Advertisment

உங்கள் கேள்வி ஆர்.மகாலட்சுமி பதில்கள்

/idhalgal/balajothidam/your-question-rmahalakshmi-answers-39

ப் ரவிசந்திரன், மேட்டூர் அணை.

என் மகன் பார்வைக் குறைபாடு உள்ளவர். இவரின் தொழில், எதிர்காலம் பற்றிக் கூறவும்.

Advertisment

மகன் விஜய கிருஷ்ணன் 31-12-1998-ல் பிறந்தவர். தனுசு லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். 2-ஆம் அதிபதி சனி நீச வர்க்கோத்தமம். எனவே கண் குறைபாடு உள்ளது. நடப்பு ராகு தசையில் சுக்கிர புக்தி 2025 மார்ச் வரை. இதற்குள், அரசு உதவியுடன் இவருக்கு கண் அறுவை சிகிச்சை நடக்கும். இவர் ஜாதக அமைப்புப்படி, உணவு சம்பந்த வேலை நல்லது. 5, 7-ஆம் அதிபதிகள் பரிவர்த்தனை. எனவே இவரைப்போலவே சற்று குறைபாடுடைய பெண்ணைத் திருமணம் செய்துகொள்வார். கண் ஒளி நன்குபெற, கோவை- வீரபாண்டி மாரியம்மன் கோவில்சென்று வணங்குவது சிறப்பு. மேலும் சுந்தரர் அருளிய "ஆலந்தான் உகந்து அமுது செய்தானை' எனத் தொடங்கும் கண்ணொளி தரும் பதிகப் பாராயணம் நன்மை தரும்.

ப் எம். சத்தியமூர்த்தி, சென்னை-94.

எனக்கு சிறுநீர் செல்லும் பாதையில் கல் அடைத்துக்கொண்டு மிகவும் வலிக்கிறது. எப்போது சரியாகும்? சொந்த ஊர் சென்று விடவா?

8-6-1960-ல் பிறந்தவர். ரிஷப லக்னம், விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம். நோய் தரும் 6-ஆம் அதிபதி, சுகாதிபதி சூரியனுடன் கூடி ல

ப் ரவிசந்திரன், மேட்டூர் அணை.

என் மகன் பார்வைக் குறைபாடு உள்ளவர். இவரின் தொழில், எதிர்காலம் பற்றிக் கூறவும்.

Advertisment

மகன் விஜய கிருஷ்ணன் 31-12-1998-ல் பிறந்தவர். தனுசு லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். 2-ஆம் அதிபதி சனி நீச வர்க்கோத்தமம். எனவே கண் குறைபாடு உள்ளது. நடப்பு ராகு தசையில் சுக்கிர புக்தி 2025 மார்ச் வரை. இதற்குள், அரசு உதவியுடன் இவருக்கு கண் அறுவை சிகிச்சை நடக்கும். இவர் ஜாதக அமைப்புப்படி, உணவு சம்பந்த வேலை நல்லது. 5, 7-ஆம் அதிபதிகள் பரிவர்த்தனை. எனவே இவரைப்போலவே சற்று குறைபாடுடைய பெண்ணைத் திருமணம் செய்துகொள்வார். கண் ஒளி நன்குபெற, கோவை- வீரபாண்டி மாரியம்மன் கோவில்சென்று வணங்குவது சிறப்பு. மேலும் சுந்தரர் அருளிய "ஆலந்தான் உகந்து அமுது செய்தானை' எனத் தொடங்கும் கண்ணொளி தரும் பதிகப் பாராயணம் நன்மை தரும்.

ப் எம். சத்தியமூர்த்தி, சென்னை-94.

எனக்கு சிறுநீர் செல்லும் பாதையில் கல் அடைத்துக்கொண்டு மிகவும் வலிக்கிறது. எப்போது சரியாகும்? சொந்த ஊர் சென்று விடவா?

8-6-1960-ல் பிறந்தவர். ரிஷப லக்னம், விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம். நோய் தரும் 6-ஆம் அதிபதி, சுகாதிபதி சூரியனுடன் கூடி லக்னத்தில் உள்ளார். சுக்கிரனின் சாரநாதர் சந்திரன் நீசம். எனவே நீர் சம்பந்தமான கோளாறுகள் வருகிறது. நடப்பு செவ்வாய் தசை. சாரநாதன் புதன் அம்சத்தில் நீசம். எனவே செவ்வாய் தசை ஆரம்பித்ததிலிருந்தே உடல் ஆரோக்கியம் கெட்டிருக்கும். நடப்பு செவ்வாய் தசையில் சனி புக்தி. எனவே 2023, டிசம்பருக்குள் சொந்த ஊர் சென்றுவிடுவீர்கள். செவ்வாய் தசை கேது புக்தியில் சற்று கவனமாக இருங்கள். இவ்விதம் நீர் சம்பந்தமான நோயுள்ளவர்கள், திருச்சி அருகிலுள்ள திருவானைக்காவல் சென்று வணங்கவேண்டும்.

ப் அலமேலு, சென்னை- 203.

என் பெண் ஜாதகம் அனுப்பியுள்ளேன். திருமணம் செய்யலாமா? எப்போது?

Advertisment

மகள் விஷ்ணுப்ரியா ரிஷப லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். லக்னம், ராசிக்கு நாக தோஷம். ராகு- கேதுவுக்குள் அனைத்து கிரகங்களும், உள்ளன. எனவே காலசர்ப்ப தோஷம் இருக்கிறது. லக்னத்திற்கு 8-ல் செவ்வாய். கூடவே கேது. செவ்வாய் தோஷம் கடுமையாக உள்ளது. நடப்பு ராகு தசையில் சனிபுக்தி. சனி, 7-ஆம் வீட்டைப் பார்ப்பதால் தாமதத் திருமணம்தான். எனவே வரும் காலங்களில் படிப்பும், வேலையும் சரியாக இருக்கும். 27 வயதுக்குப் பிறகுதான் திருமணம் கூடிவரும். இவ்விதம் காலசர்ப்ப தோஷமுடைய ஜாதகர் கள் தேய்பிறை அஷ்டமியன்று தேங்காய் மூடியில் நெய்யூற்றி, பைரவரை வணங்குவது நல்லது.

aa

ப் ஸ்ரீராம், தாராபுரம்.

கேட்டரிங் படித்து வெளிநாட்டில் வேலை பார்க்கிறேன். விசா முடிவடைகிறது. இப்போது விசா நீடிக்குமா? அல்லது தமிழ்நாட்டில் ஓட்டல் ஆரம்பிக்கலாமா? வாரிசு யோகம் எப்போது கிட்டும்.

நீங்கள் 28-8-1991-ல் பிறந்தவர். தனுசு லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். நடப்பு சுக்கிர தசையில் செவ்வாய் புக்தி 2023, செப்டம்பர் வரை. இதில் வெளிநாட்டு விசா நீடிப்பு கிடைக்கும். அதற்குள் வாரிசு யோகமும் உண்டு. நீங்கள் சொந்தத் தொழில் தொடங்கக் கூடாது. வாரிசு யோகம் வேண்டுவோர். புதுக் கோட்டை- பெருங்களூர் வம்ச விருத்தீஸ்வரர் ஆலயம் சென்று வணங்கவும்.

ப் கே. சுப்பிரமணியன், அவிநாசி.

.

பூர்வீகத்தில் குடியிருக்கலாமா? மாந்திரிக பாதிப்பு உள்ளதா பணப் பிரச்சினை, கடன் தொல்லை உள்ளது. பரிகாரம் கூறவும்

27-4-1968-ல் பிறந்தவர். கும்ப லக்னம், மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம். 4-ஆம் அதிபதி சுக்கிரன் உச்சமானாலும், கூடவே விரயாதிபதி சனியும் ராகுவும் இருப்பதால், மன தோஷம் உள்ளது. நடப்பு ராகு தசையில் சனிபுக்தி. இதில் பண விரயம், கடன் எல்லாம் உங்களை பாடாய்ப்படுத்தும். அடுத்துவரும் புதன்புக்தியில், பூர்வீக வீட்டை விற்றுவிட்டு, வேறிடத்தில் வீடு வாங்குவீர்கள். உங்கள் ஜாதகப் படி எவ்வளவு பணம் வந்தாலும் கையில் நிற்காது. இவ்விதம் வாஸ்து குறைபாடுகள் கொண்ட வர்கள், திருச்சி பூலோகநாதர் திருக்கோவில் சென்று வழிபடவேண்டும்.

ப் வினிதா தேவி.

திருமணம் எப்போது நடக்கும்? அரசு வேலை கிடைக்குமா?

10-6-2002-ல் பிறந்தவர். தனுசு லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். நாகதோஷம், செவ்வாய் தோஷம் உள்ளது. 6-ஆம் வீட்டில் சூரியன், சந்திரன், புதன், சனி, ராகு சேர்க்கை. திருமணத்திற்குமுன் தாலிதானம் அவசியம். நடப்பு ராகு.

ப் திருவேங்கடம், பெரம்பூர், சென்னை-11.

இப்போது வீடு கட்டிக்கொண்டு இருக்கி றோம். பங்காளி, பக்கத்து வீட்டுக்காரர்கள் என நிறைய தொல்லைகள் வருகிறது. பொறாமை மற்றும் திருஷ்டியும் உள்ளது. இதற்கு ஏதாவது பரிகாரம் கூறுங்கள்.

8-3-1950-ல் பிறந்தவர். துலா லக்னம், துலா ராசி, விசாக நட்சத்திரம். வீடுபற்றி அறிய 4-ஆம் வீட்டை ஆராயவேண்டும். உங்களின் 4-ஆம் வீடு மகரத்தில் குரு நீசம் மற்றும் லக்ன 8-ஆம் அதிபதி சுக்கிரன் உடன் உள்ளார். 4-ஆம் அதிபதி 11-ல், நின்று அதன் அதிபதி சூரியனைப் பார்த்தும், பரிவர்த்தனை ஆகியும் உள்ளார். ஆக இந்த ஜாதகம் வரும்; ஆனா வராது என்கிற கதையில் வீடு கட்ட முடியும்; ஆனா முடியாது என்கிற மாதிரி அமையும். நீங்கள் வீடு கட்டும்போது, தடை, தாமதம், இன்னல் ஏற்படாவிட்டால்தான் அதிசயம். நடப்பு சுக்கிர தசையில் புதன் புக்தி 2025, பிப்ரவரி வரையில் அதற்குள் வீடு கட்டி முடித்துவிடலாம். இவ்விதம் வீடு கட்டும் வேலை தடை, தாமதமின்றி நடக்க, விருத்தாச்சலம் அருகில் ஸ்ரீமுஷ்ணம் சென்று வணங்கவேண்டும்.

ப் சந்திரசேகர்.

உடல்நிலை சரியில்லை. நோய் சரியாவதற்குப் பரிகாரம் கூறவும்.

15-7-1979-ல் பிறந்தவர். துலா லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். மீன ராசிக்கு ஏழரைச்சனி நடக்கிறது. நடப்பு சுக்கிர தசையில் சனி புக்தி 2024, ஜனவரி வரை. அதுவரையில் சற்று உடல் கோளாறு இருக்கும். அடுத்து வரும் புதன் புக்தியில், வேலை விஷயமாக வெளியூர், வெளிநாடு மாற்றம் ஏற்படும். அதைத் தவிர்க்காமல் உடனே மாறிவிடவேண்டும். கூடிய மட்டும், இவரும், தந்தையும் சேர்ந்திருக்க வேண்டாம். இவ்விதம் உடல்நிலை கோளாறு உடையவர் கள், மதுரை அக்ஷரலிங்க வழிபாடு செய்வது நலம். இது மகா பெரியவர் வாக்கு.

செல்: 94449 61845

bala140423
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe