Advertisment

உங்கள் கேள்வி ஆர்.மகாலட்சுமி பதில்கள்

/idhalgal/balajothidam/your-question-rmahalakshmi-answers-40

ப் எம். தேவி, சைதாப்பேட்டை, சென்னை-15.

நானும், என் அத்தானும் பிரிந்து வாழ்கிறோம். நாங்கள் சேர்ந்துவாழ முடியுமா?

Advertisment

உங்கள் அத்தான் கார்த்திக் 22-4-1987-ல் பிறந்தவர். கும்ப லக்னம், கும்ப ராசி, அவிட்ட நட்சத்திரம். இந்த அத்தான், ஒருத்திக்கு மட்டுமல்ல; நிறைய பேருக்கு அத்தானாக இருப்பார். கும்ப ராசிக்கு ஏழரைச்சனி. நடப்பு சனி தசை 2023, ஜனவரியில் ஆரம்பம். சனி தசை ஆரம்பித்தவுடன், அத்தான் கிளம்பி விட்டார். இவரை யெல்லாம் நம்பி பயனில்லை. நீங்கள் 20-6-1995-ல் பிறந்த வர். துலா லக்னம், மீன ராசி, உத்திரட் டாதி நட்சத்திரம். ராசியில் சனி, சந்திரன் சேர்க்கை. தற்போது மீன ராசிக்கு ஏழரைச் சனி, நடப்பு கேது தசையில் சந்திர புக்தி. இப்போது மிகவும் மனக் குழப்பமாக இருக்கும். அடுத்துவரும் செவ்வாய் புக்தியில், அத்தானைவிட்டுப் பிரிவதற்கான தெளிவான முடிவெடுத்து விடுவீர்கள். இவ்விதம் கேது தசை நடப்பவர் கள், திருக்கண்டியூர், பிரம்ம கண்டீஸ் வரருக்கு, பிறந்த கிழமையில் சென்று அர்ச்சனை செய்யவும்.

Advertisment

qq

ப் முத்துமாரி, ராமாபுரம், சென்னை-69.

உடல்நிலை சரியில்லை. வேலை கிடைத்தால் செய்யமுடியுமா? ஆயுள் பாவம் எப்படி?

15-5-1943-ல் பிறந்தவர். ரிஷப லக்னம், கன்னி ராசி, உத்திர நட்

ப் எம். தேவி, சைதாப்பேட்டை, சென்னை-15.

நானும், என் அத்தானும் பிரிந்து வாழ்கிறோம். நாங்கள் சேர்ந்துவாழ முடியுமா?

Advertisment

உங்கள் அத்தான் கார்த்திக் 22-4-1987-ல் பிறந்தவர். கும்ப லக்னம், கும்ப ராசி, அவிட்ட நட்சத்திரம். இந்த அத்தான், ஒருத்திக்கு மட்டுமல்ல; நிறைய பேருக்கு அத்தானாக இருப்பார். கும்ப ராசிக்கு ஏழரைச்சனி. நடப்பு சனி தசை 2023, ஜனவரியில் ஆரம்பம். சனி தசை ஆரம்பித்தவுடன், அத்தான் கிளம்பி விட்டார். இவரை யெல்லாம் நம்பி பயனில்லை. நீங்கள் 20-6-1995-ல் பிறந்த வர். துலா லக்னம், மீன ராசி, உத்திரட் டாதி நட்சத்திரம். ராசியில் சனி, சந்திரன் சேர்க்கை. தற்போது மீன ராசிக்கு ஏழரைச் சனி, நடப்பு கேது தசையில் சந்திர புக்தி. இப்போது மிகவும் மனக் குழப்பமாக இருக்கும். அடுத்துவரும் செவ்வாய் புக்தியில், அத்தானைவிட்டுப் பிரிவதற்கான தெளிவான முடிவெடுத்து விடுவீர்கள். இவ்விதம் கேது தசை நடப்பவர் கள், திருக்கண்டியூர், பிரம்ம கண்டீஸ் வரருக்கு, பிறந்த கிழமையில் சென்று அர்ச்சனை செய்யவும்.

Advertisment

qq

ப் முத்துமாரி, ராமாபுரம், சென்னை-69.

உடல்நிலை சரியில்லை. வேலை கிடைத்தால் செய்யமுடியுமா? ஆயுள் பாவம் எப்படி?

15-5-1943-ல் பிறந்தவர். ரிஷப லக்னம், கன்னி ராசி, உத்திர நட்சத்திரம். நடப்பு புதன் தசை. புதன், 12-ஆமிடத்தில், செவ்வாய் மற்றும் சனியின் இடையில் அமர்ந்து பாபகர்த்தாரி தோஷம் பெற்றுள்ளார். எனவே புதன் தசை ஆரம்பித்திலிருந்து ஒரே இடத்தில் முடங்கி யிருப்பீர்கள். நடப்பு புதன் தசையில் சுக்கிர புக்தி. நோய்த்தாக்கம் அதிகமிருக்கும். உடல்நலத்தி லும் கவனம் தேவை. இவ்வித புதன் சிலருக்கு பக்கவாத நோய் கொடுக்கும். இவ்விதம் புதன் கெட்டுப் போன நிலையில் இருந்து, அதன் தசை நடப்பவர்கள் திருச்சி அரங்க நாதருக்கு பச்சைப்பட்டு, புதன்கிழமை, புதன் ஹோரையில் சாற்றி வழிபடவேண்டும். வயதான வர்கள் அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்கு சிறிதளவு துளசி இலைகளைக் கொடுத்து வணங்கி வரவும்.

ப் பாலகிருஷ்ணன், சுரண்டை, தென்காசி.

எனது மனைவி ஜாதகம் இல்லை. அவளுக்கு தீர்க்கசுமங்கலி யோகம் உள்ளதா?

இவர் 30-1-1955-ல் பிறந்தவர். கும்ப லக்னம், மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம். ராசியில் சனி உச்சம். அதனால் தீர்க்காயுள் உண்டு. இதே உச்ச சனி, உச்ச குருவைப் பார்த்து, குருவை நீசமடையச் செய்கிறார். நடப்பு குரு தசையில் குரு புக்தி 2023 டிசம்பர்வரை. பின்வரும் புக்தியில் கவனம் தேவை. சனி, அம்சத்தில் நீசம். எனவே கண் அல்லது பாதத்தில் வலி வரும். இவ்விதம் நீண்ட ஆயுளைப்பெற விரும்பு கிறவர்கள், மக நட்சத்திரத்தன்று, எருமை மாடுகளுக்கு அகத்திக்கீரை கொடுக்கவும். ஆமாம்; அதென்ன கேள்வி? உங்களுக்கு ஆயுசு கெட்டியா என்று கேட்டிருக்க வேண்டியதுதானே! மனைவிக்கு சுமங்கலி யோகம் உள்ளதா என வினா தொடுத்துள்ளீர் கள். ஐயா, புருசன் போனால் மனைவிகள் உயிருடன் இருந்தால் ஆகாதா? இந்த காலத்திலும் இந்த மனப்பான்மையுடன் இருக்கிறீர்களே!

ப் நரசிங்கம், நங்கநல்லூர், சென்னை-61.

16-8-1931-ல் பிறந்த என் ஜாதகத்தில் ஒன்றில் சிம்ம ராசி என்றும், இன்னொன் றில் கன்னி ராசி என்றும் உள்ளது. எது சரி? உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டுள் ளது. அது பற்றிக் கூறவும்.

கன்னி லக்னம், வாக்கியப்படி, லக்னத் துக்கு 12-ல் சந்திரன். திருக்கணிதப்படி, லக்னத் தில் சந்திரன். வாக்கியபடி சூரியனுடன் பரிவர்த்தனை. திருக்கணிதப்படி சனி பார்வையில் சந்திரன். இது ராசி, நட்சத்திர சந்தி ஜாதகம். நடப்பு கேது தசை. இரு கணிதப்படியும் புக்திக் கால மாறுபாடுகள் உள்ளது. எது எப்படி இருப்பினும், கேது தசையின் சாரநாதர் சந்திரன். எனவே எப்போதும் கவனம் தேவை. பார்வை குறைபாடு, உடல், மனநலம் குன்றியிருக்கும். கடந்த புதன் தசையிலேயே இவருக்கு கண்டம் போல, நோய் ஏற்பட்டிருக்கும். கவனம் தேவை. சந்திரன், சந்தி நிலையில் உள்ளவர்கள் 27 நட்சத்திரங்களும், 27 லிங்கமாக உள்ள, திருவொற்றியூர் சென்று வழிபடவும். மேற்கண்ட ஜாதகத்தில் 8-ஆமிட செவ்வாயை சனிபகவான் பார்ப்பதால் நிறை ஆயுள் அமைந்தது. இதில் சந்திரனின் நிலை யைப் பற்றி குழப்பிக்கொள்ள வேண்டாம்.

ப் ஏ. செல்வராஜ், சீனிவாசநகர், சென்னை- 63

இவருடைய நீண்ட கடிதத்தில் வேலை, வீடு, கர்மவினை, பேரன், குல தெய்வ சாபம், பரிகாரம் என வரிசை யாகக் கேட்டுள்ளார்.

இவர் பிறந்த தேதி 30-9-1958. மேஷ லக்னம், மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம். இவருடைய 6-ஆமிடத்தில் நான்கு கிரகக் கூட்டணி உள்ளதால் அங்கு கிரக யுத்தம் ஏற்பட்டுள்ளது. அதனால் இவருக்கு நல்ல வேலை கிடைக்காமல் இருக்காது. கிடைக்கும்தான். ஆனால் இவர் பேசிப்பேசியே வேலையைவிட்டு விலகும் சூழ்நிலையை உருவாக்கிவிடுவார். இவருடைய 5-ஆம் வீட்டை சனி, செவ்வாய் இருவரும் பார்ப்பதால், கட்டுப்பாடான ஒழுக்கம் மிகவும் குறைவாக இருக்கும். இவரால் தொடர்ச்சியாக வேலைபார்க்க இயலாது. அதற்காக சொந்தத் தொழில் எல்லாம் சரிப்பட்டு வராது. வீடு என்ற ஒன்று நிலையாக அமைய வாய்ப்பில்லை. நடப்பு குரு தசை; குரு அம்சத்தில் நீசம். குரு தசையில் சனி புக்தி 2024, அக்டோபர்வரை. நிறைய தடை, தாமதங்களை சந்திக்க வேண்டியிருக்கும். குலதெய்வ சாபம், பித்ரு சாபம் எல்லாம் உள்ளது. இவ்விதம் குலதெய்வ சாபம நீங்க, திருநெல்வேலி சொரிமுத்து அய்யனார் கோவில் சென்று வழிபடவும்.

ப் சத்யப் பிரியா, தஞ்சாவூர்.

என்ன தொழில் செய்யலாம்? கூட்டுத் தொழில் செய்யலாமா?

30-12-1971-ல் பிறந்தவர். மிதுன லக்னம், ரிஷப ராசி, மிருகசீரிட நட்சத்திரம். சனி தசையில் சந்திர புக்தி. உணவு சம்பந்தமான தொழில் செய்யலாம். பழமையான உணவு வகைகளை தயார்செய்து விற்பது நல்லது. கூட்டுத் தொழில் வேண்டாம். இவ்விதம் புதிய தொழில் ஆரம்பிக்க விரும்புவர்கள் விழுப்புரம்- பரிக்கல் நரசிம்மரை தரிசனம் செய்யவேண்டும்.

ப் பழனிவேலு, நாமக்கல்.

எனது ஓட்டுனர் உரிமத்தில் வீட்டுக் கதவு எண் மாற்றியதிலிருந்து, ஒரு முறைகூட வாகனத்தில் செல்ல முடியவில்லை.

8-8-1957-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், தனுசு ராசி, உத்திராட நட்சத்திரம். நடப்பு வக்ர சனி தசையில் சுக்கிர புக்தி 2024 டிசம்பர்வரை. இது விரய புக்திக் காலம். எனவே நீங்கள் கதவு எண் மாற்றா மல் இருந்தாலும் இந்த நிலையில்தான் இருக்கும். இவ்விதம் வக்ரம்பெற்ற சனி தசை நடப்பவர்கள், ஒருமுறை திருவக்கரை சென்று வக்ர காளியை வணங்கவேண்டும். மேலும் அருகிலுள்ள கோவிலில் சனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதும், வன்னி இலைகளால் சிவனை அர்ச்சிப்பதும் நல்லது.

செல்: 94449 61845

bala210423
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe