Advertisment

உங்கள் கேள்வி ஆர்.மகாலட்சுமி பதில்கள்

/idhalgal/balajothidam/your-question-rmahalakshmi-answers-4

● எஸ். திருமலைசாமி, திருப்பூர்.

என் மகன் ஒரு பெண் ணைக் காதலித்து அவளையே திருமணம் செய்துகொள்வ தாகக் கூறுகிறார். தங்கள் கருத்து?

Advertisment

கன்னி லக்னம், கும்ப ராசி, அவிட்ட நட்சத்திரம். உங்கள் ஜாதகப்படி, கண்டிப்பாக காதல் மற்றும் கலப்புத் திருமணம் தான். 2023, ஜனவரிக்குள், எதிர்பாராதவகையில், மாறுபட்ட திருமணமாக நடக்கும். இவ்விதம் இஷ்டம்போல திருமணம் செய்து கொள்பவர்கள், தர்மபுரி- சேலம் சாலையில், அதியமான்கோட்டை, சென்றாய பெருமாள் ஆலயம் சென்று, திருமணக் கோலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாள்முன் மாலைமாற்றி வழிபடுவது உத்தமம். மகிழ்ச்சிகரமான மண வாழ்வு அமையும்.

qq

● எஸ். முத்துக்குமாரசாமி, கஸ்தூரிப்பட்டி, சங்ககிரி.

மணவாழ்விலும், உடன்பிறப்புகள்வகையிலும், நட்புவட்டாரத்திலும், தொழிலிலும் என எல்லா வற்றிலும் ஏமாற்றமாகவே நடக்கிறது. இது எப்போது தீரும். செய்வினை உள்ளதா?

2-2-1953-ல் பிறந்தவர். கும்ப லக்னம், கன்னி ராசி, சித்திரை நட்சத்திரம். லக்னாதிபதி சனி உச்சமாகி பாதகஸ்தானத்தில், 8-ஆம் அதிபதியுடன் அமர்ந்துள்ளார். மேலும் மனோகாரகனாகிய சந்திரன், செவ்வாயுடன் ஒரே நட்சத்திரத்தில், 8-ஆமிடத்தில் அமர்வு. இந்த இரண்டு கிரக அமைப்புகளும் உங்களை எப்போதும் நிம்மதியின்றி வைத்துள்ளது. 3-ஆம் அதிபதி செவ்வாய் 8-ல் மறைந்ததாலும், 3-ஆம் வீட்டை சனி, செவ்வாய் இருவரும் பார்ப்பதாலும், நீங்கள

● எஸ். திருமலைசாமி, திருப்பூர்.

என் மகன் ஒரு பெண் ணைக் காதலித்து அவளையே திருமணம் செய்துகொள்வ தாகக் கூறுகிறார். தங்கள் கருத்து?

Advertisment

கன்னி லக்னம், கும்ப ராசி, அவிட்ட நட்சத்திரம். உங்கள் ஜாதகப்படி, கண்டிப்பாக காதல் மற்றும் கலப்புத் திருமணம் தான். 2023, ஜனவரிக்குள், எதிர்பாராதவகையில், மாறுபட்ட திருமணமாக நடக்கும். இவ்விதம் இஷ்டம்போல திருமணம் செய்து கொள்பவர்கள், தர்மபுரி- சேலம் சாலையில், அதியமான்கோட்டை, சென்றாய பெருமாள் ஆலயம் சென்று, திருமணக் கோலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாள்முன் மாலைமாற்றி வழிபடுவது உத்தமம். மகிழ்ச்சிகரமான மண வாழ்வு அமையும்.

qq

● எஸ். முத்துக்குமாரசாமி, கஸ்தூரிப்பட்டி, சங்ககிரி.

மணவாழ்விலும், உடன்பிறப்புகள்வகையிலும், நட்புவட்டாரத்திலும், தொழிலிலும் என எல்லா வற்றிலும் ஏமாற்றமாகவே நடக்கிறது. இது எப்போது தீரும். செய்வினை உள்ளதா?

2-2-1953-ல் பிறந்தவர். கும்ப லக்னம், கன்னி ராசி, சித்திரை நட்சத்திரம். லக்னாதிபதி சனி உச்சமாகி பாதகஸ்தானத்தில், 8-ஆம் அதிபதியுடன் அமர்ந்துள்ளார். மேலும் மனோகாரகனாகிய சந்திரன், செவ்வாயுடன் ஒரே நட்சத்திரத்தில், 8-ஆமிடத்தில் அமர்வு. இந்த இரண்டு கிரக அமைப்புகளும் உங்களை எப்போதும் நிம்மதியின்றி வைத்துள்ளது. 3-ஆம் அதிபதி செவ்வாய் 8-ல் மறைந்ததாலும், 3-ஆம் வீட்டை சனி, செவ்வாய் இருவரும் பார்ப்பதாலும், நீங்கள் தன்னம்பிக்கையை இழந்து, சுய பச்சாதாபத்துடன் எல்லாரும் ஏமாற்றிவிட்டார்கள் என கூறியுள்ளீர்கள். முத்துக்குமாரசாமி, உங்களை யாரும் ஏமாற்ற வில்லை. உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். நடப்பு புதன் தசையில் ராகு புக்தி. எனவே மிகவும் மனச்சோர்வு கொண்டுள்ளீர்கள். இவ்விதம் மன நடுக்கம் உடையவர்கள் கும்பகோணம்- மயிலாடுதுறை அருகேயுள்ள திருபுவனம் சரபேஸ்வரரை வழிபடவும். அல்லது உங்கள் ஊரிலுள்ள சரபேஸ்வரரை வணங்க, மனதில் நிம்மதி கிடைக்கும்.

● எம். ஐயப்பன், பழையபேட்டை, திருநெல்வேலி.

எந்தக் காரியத்தை எடுத்தாலும் தடை, தாமதம் ஏற்படுகிறது. சில நேரங் களில் கைகூடாமல் போகிறது. எங்கு சென்றாலும் சண்டை, பிரச்சினைகள். இது எப்போது தீரும்? வாழ்வில் முன்னேற் றம் கிட்டுமா?

15-3-1975-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். உங்கள் ஜாதகத் தில் உச்ச வர்க்கோத்தம சுக்கிரன், சந்திரன், சூரியன், குரு என நான்கு கிரகங்களும் 8-ஆமிடத்தில் மறைவு. கிரக யுத்த மற்றும் பூர்வபுண்ணிய குற்றமுள்ள ஜாதகம். உங்கள் வாழ்வில் ஒருபடி முன்னேறினால், கிரகங்கள் பலபடிகள் பின்னோக்கி இழுத்து விடும். எனினும் நடப்பு செவ்வாய் தசை. இதில் எதிர்பாராத நன்மைகள் நடக்கும். நீங்கள் திருநெல்வேலியில் வசிப்பதால், அதனைச் சுற்றியுள்ள பாபநாசம், சேரன் மகாதேவி, கோடக நல்லூர், குன்னத்தூர், முறப்ப நாடு, தென் திருப்பேரை, இராஜபதி, ஸ்ரீவைகுண்டம், சேர்ந்த மங்களம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள சிவன் கோவில் களுக்கு முடிந்தபோதெல்லாம் சென்று வழிபடுவது சாலச் சிறந்தது. வாழ்வின் தடைகள் நீங்கி, முன்னேற்றம் ஏற்படும். இந்த ஆலயங்கள், அகத்திய முனிவரால் ஏற்படுத்தப்பட்ட நவ கயிலாய ஆலயங்கள் ஆகும்.

● வை. லோகநாதன், கோவில்பட்டி.

என் உடல்நிலை மோசமாக உள்ளது. பொருளாதார நிலையும் குறைவு. ஏதாவது ஒரு கோவிலில்தான் என் உயிர் பிரியுமென்று குடும்ப ஜோதிடர் கூறினார். சித்தர் வழிபாடு செய்ய விரும்புகிறேன். யாரை வழிபடலாம்?

5-5-1955-ல் பிறந்தவர். மிதுன லக்னம், கன்னி ராசி, சித்திரை நட்சத்திரம் 2-ஆம் பாதம். லக்னாதிபதி புதன் 12-ல் மறைவு மற்றும் அம்சத்தில் நீசம். 2-ல் உச்ச குரு; 5-ல் சனி உச்சமாகி வக்ரம்- அதனால் நீசம். 10-ல் சுக்கிரன் உச்சம் மற்றும் 11-ல் சூரியன் உச்சம். அம்சத்தில் புதன், சனி, சூரியன் இவர்கள் நீசம். இத்தனை கிரகங்கள் உச்சம் பெற்றிருப் பினும், நீங்கள் சற்று பணக்கஷ்டத்தில் இருப்ப தாகக் கூறியுள்ளீர்கள். இதற்கு உச்ச குரு, உச்ச சுக்கிரனைப் பார்ப்பதும், உச்ச சூரியனை, உச்ச சனி பார்ப்பதும் அவர்களின் மேன்மையைக் கெடுத்து விட்டனர். நடப்பு புதன் தசையில் ராகு புக்தி. அடுத்துவரும் புக்திகளிலும் சற்று கவனம் தேவை. புதன் தசை, ராகு புக்தி 2023, செப்டம்பர் வரை உள்ளது. உங்கள் சித்திரை நட்சத்திரத்துக்குரிய சித்தர் மயிலாடுதுறை குதம்பைச் சித்தர் ஆவார். அவரை வணங்கவும்.

● ஒரு வாசகர், சென்னை.

சரளாவின் படிப்பு பற்றிக் கூறவும்.

9-12-2004-ல் பிறந்தவர். ரிஷப லக்னம், துலா ராசி, சுவாதி நட்சத்திரம். நடப்பு குரு தசையில் ராகு புக்தி. சற்று கவனக் குறைவு இருக்கும். 2023, மே மாதம்முதல் சனி தசை ஆரம்பம். அப்போது படிப்பில் கவனம் ஏற்படும். தொழில் சார்ந்த கல்வி கற்கமுடியும். குழந்தைகள் நன்கு கல்வி கற்க-

"ஞாநாநந்தமயம் தேவம்

நிர்மல ஸ்படிகாக்ருதிம்

ஆதாரம் ஸர்வ வித்யானாம்

ஹயக்ரீவம் உபாஸ்மஹே'

என்னும் ஹயக்ரீவர் மந்திரத்தை தினமும் கூறவேண்டும்.

● கே.கே. உதயகுமார், கோயம்புத்தூர்.

திருமணம் தடையாகிறது. விதவைப் பெண்ணை மணக்கலாமா? பணப்பற்றாக் குறை உள்ளது. அடிக்கடி மனக்குழப்பம் ஏற்படுகிறது.

8-10-1979-ல் பிறந்தவர். ரிஷப லக்னம், மேஷ ராசி, கார்த்திகை நட்சத்திரம். லக்னாதி பதி சுக்கிரன் 6-ல் அமர்வு. இவரின் 7-ஆம் அதிபதி செவ்வாய் நீசம். சந்திரனின் பரிவர்த்த னையால் செவ்வாய் நீசபங்கமாகியுள்ளார். 4-ஆமிடத்தில் குரு, சனி, ராகு சேர்க்கை. கடுமையான பிரம்மஹத்தி தோஷ ஜாதகம். அதனால் உங்களுக்கு மனக்குழப்பம், எதிலும் தடை, வாழ்வு விருத்தியின்மை போன்றவை தொடர்ந்துகொண்டே இருக்கும். நடப்பு குரு தசையில் சனி புக்தி ஓடுகிறது. 2024-க்குள் கணவனை இழந்த வேறு இன, பிறமதப் பெண்ணுக்கும், உங்களுக்கும் திருமணம் நடக்கும். இந்த குரு தசை தொழிலை யும், ஓரளவு வருமானம், குடும்பத்தையும் கொடுக்கும். இவ்விதம் கடுமையான பிரம்மஹத்தி தோஷமுடையவர்கள் திருச்சி- கரூர் சாலையிலுள்ள பேட்டைவாய்த்தலை மத்தியார்ஜுனர் ஆலயத்திலுள்ள மத்தியார்ஜுனேஸ்வரரை வணங்கி, பின் அங்குள்ள பிரம்மஹத்தி உருவமுள்ள தூணையும் தரிசிக்கவேண்டும்.

● பார்வதி அம்மாள், கடலூர்.

மகள், மருமகன் ஜாதகம் அனுப்பியுள்ளேன். திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகின்றன. மழலை பாக்கியம் எப்போது கிட்டும்?

மகள் செல்வி 21-11-1996-ல் பிறந்தவர். மகர லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். இவரின் 5-ஆமிடத்திற்கு சனி பார்வை. புத்திரகாரகன் குருவுக்கும் சனி பார்வை. எனவே, குழந்தை பாக்கியம் தாமதமாகிறது. நடப்பு சுக்கிர தசையில் சுக்கிர புக்தி 2023, நவம்பர்வரை. அதற்குள் ஒரு சின்ன அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருக்கும். பின் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மருமகன் ரஞ்சித் 16-10-1991-ல் பிறந்த வர். தனுசு லக்னம், மகர ராசி, உத்திராட நட்சத்திரம். இவரின் 5-ஆமதிபதி செவ்வாய், சனியால் பார்க்கப்படு கிறார். எனவே, புத்திர பாக்கியம் தாமதமாகிறது. நடப்பு ராகு தசையில் புதன் புக்தி 2023, நவம்பர் வரை. அதற்குள் மருத்துவச் செலவுடன் புத்திரபாக்கியம் கிடைக்கும். குழந்தைப் பேறு வேண்டுபவர்கள் திருப்புல்லாணி கல்யாண ஜெகந்நாதரை வழிபட்டால் நல்லது நடக்கும்.

செல்: 94449 61845

bala120822
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe