Advertisment

உங்கள் கேள்வி ஆர்.மகாலட்சுமி பதில்கள்

/idhalgal/balajothidam/your-question-rmahalakshmi-answers-5

* பெயர் வெளியிட விரும்பாத வாசகர்:

தந்தை சிவாலய அர்ச்சகர். அவருக்கு உதவியாக இருக்கிறேன். பூர்வீக சொத்து வஞ்சிக்கப்பட்டுவிட்டது. யாருக்கெல் லாம் உதவினோமோ, நன்றியை மறந்து எதிரிகளாகி துரோகம் செய்கிறார்கள். இஷ்ட, குல தெய்வங்களை வணங்கிவரு கிறோம். விபத்தால் தண்டுவட பாதிப்பு, மூட்டுவலி, அல்சர் என துயருற்று வருகிறேன். இன்னும் திருமணமாக வில்லை. தனிமையில் கண்ணீர் வடிக்கிறேன். திருமணம் எப்போது நடக்கும்? நல்வாழ்வு எப்போது கிட்டும்?

Advertisment

16-1-1978-ல் பிறந்தவர். தனுசு லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். லக்னாதிபதி குருவும், 7-ஆம் அதிபதி புதனும் பரிவர்த் தனை. பூர்வபுண்ணிய அதிபதி செவ்வாய் எட்டாமிடத்தில் நீசம். உங்கள் வாழ்க்கையின் அனைத்துக் கஷ்டங்களுக்கும் இந்த பூர்வ புண்ணிய குறைபாடே காரணமாகும். மேலும் சனி, சூரியன் பரிவர்த்தனை. நடப்பு 8-ஆமிட அதிபதி சந்திரனின் தசை. அவர் நாலமிடத்தில் கேதுவுடன் அமர்ந்து தசையை ஓட்டுகிறார். எனவே 2013, ஜூனில் ஆரம்பித்த சந்திர தசை உங்களை சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. நடப்பு சந்திர தசையில் சுக்கிர புக்தி. இதில் மறுமணப் பெண் கிடைப்பார். அவர் உங்கள் இனத்தி லேயே அமைவார். 2023, ஜூனில், ஆரம்பிக்கும் செவ்வாய் தசை, உங்களை பூர்வீக இடத்திலிருந்து வேறிடம் செல்லச் செய்யும். திருநெல்வேலி- தூத்துக்குடி சாலையிலுள்ள வல்லநாடு அருகில், "அகரம்' எனும் தலத்திற்குச் சென

* பெயர் வெளியிட விரும்பாத வாசகர்:

தந்தை சிவாலய அர்ச்சகர். அவருக்கு உதவியாக இருக்கிறேன். பூர்வீக சொத்து வஞ்சிக்கப்பட்டுவிட்டது. யாருக்கெல் லாம் உதவினோமோ, நன்றியை மறந்து எதிரிகளாகி துரோகம் செய்கிறார்கள். இஷ்ட, குல தெய்வங்களை வணங்கிவரு கிறோம். விபத்தால் தண்டுவட பாதிப்பு, மூட்டுவலி, அல்சர் என துயருற்று வருகிறேன். இன்னும் திருமணமாக வில்லை. தனிமையில் கண்ணீர் வடிக்கிறேன். திருமணம் எப்போது நடக்கும்? நல்வாழ்வு எப்போது கிட்டும்?

Advertisment

16-1-1978-ல் பிறந்தவர். தனுசு லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். லக்னாதிபதி குருவும், 7-ஆம் அதிபதி புதனும் பரிவர்த் தனை. பூர்வபுண்ணிய அதிபதி செவ்வாய் எட்டாமிடத்தில் நீசம். உங்கள் வாழ்க்கையின் அனைத்துக் கஷ்டங்களுக்கும் இந்த பூர்வ புண்ணிய குறைபாடே காரணமாகும். மேலும் சனி, சூரியன் பரிவர்த்தனை. நடப்பு 8-ஆமிட அதிபதி சந்திரனின் தசை. அவர் நாலமிடத்தில் கேதுவுடன் அமர்ந்து தசையை ஓட்டுகிறார். எனவே 2013, ஜூனில் ஆரம்பித்த சந்திர தசை உங்களை சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. நடப்பு சந்திர தசையில் சுக்கிர புக்தி. இதில் மறுமணப் பெண் கிடைப்பார். அவர் உங்கள் இனத்தி லேயே அமைவார். 2023, ஜூனில், ஆரம்பிக்கும் செவ்வாய் தசை, உங்களை பூர்வீக இடத்திலிருந்து வேறிடம் செல்லச் செய்யும். திருநெல்வேலி- தூத்துக்குடி சாலையிலுள்ள வல்லநாடு அருகில், "அகரம்' எனும் தலத்திற்குச் சென்று வழிபடவும். மேலும் திருச் செந்தூர் முருகனின் பாதங்களை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள்.

Advertisment

d

* ஆர். குரு பாக்கியம், சென்னை-82.

என் கணவர் தண்ணீர் கேன் விற்பனை செய்கிறார். சரியான வருமானம் இல்லை. உடல்நலமும் சரியில்லை. எப்போது சரியாகும்?

11-5-1986-ல் பிறந்தவர். துலா லக்னம், ரிஷப ராசி, மிருகசீரிட நட்சத்திரம். லக்னத் தில் கேது; 7-ல் ராகு. கூடவே சூரியனும் புதனும். கிரகண யுத்த ஜாதகம். இவரின் ஜாதகத்தில் சூரியன் உச்சமாகியிருந்தும், ராகு சேர்க்கையால் பலமிழந்து விட்டார். உச்ச சந்திரன் எட்டில் மறைந்ததால், அவரும் பலன் தர இயலாத நிலையில் உள்ளார். லக்னத்துக்கு 4-ஆமிடத்தில் குரு நீசம். சனி பார்வையால் நீசபங்கம். நடப்பு குரு தசையில் சந்திர புக்தி 2022, நவம்பர் வரை. அதுவரையில் மனப்பதட்டம் ஏற்பட்டு இனம்புரியாத வியாதிபோல் அவஸ்தைப் படுவார். அடுத்துவரும் செவ்வாய் புக்தியில் உடல்நிலை சரியாகிவிடும். இந்த ஜாதகத்தில் உள்ளதுபோல், 4-ஆமிடத்தில் ஒரு நீச கிரகம் அமர்ந்தும், சந்திரன் 8-ல் மறைந்துமுள்ள ஜாதகர்கள் தயவுசெய்து, தண்ணீர் சம்பந்தமான தொழில், வேலை செய்யக்கூடாது; சரிப் பட்ட வராது. இந்த ஜாதகர் சமையல், உணவு சம்பந்தப்பட்ட வேலை; தொழிலில் ஈடுபட் டால் வாழ்வுத் தரம் உயரம். இவ்விதம் 8-ல் சந்திரன் அமையப்பெற்ற ஜாதகர்கள் மேட்டுப்பாளையம் அருகிலுள்ள இடுகம்பாளையம் ஆஞ்சனேயரை வழிபட தோஷம் நீங்கும். அல்லது உங்கள் ஊர் கோவிலி லுள்ள ஆஞ்சனேயரை திங்கட்கிழமை தோறும் வணங்குவது நல்லது.

* கே. கோமதி, சென்னை.

என் பேரன் பள்ளிக்குச் செல்ல மறுக் கிறான். மிக அதிகமாக கோபம் வருகிறது. இவன் தந்தை இவனுக்காகவே வேலையை விட்டுவிட்டார். பேரன் எப்போது சரியா வான்?

ஆர்.ஆர்.கவின்ராஜா 15-1-2014-ல் பிறந்த வர். மகர லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம், லக்னாதிபதி சனி உச்சம். ராகு வுடன் உள்ளார். லக்னத்தில் 6 மற்றும் 8-ஆமதிபதி புதனும் சூரியனும் உள்ளனர். எந்த ஜாதகத்திலும் குறை, கோளாறு என்றால் உடடினயாக 5-ஆம் பாவத்தை- 5-ஆம் அதிபதியை அனுமானிக்க வேண்டும். இந்தச் சிறுவனின் ஜாதகத்தில் 5-ஆம் அதிபதி சுக்கிரன் 12-ஆமிடத்தில் அமர்ந்து சனி, ராகு செவ்வாய், குருவின் பார்வையைப் பெறுகிறார். எனவே, பூர்வபுண்ணிய குற்றமுள்ள ஜாதகம். நடப்பு குரு தசை. 3, 12-ஆம் அதிபதி குரு 6-ல் அமர்ந்து தசை நடத்துகிறார். கூடவே மனோகாரகன் சந்திரனும் உள்ளார். 3-ஆம் அதிபதி என்பவர் மிகுந்த ஆற்றலை, முயற்சியை வெளிப்படுத்துவார். இங்கு அவர் 6-ல் அமரும்போது, பையனுக்கு எதிர்மறை ஆற்றல் ஆக்ரோஷமாக வெளிப்படுகிறது. முதலில் இந்தவிதமாக அதிக கோபம் கொள்ளும் ஜாதகர்கள் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே இடும்பவனம் எனும் இடத்தில் எழுந்தருளியுள்ள சத்குண நாதரை வழிபடவேண்டும். உங்கள் குல தெய்வத்துக்கு நன்கு வேண்டிக் கொள்ளவும். விழுப்புரம்- பரிக்கல் லட்சுமி நாராயணர் கோவிலுக்கு பையனை ஒருமுறை அழைத்துச் செல்லவும். எல்லா பரிகாரங்களோடு இந்த சிறுவனை ஒரு நல்ல விளையாட்டில் சேர்த்து விடவும். விளையாட்டு என்றால் ஒரு பக்கமாக உட்கார்ந்து விளையாடும் விளையாட் டாக இருக்கக்கூடாது. நன்றாக ஓடியாடி விளையாடும் விளையாட்டாக இருப்பது அவசியம். குரு தசை சுக்கிர புக்தியில், 2024, ஏப்ரல் மாதத்திற்குப்பிறகு, இயல்பு வாழ்க்கைக்கு வந்துவிடுவான். மருத்துவச் செலவும் இருக்கும். உங்கள் பேரன் படிப்படி யாக நன்றாக வந்துவிடுவார்: கவலை வேண்டாம்.

* கோமதி, தென்காசி.

என் கணவர், 2021, நவம்பரில் வேலை நீக்கம் செய்யப்பட்டார். வேறு வேலை எப்போது கிட்டும்? வீடு மாற்றம் வருமா?

கணவர் 15-5-1943-ல் பிறந்தவர். கன்னி ராசி, உத்திர நட்சத்திரம். நடப்பு புதன் தசை. இதில் சற்று உடல்நலக்குறைவு, மருந்துச் செலவுண்டு. 2023, டிசம்பருக்குள் வீடு மாற்றமும், வீட்டின் அருகிலேயே ஒரு வேலையும் கிடைக்கும். இவருக்கு நரம்புத் தளர்ச்சி வர வாய்ப்புண்டு. ஆலயத்தில் அபிஷேக நீர் வரும் கோமுக நீரை எடுத்துவந்து வீடு முழுவதும் தெளிக்கவேண்டும். முடிந்தபோதெல்லாம் பசுவுக்கு, கீரை, காய் கறி கொடுக்கவும். வயதானவர்கள் அதிக செலவில்லாமலும், அதிக சிரமம் இல்லாமலும் செய்யக்கூடிய வலிமையான பரிகாரங்கள் இவை.

* திருமதி. சுகந்தி செல்லப்பன், சென்னை.

என் உறவினர் மகளுக்குத் திருமணத் தேதி எண் 5 வருமாறு குறித்துள்ளார்கள். நீஙகள் 4, 5, 7, 8 தேதிகளில் திருமணம் கூடாது என எழுதிவருகிறீர்கள். தவிர்க்க முடியாத காரணத்தால் அந்த தேதியை மாற்றமுடியாது என்கிறார்கள். அங்கீ கரிக்கப்பட்ட நட்சத்திரங்களில் ரோகிணி, மிருகசீரிடம், மகம், உத்திரம், அஸ்தம், சுவாதி, மூலம், உத்திராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி, அஸ்வினி, புனர்பூசம், பூசம், சித்திரை, அவிட்டம், சதயம் ஆகியவற்றில் திருமணம் செய்யலாமென்று பஞ்சாங்கத்தில் குறிக்கப்பட்டுள்ளது. 5 என்பது புதன் நட்சத்திரம். அதை ஏன் விலக்க வேண்டும்?

4, 5, 7, 8 தேதிகளில் திருமணம் செய்தவர்கள் பாதிப்படைந்திருக்கிறார் கள். மணவாழ்க்கையில் மகிழ்ச்சியை இழந்திருக்கிறார்கள் என்று பல அனுபவம் கூறும் உண்மை! சுருதி, யுக்தி, அனுபவம் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். எண்கணிதம் என்பது ஆங்கிலேயர் காலத்தில்தான் வந்ததென்று நினைக்காதீர் கள். "ஸீரோ' என்ற மேதைதான் எண் கணிதத்துக்கு உயிரூட்டியவர். அடுத்து, தமிழ்நாட்டில் பண்டிட் சேதுராமன் (1960-ல்) அதைத் தெளிவுபடுத்தினார். "எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு' என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் கூறிவிட்டார். அங்கேயே "நியூமராலஜி' புகுந்துவிட்டது. என்னுடைய அனுபவத்தில் அரசியலிலும், பொதுவாழ்வி லும், கலைத்துறையிலும் பலருக்கு எண்கணிதப் படி பெயர் மாற்றம் செய்து அவர்கள் பேரும் புகழும் பொருளும் பெற்று சீரும் சிறப்புமாக உள்ளார்கள்.

bala190822
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe