ப் ஆர். தேவமாதவன், இராமநாதபுரம்.
எனது பேத்தி ஜாதகம் அனுப்பியுள் ளேன். அவளது திருமணம் பற்றிக் கூறவும்.
பேத்தி அபிநயா 31-8-2000-ல் பிறந்தவள். கன்னி ராசி, ஹஸ்த நட்சத்திரம். பெண்ணிற்கு நாகதோஷம், செவ்வாய் தோஷமில்லாத சுத்த ஜாதகம். 7-ஆமிடத்தில் அமர்ந்த சுக்கிரனின் நீசம், குரு பார்வையால் நீசபங்கமாகிறது. 5-ல் செவ்வாய் நீசம். இந்தப் பெண்ணின் ஜாதக அமைப்புப்படி, அவளுடைய கணவரை அவளே தேர்ந்தெடுத்துத் திருமணம் செய்வாள். விருப்பத் திருமணமாக இல்லாமல், நீங்கள் சொன்ன வரனில் ஒருவரை அவளே தேர்ந்தெடுப்பாள். நடப்பு ராகு தசையில் சனி புக்தி 2024, ஆகஸ்ட்வரை. இந்த காலத்தை விட்டுவிடுங்கள். அடுத்துவரும் புதன் புக்தியில் திருமணம் நடக்கும். வரும் வரன் திருமண ஏற்பாடாகி, நின்று போனவராக இருப்பார். நீங்கள் அனுப்பிய இரண்டு வரன் ஜாதகமும் பொருந்தாது. இவ்விதம் சந்திரன், சுக்கிரன் இணைவு பெற்றவர்கள் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் சென்று வழிபட வேண்டும்.
ப் ச. சந்திரசேகரன், அருப்புக்கோட்டை.
என்னுடைய ஜாதகமும் மகன்களின் ஜாதகமும் அனுப்பியுள்ளேன். என்னு டைய சனி தசை பற்றியும், பிள்ளைகளின் எதிர்காலம் பற்றியும் கூறவும்.
நீங்கள் 9-8-1978-ல் பிறந்தவர். துலா லக்னம், கன்னி ராசி, ஹஸ்த நட்சத்திரம். சனி தசை 2020, ஜூலை மாதத்திலிருந்து ஆரம்பம், சனி தசை, சனி புக்தி 2023 ஜூலை வரை நடக்கும். இதில் ச
ப் ஆர். தேவமாதவன், இராமநாதபுரம்.
எனது பேத்தி ஜாதகம் அனுப்பியுள் ளேன். அவளது திருமணம் பற்றிக் கூறவும்.
பேத்தி அபிநயா 31-8-2000-ல் பிறந்தவள். கன்னி ராசி, ஹஸ்த நட்சத்திரம். பெண்ணிற்கு நாகதோஷம், செவ்வாய் தோஷமில்லாத சுத்த ஜாதகம். 7-ஆமிடத்தில் அமர்ந்த சுக்கிரனின் நீசம், குரு பார்வையால் நீசபங்கமாகிறது. 5-ல் செவ்வாய் நீசம். இந்தப் பெண்ணின் ஜாதக அமைப்புப்படி, அவளுடைய கணவரை அவளே தேர்ந்தெடுத்துத் திருமணம் செய்வாள். விருப்பத் திருமணமாக இல்லாமல், நீங்கள் சொன்ன வரனில் ஒருவரை அவளே தேர்ந்தெடுப்பாள். நடப்பு ராகு தசையில் சனி புக்தி 2024, ஆகஸ்ட்வரை. இந்த காலத்தை விட்டுவிடுங்கள். அடுத்துவரும் புதன் புக்தியில் திருமணம் நடக்கும். வரும் வரன் திருமண ஏற்பாடாகி, நின்று போனவராக இருப்பார். நீங்கள் அனுப்பிய இரண்டு வரன் ஜாதகமும் பொருந்தாது. இவ்விதம் சந்திரன், சுக்கிரன் இணைவு பெற்றவர்கள் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் சென்று வழிபட வேண்டும்.
ப் ச. சந்திரசேகரன், அருப்புக்கோட்டை.
என்னுடைய ஜாதகமும் மகன்களின் ஜாதகமும் அனுப்பியுள்ளேன். என்னு டைய சனி தசை பற்றியும், பிள்ளைகளின் எதிர்காலம் பற்றியும் கூறவும்.
நீங்கள் 9-8-1978-ல் பிறந்தவர். துலா லக்னம், கன்னி ராசி, ஹஸ்த நட்சத்திரம். சனி தசை 2020, ஜூலை மாதத்திலிருந்து ஆரம்பம், சனி தசை, சனி புக்தி 2023 ஜூலை வரை நடக்கும். இதில் சிறப்பான நன்மை களை எதிர்பார்க்க இயலாது. அடுத்துவரும் புதன் புக்தி நல்ல ஏற்றத்தையும், மாற்றத் தையும் தரும். சனி தசையில் நிறைய உழவாரப் பணி செய்யுங்கள். நன்மைகள் கிடைக்கும். இவ்விதம் சனி சம்பந்த எந்த பிரச்சினைக் கும் கும்பகோணம்- திருவாரூர் அருகிலுள்ள திருநறையூர் சென்று மங்கள சனீஸ்வரரை வணங்கவேண்டும். மூத்த மகன் சங்கர பாண்டியன் 1-12-2013-ல் பிறந்தவன். விருச்சிக லக்னம், துலா ராசி, சுவாதி நட்சத்திரம். லக்னாதிபதி செவ்வாயும், 11-ஆம் அதிபதி புதனும் பரிவர்த் தனை. 12-ல் சனி உச்சம். லக்னாதிபதி செவ்வாய் அம்சத்தில் உச்சம். நடப்பு குரு தசை 17 வயதுவரை நடக்கும். குரு தசை, 8-ஆமிடத்திலிருந்து நடத்துகிறது. எனவே அதுவரை கல்வி சற்று சுமாரான நிலையில் அமையும். பின்வரும் சனி தசை இந்த சிறுவனை வெளியூர், வெளிநாட்டுக்கு அழைத் துச்செல்லும். பின் கல்வி, வேலை நல்லபடி யாக அமையும். இவ்விதம் குரு தசை 8-ஆமிடத்திலிருந்து நடக்கும் மாணவர்களுக்கு ஞாபக சக்தி குறைபாடு இருக்கும். இவர்கள் செட்டிபுண்ணியம் ஹயக்ரீவருக்கு நெய் தீபமேற்றி, அர்ச்சனை செய்யவேண்டும். அருகிலுள்ள கோவிலில் குருவுக்கு வியாழக்கிழமைகளில் இரண்டு நெய்தீபமேற்றி வணங்க கல்வியின் நிலைமை சீராகும். இளைய மகன் சிவரஞ்சன் 10-11-2019-ல் பிறந் துள்ளான். மகர லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். மகனுக்கு பிரம்மஹத்தி தோஷம் இருப்பதால், முடிந்தபோது ஒருமுறை திருவிடைமருதூர் அழைத்துச்செல்லவும். 8-ஆமிடத்திற்கு குரு பார்வை கிடைப்பதால் ஆயுள் பலமுள்ள ஜாதகம். 2024, ஏப்ரல்வரை புதன் தசை. அதுவரை சற்று உடல்நலக் கோளாறும், கல்வியில் விளையாட்டுத்தனமும் இருக்கும். பின்வரும் கேது தசை பள்ளி இடமாற்றம் கொடுக்கும். இவ்விதம் குழந்தைகளுக்கு புதன் தசை நடந்து, கல்வியிலும் சிறந்து விளங்க, காஞ்சி புரம் பச்சைவண்ணப் பெருமாளை தரிசித்து, விளக்கேற்றி வணங்க, கல்வி மேன்மைய டையும்.
ப் சௌந்தர்யா, பூந்தமல்லி.
என் அண்ணன் திருமணம் பற்றிக் கூறுங்கள். திருமணம் ஆகுமா ஆகாதா? 40 வயதாகிறது. இப்போது அப்போது என்று ஏமாந்து போகிறோம். வேலையும் நிரந்தரமாக செய்யமுடியவில்லை. என்ன தொழில் செய்யலாம்?
அண்ணன் கோகுல கிருஷ்ணன் 12-9-1982-ல் பிறந்தவர். மேஷ லக்னம், மிதுன ராசி, புனர்பூச நட்சத்திரம். லக்னத்துக்கு 8-ல் செவ்வாய்- பரிகார செவ்வாய் தோஷம். ராசியில் ராகு, 7-ல் கேது. நாகதோஷம் உள்ளது. ஜாதகத்தில் 7, 5-ஆம் அதிபதிகள் சேர்க்கை. ஒரு விருப்பத் திருமணம் நடக்கவிருந்து தடைப்பட்டிருக்கும். இவருடைய 6-ஆமிட அமைப்புப்படி இவர் எந்த வேலை செய்தாலும் அதில் தொடர இயலாது. நடப்பு புதன் தசையில் சந்திர புக்தி 2023, மேமுதல் 2024, நவம்பர்வரை. அதற்குள் திருமணம் முடிந்து, ஒரு ஏஜென்சியும் எடுத்துவிடுவார். இவ்விதம் புதன்புக்தி நடந்து, தொழில் முன்னேற் றம் வேண்டுபவர்கள், புதன்கிழமை அல்லது புனர்பூச நட்சத்திரத்தன்று விஷ்ணு துர்க்கையை வழிபட வேண்டும்.
ப் காளியம்மாள், விருகம்பாக்கம், சென்னை.
என் தம்பி ஜாதகம் அனுப்பியுள்ளேன். எப்போது திருமணமாகும்?
தம்பி ரா. சீனிராஜ் 26-11-1991-ல் பிறந்தவர். தனுசு லக்னம், கடக ராசி, பூச நட்சத்திரம். லக்னத்தில் ராகு, 7-ல் கேது. நாகதோஷம் உள்ளது. லக்னத் துக்கு 12-ல் செவ்வாயும், சூரியனும், புதனும் ஒரே நட்சத்திரக் காலில் அமர்ந்துள்ளனர். சனி, சந்திரன் பார்வை உள்ளது. நடப்பு புதன் தசையில் குரு புக்தி 2024, ஆகஸ்ட்வரை. அதற்குள் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. ஓரளவு விருப்பத் திருமணமாக நடக்கும். இவ்விதம் சூரியன், செவ்வாய் சேர்க்கையுள்ள ஆண்கள் திருச்சி, திருவானைக்காவல் கோவிலில் வீரபத்திரருக்கு செவ்வாய்க்கிழமை வெற்றிலை மாலை சாற்றி வழிபடவேண்டும். அல்லது அருகி லுள்ள கோவிலில் வீரபத்திரருக்கு வெற்றிலை மாலை சாற்றலாம்.
ப் ஸ்ரீவித்யா சுந்தர், கூத்தப்பாளையம், கூடலூர்.
என் தம்பி ஜாதகம் அனுப்பியுள்ளேன். திருமணம் எப்போது நடக்கும்? வாக்கியப் படியும் திருக்கணிதப்படியும் நட்சத்திரம் மாறுகிறது. எது சரியென்று கூறவும்.
தம்பி டி. சந்துரு 30-4-1986-ல் பிறந்தவர். தனுசு லக்னம், மகர ராசி. இதில் வாக்கியப்படி உத்திராடம்- 4 என்றும், திருக்கணிதப்படி திருவோணம்- 1 என்றும் உள்ளது. நட்சத்திர சந்தி ஜாதகம். இவர் நகைக் கடையில் வேலை பார்ப்பதாகக் கூறியுள்ளீர் கள். அதனைக் கணக்கிட்டுப் பார்த்தால் உத்திராட நட்சத்திரமே சரியென தோன்றுகிறது. ராசிக்கு 12-ல் செவ்வாய். எனவே செவ்வாய் தோஷம். 7-ஆம் அதிபதி, சூரியன், ராகு இணைவில் சிக்கிக்கொண்டு கிரகண யுத்தம் பெறுவதால் திருமணம் தாமதமாகிறது. அல்லது ஒரு விருப் பத்திருமணம் நடந்து முறிந்திருக்க வாய்ப் புள்ளது. மகர ராசிக்கு ஏழரைச்சனி. மேலும் குரு தசையில் குரு புக்தி 2024 ஜூன்வரை. அதற்குள் திருமணமாகும் வாய்ப்புள்ளது. இவ்விதம் நட்சத்திர சந்தி தோஷமுடைய வர்கள், ஒன்பது கிரகமும் ஒரே வரிசையில் நின்று சிவனை வழிபடும் திருக்குவளை தலம் சென்று வழிபடவும்.
ப் கந்தசாமி, திருப்பூர்-7.
என் ஜாதகம் அனுப்பியுள்ளேன். இந்த 2023-ஆம் வருடப் பலன்களை அறிய விரும்புகிறேன். என்ன தொழில் செய்தால் நன்மை பயக்கும்?
22-3-1949-ல் பிறந்தவர். ரிஷப லக்னம், தனுசு ராசி, மூல நட்சத்திரம். 2023-ஆம் வருடப் பலன்கள் புத்தகத்தை "பாலஜோதிடம்' வெளியிட்டுள்ளார்கள். வாங்கிப் படித்துக் கொள்ளவும். நடப்பு குரு தசை. இதில் சந்திர புக்தி 2023 பிப்ரவரி வரை. 8-ஆமிட தசையில், எட்டில் இருக்கும் கிரகத்தின் புக்தி. உங்கள் தோள்பட்டை, கைகள், கால்களில் அடிபடா மல் பார்த்துக்கொள்ளுங்கள். பிறகு தொழில் விஷயம் பற்றி யோசிக்கலாம். இவ்விதம் குரு நீசமாகி தசை நடத்துபவர் கள், சிவனுக்கு விளக்கேற்றி வணங்கவேண்டும்.
செல்: 94449 61845