Advertisment

உங்கள் கேள்வி ஆர்.மகாலட்சுமி பதில்கள்

/idhalgal/balajothidam/your-question-rmahalakshmi-answers-43

ப் பெயர் வெளியிட விரும்பா தவர்.

இவரது ஜாதகம் வாட்ஸ்- ஆப்பில் வந்துள்ளது. செவ்வாய் தோஷம் உள்ளதா? திருமணம் எப்போது?

Advertisment

மறைந்த புதன் நல்ல கல்வி யைத் தருவரா? குருச் சந்திர யோகம் உள்ளதா? தர்ம கர்மாதிபதி யோகம் பலன் தருமா? அரசு வேலை கிடைக்குமா? இந்த ஜாதகம் ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. ஜாதகி 10-6-2001-ல் பிறந்தவர். ஜாதகத்தில் காலசர்ப்ப தோஷம் உள்ளது. லக்னமும் ராகுவும் ஒரே நட்சத்திரக் காலில் உள்ளனர். மேலும் செவ்வாயும், கேதுவும் ஒரே நட்சத்திரக் காலில் உள்ளனர். 12-ஆம் இடத்தில் குருவும் சூரியனும் ஒரே நட்சத்திர சாரம் வாங்கியுள்ளனர். லக்னத் துக்கு 7-ல் செவ்வாய், கேது. எனவே செவ்வாய் தோஷம் உண்டு. நாகதோஷம் உள்ளது. ராசிக்கும் செவ்வாய் தோஷம் உண்டு. 9-ஆம் அதிபதியும, 10-ஆம் அதிபதியும் இணைந்து விரயத்தில் அமர்ந்ததால், இதனை முழுமையான தர்மகர்மாதிபதி யோகம் எனக் கூற இயலாது. அதுபோல் குருச் சந்திர யோகமும் முழுமையாக பலன் தராது. "இருக்கு- ஆனா இல்லை' என்ற நிலையில் செயல்படும். எனினும் 8-ஆம் அதிபதி சனி 12-ல் மறைந்ததால் விபரீத ராஜயோகம் கிடைக்

ப் பெயர் வெளியிட விரும்பா தவர்.

இவரது ஜாதகம் வாட்ஸ்- ஆப்பில் வந்துள்ளது. செவ்வாய் தோஷம் உள்ளதா? திருமணம் எப்போது?

Advertisment

மறைந்த புதன் நல்ல கல்வி யைத் தருவரா? குருச் சந்திர யோகம் உள்ளதா? தர்ம கர்மாதிபதி யோகம் பலன் தருமா? அரசு வேலை கிடைக்குமா? இந்த ஜாதகம் ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. ஜாதகி 10-6-2001-ல் பிறந்தவர். ஜாதகத்தில் காலசர்ப்ப தோஷம் உள்ளது. லக்னமும் ராகுவும் ஒரே நட்சத்திரக் காலில் உள்ளனர். மேலும் செவ்வாயும், கேதுவும் ஒரே நட்சத்திரக் காலில் உள்ளனர். 12-ஆம் இடத்தில் குருவும் சூரியனும் ஒரே நட்சத்திர சாரம் வாங்கியுள்ளனர். லக்னத் துக்கு 7-ல் செவ்வாய், கேது. எனவே செவ்வாய் தோஷம் உண்டு. நாகதோஷம் உள்ளது. ராசிக்கும் செவ்வாய் தோஷம் உண்டு. 9-ஆம் அதிபதியும, 10-ஆம் அதிபதியும் இணைந்து விரயத்தில் அமர்ந்ததால், இதனை முழுமையான தர்மகர்மாதிபதி யோகம் எனக் கூற இயலாது. அதுபோல் குருச் சந்திர யோகமும் முழுமையாக பலன் தராது. "இருக்கு- ஆனா இல்லை' என்ற நிலையில் செயல்படும். எனினும் 8-ஆம் அதிபதி சனி 12-ல் மறைந்ததால் விபரீத ராஜயோகம் கிடைக்கும். இந்தப் பெண்ணின் ஜாதகப்படி, இரு மாங்கல்ய அமைப்புள்ளது. எனவே ஒரு எருக்கஞ் செடிக்குத் திருமணம்போல் செய்தால், இந்த தோஷம் நிவர்த்தியாகுமாம். உங்களைப்போல் ஒரு வாசகர் சொன்ன தகவல் இது. மேலும் மாங்கல்ய தானம் அவசியம். குலதெய்வ பிரார்த்தனை பாக்கி உள்ளது. இந்தப் பெண் தகவல் தொடர்பு சம்பந்தமாக வெளியூர் சென்று படிப்பாள். கொஞ்சம்- ஸாரி, நிறைய செலவழித்தால் அரசு வேலைக்கு வாய்ப்புள்ளது. நடப்பு ஏழரைச்சனி. நடப்பு ராகு தசையில் சனிபுக்தி. அடுத்துவரும் புதன் புக்தியில் திருமணம் கைகூடும். ப்ரம்மஹத்தி தோஷத்திற்கு திருவிடை மருதூர் சென்றுவரவும். புக்திக்கு பைரவரை வணங்கவும். இவ்விதம் நிறைய கிரக தோஷம் உள்ளவர்கள் மதுரை- இராமேஸ்வரம் சாலையிலுள்ள இடைக்காட்டூர் சித்தர் கோவில்சென்று வணங்கவும்.

dd

ப் ப. சேகர்.

இது என் அண்ணன் மகன் ஜாதகம்... திருமணம் தடையாகிக் கொண்டே வருகிறது? எப்போது திருமணம் நடக்கும்?

12-6-1984-ல் பிறந்தவர். தனுசு லக்னம், விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரம். இந்த ஜாதகத்தில் சனி, செவ்வாய் சேர்க்கை. புதன், கேது பார்வை. ஏழாம் அதிபதி புதன் 5-ல் அதிபதியின் சாரத்தில் நிற்கிறார். நடப்பு சுக்கிர தசையில் சனி புக்தி. இவருக்கு ஒரு கல்யாணம்கூட ஆகவில்லை என்று அவர் உறவினர் மிக வருத்தப்படுகிறார். இவருக்கு ஒன்று, பிறமொழி பேசும் பெண்ணுடன் ரகசிய திருமணம் நடந்திருக்கும். அல்லது நிறைய பெண்களை தொடர்புகொண்டு, பழகிவருவார். எது எப்படியிருந்தாலும் இவர் சரியில்லை. நடப்பு சுக்கிர தசை, சனி புக்தியில், எதிர்பாராதவிதமாக, இவரின் செயல்பாடுகள் வெளியே தெரியவரும். இவ்விதம் செயல்பாடுகள் உள்ள நபர்கள் வீட்டில் இருப்பின் கங்கைகொண்ட சோழபுரம், இராஜேந்திர சோழன் கட்டிய பிரகதீஸ்வரர் கோவில்சென்று, குடும்பத்தினர் வணங்கவும்.

ப் கே. ரவிசந்திரன்.

எனக்கு புதன் தசை ஆரம்பிக்கிறது. அது எவ்வாறு இருக்குமென்று கூறுங்கள்?

29-11-1955-ல் பிறந்தவர். கடக லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். நடப்பு புதன் தசை 2023 மே மாதம் ஆரம்பிக்கிறது. புதன் தசையில் நிறைய அலைச்சல்கள் இருக்கும். சற்று உடல்நிலை பாதிப்பும், அவ்வப் போது வந்து எட்டிப்பார்க்கும். அஜீர்ணக் கோளாறு, பாதங்களில் வலி என ஏதோ ஒன்றுவரும். முடிந்தமட்டும் இந்த புதன் தசையில் அருகிலுள்ள மற்றும் வெகு தூரத்திலுள்ள கோவில்களுக்குச் சென்று வாருங்கள். இவ்விதம் புதன் தசை நடப்பவர்கள் மதுரை சென்று மீனாட்சியம்மனை வழிபடுவது நல்லது.

dd

ப் மீனாட்சி சுந்தரம், சூளைமேடு, சென்னை.

சமீபத்தில், ஒரு ஜோதிடர், எனக்கு பாதகாதிபதி புதன் என்பதால், நீங்கள் பெருமாளை வணங்கக்கூடாது. அம்பாளை வணங்கி வா என்று கூறி விட்டார். இனி நான் வைணவ சம்பிரா தாயத்தை மேற்கொள்ளலாமா அல்லது சைவ சம்பிராதாயத்தை மேற்கொள்ள லாமா? பதில் கூறுங்கள்?

29-8-1955-ல் பிறந்தவர். மீன லக்னம், தனுசு ராசி, உத்திராட நட்சத்திரம். உங்கள் உபய லக்னமான மீன லக்னத்திற்கு புதன் பாதகாதிபதிதான். உங்கள் ஜாதகத்தில் புதன் உச்சமும்கூட. இதனால் பெருமாளை கும்பிடக்கூடாது எனக் கூறிய அந்த அதிமேதாவி யார்? வயசு 68 ஆச்சு. இனிமேல் ஏதோ ஒரு சாமியை வணங்கவும். விஷ்ணுவும், துர்க்கையும் ஒரே தெய்வம்தான் என்று ஸ்ரீதேவி மஹாத்மியம் உறுதிபட எடுத்துரைக்கிறது. எனவே தொழும் தெய்வத்தில் வேறுபாடு காட்ட வேண்டாம். மனிதருக்குள் இருக்கிற சண்டை போதாது என்று, சாமிக்குள்ளும் சண்டை இழுத்துவிடுகிறானே. இவர்களை என்ன செய்தால் தேவலை!

ப் அருண், திருச்சி.

என் ஜாதகம் மற்றும் மனைவி ஜாதகம் அனுப்பியுள்ளேன். திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகிறது. குழந்தை எப்போது பிறக்கும்? எத்தனை குழந்தைகள்?

அருண் 7-12-1983-ல் பிறந்தவர். தனுசு லக்னம், தனுசு ராசி, பூராட நட்சத்திரம். நடப்பு ராகு தசை- புதன் புக்தி. இவரது 5-ஆம் வீட்டை சனி பார்ப்பதால், குழந்தைப் பிறப்பு தாமதமாகிறது. மனைவி ராஜலட்சுமி: 1-7-1981-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். இவரின் 5-ஆம் அதிபதி சனியுடன் சேர்க்கை. இவருக்கு சனி தசையில் சுக்கிர புக்தி. அடுத்துவரும் சூரிய புக்திக்குள் கர்ப்பம் தரிக்க வாய்ப்புண்டு. அதற்குமுன் ஒரு நல்ல மகப்பேறு மருத்துவரை கலந்து மருந்து எடுத்துக்கொள்ளவும். பிறகு எத்தணை குழந்தைகள் என்பதை நீங்கள் இருவரும் முடிவு செய்துகொள்ளவும். இவ்விதம் குழந்தைப் பேறுக்குக் காத்திருப்பவர்கள். திருச்சி, மணப்பாறை அருகில் வீரப்பூர் பெரிய காண்டியம்மன் கோவிலில் பின்புறமுள்ள வில்வ மரத்தில் தொட்டில் கட்டிச் சென்றால் குழந்தை பாக்கியம் கிட்டும்.

செல்: 94449 61845

bala120523
இதையும் படியுங்கள்
Subscribe