ப் க. ராஜேந்திரன், திருச்சி-5.

எனக்கு சனி தசை, சனி புக்தி நடக்கிறது. உடல்நிலை பூரண குணம் பெறுவது எப்போது? வழக்கு முடிந்து பணம் எப்போது வரும்? ஆயுள் எவ்வளவு?

20-12-1951-ல் பிறந்தவர். கும்ப லக்னம், சிம்ம ராசி, பூர நட்சத்திரம். சனி 8-ல் அமர்ந்து, அவரை குரு பார்ப்பது நல்ல பூரண ஆயுள் உண்டு என்பது ஜோதிடவிதி. நடப்பு சனி தசை, சனி புக்தி. இது முடிவதற்குள் வழக்கு முடிந்து பணம் கைக்கு வந்துவிடும். இந்த சனி தசை. சற்று மருத்துவ செலவுகளைக் கொடுக்கும். அப்புறம் ஆயுள் எவ்வளவு என்று கேட்டிருக்கிறீர் கள். நான் என்ன பிரம்மாவா அல்லது சித்தபுருஷரா- உங்களுக்கு எவ்வளவு ஆயுள் என்று சொல்வதற்கு? பிறகு சனி தசை, புதன் புக்தியில் சற்று கவனம் தேவை. இவ்விதம் வரவேண்டிய பணம் வசூலாக விரும்புபவர்கள். திண்டுக்கல் அருகில் தாடிக் கொம்பு சென்று வணங்கவும்.

ப் ப்ரியா, சென்னை.

Advertisment

வீடு மாற்றினோம். அதிலிருந்து மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இதற்கு என்ன பரிகாரம் செய்யவேண்டும்?

15-11-1993-ல் பிறந்தவர். தனுசு லக்னம், விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரம். நடப்பு சுக்கிர தசையில் சந்திர புக்தி. 6-ஆமிட தசையில் 8-ஆமிட புக்தி நடக்கும்போது எப்படி உங்களுக்கு நல்லது நடக்கும்? இதற்கு வீட்டைக் குற்றம் சொல்லவேண்டாம். மறுபடியும் வீடு மாற்றினாலும் இதே கஷ்டம்தான் இருக்கும். 2024 ஏப்ரல்வரை இவ்வாறுதான் இருக்கும். இவ்விதம் வீடு வாஸ்து குற்றமாக உள்ளது. என எண்ணும் வாடகை வீட்டில் குடியிருப்போர், வீட்டின் ஈசான்ய மூலையில் கலசத் தேங்காய் வைக்கவும். சொந்த வீட்டில் உள்ளவர்கள் நெல்லி மரம் வளர்க்கவும்.

Advertisment

Q&A

ப் மங்கயர்க்கரசி, மதுரை.

என் வயது 61. நீரிழிவு நோயால் சிரமப்படுகிறேன். எப்போது பூரண குணமாகும்?

25-7-1962-ல் பிறந்தவர். மீன லக்னம், மேஷ ராசி, கார்த்திகை நட்சத்திரம். நடப்பு சனி தசை. உங்களுக்கு சனி தசை ஆரம்பித்திலிருந்தே நோய்த் தாக்கம் அதிகம் இருந்திருக்கும். தற்போது சனி தசையில் புதன் புக்தி. புதன் பாதாகாதிபதி. எனவே உடல்நிலையில் கவனம் தேவை. நீரிழிவு நோய் என்பது முழுமையாக குணப்படுத்த இயலாத ஒன்று. அதனை உணவு முறைகளால் கட்டுப் பாடாக வைத்துக் கொள்ளுங்கள். ஆங்கில மருத்துவத்தைத் தொடரவும். இவ்விதம் நீரிழிவு நோய் உடையவர்கள் புதுக்கோட்டை அருகில் ஆவுடையார் கோவில் சென்று வணங்கவும்.. முடிந்த அளவு திரவப் பொருட்கள் தானம் செய்யவும்.

ப் எம். லட்சுமணன், ஜமீன் நத்தம்பட்டி.

என் மகன் ஜாதகம் அனுப்பியுள்ளேன். திருமணம் எப்போது நடக்கும்?

மகன் விஜயகுமார் 3-6-1993-ல் பிறந்தவர். மிதுன லக்னம், விருச்சிக ராசி, ராசியில் ராகு, 7-ல் கேது. லக்னத்துக்கு 2-ல் செவ்வாய் எனவே நாகதோஷம், செவ்வாய் தோஷம் உள்ளது. சனி, செவ்வாய் பார்வை. நடப்பு புதன் தசையில் சந்திர புக்தி 2025 வரை. சந்திர புக்தி 2023, ஜூன் மாதம் ஆரம்பிக்கும். இவருக்கு நீச செவ்வாயும், நீச சந்திரனும் பரிவர்த்தனை. இந்த சந்திர புக்தியில், இவரின் குடும்பத்திற்கு ஆகாத தாய்மாமன் மகளுடன் அல்லது வேலை செய்யமிடத்தில் பிடித்த பெண்ணுடன் திருமணம் நடக்கும். இவ்விதம் புதன் தசையில் நீச சந்திர புக்தி உடையவர்கள், மிகவும் குழப்பத்துடன் நடந்துகொள்வர். இவர்கள் விஷ்ணு துர்க்கையை தினமும் வழிபடுவது நல்லது.

செல்: 94449 61845