ப் பாலசுப்பிரமணியன், மலேசியா நகர், மேலப்பனங்காடு.
என் மகள் ஜாதகம் அனுப்பியுள்ளேன். ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெறுவாரா? திருமணம் எப்போது நடக்கும்?
மகள் பா. காயத்ரி 19-10-1999-ல் பிறந்தவர். மகர லக்னம், மகர ராசி, திருவோண நட்சத்திரம். ராசியில் செவ்வாய், குரு பரிவர்த்தனை. சனி, சூரியன் ஆகிய இரு கிரகங்களும் நீசம். இரு நீச கிரகங்கள் ஒருவரையொருவர் பார்த்தால் உச்சமாகும். இதில் வேடிக்கையான விஷயம் உள்ளது. நீச சனியானவர் குருவுடன் இருப்பதால் நீசபங்கமாகிறார். சூரியன், சுக்கிரனின் பரிவர்த்தனையால் நீசபங்கமாகி விட்டார். ஆக, இரு நீசபங்க கிரகங்களும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கிறார் கள். இதன் பலன் என்ன? இந்தப் பெண் வாழ்க்கையில் ஒரு விஷயம் நடக்கு மென மிக எதிர்பார்த்திருக்கும்போது, அது கைநழுவிப் போய்விடும். சிலசமயம் கிடைக்கவே கிடைக்காது எனும் செயல்களில் வெற்றி கிடைத்துவிடும். இதுபோன்ற ஜாதகங்கள் ஜோதிடர்களைக் குழப்பத்தில் ஆழ்த்திவிடும். நடப்பு ராகு தசை மற்றும் ஏழரைச்சனி. ராகு தசையில் சூரிய புக்தி 2023, மேவரை. இதற்குள் அரசு சம்பந்தமான விஷயம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. கிடைக்காமல் போகவும் கூடும். இப்போது கிடைக்காவிட்டால் அடுத்துவரும் குரு தசையில் அரசுப்பணி கிடைக்கும். சனி, சந்திரன் இணைவு புனர் பூ யோகம் கொடுப்பதால், மாங்கல்ய தானம் அவசியம். இவ்விதம் அரசில் உயர்பதவி கிடைக்க சூரியனின் அனுக்கிரகம் அவசியம். விழுப்புரம் அருகே பனங்காட்டூர் என்ற தலம் சென்று, சூரியனை வணங்கவேண்டும். நடப்பு ராகு தசைக்கு பைரவரை வணங்குவது சிறப்பு. அருகிலுள்ள நவகிரகங்களில் சூரியனை ஞாயிற்றுக்கிழமைகளில் வணங்கவும்.
ப் சி. ஆன்டணி, தஞ்சை.
எனக்குத் திருமணமாகி ஆறு மாதங்களாகின்றன. எப்போது குழந்தை பிறக்கும்? வெளிநாடு செல்வேனா? தம்பியின் திருமணம் எப்போது நடக்கும்?
நீங்கள் 31-8-1990-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரம். 5-ஆம் அதிபதி குரு உச்சம். நடப்பு புதன் தசையில் சனி புக்தி. இது 2026, மே மாதம் வரை உள்ளது. அதற்குள் குழந்தை பாக்கியம், வெளிநாட்டு வேலை கிடைக்கும். முடிந்தபோதெல்லாம் தேவாலயத்திற்கு தண்ணீர் சம்பந்தமான உதவி செய்துகொடுங்கள். மனைவி கிறிஸ்டி 7-4-1998-ல் பிறந்த வர். கும்ப லக்னம், கடக ராசி, ஆயில்ய நட்சத்திரம். இவருக்கு 5-ஆம் அதிபதி நீசமானாலும், 9-ஆம் அதிபதி குருவுடன் இருப்பதால் குழந்தை பாக்கியம் உண்டு. நடப்பு சுக்கிர தசையில் சனி புக்தி 2025, ஜூன்வரை. இதற்குள் குழந்தை பாக்கியமும், வெளிநாட்டு வாய்ப்பும் கிடைக்கும். தேவாலயத்தில் புத்தி குறைபாடு டைய மற்றும் ஊனமுற்ற குழந்தை களின் தேவையைக் கேட்டறிந்து உதவுங்கள். உங்கள் இரண்டு பேருக்கும் நட்சத்திரப் பொருத்தம் உள்ளது. குழந்தை பிறக்க சற்று மருத்துவ உதவி தேவைப்படும். தம்பி மோசஸ் 9-7-1997-ல் பிறந்தவர். சிம்ம ராசி, பூர நட்சத்திரம். ஜாதகத்தில் ராசியில் ராகு, 7-ல் கேது. ராசிக்கு 2-லும், லக்னத்துக்கு 12-லுமாக செவ்வாய் அமர்ந்து தோஷம் தருகிறார். சனி, செவ்வாய், 5, 7-ன் அதிபதியாகி பார்வையிடுகிறார்கள். எனவே இவர் வேலை செய்யுமிடத்தில் பிற மதப் பெண்ணை விரும்பித் திருமணம் செய்வார். நடப்பு சந்திர தசையில் ராகு புக்தி ஆரம்பம். இதில் மிகவும் குழப்பமான மனநிலை கொள்வார். 2024 ஆகஸ்ட்டில் குரு புக்தி ஆரம்பிக்கும். அதில் இவரின் திருமணம் சில பிரச்சினைகளுக்குப்பின் நடக்கும். 2026, ஜனவரியில் சனி புக்தியில் வெளிநாடு செல்வார். இதுபோல ஜாதகத்தில் குரு நீசபங்க மாகியுள்ள கிறிஸ்துவ மதத்தினர், மத போதகர்களின் தேவையைக் கேட்டறிந்து, ஆடைகள், சுத்தம் செய்யும் துணிகள் போன்றவற்றை வாங்கிக்கொடுக்கவும்.
ப் புவனேஸ்வரி.
நான் நர்ஸிங் படித்துள்ளேன். நான்கு வருடமாக தனியாரில் வேலை பார்க்கிறேன். எப்போது அரசு வேலை கிடைக்கும்? வெளிநாடு செல்லும் வாய்ப்புள்ளதா? கணவர் மொபைல் கடையில் வேலை செய்கிறார். சொந்தமாக கடைவைக்க வாய்ப்புள் ளதா?
11-8-1996-ல் பிறந்தவர். தனுசு லக்னம், மிதுன ராசி, புனர்பூச நட்சத்திரம். உங்கள் ஜாதகத்தில் சூரியன் 8-ல் மறைவு. எனவே அரசு உத்தியோகத்திற்கு வாய்ப்பில்லை. நடப்பு சனி தசையில் ராகு புக்தி 2025, ஏப்ரல் வரை. வேலை செய்யுமிடத்தில் கவனமாக இருங்கள். உங்கள் வேலையைப் பற்றி வேண்டாத புகார் எழுக்கூடும். 2027, அக்டோபர்வரை சனி தசை. அதன்பிறகு வெளிநாடு வாய்ப்பு வரக்கூடும். இவ்விதம் சனி தசை நடப்பவர்கள் திருவாரூர் தியாகராஜர் கோவில் சென்று வணங்கவேண்டும். மேலும் அருகிலுள்ள சனீஸ்வரர் சந்நிதிக்கு சனிக்கிழமைகளில், எள் முடிச்சிட்ட நல்லெண்ணெய் அகலில் திரியிட்டு தீபமேற்றவேண்டும். கணவர் மணிவண்ணன் 5-3-1997-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், மகர ராசி, உத்திராட நட்சத்திரம். தற்போது ஏழரைச்சனி நடக்கிறது. நடப்பு ராகு தசை. இதில் சனி புக்தி 2025 அக்டோபர்வரை. அதுவரையில் புதுமுயற்சிகள் கூடாது. மாதச் சம்பள வேலையில் நீடிக்கட்டும். பிறகுவரும் புதன் புக்தியில் நல்லது நடக்கும். சொந்தத்தொழில் அல்லது வெளிநாட்டு முயற்சி பலிதமாகும். இவ்விதம் ராகு தசை நடப்பவர்கள் மயிலாடுதுறை- திருவாரூர் சாலையிலுள்ள திருப்பாம்புரம் என்னும் தலம்சென்று வணங்குவது நல்லது. மேலும் கோவில் விளக்கில், நெய் வாங்கி சேர்ப்பது நல்லது.
செல்: 94449 61845