ப் பி.ஆர். தங்கவேலு, பரமக்குடி.
என் மகன் ஜாதகம் அனுப்பியுள்ளேன். அவனுடைய திருமணம் பற்றிக் கூறவும்.
மகன் ரமேஷ் 26-6-1970-ல் பிறந்தவர். தனுசு லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். குடும்ப ஸ்தானாதிபதி சனி நீசபங்கம். 7-ல் சூரியன், செவ்வாய் இணைவு. லக்னம், ராசி இரண்டுமே 7-ஆம் அதிபதி சம்பந்தம் பெறவில்லை. 2-ஆம் வீட்டை சனி, செவ்வாய் இருவருமே பார்வையிடுகிறார் கள். எனவே திருமணம் என்ற ஒன்று நடந்து, மணவாழ்வு என்னும் அமைப்புக்கு வழியில்லை. நடப்பு சந்திர தசையில் ராகு புக்தி 2024, பிப்ரவரி வரை. இந்த காலகட்டத்தில் இவர் தன் வீட்டிலிருந்து வெளியேறி, தெரிந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்று காலம்தள்ள ஆரம்பித்துவிடுவார். இவ்விதம் திருமணம் மிகவும் தாமதமாகிறவர்கள், ஐந்து தல விருட்சங்களான வில்வம், அரசு, வேம்பு, வன்னி, வாழை ஆகியவை ஒரே இடத்தில் இருக்கும். சென்னை கோயம் பேடு பெருமாள் கோவில்சென்று வணங்க வும்.
ப் சிவப்பிரகாசம், புதுச்சேரி.
என் மகளின் திருமணம் தள்ளிப் போகிறது எப்போது நடக்கும்? மகளின் பெயரை வெளியிடவேன்டாம்.
மகள் 10-11-1983-ல் பிறந்தவர். ரிஷப லக்னம், மகர ராசி, உத்திராட நட்சத்திரம். லக்னத்தில் ராகு, 7-ல் கேது. நாகதோஷ ஜாதகம். 7-ல் புதன், குரு, கேது. மேலும் 5, 7-ஆம் அதிபதிகள் பரிவர்த்தனை. சூரியனின் நீசம், சனியின் உச்சத்தால் சம னாகிறது. இதுவொரு விருப்பத் திருமண ஜாதகம். முன்பு ஒரு விருப்பத் திருமணம் நடக்கவிருந்து தடைப்பட்டிருக்கலாம். அல்லது வெளியில் தெரியாமல் இருந்திருக் கவும் வாய்ப்புள்ளது. மாங்கல்ய ஸ்தானத்தை சனி மற்றும் செவ்வாய் பார்வையிடுகிறார்கள். எல்லாவற்றையும்விட இந்த ஜாதகத்தில் சந்திரன் கேமத்துருவம் எனும் மோசமான நிலையில் உள்ளார். சந்திரனின் முன்னும் பின்னும் ஒரு கிரகமும் இல்லாதிருப்பது. கேமத்துருவ யோகம் எனப் படும். எச்செயலும் கூடிவராது. நடப்பு குரு தசையில் குரு புக்தி. இதில் தாரமிழந்த ஒருவரு டன் திருமணம் நடக்கும். இவ்விதம் கேமத்துருவ யோக ஜாதகர்கள் வளர்பிறை ஏகாதசியில், கிருஷ்ணருக்கு அவல் பாயசம் செய்து கோவிலில் விநியோகம் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Q&A_55.jpg)
ப் எம்.என். கணேசன், ஆவடி.
என் பேத்தி ஜாதகம் அனுப்பியுள்ளேன். திருமணம் எப்போது நடக்கும்?
