பேரதிர்ஷ்டம் தரும் ராசிக்கல் ரகசியங்கள்! -ஆரூடச்செம்மல் அருண் ராதாகிருஷ்ணன் 6

/idhalgal/balajothidam/zodiac-secrets-bring-misfortune-arutachemmal-arun-radhakrishnan6

ஆரூடச்செம்மல் அருண் ராதாகிருஷ்ணன்

செயற்கைக் கற்களைப்பதித்து தங்க நகைகளின் எடையைக்கூட்டி கொள்ளை லாபமடையும் வியாபாரிகள், அவற்றையே பரிகாரக்கற்கள் என்ற பெயரிலும் விற்கிறார் கள். அலங்காரகற்களை அணிவதால் தோஷங்கள் நீங்குவதில்லை. அவை மீன் தொட்டிகளில் வைக்கப்படும் அழகான கற்களுக்கு சமமானவை. ரத்தினவியல் அறிந்தவர்களின் ஆலோசனையைப் பெற்று ரத்தினங்களை வாங்கி, குறிப்பிட்ட நாளில் அணிந்தால் மட்டுமே பயன்பெறலாம். அதிக விலைகொடுத்து ரத்தினகற்களை வாங்கமுடியாதவர்கள் உபரத்தினகற்களை அணிந்து ஓரளவு நல்ல பலன்களை அடைய முடியும்.

முருகனின் ஆறுமுகத் தத்துவமாக அமைந்த குண்டலினி சக்தியின் ஆறு ஆதாரங்களும் சரிவர இயங்கினால், நம்மால் எதையும் சாதிக்கமுடியும் என்பதே உண்மை. குண்டலினி சக்தியின் ஓட்டம் தடைப்படும்போது மட்டுமே துயரம் நம்மை நெருங்குகிறது. உடலிலுள்ள ஆதார சக்கரங்கள் தடையில்லாமல் இயங்கும்போதுதான் ஞானமும் மேன்மையும் நல்ல சிந்தனையும் பிறக்கும். நம் உடலுக்குத் தேவையான பஞ்சபூத சக்திபெற நவரத்தினங் களிலுள்ள ஒளிக்கதிர்கள் பெரிதும் நமக்குத் துணைபுரிகின்றன. ரத்தினங்களையோ, உபரத்தினங்களையோ அணிந்து முறையான ஸ்வர தியானம் செய்தால் காலனையும் வெல்லலாம

ஆரூடச்செம்மல் அருண் ராதாகிருஷ்ணன்

செயற்கைக் கற்களைப்பதித்து தங்க நகைகளின் எடையைக்கூட்டி கொள்ளை லாபமடையும் வியாபாரிகள், அவற்றையே பரிகாரக்கற்கள் என்ற பெயரிலும் விற்கிறார் கள். அலங்காரகற்களை அணிவதால் தோஷங்கள் நீங்குவதில்லை. அவை மீன் தொட்டிகளில் வைக்கப்படும் அழகான கற்களுக்கு சமமானவை. ரத்தினவியல் அறிந்தவர்களின் ஆலோசனையைப் பெற்று ரத்தினங்களை வாங்கி, குறிப்பிட்ட நாளில் அணிந்தால் மட்டுமே பயன்பெறலாம். அதிக விலைகொடுத்து ரத்தினகற்களை வாங்கமுடியாதவர்கள் உபரத்தினகற்களை அணிந்து ஓரளவு நல்ல பலன்களை அடைய முடியும்.

முருகனின் ஆறுமுகத் தத்துவமாக அமைந்த குண்டலினி சக்தியின் ஆறு ஆதாரங்களும் சரிவர இயங்கினால், நம்மால் எதையும் சாதிக்கமுடியும் என்பதே உண்மை. குண்டலினி சக்தியின் ஓட்டம் தடைப்படும்போது மட்டுமே துயரம் நம்மை நெருங்குகிறது. உடலிலுள்ள ஆதார சக்கரங்கள் தடையில்லாமல் இயங்கும்போதுதான் ஞானமும் மேன்மையும் நல்ல சிந்தனையும் பிறக்கும். நம் உடலுக்குத் தேவையான பஞ்சபூத சக்திபெற நவரத்தினங் களிலுள்ள ஒளிக்கதிர்கள் பெரிதும் நமக்குத் துணைபுரிகின்றன. ரத்தினங்களையோ, உபரத்தினங்களையோ அணிந்து முறையான ஸ்வர தியானம் செய்தால் காலனையும் வெல்லலாம் என்பது சித்தர்களின் கருத்து.

stones

மணிப்பூரகம்

நாபிப்பிரதேசத்தில் சுவாதிட்டானத் தின் மேலாகப் பத்து இதழ்கள் கொண்ட பிரகாசமான மஞ்சள்நிறத் தாமரை. நெருப்பு ஜுவாலையை மையத்தில் கொண்டது இந்தச் சக்கரம். இந்த சக்கரத் திலிருந்து தாமரை இதழ் போன்ற பத்துயோக நாடிகள் கிளம்புகின்றன. இதன் மூலக்கூறு நெருப்பு. எழுபத்திரண்டாயிரம் நாடிகளும் சந்தித்து மீண்டும் கிளைகளாகப் பிரிந்து உடலெங்கும் பரவிச் செல்கின்ற மையம் இதுதான். இந்த சக்கரத்திலிருந்து தாமரை இதழ் போன்ற பத்துயோக நாடிகள் கிளம்புகின்றன. மணிப்பூரகத்தை உயிர்பிக்கும்போது அது உடலின் ஒவ்வொரு பகுதியிலும் சக்தி அலைகளைப் பரப்பி, உடல்முழுவதும் அதிர்வலைகளை எதிரொலிக்கிறது. இதற்குரிய கிரகம் குருவேயாகும். வயிறு, கல்லீரல், சிறுகுடல், மண்ணீரல் ஆகியவற்றின் செயல்பாடுகளுக்கு இந்த சக்கரமே ஆதாரமாகும். உடல் சக்தியையும், நல்ல ஆரோக்கியத்தையும் தீவிரப் படுத்தி உணர்ச்சிகளை விழிப்ப டையச் செய்கிறது. உடலின் உறுதி மற்றும் நல மேம்பாட்டுக்கு உறுதுனையாவது. இந்த சக்கரம் தூண்டப்பட்டவர்கள் கடும் உழைப் பாளிகளாக- எறும்பைப்போல் சுறுசுறுப்பானவர்களாக இருப்பார் கள். மஞ்சள் கால்சைட் எனும் உபரத்தினக்கல்லை அணிவதால், மணிப்பூரகத்தை உயிர்ப்பித்து பல நன்மைகளை அடையலாம்.

மஞ்சள் கால்சைட்

இந்தகல் வெளிர் மஞ்சள்முதல் அடர் மஞ்சள்வரை பல்வேறு மஞ்சள் நிறங்களில் கிடைக்கும். இந்த மஞ்சள்நிற உபரத்தினம், புத்திக்கூர்மை, ஆற்றலில் ஏற்றம், சுய நம்பிக்கை மற்றும் சுய மதிப்பைக்கூட்டும். பொதுவாக இரவில் தீய சக்திகளிடமிருந்தும் எதிரிகளிடமிருந்தும் பாதுகாக்க உதவும். சீன வாஸ்து சாத்திரத்தில், (ஃபெங் சுய்) குடும்ப அமைதியை உருவாக்கும் உபரத்தினமாக மதிக்கப் படுகிறது. எல்லா ராசிக்காரர்களும் இந்த கல்லை அணிந்து பயன்பெறலாம்.

மஞ்சள் கால்சைட் அணிவதால் ஏற்படும் பயன்கள்

= தங்கம் மற்றும் பணம் அதிகம் சேர உபயோகிக்க வேண்டிய கல்.

= மணிப்பூரகத்தைத் தூண்டுவ தால், கையில் பணபுழக்கமில்லை யென்று எண்ணாமல் இருக்கவைக்கும்.

= உடலில் வயிறு, குடல் சம்பந்த மான பிரச்சினைகளை நீக்கும்.

= ஆறாம் பாவமும், ஆறாம் அதிபதி யும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தால் இந்த கல்லை அணியலாம்.

= பணியில் ஊதிய உயர்வு, பதவி உயர்வு மிக நீண்ட நாட்களாக தள்ளி போகிறவர்கள் இந்த உபரத்தினத்தை அணிய மாற்றங்கள் உண்டாகும்.

