ப் எஸ். வள்ளியம்மை, பெருந்துறை.
என் மகன் ஜாதகம் அனுப்பியுள் ளேன். வேலை, திருமணம் பற்றிக் கூறவும்.
மகன் ஸ்ரீராம் சிதம்பரம் 15-6-2002-ல் பிறந்தவர். மிதுன லக்னம், கடக ராசி. ஆயில்ய நட்சத்திரம். ராசிக்கு 12-ல் செவ்வாய்- தோஷமுள்ளது. கடக ராசிக்கு அஷ்டமச்சனி நடக்கிறது. நடப்பு சுக்கிர தசை. இதில் வெளியூர், வெளி நாட்டில் வசிப்பார். சுக்கிர தசையில், தந்தைவழி சொந்ததில் இஷ்ட திருமணம் நடக்கும். பையனுக்கு 21 வயதுதான் ஆகிறது. சில வருடங்கள் போகட்டும். இந்தப் பையன் ஒரு வேலையில் நிலை யாக இருக்கமாட்டார். நிரந்தர வேலை முதலில் அமையட்டும். இவ்விதம் சந்திரன், சுக்கிரன் ஒரே ராசியில் இருப்பவர்கள் திருப்பதி சென்று வழிபடுவது நல்லது.
ப் வெங்கடேஷ் ராமமூர்த்தி.
என் திருமணம் எப்போது நடக்கும்?
15-6-1990-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம். உங்களின் சந்திரன்- சனி, ராகு மற்றும் செவ்வாயிடையே அகப்பட்டுக்கொண்டு பாபகர்த்தாரி யோகம் பெற்றுள்ளது. ராசிக்கு 2-ல் செவ்வாய் தோஷம் தருகிறார். கும்ப ராசிக்கு ஏழரைச்சனி நடக்கிறது. நடப்பு புதன் தசை ஆரம்பம். இதில் புதன் புக்தியில் சற்று இடையூறு மிகுந்த, குழப்ப மான குடும்பத்திலிருந்து பெண் அமைவாள். புதன் தசை 8-ஆமிட அதிபதியின் தசை. எனவே விஷ்ணு துர்க்கையை வணங்குவது நல்லது.
ப் வி.ஆர். முத்துசாமி, உடுமலைபேட்டை.
என் சுயமான மனையை விற்றுவிடலாமா? அல்லது இ
ப் எஸ். வள்ளியம்மை, பெருந்துறை.
என் மகன் ஜாதகம் அனுப்பியுள் ளேன். வேலை, திருமணம் பற்றிக் கூறவும்.
மகன் ஸ்ரீராம் சிதம்பரம் 15-6-2002-ல் பிறந்தவர். மிதுன லக்னம், கடக ராசி. ஆயில்ய நட்சத்திரம். ராசிக்கு 12-ல் செவ்வாய்- தோஷமுள்ளது. கடக ராசிக்கு அஷ்டமச்சனி நடக்கிறது. நடப்பு சுக்கிர தசை. இதில் வெளியூர், வெளி நாட்டில் வசிப்பார். சுக்கிர தசையில், தந்தைவழி சொந்ததில் இஷ்ட திருமணம் நடக்கும். பையனுக்கு 21 வயதுதான் ஆகிறது. சில வருடங்கள் போகட்டும். இந்தப் பையன் ஒரு வேலையில் நிலை யாக இருக்கமாட்டார். நிரந்தர வேலை முதலில் அமையட்டும். இவ்விதம் சந்திரன், சுக்கிரன் ஒரே ராசியில் இருப்பவர்கள் திருப்பதி சென்று வழிபடுவது நல்லது.
ப் வெங்கடேஷ் ராமமூர்த்தி.
என் திருமணம் எப்போது நடக்கும்?
15-6-1990-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம். உங்களின் சந்திரன்- சனி, ராகு மற்றும் செவ்வாயிடையே அகப்பட்டுக்கொண்டு பாபகர்த்தாரி யோகம் பெற்றுள்ளது. ராசிக்கு 2-ல் செவ்வாய் தோஷம் தருகிறார். கும்ப ராசிக்கு ஏழரைச்சனி நடக்கிறது. நடப்பு புதன் தசை ஆரம்பம். இதில் புதன் புக்தியில் சற்று இடையூறு மிகுந்த, குழப்ப மான குடும்பத்திலிருந்து பெண் அமைவாள். புதன் தசை 8-ஆமிட அதிபதியின் தசை. எனவே விஷ்ணு துர்க்கையை வணங்குவது நல்லது.
ப் வி.ஆர். முத்துசாமி, உடுமலைபேட்டை.
என் சுயமான மனையை விற்றுவிடலாமா? அல்லது இருந்துவிட்டுப் போகட்டுமா?
18-4-1943-ல் பிறந்தவர். கடக லக்னம், கன்னி ராசி, உத்திர நட்சத்திரம். நடப்பு புதன் தசை- விரயாதிபதி தசை. அதில் செவ்வாய் புக்தி 2023, நவம்பர் வரை. இதில் மனை சம்பந்தமான எந்த முயற்சியும் பலிக்காது. அடுத்துவரும் ராகு புக்தியில் மனையை விற்றுவிடுவீர்கள். மனை சம்பந்தமான விஷயங்களுக்கு, அருகி லுள்ள முருகர் கோவிலி-லுள்ள அங்காரகனை செவ்வரளி மாலை சாற்றி வணங்கவும்.
ப் ப. நரசிங்கம், சென்னை-61.
என் பேத்தியின் ஜாதகப்படி அவளது திருமணம், நிரந்தர வேலை பற்றிக் கூறவும். வரன் எந்த திசையிலிருந்து அமைவார்.
பேத்தி ஆர். நிமிஷா 2-11-1997-ல் பிறந்தவர். துலா லக்னம், விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரம். ராசியில் சூரியன், சந்திரன் நீசம். ராசிக்கு 2-ல் செவ்வாய் சம்பந்தம். 6-ஆம் அதிபதி நீசபங்கம். பல தடைகளுக்குப்பிறகே, நல்ல வேலை கிடைக்கும். நடப்பு புதன் தசை. இதில் 2023, டிசம்பருக்குள் வேலை உறுதியாகும். அதன்பின் வரும் செவ்வாய் புக்தியில் விருப்பத் திருமணம் நடக்கும். வரும் வரன் எந்த திசையிலிருந்து வருவார் என பேத்தியிடம் கேட்டே தெரிந்து கொள்ளவும். இவ்விதம் சந்திரன், புதன் ஒரே நட்சத்திர பாதத்தில் உள்ளவர்கள், திருநெல்வேலி, பாளையங்கோட்டை அருகிலுள்ள சீவலப்பேரி விஷ்ணு துர்க்கை ஆலயம் சென்று வழிபடவும். அருகிலுள்ள விஷ்ணு துர்க்கையையும் வழிபடலாம்.
ப் ஏ. அசோக், திருநெல்வேலி.
எனது மகனுக்கு நரம்புப் பிரச்சினை உள்ளது. எப்போது குணமாகும்? என்ன பரிகாரம் செய்யலாம்? எந்த துறையில் படிக்க வைக்கலாம்?
மகன் ஸ்ரீபாலன் 11-2-2015-ல் பிறந்தவர். கடக லக்னம், துலா ராசி, விசாக நட்சத்திரம். இந்தப் பையனுக்கு 6-ஆம் அதிபதி குரு, லக்னத்தில் உச்சம். அவர் புதன் சாரத்தில் நிற்பதால், நரம்பு சம்பந்தமான பிரச்சினை உள்ளது. மேலும் 5-ஆம் அதிபதி செவ்வாய் கேதுவுடன் அமர்ந்து, அம்சத்தில் நீசம் பெற்றுள்ளார். எனவே ஆரோக்கியக் குறை வென்பது தவிர்க்கமுடியாதது. எப்போதும், 6, 8-ஆம் அதிபதிகள் மிகுந்த வலுப்பெறக் கூடாது. நடப்பு குரு தசை 2028, ஆகஸ்ட் வரை. அதன்பின் வரும் சனி தசை படிப்படி யான முன்னேற்றம் தரும், சட்டம் சம்பந்த மான துறையில் மேற்கல்வி கற்கக்கூடும். இவ்விதம் நரம்புத் தளர்ச்சியால் அவதிப் படுவோர். தஞ்சை அருகே திருத்துறைப் பூண்டி சென்று வணங்கலாம். குலதெய்வ வழிபாடும் அவசியம்.
ப் ஜெ. மாரிமுத்து, உடையார்பாளையம், அரியலூர்.
என் மகன் இ.ஊ படித்து பத்து ஆண்டு கள் ஆகிறது. வேலைக்குச் செல்வதில்லை. திருமணமும் ஆகவில்லை.
மகன் எம். பிரபாகரன் 10-9-1991-ல் பிறந்த வர். மீன லக்னம், கன்னி ராசி, அஸ்த நட்சத்திரம். லக்னத்துக்கு 7-ல் செவ்வாய். அவரை சனி பார்க்கிறார். அதனால் விருப்பத் திருமணம் நடக்கும். 6-ஆம் அதிபதி சூரியனுடன் அதி கிரக சேர்க்கை. மற்றும் சூரியன் அம்சத்தில் நீசம். இவருக்கு, ஓரிடத்தில் பொருந்தி வேலை பார்ப்பது பிடிக்கவே பிடிக்காது. வேலை பார்த்தால் வியர்வை வருமே என எண்ணும் சுகவாசி இவர். இந்த ஜாதகர் தன் காதல் மனைவியின் பேச்சைக்கேட்டு பின் வேலைக்குத் தொடர்ந்து செல்வார். நடப்பு குரு தசை. அதில் 2023, அக்டோபருக்குப் பிறகு ஆரம் பிக்கும் புதன் புக்தி, திருமணம், வேலை என எல்லாற்றையும் அழைத்துக்கொண்டு வரும். இவ்விதம் வேலை கிடைக்கவும், திருமணம் நடக்கவும் மேற்குப் பார்த்த சிவன் கோவிலில், ஒன்பது மாதம் அமாவாசைதோறும் நெய் விளக்கு ஏற்றி வழிபடவேண்டும்.
ப் சிவா கணேசன், தஞ்சாவூர்.
என் குலதெய்வம் எது என குழப்பமாக உள்ளது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கூறுகின்றனர்.
2-12-1968-ல் பிறந்தவர். பிறந்த லக்னம் மிதுனம். லக்னத்திற்கு 5-ஆமிடத்தைக் கொண்டு குலதெய்வம் காணவேண்டும். 5-ஆம் அதிபதி சுக்கிரன். அவர் சுய சாரம் வாங்கி, தனுசில் உள்ளார். அவருக்கு சனி, செவ்வாய் பார்வை உள்ளது. எனவே உங்களுடைய குலதெய்வம் பெண் தெய்வ மாகும். உக்ர குணம் கொண்டது. உங்கள் பிறந்த இடத்திலிருந்து கிழக்கு, தென்கிழக்கில் கோவில் உள்ளது. சற்று காட்டுப்பகுதியில் இருக்கும். நடப்பு குரு தசையில் சனி புக்தி 2024, பிப்ரவரி வரை. அதற்குள் குலதெய்வம் கண்ணில் பட்டுவிடும். உங்கள் மனைவி வீட்டு ஆட்கள் உதவுவர். இவ்விதம் குலதெய்வ சாபம் உள்ளவர்கள் மயிலாடுதுறை அருகிலுள்ள திருமீயச்சூர் சென்று வழிபடவேண்டும்.
ப் ரவிச்சந்திரன்
நான் அரசியலில் சேரமுடியுமா? அல்லது ஜோதிடம் கூறமுடியுமா?
15-3-1967-ல் பிறந்தவர். மிதுன லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். லக்னத் துக்கு 2-ல் குரு உச்சம் மற்றும் வக்ரம். எனவே நீசம். அதனால் வாக்கு சம்பந்தமான வேலை உதவாது. அரசியல் ஓரளவு ஓடும். சூரியன், சனி இணைவு அரசியலில் முதன்மை கிடைப் பதை தடைசெய்யும். நடப்பு ராகு தசையில் சந்திர புக்தி 2023, ஏப்ரலில் ஆரம்பம். டீ, காபி கடை ஓரளவு சரியாக வரும். இவ்விதம் நீர், திரவம் சம்பந்த வியா பாரிகள் பௌர்ணமிதோறும் அம்பாளை வணங்கவேண்டும்.
ப் ஒரு வாசகி.
இந்த ஜாதகிக்கு எப்போது திருமண மாகும்?
மீனாட்சி 21-3-1997-ல் பிறந்தவர். துலா லக்னம், சிம்ம ராசி, மக நட்சத்திரம். லக்னத் துக்கு 6-ஆமிடத்தில் சூரியன், புதன், சுக்கிரன், சனி, கேது என ஐந்து கிரகச் சேர்க்கை. ராசிக்கு 2-ல் செவ்வாய், ராகு; 8-ல் அதிகிரக கூட்டணி. எனவே கிரகண தோஷம், செவ்வாய் தோஷம், நாகதோஷம், கிரக யுத்தம் என எல்லாம் உள்ளது. எனினும் இந்தப் பெண்ணுக்கு சந்நியாச யோகம் கிடையாது. செவ்வாய், சனி பார்வை மற்றும் புதன், கேது இணைவு இவருக்கு விருப்பத் திருமணம் கொடுக்கும். நடப்பு சூரிய தசையில், 2023, ஏப்ரலி-ருந்து புதன் புக்தி ஆரம்பம். அப்போது விருப்பத் திருமணம் நடக்கும். இதுபோல் கிரகண தோஷமுள்ள ஜாதகர்கள். ஊத்துக்கோட்டை அருகே சுருட்டப்பள்ளி சென்று சயன கோலத்தி லுள்ள சிவபெருமானை வணங்கவேண்டும். இது சென்னை- திருப்பதி வழியில் உள்ளது.
செல்: 94449 61845