாடு விசேஷ மானது.

ஸ்படிக மாலை அணிவது நமது உடலில் அதிகமாக உள்ள உஷ்ணத்தைக் கட்டுபடுத்தும். ஸ்படிகம், தெய்வத்தின் அருள், மனஅமைதி, நல்ல சிந்தனை, தெளிவான அறிவு, தீர்க்கமான முடிவு எடுத்தல் போன்ற அற்புதங்களை நமக்கு அளிக்கும். ரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு ஸ்படிக மாலை சிறந்த மருந்தாகும். 108 ஸ்படிகமணிகள் கொண்ட மாலை, அதிர்வலைகளை நம்மைச் சுற்றிலும் பரவச்செய்து, ஒரு அரண்போல் நம்மைப் பாதுகாக்கும்.பந்து வடிவிலுள்ள ஸ்படிகத்தை வீட்டின் வாயிலில் மாட்டினால் சண்டை, சச்சரவுள்ள வீடுகூட அமைதி பெறும். அபிசார தோஷம் (ஏவல்- பில்லி- சூனியங்களால் பிரச்சினை) உள்ளவர்கள் ஸ்படிக லிங்கத்தின்முன் மனம் ஒன்றி, தினமும் அரைமணி நேரம் தொடர்ந்து இருபத்தோரு நாட்கள் தியானம் செய்தால் எல்லா தோஷங்களிலிருந்தும் விடுபடலாம்.

செவ்வாய்க்கிழமை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, முதல்தரமான, ஸ்படிக மாலை அணிந்து நல்ல எண்ணத்துடன், அங்கசுத்தி, தந்தசுத்தி முதலானவற்றைச் செய்துகொள்ளவேண்டும். ஆசாரமாக ஸ்நானஞ் செய்தபின், விபூதியை நீரில் குழைத்து அனுஷ்டானப்படி தரித்துக்கொண்டு, கணபதியைத் துதித்திட வேண்டும். பின்பு ஸ்ரீசிவபஞ்சாஷரத்தை நூற்றெட்டுமுறை ஜெபித்து, சிவனை தியானம் செய்தல்வேண்டும். பூஜையை முடித்தபின், தங்கள் மனத்திலிருக்கிற கோரிக்கைகளை முடித்துக்கொடுக்க வேண்டுமென்று சிவனைப் பிரார்தித்தால், நினைத்த காரியம் கைகூடும்.

(தொடரும்)

செல்: 77080 20714