பேரதிர்ஷ்டம் தரும் ராசிக்கல் ரகசியங்கள்! (3) -ஆரூடச் செம்மல் அருண் ராதாகிருஷ்ணன்

/idhalgal/balajothidam/zodiac-secrets-bring-misfortune-3-arudach-semmal-arun-radhakrishnan

திர்ஷ்டக் கற்களையணிந்து பயனடைந்தவர்கள் மிகவும் குறைவு என்பதே உண்மை. வராகமிகிரர் போன்ற ஜோதிட வல்லுனர்களால் பரிந்துரைக்கப்பட்ட ராசிக் கற்கள் பயன்தராமல் போனதன் காரணத்தை ஆராய்ந்தால் பல ரகசியங்கள் தெரியவரும். அணிகலன்களில் அலங்காரத்திற்காகப் பயன்படுத்தப்படும் கற்களை ராசிக்கற்கள் என்ற பெயரில் விற்கும் வியாபாரிகளால் இழைக்கப்படும் குற்றமே முதல்காரணம். வைரத்திற்கு மாற்றாக தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ஜிர்கோனியா (அமெரிக் கன் டைமண்டு)போல் ராசிக்கற்களும் செயற்கையாகத் தயாரிக்கப்படுகின்றன. இயற்கையிலிருந்து கிடைக்கும் கற்கள் மட்டுமே பலன் தரும். இது தெரியாமல் போலி வியாபரிகளின் விளம்பரத்தை நம்பி மக்கள் தங்கள் பணத்தை இழந்து பலனடையாமல் போவது வாடிக்கையாகிவிட்டது. அதனால் ராசிக்கற்களால் ஏற்படும் பலன் களின்மீதுள்ள நம்பகத்தன்மை குறைந்து வருகிறது.

நம் மனதின் எண்ண ஓட்டங்கள் உடலில் சூட்சமமாக அமைந்துள்ள ஏழு ஆதாரங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.

rasistone

மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞை, துரியம் ஆகிய ஏழு ஆதாரங்களே நம்மை இயக்கு கின்றன. இவைவே எழுப்பத்து இரண்டாயி ரம் நாடிகளுடன் தொடர்புடையவை. ஒவ்வொரு ஆதாரமும் ஒரு ஒலிக்குறியுடன் அதிர்வெண்ணுடன் தொடர்பு கொண்டவை.

தற்காப்புக் கலையில் ஈடுப டும் வீரர்கள் வெவ்வேறு ஒலிக்குறிகளை எழுப்பி ஆதாரங்களைத் தூண்டி அபரிமிதமான சக்தியைப்பெற்று உடலெங்கும் பாய்ச்சு கிறார்கள். அதுவே மந்திரம். கற்ப மூலிகை களாலும் ஆதாரங்களை வலுவூட்டலாம். அதுவே ஔஷதம். ரத்தினங்களாலும் உப ரத்தினங்களாலும் ஆதாரங்களின் இயக் கத்தை ஒழுங்குபடுத்தலாம். அதுவே மணி எனப்படும். அதனாலேயே ஞானிகள் நமக்குக் கற்றுத்தந்த ரகசியம் மணி, மந்திர, ஔஷதம் என்று முறைப்படுத்தப்பட்டது. நம் உடலைப் போலவே, கற்களும் முக்கியமாக தாதுக்களால் ஆனவை. குறிப்பிட்ட அதிர்வலைகளை உருவாக்கக்கூடியவை. ஆதாரங்களை இயக்கும் அதிர்வலைகளைக்கொண்ட ரத்தினங்களை அணிவதால் ஆதாரங்களில் சக்தியின் ஒட்டம் சீராகி, சக்கரங்களின் இயக்கத்தால், மனமும் உடலும் புத்துணர்ச்சி பெறும். இதுவே "லித்தோ தெரபி' (கற்களால் சிகிச்சை) எனப்படும். ரத்தினங்களும், உப ரத்தினங்களும் நம் மனதையும், பிரபஞ்ச சக்தியையும் இணைக்கும் பாலமாகவே செயல்படுகின்றன.

3. சிட்ரன் (தங்க மஞ்சள் கற்கள்)

பாதாள உலக ராணியாகவும், மஞ்சள் ரத்தினமாகவும் அறியப்படும் சிட்ரன் என்னும் உபரத்தினம் இயற்கையில் கிடைக்கும் அரியவகை படிகக்கல். அழகான மஞ்சள் நிறமாகவோ ஆழ்ந்த ஆரஞ்சு நிறமாகவோ காணப்படும். வணிகர் கல், தங்க புஷ்பராகம், ஸ்பானிஷ் புஷ்பராகம், மதேரா மற்றும் சஃப்ரானைட் என்று பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த உபரத்தினம், தியானத்திற்கான சிறந்த படிகம். சிட்ரன் உங்கள் எண்ணங்களை மையமாகக் கொண்டு சுத்திகரிக்கும். தெளிவான மனம் உயர்ந்த சுயமரியாதைக்கு வழிவகுக்கும். வாழ்க்கையில் உங்கள் பாதையைக் கண்டறியவும் உதவும். முக்கியமாக இந்த படிகம் இரண்டாவது ஆதாரமாகிய சுவாதிஷ்டானத்தை இயக்கக்கூடியது. இந்தச் சக்கரம் நன்கு தூண்டப்பட்டால், மனிதன் உலக வாழ்க்கையில் இன்பங்களை அனுபவிக்க நாட்டம் உண்டாகும்.

சுவாதிஷ்டானம்

இது ஆறு இதழ்கள் கொண்ட செம்பொன் நிறத்தாமரையின் வடிவமாகும். இச்சக்கரத்தி னின்று ஆறு முக்கிய நாடிகள் வெளிக் கிளம்பு கின்றன. இந்தச் சக்கரம் நீர்த்தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. அம்பிகை கிரியாசக்தி ரூபினியாக இங்கு வாசம் செய்கிறாள். இதற்கு "நிராகுலம்' என்றொரு பெயரும் உண்டு. நிராகுலம் என்றால் துன்பமற்று இருப்பது என பொருள்படும். மற்றவர்களின் உணர்ச்சிப் போக்குகளை உணர்கின்ற சக்தியும் இந்த சக்கரத்துக்கு உண்டு. சிட்ரன் எனும் உபரத்தினம், சுவாதிஷ் டானத்தைத் தூண்டி, அதன் சக்கரத்தை மலரச் செய்வதால், நமது சுய கட்டுப்பாட்டின் தீவிரம் தூண்டப்பட்டு விழிப்புணர்வு மிளிரும். நமது எண்ணம், செயல், சிந்தனை சார்ந்த விஷயங்களின் மீதான ஈடுபாடு உண்டாகிறது. இந்தக் கல் புத்துயிர், படைப் பாற்றல், நம்பிக்கை மற்றும் ஆசைக் கனவுகள் நிறைவேறுவதற்காகப் பயன்படுத்தப் படுகிறது. நவம்பர் மாதத்தில் பிறந்தவர் களும்; மேஷம், மிதுனம், சிம்மம், துலா ராசிக் காரர்களும் இந்த உபரத்தினத்தால் அதிக பலன் அடையலாம். எண்கணித சாஸ்திரத் தின்படி எண் மூன்றைப் பிறவி எண்ணாகக் கொண்டவர்களுக்கு, இந்த உபரத்தினம் பொருத்தமானது. ஜனன ஜாதகத்தில் குரு மற்றும் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த உபரத்தினத்தை அணிவதால் தோஷ நிவர்த்திப் பெறலாம்.

சிட்ரன் பதிக்கப்பட்ட அணிகலால் உண்டாகும் நன்மைகள்

=வாழ்க்கையில் இன்பம்.

=சிட்ரன் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் உற்சாகப்படுத்துகிறது.

=தியானத்தில் ஆதார சக்கரங்களை சுத்தப்படுத்தி உள்ளுணர்வைத் திறக்கும்.

=செல்வம், செழிப்பு மற்றும் வெற்றியை ஈர்க்கிறது.

=இது ஆச்சரியம், மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தை அளிக்கிறது.

=தன்னம்பிக்கையை வளர்க்கிறது.

=மூளையைத் தூண்டுகிறது.

=புத்தியை வலுப்படுத்துகிறது.

=முயற்சியை ஊக்குவிக்கிறது.

=படைப்பாற்றலை செயல்படுத்துகிறது.

=சுய வெளிப்பாட்டை ஊக்குவிக்கிறது.

=செறிவை மேம்படுத்துகிறது.

=மனதை புதுப்பிக்கிறது.

=எதிர்மறைப் பண்புகள், மனச்சோர்வு, அச்சங்கள் மற்றும் பயங்களை வெளியேற்றுகிறது.

=உணர்ச்சிரீதியாக சமநிலைப்படுத்துகிறது.

="வணிகரின் கல்' என்று அழைக்கப்படும் சிட்ரன் கல்லைப் பணப்பெட்டியில் வைத்தால், வணிகத்தில் அதிக நிதியை ஈர்க்கப் பயன்படும்.

உடல் ஆரோக்கியத்தைத்தரும் "சிட்ரன்'

=உடலில் உள்ள ரசாயன ஏற்றத்தாழ்வுகளை சமப்படுத்த உதவுகிறது.

=நீரிழிவு சிகிச்சையில் பயனளிக்கும்.

=இது செரிமானம், மண்ணீரல் மற்றும் கணையத்தைத் தூண்டுகிறது.

=சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை நோய்த்தொற்றுகளை நிராகரிக்கிறது.

=கண் பிரச்சினைகளுக்கு உதவுகிறது.

=ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

=ரத்தத்தை நச்சுத்தன்மையற்றதாக்குகிறது.

=தைமஸை செயல்படுத்துகிறது.

=குழந்தைகளின் பேச்சு வளர்ச்சியிலுள்ள சிக்கல்களை அகற்றும்.

=தைராய்டை சமப்படுத்துகிறது.

=மலச்சிக்கலை நீக்குகிறது.

கனகபுஷ்பராகத்திற்கு மாற்றாக, சிட்ரன் உபரத்தினத்தை அணியலாம். இந்த உபரத்தி னத்தை அணிந்து, சப்த சக்கர தியானம் செய்தால், சுவாதிஷ்டான சக்கரத்தில் நல்ல அதிர்வலைகள் ஏற்படும். அதனால் ஜீவகாந்த ஆற்றலை அதிகப் படுத்தி ஆரோக்கியமாக வாழலாம். சுவாதிஷ் டானத்தின் தத்துவத்தைப் பிரதிபலிக்கும் திருவானைக்காவல் அல்லது திருச்செந்தூர் கோவிலில் பூஜை செய்தபின் இந்தக் கல்லை அணிவதால் நிறைந்த பலனை அடையலாம்.

(தொடரும்)

செல்: 77080 20714

bala111220
இதையும் படியுங்கள்
Subscribe