Advertisment

உங்கள் கேள்வி ஆர்.மகாலட்சுமி பதில்கள்

/idhalgal/balajothidam/your-question-rmahalakshmi-answers-9

ப் எம். உதயகுமார், கரையானூர்.

கம்ப்யூட்டர் படித்துவிட்டு, கிடைத்த வேலையைச் செய்துவருகிறேன். நிரந்தர வேலை எப்போது கிட்டும்?

Advertisment

1-11-1993-ல் பிறந்த வர். மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். சந்திரன் உச்சம். சூரியன் நீசபங்கம்; சுக்கிரன் நீசபங்கம் மற்றும் வர்க்கோத்தமம். லக்னாதிபதி செவ்வாய் எட்டாமிடத்தில் ராகு வுடன் உள்ளார். மேலும் செவ்வாய் அம்சத்தில் நீசம். உங்களுக்கு 2005-ல் செவ்வாய் தசை ஆரம்பித்தலிருந்தே சங்கடங்கள் தொடர்கதை யாகியிருக்கும். நடப்பு ராகு தசை. 8-ஆமிடத்திலிருந்து ராகு தசை நடத்து வதால், புயலில் அகப் பட்ட சருகாக அலை பாய்கிறீர்கள். நடப்பு ராகு தசையில் கேது புக்தி. இது 2023, ஜூலை வரை நடக்கும். இதில் மிக நல்ல பலன்களை எதிர்பார்க்க இயலாது. அடுத்துவரும் சுக்கிர புக்தியில் கல்விக் கேற்ற வேலை அமையும். எதிர்காலத்தில் உங்கள் தந்தையின் உடல்நலனில் அக்கறை எடுத்துக்கொள்ளும் நிலை உண்டு. நிரந்தர வேலை வாய்ப்புக்குக் காத்துக் கொண்டிருப்பவர்கள், சிவன் கோவிலில் மாலை 4.30 மணிமுதல் 6.00 மணிவரையான பிரதோஷ காலங்களில் நெய்தீபம், ஆறு எண்ணிக்கையில் ஏற்ற

ப் எம். உதயகுமார், கரையானூர்.

கம்ப்யூட்டர் படித்துவிட்டு, கிடைத்த வேலையைச் செய்துவருகிறேன். நிரந்தர வேலை எப்போது கிட்டும்?

Advertisment

1-11-1993-ல் பிறந்த வர். மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். சந்திரன் உச்சம். சூரியன் நீசபங்கம்; சுக்கிரன் நீசபங்கம் மற்றும் வர்க்கோத்தமம். லக்னாதிபதி செவ்வாய் எட்டாமிடத்தில் ராகு வுடன் உள்ளார். மேலும் செவ்வாய் அம்சத்தில் நீசம். உங்களுக்கு 2005-ல் செவ்வாய் தசை ஆரம்பித்தலிருந்தே சங்கடங்கள் தொடர்கதை யாகியிருக்கும். நடப்பு ராகு தசை. 8-ஆமிடத்திலிருந்து ராகு தசை நடத்து வதால், புயலில் அகப் பட்ட சருகாக அலை பாய்கிறீர்கள். நடப்பு ராகு தசையில் கேது புக்தி. இது 2023, ஜூலை வரை நடக்கும். இதில் மிக நல்ல பலன்களை எதிர்பார்க்க இயலாது. அடுத்துவரும் சுக்கிர புக்தியில் கல்விக் கேற்ற வேலை அமையும். எதிர்காலத்தில் உங்கள் தந்தையின் உடல்நலனில் அக்கறை எடுத்துக்கொள்ளும் நிலை உண்டு. நிரந்தர வேலை வாய்ப்புக்குக் காத்துக் கொண்டிருப்பவர்கள், சிவன் கோவிலில் மாலை 4.30 மணிமுதல் 6.00 மணிவரையான பிரதோஷ காலங்களில் நெய்தீபம், ஆறு எண்ணிக்கையில் ஏற்றிவர, நல்ல வேலை கிடைக்கும்.

qq

ப் அய்யம்மாள் ராஜன், தஞ்சாவூர்.

என் மகளுக்கு அரசுப்பணி கிடைக்குமா? திருமணம் எப்போது நடக்கும்?

மகள் பத்மாவதி 15-11-2002-ல் பிறந்தவர். கடக லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். லக்னத்தில் குரு உச்சம் மற்றும் சந்திரனுடன் பரிவர்த்தனை. செவ்வாய், புதன் பரிவர்த்தனை. சூரியன் நீசபங்கம். அரசு வேலைக்கு வாய்ப்பில்லை. நடப்பு புதன் தசையில் குரு புக்தி. அடுத்துவரும் சனி புக்தியில் தெரிந்த வரனுடன், வெளியூர் அல்லது வெளிநாட்டில் திருமணம் நடக்கும். மேற்கண்ட ஜாதகத்தில், மாங்கல்ய அதிபதி சனி, 12-ல் இருப்பவர்கள், கும்பகோணம்- திருமங்கலக்குடி சென்று வழிபடவும். மேலும் தாலி தானம் செய்துவிட்டு திருமணப் பேச்சுக்களை ஆரம்பிக்கவும்.

ப் லேகா, சென்னை.

எனக்கு திருமணம் எப்போது நடக்கும்?

22-12-1998-ல் பிறந்தவர். கும்ப லக்னம், மகர ராசி, திருவாதிரை நடசத்திரம். ராசியில் கேது, 7-ல் ராகு. லக்னத்துக்கு 8-ல் செவ்வாய். எனினும் செவ்வாய், புதனுடன் பரிவர்த்தனை. அதனால், மாங்கல்ய தோஷம்பற்றி அதிகம் அச்சம் கொள்ளத் தேவையில்லை. உங்களுக்கு வரன் பார்க்கும்போது, அவரின் ஆயுள் ஸ்தானம் பலமாக இருப்பதாகத் தேர்ந்தெடுக்கவும். நடப்பு ஏழரைச் சனி. மேலும் ராகு தசையில் புதன் புக்தி 2023, ஜனவரிவரை. அதற்குள் விருப்பத் திருமணமாக அமைய வாய்ப்புண்டு. இவ்விதம மாங்கல்ய ஸ்தானமுள்ள பெண்கள் துர்க்கையை வணங்கவும். மற்றும் செவ்வாய், சனி பார்வை இருப்பதால், திருப்பைஞ்ஞீ- சென்று வணங்கவும். சுமங்கலிக்கு புடவை, தாம்பூலம் வழங்கவும்.

ப் விஜயராகவன், மதுரை.

நான் தற்போது வாங்கிக் கொண்டிருக்கும் சம்பளம் மிகக் குறைவாக உள்ளது. வேலை நேரம் போக மீதி நேரத்தில் ஏதேனும் தொழில் செய்யலாமா?

4-11-1969-ல் பிறந்தவர். மேஷ லக்னம், சிம்ம ராசி, பூர நட்சத்திரம், தங்கள் ஜாதகத்தில் சனி நீசபங்கம். சுக்கிரன் நீசபங்கம். செவ்வாய் உச்சம். தங்களது வருமானம் அதிகரிக்க, மனை, வீடு சம்பந்தமான துணைத் தொழில் அல்லது குடிதண்ணீர் சம்பந்த வேலைகளை உபதொழிலாக மேற்கொள்ளவும். எந்தத் தொழில் ஆரம்பித்தாலும் உங்கள் ஊரிலுள்ள விநாயகரை வணங்கிவிட்டு தொடங்கினால் தொழில் மேன்மைபெறும்.

ப் ச. செந்தில், நெமிலி, உளுந்தூர் பேட்டை.

என் மகளுக்கு அரசுப்பணி கிடைக்குமா? திருமணம் எப்போது நடக்கும்?

சித்ரா 22-2-1997-ல் பிறந்தவர். ரிஷப லக்னம், சிம்ம ராசி, மக நட்சத்திரம். ராசியில் குரு நீசபங்கம். செவ்வாய், ராகுவை சனி, கேது பார்வையிடுகிறார்கள். ராசிக்கு நாகதோஷமும், செவ்வாய் தோஷமும் உள்ளது. பெண்கள் ஜாதகத்தில் எந்த ராசியிலும் செவ்வாய், ராகு சேர்க்கை விரும்பத்தக்கதல்ல. மேலும் இந்த ஜாதகப்படி, இஷ்ட திருமணம் நடக்கும். 8-ஆம் அதிபதி நீசபங்கமாகி இருப்பதால், விருப்பத் திருமணமே ஒரு பரிகாரமாகிவிடும். நடப்பு சூரிய தசை. இதில் சுக்கிர புக்தியில், 2025-ல் அரசு வேலை கிடைக்கும். இடமாறுதலும் இருக்கும். படிப்புக்கேற்ற வேலை கிடைக்கும். இதே காலத்தில் திருமணம் நடக்கவும் செய்யும். இவ்விதம் செவ்வாய், ராகு ஒரே ராசியில் உள்ளவர்கள் சேலம் சுகவனேஸ்வரர் ஆலயத் திலுள்ள செவ்வாய், ராகு இடம் மாறியுள்ள நவகிரகத்தை வணங்க தோஷம் நீங்கும்.

ப் சிவமாணிக்கம் காயத்திரி, உடுமலைப்பேட்டை.

திருமணமாகி ஏழாண்டுகள் ஆகின்றன. இன்னும் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. எப்போது கிட்டும்?

கணவர் 8-12-1985-ல் பிறந்தவர். கன்னி லக்னம், கன்னி ராசி, சித்திரை நட்சத்திரம். குழந்தை பாக்கியம் பற்றி கேட்டுள்ளீர்கள். உங்களுடைய 3-ஆம் வீட்டில் சனி, சூரியன், புதன், சுக்கிரன் இணைந்துள்ளனர். 3-ஆம் அதிபதி செவ்வாய் கேதுவுடன் உள்ளார். 5-ஆம் வீட்டில் நீச குரு- சனி பார்வையால் நீசபங்கம். எனவே குழந்தை பாக்கியம் தாமதமாகிறது. அடுத்துவரும் சனி தசையில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மனைவி காயத்திரி 28-11-1995-ல் பிறந்தவர். மகர லக்னம், மகர ராசி, அவிட்ட நட்சத்திரம். உங்களின் 5-ஆம் அதிபதி சுக்கிரன் 12-ல் மறைவு. மேலும் 5-ஆம் அதிபதி சுக்கிரனுடன் செவ்வாயும் இணைந்திருப்பதால் உங்களுக்கு கர்ப்பப்பை பிரச்சினை உண்டு. கர்ப்பப்பை சம்பந்தமாக சிறு அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டியுள்ளது. நடப்பு ஏழரைச்சனி. இப்போது குரு தசையில் சனி புக்தி. அடுத்துவரும் புதன் புக்தி குழந்தை வரம் தரும். கணவன்- மனைவி. இருவர் ஜாதகத்தைப் பொருத்து, தாமத குழந்தைப் பேறு என்றுள்ளது. மருத்துவ செலவுக்குப்பிறகு குழந்தை பிறக்கும். 2025-க்குப் பிறகே குழந்தை பெறும் பாக்கியம் கிடைக்கும். இவ்விதம் கருப்பைக் கோளாறுள்ளவர்கள் திருச்சி- கரூர் சாலையிலுள்ள பேட்டை வாய்த்தலை சென்று வணங்கவும். தம்பதிகள் இராமநாதபுரம்- திருபுல்லாணி சென்று வழிபடவேண்டும்.

செல்: 94449 61845

bala160922
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe