ப் பொன்னுசாமி, ஒட்டன்சத்திரம்.
எனது ஜாதகம் மற்றும் மகன்கள் ஜாதகம் அனுப்பியுள்ளேன். தொழில் மற்றும் சூழ்நிலை பற்றிக் கூறவும்.
நீங்கள் 15-9-1978-ல் பிறந்தவர். கடக லக்னம், கும்ப ராசி, அவிட்ட நட்சத்திரம். கும்ப ராசிக்கு தற்போது ஏழரைச்சனி நடக்கிறது. நடப்பு சனி தசையில் சுக்கிர புக்தி. ஓரளவு வாழ்வு நடக்கும். 2026-ல் ஆரம்பிக்கும் சந்திர புக்தியில் கவனம் தேவை. சனி தசை முழுவதும் வார்த்தை களிலும், பண விஷயத்திலும் கவனமாக இருக்கவேண்டும். இவ்விதம் சனி தசையும் நடந்து ஏழரைச் சனியும் நடப்பவர்கள் ஏரிக்குப்பம் ஸ்ரீசனீஸ்வர பகவான் ஆலயம்சென்று வணங்கி, எள் முடிச்சிட்ட நல்லெண்ணெய் தீபமேற்றி வணங்கவேண்டும். இந்த ஆலயம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது. மகன் ஜெய்கிருஷ்ணன் 11-3-2010-ல் பிறந் தவர். கடக லக்னம், மகர ராசி, உத்திராட நட்சத்திரம். மகர ராசிக்கு ஏழரைச்சனி நடப்பு. தற்போது செவ்வாய் தசை 17 வயதுவரை உள்ளது. இதில் அதிக மறதியால் இந்த சிறுவன் அவதிப்படுவான். கல்வியின் நிலை மிக சுமராக இருக்கும். அடுத்துவரும் ராகு தசையில் தொழில்சார்ந்த கல்வி அமையும். இவ்விதம் உயர்கல்வியில் மேன்மை யடைய கும்பகோணம்- சுவாமிமலை சாலை யிலுள்ள இன்னம்பூர் திருக்கோவிலை வணங்க வேண்டும். இன்னொரு மகன் சபரிநாதன் 8-3-2006-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். நடப்பு குரு தசையில் சுக்கிரபுக்தி. இந்த குரு தசையில் தகவல்தொடர்பு சார்ந்த கல்வி கற்பார். அடுத்து வரும் சனி தசை இவரை வெளியூர், வெளிநாடு அழைத்துச்செல்லும். இவ்விதம் கம்ப்யூட்டர் சார்ந்த கல்வி மேன்மையடைய விரும்புவோர் சென்னை, பூந்தமல்லி- சித்துக்காடு ஸ்ரீ தாந்தீஸ்வரர் ஆலயம்சென்று வழிபடவேண்டும்.
ப் ஒரு வாசகி, கோடம்பாக்கம், சென்னை.
என் பெயரை வெளியிடவேண்டாம். என் பேரன் ஜாதகத்தில் சனி தசை, ராகு புக்தி நடக்கிறது. இது முடியும்போது, இவன் அப்பாவுக்கு உடல்நிலை மிக மோசமாகும் என்றொரு ஜோதிடர் கூறுகிறார். இதனை நன்றாக அலசி ஆராய்ந்து பதில் கூறவும்.
பேரன் அம்ருத் 15-7-1996-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், மிதுன ராசி, புனர்பூச நட்சத் திரம். நடப்பு சனி தசையில் ராகு புக்தி. இந்த கிரகங்களின் சாரநாதர்களின் அமைப் புப்படி, இந்த ஜாதகரின் தாய்- தந்தைக்கு ஆரோக்கியம் சார்ந்த செலவும், அலைச்சலும், மனக்கிலேசமும் இருக்குமேயொழிய, தந்தைக்கு உடல்நலக்குறைவு அதிகரிக்கு மென்று கூறமுடியாது. மேலும் சூரியன், சந்திரனுக்கு குரு பார்வை கிடைப்பதால், பயப்படத் தேவையில்லை. சனி, செவ்வாய் சம்பந்தம் காதல் திருமணம் கொடுக்கும். மற்றபடி நீங்கள் பயப்பட வேண்டாம். இவ்விதம் சனி தசை, ராகு புக்தி நடப்பவர்கள் பைரவரை வணங்குவது சிறப்பு. சனிக்கிழமைதோறும். பைரவருக்கு விளக் கேற்றி, ஏதேனுமொரு இனிப்பை வைத்து வணங்கி விநியோகம் செய்துவிடவேண்டும். வீட்டிற்குக் கொண்டு வரக்கூடாது.
ப் ஏ. செல்வராஜ், சீனிவாசநகர், சென்னை-63.
எனக்கு ஒரே மகன். ஒற்றை மகன் இருக்கும் வீட்டில் கறிவேப்பிலை மரம் வளர்க்கக்கூடாது என்று சொல்கிறார் கள். இது எந்த அளவுக்கு உண்மை?
ஜோதிடத்தில் விருட்ச சாஸ்திரம் என்றே ஒரு பகுதி உள்ளது. மேலும் சில தோஷங்களுக்கு மரம்நட்டு வளர்ப்பதே தோஷ நிவர்த்தியாகும். மேலும் கறிவேப் பிலை மரம், அவ்வளவு சீக்கிரத்தில் வளர்ந்து விடாது. உங்கள் வீட்டில் கறிவேப்பிலை மரம் வளர்வது நல்லதுதான். அப்படியும் உங்களுக்கு மன சஞ்சலம் இருப்பின், உங்கள் வீட்டு கறிவேப்பிலையை நிறைய பேருக்கு இலவசமாக் கொடுங்கள். அதுவே பல நன்மைகளைக் கொடுக்கும்.
ப் கே. லோகநாதன், கோவியனூர்.
என் மகன் ஜாதகம் அனுப்பியுள்ளேன். கெட்ட பழக்கங்களுடன் கல்லூரியிலிருந்து வெளியேறிவிட்டான். என் மகனை மீண்டும் படிக்க வைக்கலாமா?
மகன் ராஜிவ் 20-9-2000-ல் பிறந்தவர். மீன லக்னம், துலா ராசி, சுவாதி நட்சத்திரம். பையனுக்கு குரு, சனி சேர்க்கை. மேலும் பூர்வபுண்ணியாதிபதி சந்திரன் 8-ல் மறைவு. 5-ஆம் அதிபதி சந்திரன், 8-ல் மறைந்து, ராகு சாரம் வாங்கியிருப்பதால், குடிப்பழக்கம போன்ற போதை வழக்கம் இருக்கும். நடப்பு சனி தசையில் புதன் புக்தி. அடுத்துவரும் புக்திகளும் அவ்வளவு சிலாக்கியமாக அமைய வில்லை. அனேகமாக, இவர் வீட்டிலிருந்து வெளியேறி வசிக்கும் நிலையுண்டு. இவரைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்தினால், உங்களின் நெஞ்சுவலியாவது குறையும். பையன் காதல் விஷயங்களில் தீவிரமாக இருப்பார். கல்வி விஷயம் கிடையாது. இவ்விதம் ஊழ்வினை தோஷம் உள்ளவர் கள் திருவஹிந்திபுரம் லட்சுமி நரசிம்மரை வணங்கவும். மேலும் அருகிலுள்ள நரசிம்மரை வணங்குவதும் குலதெய்வத்தை வழிபாடு செய்வதும் நன்று.
ப் ஆர். ராஜி, சென்னை-4.
என் மகன் ஜாதகம் அனுப்பியுள்ளேன். திருமணம் எப்போது நடக்கும்? வேலை மாற்றம் உண்டா?
மகன் ஸ்ரீதர் விருச்சிக லக்னம், மிதுன ராசி, புனர்பூச நட்சத்திரம். 2-ஆம் அதிபதி எனும் குடும்ப ஸ்தானாதிபதி குரு ராகுவுடன் 12-ல் மறைவு. 7-ஆம் அதிபதி சுக்கிரன் நீசம். 7-ல் செவ்வாய். நடப்பு சனி தசையில் குரு புக்தி 2024 அக்டோபர்வரை. இதற்குள் உங்கள் இனத்தில் சற்று வேறு பிரிவைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடக்கும். அல்லது அந்தப் பெண்ணின் திருமண ஏற்பாட்டில் ஏதேனும் குளறுபடி ஏற்பட்டு திருமணம் நின்றுபோன பெண்ணாக அமையும். இவருடைய ஜாதகத்தில் சனி, இருபுறமும் கிரகங்களின்றி தனித்திருப்பதால், கிடைத்த வேலையை விடக்கூடாது. இதுபோல் குருவும் ராகுவும் சேர்ந்துள்ள ஜாதகர்கள் கும்பகோணம் திருவாரூர் சாலையிலுள்ள சாக்கோட்டை சிவபுரம் தலம் சென்று வணங்கவும். திருமணம் சீக்கிரம் நடக்க, மயிலாப்பூர் வெள்ளீஸ்வரரை வேண்டிக் கொள்ளவும். வசந்தி ஜோதி என் மகனும், வேறுமதப் பெண்ணும் விரும்புகிறார்கள். அவர்களுக்குத் திருமணம் நடத்தலாமா? மகன் பிரகாஷ் 1-10-1996-ல் பிறந்தவர். கடக லக்னம், ரிஷப ராசி, கார்த்திகை நடத்திரம். நடப்பு ராகு தசையில் சனி புக்தி. பெண் நளினி 11-11-1994-ல் பிறந்தவர். துலா லக்னம் கும்ப ராசி, அவிட்ட நட்சத்திரம். நடப்பு ஏழரைச்சனி. குரு தசையில் சுக்கிர புக்தி. உங்கள் மகன் இப்போது நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கமாட்டார். அவர் இஷ்டம்போலத்தான் செய்வார். கிரகநிலை அவ்வாறு உள்ளது. இருவர் ஜாகத்திலும் சில அமைப்புகள் சரியில்லை. விட்டுப் பிடியுங்கள். இந்தப் பையனின் தாயார், பைரவரையும் கருடனையும் வழிபடவேண்டும்.
செல்: 94449 61845