Advertisment

உங்கள் கேள்வி ஆர்.மகாலட்சுமி பதில்கள்

/idhalgal/balajothidam/your-question-rmahalakshmi-answers-35

ப் கே. மகாலிங்கம், சேலம்-30.

என் மகள் அட்சயாவின் ஜாதக நகல் இணைத்துள்ளேன். அவளுக்கு இதுவரை வரன் அமைய வில்லை. எப்போது திருமணம் கைகூடும்?

Advertisment

ஸ்ரீ அட்சயா 11-2-1997-ல் பிறந்த வர். கும்ப லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். லக்னம், ராசிக்கு நாக தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளது. 2-ஆமிடத்தில் சனி, சந்திரன், கேது ஆகிய மூன்று கிரகமும் ஒரே நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளன. சனி- செவ்வாய் பார்வை. 5, 7-ஆம் அதிபதிகள் சேர்க்கை. 12-ஆமிடத்தில் குரு, சுக்கிரன், புதன், சூரியன் சேர்க்கை. இந்தப் பெண்ணிற்குத் திருமணம் ஆவதற் குள் பெற்றோர் தலைசுற்றிப் போய் விடுவர். எனில் இந்தப் பெண்ணிற்கு எவ்விதம் திருமணமாகும்? இவர்கள் குடும்பத்தோடு மிகப் பகை கொண்டு, இவர்கள் முகத்திலேயே விழிக்கக்கூடாது என்று விலக்கி ஒதுக்கி வைத்த ஒரு குடும்பத்துப் பையனைத்தான் திருமணம் செய்வேன் என்று பிடிவாதம் செய்வாள். அல்லது காதலித்து வீட்ட

ப் கே. மகாலிங்கம், சேலம்-30.

என் மகள் அட்சயாவின் ஜாதக நகல் இணைத்துள்ளேன். அவளுக்கு இதுவரை வரன் அமைய வில்லை. எப்போது திருமணம் கைகூடும்?

Advertisment

ஸ்ரீ அட்சயா 11-2-1997-ல் பிறந்த வர். கும்ப லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். லக்னம், ராசிக்கு நாக தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளது. 2-ஆமிடத்தில் சனி, சந்திரன், கேது ஆகிய மூன்று கிரகமும் ஒரே நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளன. சனி- செவ்வாய் பார்வை. 5, 7-ஆம் அதிபதிகள் சேர்க்கை. 12-ஆமிடத்தில் குரு, சுக்கிரன், புதன், சூரியன் சேர்க்கை. இந்தப் பெண்ணிற்குத் திருமணம் ஆவதற் குள் பெற்றோர் தலைசுற்றிப் போய் விடுவர். எனில் இந்தப் பெண்ணிற்கு எவ்விதம் திருமணமாகும்? இவர்கள் குடும்பத்தோடு மிகப் பகை கொண்டு, இவர்கள் முகத்திலேயே விழிக்கக்கூடாது என்று விலக்கி ஒதுக்கி வைத்த ஒரு குடும்பத்துப் பையனைத்தான் திருமணம் செய்வேன் என்று பிடிவாதம் செய்வாள். அல்லது காதலித்து வீட்டைவிட்டு அகன்றுவிடவும் வாய்ப்புண்டு. திருமணம் என்பது களேபரம்தான். நடப்பு சுக்கிர தசை. சுக்கிர புக்தி 2024, ஜூலைவரை. இதற்குள் எல்லா விஷயங்களும் நடக்கும். குலதெய்வ, இஷ்ட தெய்வ வழிபாடு அவசியம்.

ss

ப் கந்தசாமி, கரூர்.

என் உடல்நலம் எப்போது சரியாகும்?

10-12-1950-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், தனுசு ராசி, பூராட நட்சத்திரம். நடப்பு குரு தசை. இது உங்களுக்கு 6-ஆவது தசை. 6-ஆவது குரு தசை விபத்தார தசை எனப் படும். இதில் பொருள் இழப்பு உள்ளிட்ட தீய பலன்கள் நடக்கும். குரு தசையில் சந்திர புக்தி. இதில் ஏற்படும். உடல் பாதிப்புகள் நீர் சம்பந்தமாக அமையும். இது 2023 நவம்பர்வரை உள்ளது. அதுவரை இந்த பாதிப்புகள் தொடரும். பின்வரும் செவ்வாய் புக்திதான் நல்ல சுகத்தைத் தரும். இவ்விதம் விபத்தார தசை நடப்பவர்கள், திங்கட்கிழமைதோறும் சிவனுக்குப் பாலாபிஷேகம் செய்து தீபமேற்றி வழிபடவும். திருவாரூர் அருகிலுள்ள ஸ்ரீவாஞ்சியம் சென்று வணங்கவும்.

ப் ஐஸ்வர்யா, திண்டுக்கல்.

கணவரின் போக்கு சரியில்லை. வீட்டிற்கு "பேயிங் கெஸ்ட்'போல வந்துபோகிறார். நண்பர்களுடன் அறையெடுத்துத் தங்கியுள்ளார். என் பெற்றோர்தான் என்னைப் பார்த்துக் கொள்கிறார்கள். என் எதிர்காலம் என்னவாகும்?

14-6-1990-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், கும்ப ராசி, அவிட்ட நட்சத்திரம். செவ்வாய் 8-ஆமிடத்தில் அமர்ந்துள்ளார். சந்திரன் ssஎனும் விரயாதிபதி இவரின் 7-ஆமிடத் தில் இரு பாவ கிரகங்களுக்கிடையே அமர்ந்துள்ளார். இதிலிருந்து, எப்போது வேண்டுமென்றாலும் உங்கள் திருமண வாழ்க்கையில் பிரிவு ஏற்படுமென்பது தெரிகிறது. உங்களுடைய ஜாதகத்தி லிருந்து, உங்கள் பெற்றோரின் அனுசர ணையே, உங்கள் மணவாழ்வை சீரழிக்கிறது என்பதும் புரிகிறது. நடப்பு ஏழரைச்சனி. குரு தசையில் ராகு புக்தி. 2024, செப்டம்பர் வரை. அதுவரையில் இவ்வாறு பிரிந்திருக்கிற மாதிரிதான் இருக்கும். விவாகரத்து நடக்கவும் வாய்ப்புள்ளது. பொறுமையாக இருக்கவும். அடுத்துவரும் சனி தசை மாற்றங்கள் தரும். இவ்விதம் தம்பதிகள் பிரியும் நிலையில் உள்ளோர், நாமக்கல்லை அடுத்த மோகனூரில் ஸ்ரீ பிரசன்ன கல்யாண வெங்கடேசர் ஆலயத்தில் ஸ்ரீ சம்மோஹன கோபால கிருஷ்ண பூஜையில் கலந்துகொள்வது நல்லது.

ப் மகேந்திரன, திண்டுக்கல்.

திருமண வாழ்வு எப்படியிருக்கும்?

30-5-1986-ல் பிறந்தவர். தனுசு லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்திரம். ஏழரைச்சனி நடக்கிறது. நடப்பு சனி தசையில் சந்திர புக்தி 2023, மே மாதம் முதல் 2024, டிசம்பர்வரை நடக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் பெரும் இழப்புக்களை சந்திக்க நேரிடும். எனவே திங்கட்கிழமைதோறும் சிவனுக்குப் பாலாபிஷேகம் செய்யவேண்டும். சனிக்கிழமை பைரவருக்கு 19 மிளகைத் துணியில் கட்டி, நெய் தீபமேற்ற வேண்டும். இந்த சந்திர புக்தி முடியும்வரை. மனைவி, குழந்தையைவிட்டுப் பிரிந்துதான் இருக்க நேரும். ப் செண்பகவள்ளி, நீலாங்கரை, சென்னை. என் மகன் திருமணம் பற்றிக் கூறவும். மகன் ஆர். ஜெகன்னாத் 9-12-1997-ல் பிறந்தவர். கும்ப லக்னம், தனுசு ராசி, உத்திராட நட்சத்திரம். ராசியில் ராகு, 7-ல் கேது. எனவே நாகதோஷம் உள்ளது. இந்த ஜாதகத்தில் 5, 7-ஆம் அதிபதிகள் சேர்க்கை. எனவே இவரின் விருப்பம்போலதான் திருமணம் நடக்கும். நடப்பு ராகு தசை. இதில் புதன் புக்தி 2025, ஏப்ரல்வரை உள்ளது. இதில் இவர் விரும்பிய பெண்ணை வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்வார். சனி, சுக்கிரனைப் பார்க்கிறார். அதன் பலன் என்னவென்று கேட்டிருக்கிறீர்கள். மேற்படியான பலனைத் தான் இந்த பார்வை தரும். இவ்விதம் ராகு தசை நடப்பவர்கள், கூடவே சந்திரனும் சேர்ந்திருப்பவர்கள் அருகிலுள்ள சித்தர்களின் ஜிவசமாதியில் விளக்கேற்றி வணங்கவேண்டும்.

ப் பழனிவேலு, நாமக்கல்.

ஒரே பேப்பரில் எழுதி அதை மடித்து ஒட்டி அனுப்பியுள்ளீர்கள். பிரிக்கும் போதே கிழிந்துவிட்டது. இன்னொரு முறை உங்கள் ஜாதகம், கேள்விகளை முறையாக அனுப்பவும்.

செல்: 94449 61845

bala170323
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe