ங்கும் கலப்படம், எதிலும் கலப்படம் என்ற நிலை வந்ததால், அசல் எது, போலி எதுவென்று கண்டுபிடிக்க முடியாமல் போய் விட்டது. கடையில் வாங்கும் தங்கம்கூட கருத்துப்போகிறது. பொதுமக்களால் எது உண்மையான ரத்தினம், எது போலியானது என்று அறியமுடியாததால் ஏமாற்றத்திற்கு உள்ளாகிறார்கள். விளக்கில் விழும் விட்டில் பூச்சிபோல், விளம்பரத்திற்கு பலியாகிறார்கள். ரத்தினப் பரிட்சையும், ஜோதிடமும் நன்கு அறிந்தவர்களின் ஆலோசனப் பெற்று, ரத்தினக்கற்களை வாங்கினால் பயன் பெறலாம். பழைய ஜோதிட நூல்களில், ரத்தினங்களை அணிவதால் பயன் உண்டாகு மென்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஒருவரின் மனதை மாற்றும் சக்தி, ரத்தினங்களுக்கும், உபரத்தினங்களுக்கும் உண்டு என்பது உண்மையே.

rasistone

மனஅழுத்தம், கோபம், பொறாமை, தாழ்வு மனப்பான்மை போன்ற எதிர்மறை சிந்தனைகளை "எனர்ஜி ஹீலிங்' மூலம் சரி செய்யலாம். தேர்ச்சிபெற்ற ஒருவர் "ரெய்கி' சிகிச்சை அளிப்பதன்மூலம் பாதிக்கப் பட்டவரின் மனதிலுள்ள எதிர்மறை எண்ணங்கள் நேர்மறையாக மாறும். ரெய்கி சிகிச்சைமூலம், சக்தி யானது ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு மாறிச்செல்லும். இதன்மூலம் தடைப்பட்ட சக்திமையம் சரிசெய்யப்படும். உடலின் சக்தி ஓட்டத்தை சீராக்கினால், மனதின் எண்ண ஓட்டம் சரியாகும். உபரத்தினங்களை சரியாகத் தேர்ந்தெடுத்து அணிவதால், ஆதாரசக்தியின் ஓட்டமும் சீராகும். அக்குபஞ்சர் புள்ளிகள், மெரிடியன்கள், சூட்சும நாடிகள் போன்றவை மனித உடலில் உள்ளன. அவற்றைத் தூண்டு வதன்மூலம் உடலுக்குத் தேவையான சக்தி களைப் பெறமுடியும். இதற்கு உதவியாய் இருப்பவை உபரத்தினங்களே. விஷுக்தி எனும் ஆதாரசக்கரம் சரியாக இயங்கினால் மட்டுமே, ஒருவர் சாதனயாளராக முடியும்.

விஷுக்தி

கண்டத்தில் (கழுத்துப் பகுதி) இருப்பது விஷுக்தி சக்கரம். இது குண்டலினி யோகத்தில் ஐந்தாவதாக அமைவது. இங்கு விளங்கும் தெய்வம் மகேஸ்வரன். (சிவன்). இந்த சக்கரத்திற்கு தீயவற்றை வடிகட்டும் ஆற்றல் உண்டு. இந்த சக்திமையத்தில் இடம்பெறும் சிவபெருமானுக்கு "விசுகண்டன்', "நீலகண்டன்' என்று பெயர்கள் உண்டு. இதன் பொருள், விஷத்தை வெளியே நிறுத்தியவர் என்பது. விஷுக்தி சக்கரம் தூண்டப்பட்டிருந்தால் விஷத்தன்மை உடலுக்குள் நுழையாமல் தடுக்க முடியும். விஷம் என்றால் உணவு மட்டுமல்ல; தீய உணர்வுகள், எண்ணங்கள், சக்திகள் என்று விஷத்தன்மை கொண்டவற்றிலிருந்து விடுபடமுடியும். குண்டலினி யோகத்தில், விஷுக்தி சக்கரத்தை அடைய பயிற்சிகள் மிகக்கடுமையானதாக இருக்கும். இந்த நிலையை அடைந்தவர்களிடம் உலகமே கட்டுப்பட்டிருக்கும். அப்படி ஒரு ஆன்மிக சாதனையைப் படைத்தவர்களை உலகம் வணங்கும். ஒருவரது விஷுக்தி செயல்படத் துவங்கினால், அவருக்கு தன்னைச்சுற்றியுள்ள சூழ்நிலைகளை மாற்றியமைக்கும் ஆற்றலும், ஆளுமையும் உண்டாகும்.

நுரையீரல், இதயத்தின் கட்டுப்பாடு, உடலின் சக்தி, உடலின் வெப்பம் ஆகிய உயிரோட்டத்திற்கு அவசியமானவை, விஷுக்தி மையத்தால் கட்டுப்படுத்தப்படு கின்றன. நீலவானக் கல்லை (லாபிஸ் லாசுலி) அணிந்து, சிரசாசனம், சர்வாங்காசனம், விபரீதகரணி, ஆகிய ஆசனங்களில் ஏதாவது ஒன்றைத் தேர்வுசெய்து, தகுந்த ஸ்வர தியானம் செய்தால், விஷுக்தியை விழிப்படையச் செய்யலாம்.

5. லாபிஸ் லாசுலி (நீலவானக்கல்)

லாபிஸ் லாசுலி ஒரு மர்மமான அழகான ரத்தினம். இது ஆச்சரியப்படும் விதமாக சஃபையரை ஒத்திருக்கிறது. காலை வானத்தின் நிறம்போலவே கல்லின் நிழல்களும் நட்ஹக்ர்ஜ் வேறுபட்டவை. தங்கத்தொடுதலுடன்கூடிய அடர்நீல ரத்தினக் கற்கள் கவர்ச்சிகரமா னவை. நீலவானக்கல் ஆளுமை மற்றும் மனிதனின் நேர்மையை வெளிப்படுத்தும். மேஷ, மகர ராசிக்காரர்களைத்தவிர அனைவரும் அணியலாம்.

நீலவானக்கல்லின் பயன்

= மனோவசியம் செய்யும் நபர்களிட மிருந்து பாதுகாக்கும்.

= மன அழுத்தத்தைக் குறைக்கும்.

= படைப்பாற்றலை ஊக்குவிக்கிறது.

= உண்மையான, நேர்மையான எண்ணங் களை உருவாக்கும்.

= தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்கிறது.

= நல்ல பேசும்திறன் மற்றும் பாடும்திறனைத் தருகிறது.

= 6, 8, 12-ல் சந்திரன் உள்ளவர் களும், புதன் உள்ளவர்களும் இந்தக் கல்லை அணிய தோஷங்கள் குறையும்.

= இந்த கல்லில் செய்த சிவலிங்கத்தை முறைப்படி வீட்டில் வைத்துப் பூஜிக்க ராகு- கேது தோஷம் நீங்கும். மேலும் சில சித்திகள் கைவரப் பெரிதும் உதவும்.

= சனி, ராகு தோஷமுள்ள வர்கள், சனி தசை, ராகு புக்தி, ராகு தசை, சனி புக்தி உள்ளவர்கள் மேற்கண்ட சிவபூஜை செய்தால் பெரும் மாற்றம் உண்டாகும்.

= மூன்றாம் பாவம் பாதிக்க பட்டிருந்தாலும், மூன்றாம் பாவத்தில் பாதகாதிபதி, மாந்தி அல்லது அஷ்டம ஸ்தானாதிபதி அமர்ந்தாலும் இந்த கல்லை அணியலாம்.

= பெண்கள் இந்த நீலக்கல் மோதிரத்தை அணிந்தால், அவர் களின் அன்புக்குரியவர் எப்போதும் உண்மையுள்ளவராக இருப்பார்.

= தொழிலில் முன்னேற்றத் தையும், அனைத்து முயற்சிகளிலும் வெற்றியையும் தரும்.

= எதிர்மறை எண்ணங்களை விரட்டி, வாழ்க்கையை சிறப்பாக மாற்றுகிறது.

= இது ஆன்மிக நல்லிணக்கத்தையும் அமைதியையும் தரும்.

= நிதிநிர்வாகச் சிக்கல்கள் நேர்மறையான வழியில் தீர்க்கப்படும்.

= உடல் ஆரோக்கியத்தை சாதகமாக மாற்றுகிறது.

= வாழ்க்கையில் புதிய கண்ணோட்டம் உண்டாகும்.

= குழப்பமான எண்ணங்களை மாற்றி துக்கங்களிலிருந்து காப்பாற்றும்.

= நினைவகத்திலிருந்து தேவையற்ற நினைவுகளை அகற்றும்.

= உடல், மனம் மற்றும் முன்னேற்றக் கனவை வலுப்படுத்த உதவுகிறது.

நீலவானக்கல்லின் மருத்துவ குணங்கள்.

= நோய்களின் கடுமையைக் குறைக்கிறது.

= சிறுநீரக நோய்கள் தீரும்.

= ரத்தத்தை சுத்தப்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது.

= தோல் நோய்களுக்கு வெற்றிகரமாக சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.

= மன அழுத்தத்தைக் குறைக்க, மனநோய்க்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது.

= விஷத்தால் ஏற்படும் உடல்வலி நிலையை நீக்குகிறது.

= முதுகெலும்புகளில் நன்மை பயக்கும்.

= இது கண் நோய்களை சமாளிக்க உதவும்.

= காயங்களை குணப்படுத்துகிறது.

= குழந்தைகளை நோய்களிலிருந்து பாதுகாக் கிறது.

= தைராய்டு, குரல்வளை நாண்கள் போன்றவற்றை சுத்தப்படுத்தும்.

லாபிஸ் லாசுலி என்றழைக்கப்படும் நீலவானக் கல்லை அணிந்து, முறையான தியானப்பயிற்சிகள் மூலம் விஷுக்தி சக்கரத்தை இயக்கினால், வானமும் நம் கைவசமாகும்.

(தொடரும்)

செல்: 77080 20714