ப் தர்ஷிணி, மதுரவாயல், சென்னை.
விவகாரத்தாகிவிட்டது. ஒரு மகன் உள்ளான். எதிர்காலம் எப்படி அமையும்?
நீங்கள் 11-10-1994-ல் பிறந்தவர். மகர லக்னம், தனுசு ராசி, பூராட நட்சத்திரம். ராசிக்கு 7-ல் செவ்வாய் நீசம். 7-ஆம் அதிபதி 12-ல் மறைவு. இதனால் விவாகரத்து ஆகியுள்ளது. நடப்பு சந்திர தசையில் புதன் புக்தி 2024, ஏப்ரல் வரை. அதற்குள் நல்ல வேலை கிடைத்துவிடும். 2026, ஜூலை மாதத்திற்குப் பிறகு ஆரம்பிக்கும் சூரிய புக்தியில் மறுமணம் நடக்கும். அவரும் உங்களைப் போன்ற மறுமண நபராக அமைவார். இவ்விதம் மறுமணம் செய்துகொள்ள இருப்பவர்கள், மயிலாடுதுறை- மாப்படி சுமங்கலி காளியை வணங்கவேண்டும்.
ப் திருமலைக்குமார், ராமாபுரம், சென்னை-89.
சுயதொழில் செய்யலாமா? ஆண் குழந்தை உண்டா? சொந்த வீடு பிரச்சினை பற்றிக் கூறவும்.
4-12-1985-ல் பிறந்தவர். மீன லக்னம், சிம்ம ராசி, மக நட்சத்திரம். 10-ஆம் அதிபதி குரு நீசபங்கம். சொந்தத் தொழில் தொடங்கினாலும், முதலில் நஷ்டம் ஏற்பட்டு பின் சரியாகும். வீடு சம்பந்த பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். வீட்டுப் பிரச்சினை ஏற்பட்டுவிட்டால் தீர்வு ஏற்படுவது மிகக் கஷ்டம். நடப்பு சந்திர தசை 6-ஆமிடத்தில
ப் தர்ஷிணி, மதுரவாயல், சென்னை.
விவகாரத்தாகிவிட்டது. ஒரு மகன் உள்ளான். எதிர்காலம் எப்படி அமையும்?
நீங்கள் 11-10-1994-ல் பிறந்தவர். மகர லக்னம், தனுசு ராசி, பூராட நட்சத்திரம். ராசிக்கு 7-ல் செவ்வாய் நீசம். 7-ஆம் அதிபதி 12-ல் மறைவு. இதனால் விவாகரத்து ஆகியுள்ளது. நடப்பு சந்திர தசையில் புதன் புக்தி 2024, ஏப்ரல் வரை. அதற்குள் நல்ல வேலை கிடைத்துவிடும். 2026, ஜூலை மாதத்திற்குப் பிறகு ஆரம்பிக்கும் சூரிய புக்தியில் மறுமணம் நடக்கும். அவரும் உங்களைப் போன்ற மறுமண நபராக அமைவார். இவ்விதம் மறுமணம் செய்துகொள்ள இருப்பவர்கள், மயிலாடுதுறை- மாப்படி சுமங்கலி காளியை வணங்கவேண்டும்.
ப் திருமலைக்குமார், ராமாபுரம், சென்னை-89.
சுயதொழில் செய்யலாமா? ஆண் குழந்தை உண்டா? சொந்த வீடு பிரச்சினை பற்றிக் கூறவும்.
4-12-1985-ல் பிறந்தவர். மீன லக்னம், சிம்ம ராசி, மக நட்சத்திரம். 10-ஆம் அதிபதி குரு நீசபங்கம். சொந்தத் தொழில் தொடங்கினாலும், முதலில் நஷ்டம் ஏற்பட்டு பின் சரியாகும். வீடு சம்பந்த பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். வீட்டுப் பிரச்சினை ஏற்பட்டுவிட்டால் தீர்வு ஏற்படுவது மிகக் கஷ்டம். நடப்பு சந்திர தசை 6-ஆமிடத்தில் இருந்து நடக்கிறது. பிரச்சினைகளுக்குப் பஞ்சமிருக்காது. 2024, செப்டம்பர் மாதம் ஆரம்பிக்கும் செவ்வாய் தசையில் உணவு சார்ந்த வியாபாரம் செய்வீர்கள். இவ்விதம் சொந்தத் தொழில் ஆரம்பிக்குமுன், புதுச்சேரி மணக்குள விநாயகரை வணங்கவேண்டும்.
ப் மதிமாறன், பல்லடம்.
பெண் மற்றும் கணவரின் ஜாதங் களை அனுப்பியுள்ளேன். இருவருக் குமிடையே எப்போதும் சண்டை. கணவர் பிரிந்து போய்விட்டார். இவர்கள் வாழ்க்கை என்னவாகும்?
கணவர் நந்தகோபால் 4-5-1976-ல் பிறந்தவர். கும்ப லக்னம், மிதுன ராசி, புனர் பூச நட்சத்திரம். நடப்பு 8-ஆமிட புதன் தசையில் சனிபுக்தி. சனி 6-ல் உள்ளார். 2024 வரை சனி புக்தி நடக்கும். அதுவரையில், குடும்பச் சண்டை, பிரிவென்பது தவிர்க்க முடியாதது. அடுத்துவரும் கேது தசையில் குடும்பத்துடன் வேறிடம் செல்ல நேரிடும். மனைவி மலர்விழி 1-12-1983-ல் பிறந்த வர். ரிஷப லக்னம், துலா ராசி, சுவாதி நட்சத்திரம். நடப்பு சனி தசையில் கேது புக்தி 2024 வரை. அதுவரையில் கணவரோடு பிரிவிருக்கும். சனி தசை, சுக்கிர புக்தியில் இடமாற்றமும் கணவரோடு சேருதலும் இருக்கும். அதுவரையில் பொறுமையாக இருக்கவும். இவ்விதம் கணவன்- மனைவி பிரிந்து வாழும் தம்பதிகள் கும்பகோணம் அருகே பந்தநல்லூர் சென்று, சுந்தரேஸ்வரர், சௌந்தரவல்லியை வணங்க தம்பதிகள் மீண்டும் இணையமுடியும்.
ப் சதாசிவம், ஈரோடு.
என் மகள் மற்றும் அவளது தோழியின் ஜாதகங்களை அனுப்பியுள்ளேன். இருவரும் சேர்ந்து ஐஸ்க்ரீம் கடை ஆரம் பித்துள்ளனர். அது சரியாக நடக்குமா? மகள் குழந்தையைப் பிரிந்து வாழ்கிறாள். மீண்டும் சேரமுடியுமா?
மகள் சாந்தா தேவி 9-11-1970-ல் பிறந்தவர். ரிஷப லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். இவரின் தொழில் ஸ்தானாதி பதி சனி 12-ல் நீசபங்கமாகி உள்ளார். இதனால் இவர் ஐஸ்க்ரீம் கடை வைப்பது ஏற்புடையதுதான். நடப்பு சுக்கிர தசை குரு புக்தி. இதில் தொழில் ஆரம்பிக்க முடியும். அடுத்துவரும் சனி புக்தி இவரை, இவருடைய குழந்தையுடன் சேர்க்கும். தோழி கமலா தேவி 19-1-1961-ல் பிறந்தவர். தனுசு லக்னம், கும்ப ராசி, அவிட்ட நட்சத்தி ரம். நடப்பு புதன் தசையில் சூரிய புக்தி. இதிலும் அடுத்துவரும் சந்திர தசையிலும், குளிர்பானம், ஐஸ்க்ரீம் ஒப்பந்தம் எடுப்பார். தொழில் மெதுவாக முன்னேறும். இவ்விதம் குளிர்ந்த பொருட்களின் விற்பனை ஆரம்பிப்பவர்கள் திங்களூர் சந்திரனையும், திருப்பதி பெருமாளையும் வழிபடவும்.
ப் தங்கம்மாள், சிவகாசி.
என் மகள் ஜாதகம் அனுப்பியுள்ளேன். எப்போது திருமணம் நடக்கும்?
மகள் லட்சுமி 4-12-1992-ல் பிறந்தவர். மிதுன லக்னம், கன்னி ராசி, ஹஸ்த நட்சத்திரம். லக்னத்துக்கு 6-ஆமிடத்தில் சூரியன், செவ்வாய், புதன், ராகு, சுக்கிரன் என ஐந்து கிரகச் சேர்க்கை உள்ளது. சனி, செவ்வாய் பார்வை இருக்கிறது. எனவே தாமதத் திருமணமாக வாய்ப்புள்ளது. நடப்பு குரு தசையில் குரு புக்தி 2025, பிப்ரவரி வரை. இதற்குள் திருமணம் நடந்துவிடும். 7-ஆம் அதிபதி குரு. அம்சத்தில் நீசம். எனவே மாப்பிள்ளை சார்பில் சற்று குறை இருக்கும். இவ்விதம் திருமணத்திற்குக் காத்துக் கொண்டிருப்பவர்கள். சிவனின் திருமணக் கோலமுடைய மதுரை மீனாட்சியம்மனை வணங்குவது நல்லது.
ப் லதா, கொடுங்கையூர்.
என் வேலை, என் மகன் வேலை மற்றும் திருமணம் பற்றிக் கூறவும்.
11-4-1973-ல் பிறந்தவர். கடக லக்னம், கடக ராசி, பூச நட்சத்திரம். மறுபடியும் வேலைக்குச் செல்லமுடியுமா என்று கேட்டிருக்கிறீர்கள். நடப்பு சூரிய தசையில் சந்திர புக்தி. தாராள மாக வேலைக்குச் செல்லலாம். அவ்வப் போது உடல் தொந்தரவுகள் வரும். ஆனாலும் சமாளித்துவிடலாம். சூரிய தசை நடப்பவர்கள் சூரிய நாராயணரை வணங்குவது சிறப்பு. ஞாயிறுதோறும் சூரிய வழிபாடு அவசியம். மகன் பிரணவ் 29-6-2000-ல் பிறந்தவர். துலா லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். 7-ல் சனி நீசம். சனி, செவ்வாய் பார்வை. நடப்பு ராகு தசையில் சனி புக்தி 2025. மார்ச் வரை. இப்போது சற்று வேண்டாத பழக்க வழக்கங்களும். விளங்காத ஒரு காதலுமாக இந்த மகன் அல்லாடிக்கொண்டிருப்பார். அடுத்துவரும் புதன் புக்தியில் பையன் தெளிவடைந்து, ஒரு நிலைக்கு வருவார். பின் வெளியூர், வெளிநாட்டு வேலை கிடைக்கும் வாய்ப்பு வரும். இவ்விதம் ராகு தசையில் சனி புக்தி நடக்கும்போது, வாழ்வுநிலை அல்லாடும் ஜாதகர்கள், திருவாலங்காடு சென்று வழிபடுவது நல்லது.
ப் பி.வி கீதா, சென்னை.
எப்போது திருமணம் நடக்கும்?
27-9-1993-ல் பிறந்தவர். தனுசு லக்னம், கும்ப ராசி, அவிட்ட நட்சத்திரம். நடப்பு குரு தசையில் சுக்கிர புக்தி 2024, அக்டோபர் வரை. அதற்குள் திருமணம் நடக்கும். சனி, சந்திரன் இணைவிருப்பதால். தாலி தானம் செய்துவிட்டுத் திருமணம் செய்யவும். இந்தப் பெண்ணைப்போல் நடப்பு தசாநாதர் குருபகவான், செவ்வாய் சாரத்தில் நிற்கும் நிலை உடையவர்கள், தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கழுகாசல மூர்த்தி கோவில்சென்று வணங்கவும்.
செல்: 94449 61845