ன்று பலரும் ராசிக்கல் மோகத்தால், என்ன விலைகொடுத்தும், ராசிக்கல் மாலை, மோதிரம் அணிந்து வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ள விரும்புகிறார்கள். அட்சய திரிதியையில் நகை வாங்கினால், செல்வந்தராகலாம் என்ற வதந்தியைப் பரப்பி, சில வியாபாரிகள், கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள். உண்மையில் எந்த ஜோதிட நூலிலும் அதற்கான ஆதாரமில்லை. இதேபோல், ஜோதிடத்தின் அடிப்படையையும், ரத்தினங்களின் அதிர்வு எண்களையும் அறியாத, போலி வியாபாரிகள் ராசிக்கல் விற்று, பல கோடிகளை குவித்து வருகிறார்கள். இதற்குக் காரணம். பலருக்கும் ராசிக்கல்லைப் பற்றி அதிகம் தெரியாது. அதனால் தாங்கள் ஏமாற்றப்படுவது தெரியாமலே ஏமாந்துப்போகிறார்கள்.

rasi

கோடிக்கணக்கான ஆண்டுகளாக பூமியின் உட்புற சீதோஷ்ண மாற்றத்தால் தாது உப்புகள், பலவித ரசாயன மாற்றமடைந்து, பூமியின் கர்ப்பத்தில் ரத்தினங்களாக உருவாகின்றன. ரத்தினங் கள் அதிர்வுகளாலும், மின்காந்த அலைகளாலும் அபரிமிதமான இயற்கையின் ஆற்றலால் சக்தி பெறுகின்றன. மகா ரத்தினம் ஒன்பதும் நூற்றுக்கணக்கான உபரத்தினக் கற்களும் நவக்கிரகங்களோடு தொடர்பு கொண்டுள்ளன. ரத்தினக் கற்கள் அணிய எந்த காலத்தில் எந்த விரலில் எந்த உலோகத்தில் எந்த மந்திரத்தால் உயிரூட்டி அணியவேண்டும் என்றறிந்து விதிமுறைகளைப் பின்பற்றினால் ரத்தினக் கற்களின் ஒளியில் வரும் கதிர்வீச்சின்மூலம் பலன் பெறலாம். ரத்தினங் கள் அணிவதால் மனதிற்கு உற்சாகமும் தன்னம்பிக்கையும் கிடைக்கின்றன.

Advertisment

ரத்தினங்களை தேர்வு செய்யும்போது ஏழுவிதமான குற்றங்களைக் கணக்கில் கொள்ளவேண்டும் என்பதே "பாரத்வாஜ ஸ்மிர்தி' எனும் நூலின் கருத்து. விந்து சுழி, உமிப்புள்ளி, ஒளிச்சிதறல், ரேகை களங்கம், முலைப்புள்ளி ஆகிய குற்றங்கள் உள்ள ரத்தினங்களை விலக்கவேன்டும்.

பிறந்த ராசியை மட்டும் கருத்தில் கொண்டு ஒருவர் ராசிக்கல் அணிவது முற்றிலும் தவறானது. ராசிநாதன் லக்னத்திற்கு பாதகாதிபதியாகவோ பகைக் கிரகமாகவோ இருந்தால் கற்களை அணிந்தவுடன் கெடுதல்கள் உண்டாகும். ரத்தினங்களையும் உபரத்தினங்களையும் முறையாகப் பயன்படுத்தி பலன் அடையும் வழியைக் காட்டுவதே இந்த தொடரின் நோக்கம். சில உபரத்தினங்கள் நவரத்தினங்களுக்கு மாற்றாகவும் விளங்குகின்றன. அதில் ஸ்படிகத்திற்கடுத்த படியாக மன அமைதியைத்தருவது செவ்வந்திக்கல்.

2. செவ்வந்திக்கல் (Amethyst)

Advertisment

து அணிகலன்களில் பயன் படுத்தப்படும் குவார்ட்சு வகை ரத்தினக் கல்லாகும். பண்டைக் கிரேக்கர்கள், இந்த உபரத்தினத்தின் பயனை அதிகம் அறிந்திருந்தார்கள்.

கத்தரிப் பூ நிறத்தில் செவ்வூதா ஒளி வீசும் செவ்வந்திக்கல். தென் ஆபிரிக்கா நாடுகளில் அதிகம் கிடைக்கிறது. இந்த உபரத்தினத்தின் நிறம் மங்கி, ஒளி குறைந்துவிட்டால், இந்த கல்லைப் பயன்படுத்தக்கூடாது. பொதுவாக, இரண்டு ஆண்டுகள் மட்டுமே, அதீத சக்தியுடன் விளங்கும். அதற்குப்பின், புதிய கல்லை அணிய வேண்டும்.

ஜனன ஜாதகத்தில் குரு பகவானின் வலிமை குறைந்திருப்பவர்கள், புஷ்பராகத்திற்கு பதில் செவ்வந்திக் கல்லை மோதிரத்தில் பதித்து பயன்பெறலாம். எண் கணித சாத்திரத்தின் படி பிறவி எண் மூன்றின் கூட்டுத்தொகையில் அமைவோருக்கும் இந்த உபரத்தினம் ஏற்றதாகும்.

எந்த ஒரு செயலிலும் வெற்றி பெறுவதற்கு, இச்சா சக்தி (INTERST), ஞான சக்தி (KNOWLEDGE), கிரியா சக்தி (ACTION) ஆகிய மூன்றும் ஒரேநேர் கோட்டிலிருக்கவேண்டும். இதில் ஏதாவது ஒன்று குறையும்போது தோல்வி உண்டாகிறது. செவ்வந்திக்கல் கிரியா சக்தியை ஊக்குவிப்பதால் வெற்றி நிச்சயமாகிறது.

செவ்வந்திக்கல்லை தலயணைக்கு கீழ் வைத்து உறங்கும்போது ஆழ்மனதில் நேர்மறை சக்திகள் உண்டாகி உற்சாகத்தைத்தரும்.

அமிதிஸ்ட் கற்களின் சக்தி

=இந்த கல் தெய்வீக அருளைக் கவர்ந்து தரும். ஆன்மீக ஆற்றலை அதிகரிக்கும்,

=குடியினை மறக்க முடியாதவர்கள் இந்த கல்லை மோதிரமாய் அணிந்தால் அந்த பழக்கத்தில் இருந்து விடுபட முடியும்.

=ஆழ்ந்த உறக்கத்தையும், அமைதியையும் தரும்.

= தீய பழக்கங்களைப் போக்கும்.

= விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும்.

= வியாபார தடையை போக்கும்.

= கோபம், விரக்தி ஆகியவற்றிலிருந்து காக்கும்.

= குழந்தையின்மை, திருமணத்தடை ஆகிய பிரச்சனைகளுக்கு இக்கல்லை அணியலாம்.

=மனதில் ஏற்படும் பயத்தை நீக்கி, தைரியத்தைக் கொடுக்கும்.

= 4 முதல் 20 காரட் எடை அளவு வாங்கி பணப்பெட்டியில் வைத்தால், செல்வம் பெருகும்.

=குண்டலினி தியானத்தில் ஆறாவது சக்கரமாகிய ஆக்ஞா சக்கரத்தைத் தூண்டி செயலாற்ற வைப்பதில், இந்த உபரத்தினம் பெரும் பங்கு வகிக்கிறது.

=ரெய்கி எனும் பிரபஞ்ச ஆற்றல் சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கும் உபரத்தினமும் இதுவேயாகும்.

=ஃபெங்சுயி எனப்படும் சீன வாஸ்து சாத்திரத்தில், முக்கியமானப் பரிகாரப் பொருளாகக் கருதப்படுகிறது.

= டெலிபதி எனும் தொலைவுணர்தல் கலையில் ஈடுபடுபவர் களுக்கு சிறந்த ஊடகமாக செயல்படுகிறது.

அமிதிஸ்ட்டின் மருத்துவ குணங்கள்!

= பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள், வயிற்றுவலி, மூட்டு வலி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கும்.

= தூக்கமின்மை, மாலைக் கண் நோய் ஆகியவற்றிலிருந்து காக்கும்.

= அமிதிஸ்ட் கற்களில் இருந்து வெளிப்படும் கதிர்கள் கணினியில் இருந்து வெளிவரும் கெடுதலான கதிர்களை தடுத்துவிடுகின்றன.

= மூளைக்குள் ரத்தம் உறைவது அல்லது ரத்தம் செல்வது தடைபடுவதால் ஏற்படும் பக்கவாத நோய் உள்ளவர்கள். செவ்வந்திக்கல்லை அணிவதால், நோயின் கடுமைக்குறையும்.

= தோல் நோய் உள்ளவர்களுக்கு, இந்தக்கல் ஒரு வரப்பிரசாதம்.

= புற்று நோயின் தீவிரத்தைக் குறைக்கும்.

= இந்த கல்லை அனைவருமே அணியலாம்.

(தொடரும்)

செல்: 77080 20714

______________

ராசிக் கற்களைத் தேர்வுசெய்து அணிவது எப்படி?

ராசியின் அதிபதி பாதகஸ்தானத்திலிருந்தால் அந்த ராசிக்கான கல்லை தேர்ந்தெடுப்பது பாதகத்தையே தரும். உதாரணத்திற்கு சிம்ம ராசியின் அதிபதி சூரியனாவ தால் எல்லா சிம்ம ராசிக்காரர்களுக்கும் மாணிக்கமே உகந்த ராசிக்கல் என்று சிலர் தவறாக எண்ணுகிறார்கள். சித்திரை மாதத்தில் பிறந்தவர்களுக்கு இது பொருந்தாது. சித்திரை மாதத்தில் சூரியன் உச்சமென்றாலும் சிம்மத்திற்கு பாதகஸ்தானம் மேஷம். சித்திரை மாதத்தில் சூரியன் இருக்குமிடம் மேஷம். பாதகத்தில் சூரியனிருந்து, அவருடைய ஆற்றலை அதிகப் படுத்துவது நாமே நமக்கு கெடுதலை விரும்பி செய்துகொள்வது போலாகும்.

= விருச்சிக லக்னம் மிதுன ராசியில் மரகதத்தை மோதிரமாக் அணியக்கூடாது.

= கன்னி லக்னம் மேஷ ராசியில் பிறந்த ஒருவர் பவழத்தை அணியக் கூடாது.

= தனுசு ராசிக்காரர்கள் முத்து மற்றும் சந்திரகாந்தக் கல்லை அணிவதால் கெடுதல் உண்டாகும்.தனுசு ராசிக்கு எட்டாமிடமாகிய கடகத்தின் அதிபதி சந்திரன். அஷ்டமாதி பதியை வலுவூட்டுவது கஷ்டத்தை வரவேற்கும்.

= மாணிக்கம், புஷ்பராகம், பவளம் மற்றும் இவைகளின் வகைகள் அனைத்தும் தங்கத்துடன் இணைக்கப்பட வேண்டும். வைரம், நீலம், மரகதம், வைடூரியம், கோமேதகம் மற்றும் இவைகளின் வகைகள் வெள்ளி, பிளாட்டினம் ஆகியவற்றோடு இணைக்கப்படவேண்டும்.