= சிறுநீரகக் கோளாறு மற்றும் தசைவலி போன்ற இன்னல்கள் தீர உதவும்.

= நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்க உதவும்.

= புதிய வருமானம் வருவதற்கும், இருக்கும் வருமானம் தடைப்படாமல் இருக்கவும் உதவும்.

= தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும்.

= இந்தக் கல்லை அணிந்து தியானம் செய்தால், நல்ல தேவதைகளின் வழிகாட்டுதல் கிடைக்கும்.

= தொலையுணர்தல், கூடுவிட்டுக் கூடுபாய்தல் என்று சொல்லப்படும் ஒளி உடல் கொண்டு மற்றைய பரிமாணங்களில் வலம்வருதல் இந்த உபரத்தின தியானத்தால் கைகூடும்.

= நேர்மறையான எண்ணங்கள் அதிகரித்து எதிர்மறை எண்ணங்கள் மனதிலிருந்து நீங்கும்.

= ஜாதகத்தில் குரு யோககாரகனாக இருந்து நீசமடைந்தாலும் பாதகஸ் தானம் ஏறினாலும் இந்த கல் அணிந்திட தோஷங்கள் மறைந்து நல்ல மாற்றங் கள் உண்டாகும்.

= கல்வியில் சிறந்துவிளங்க அனு கூலமான அமைப்பை ஏற்படுத்தும்.

= மஞ்சள் கால்சைட் எனும் உபரத் தினத்தால் நினைத்த காரியங்களை நிறைவேற்றிக்கொள்ளலாம்.

_________________

ராசிக்கல்லைத் தேர்வு செய்யும் முறை

= மாணிக்கக் கல்லை பாலில் போட்டால் பாலில் சிவப்பு நிறம் படரவேண்டும்.

= முத்தை நுரையுள்ள பாலில் போட்டால் அது மிதக்கும்.

= பவளம் பாலில் விழுந்தவுடன் பால் சிவப்பாக மாறவேண்டும்.

= மரகதத்தை குதிரையின் மூக்கின் அருகே கொண்டுசென்றால் அது தும்மவேண்டும்.

= புஷ்பராகத்தை சந்தனம் அரைக்கும் கல்லின் மீது வைத்தால் தாமரைப் பூவின் வாசம் வரவேண்டும்.

= வைரத்தின் கீழ்ப்பகுதியில் விரல் வைத்தால், விரலின் பிம்பம் மேல்புறத்தில் தெரியக்கூடாது.

= நீலக்கல்லை பசும்பாலில் போட்டால் பால் நீலநிறமாக மாறும்.

= கோமேகத்தைப் பசும்பாலில் போட்டால் பால் கோமியத்தின் நிறத்தைக் காட்டும். *வைடூயம் இருட்டில் பூனைக்கண்போல் ஜொலிக்கும்.

= பவழத்தில் நாள்பட்ட, பூச்சி அரித்த பவழம் உபயோகத்திற்கு உகந்தது அல்ல.

= மாணிக்கக் கல்லைத் தலையணையின் அடியில் வைத்துத் தூங்கினால் தீய கனவுகளிலிருந்து விடுபடலாம்.

= வைடூரியம் அணிந்தால் வலிப்பு நோய் நீங்கும்,

= கோமேதகம் ரத்தபுற்று, வெண்குஷ்டம் போன்ற நோய்களை குணப்படுததும்

= மரகதம் பில்லி சூனியத்தால் வரும் ஆபத்தை நீக்கும்.

= லக்ன திரிகோணாதிபதிகளின் ரத்தினம் பதித்த மோதிரத்தை அணிந்துகொள்வது சிறப்பு தரும்.

= தசாநாதர் லக்னாதிபதிக்குப் பகைவரானால், அவரின் ரத்தினக்கல்லை அணியக்கூடாது.

= கோமேதகம் அணிந்தால், எதிரிகளை வெல்லலாம்.

= முத்து. விலகிசென்ற நட்புகளையும், உறவு களையும் சேர்த்துவைக்கும்.இதயத்தின் செயல் பாட்டிலுள்ள குறைகளை நீக்கி, புத்துணர்ச்சியை உண்டாக்கும்.

bala010121
இதையும் படியுங்கள்
Subscribe