பேத்தி டி. கிருத்திகா 29-11-1998-ல் பிறந்தவர். ரிஷப லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். மீன ராசிக்கு 7-ல் செவ்வாய். எனவே செவ்வாய் தோஷம் உள்ளது. இதே 7-ஆம் அதிபதி செவ்வாயை சனி பார்ப்பதால், திருமணம் தாமதமாகும். சனி, சந்திரன் இணைவு புனர்பூ யோகம். இந்தப் பெண்ணின் ஜாதகத்தில் சனி, செவ்வாய் பார்வை. ஒரு காதல் திருமணம் நடக்கவிருந்து, தடைப்பட்டிருக்கும். 7-ல் அமர்ந்த சுக்கிரன், "காரகோ பாவ நாஸ்தி' எனும் விதிப்படி 7-ஆமிடத்தை விரைவாக நடைபெற முடியாமல் தடுக்கிறார். 7-ஆமிடத்தில் சூரியன் அமர்வதும் ஒரு தோஷமாகும். நடப்பு சுக்கிர தசை. சுக்கிர புக்தி 2024, ஜூலைவரை. இதற்குள் உங்கள் பூர்வீக குடும்பத்தில், சற்று கலப்பு மணம் செய்தவரின் மகனுடன் இந்தப் பெண்ணிற்குத் திருமணம் நடக்கும். தாத்தாவின் நூறு சதவிகித எதிர்பார்ப்புடன், பேத்தியின் திருமணம் நடக்க வாய்ப்பில்லை. இவ்விதம் திருமணம் தாமதமாக நடக்கும் நிலையிலுள்ளவர்கள், திருவாரூர்- திருவீழி மிழலை சென்று, மாப்பிள்ளை சுவாமியை வழிபட, விரைவில் திருமணம் நடக்கும்.
ப் அண்ணா அன்பழகன், சென்னை-78.
62 வயதுவரை எனக்கு உத்தியோகமோ, வருமானமோ சரியாக அமைய வில்லை. வரும் தாசபுக்திகளில் ஏதும் யோகம் அமைய வாய்ப்புண்டா?
7-1-1961-ல் பிறந்தவர். கும்ப லக்னம், சிம்ம ராசி, பூர நட்சத்திரம். உங்கள் லக்னமும், ராசியும் நாகங்களின் சம்பந்தம் பெற்றுள் ளன. உங்களுக்குக் கிடைத்த வேலைகளையும், உங்களின் அதீத எண்ணக் கலவையால் விட்டுவிட்டு வந்திருப்பீர்கள். மேலும் உங்களின் 11-ஆமிடத்தில் சூரியன், புதன், குரு, சனி என நான்கு கிரகச் சேர்க்கையும், அதற்கு செவ்வாய் பார்வையும் உள்ளது. ஒருவித சந்நியாச யோக ஜாதகமிது. நடப்பு குரு தசையில் சந்திர புக்தி. உங்களின் வேலை கலை அல்லது உணவு சம்பந்தமாக இருக்கக்கூடும். கூடிய மட்டும் பிற இனம், மதம் சார்ந்தவர்களிடம் வேலை செய்யுங்கள். ஓரளவு ஓடும். உங்களை உங்கள் மகளும் மருமகனும் பார்த்துக்கொள்வார்கள். இவ்விதம் நிரந்தர வேலை கிடைக்காமல் துன்புறுபவர்கள், கேரளா, பாலக்காடு அருகிலுள்ள கல்பாத்தி லட்சுமி நாராயணப் பெருமாளை வணங்கவும்.
ப் பி. ரமேஷ், மலேசியா.
என் தம்பிக்கு இன்னும் திருமணமாக வில்லை. ஆவதற்கு வாய்ப்பிருகிறதா?
தம்பி கணேசன் 9-9-1975-ல் பிறந்தவர். கடக லக்னம், துலா ராசி, சித்திரை நட்சத்தி ரம். லக்னத்தில் அமர்ந்த சனி, 3, 7, 10-ஆமிடங்களைப் பார்க்கிறார். திருமணத் தாமதத்திற்கு இதுவொரு காரணம். அதை விட, பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் ராகு அமர்ந்து செவ்வாயை நோக்குகிறார். இது பூர்வ சாபத்தைக் குறிக்கிறது. நடப்பு சனி தசை. இதில் 2023, ஏப்ரலி-ருந்து சந்திர புக்தி ஆரம்பம். இது ஒரு வருடம், ஏழு மாதம் ஓடும். இந்தக் காலகட்டத்திற்குள், இவர் கணவனை இழந்து, குழந்தையுடனுள்ள பெண்மணியுடன் சேர்ந்துவாழ வாய்ப்புள் ளது. இவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதி சந்திரன், குடும்பாதிபதி சூரியன், புத்திர ஸ்தானாதிபதி செவ்வாய் மூவரும், அம்சத் தில் நீசம்பெற்று அமர்ந்துள்ளனர். எனவே முறையான குடும்பம், குழந்தைகள் சம்பந்த பாக்கியம் சற்று மாறுபாடாக அமையும். இவ்விதம் பூர்வஜென்ம வினையால், அறியாது செய்த குற்றங்களுக்கு நிவர்த்தி பெற, மயிலாடுதுறை சிதம்பரம் வழி யிலுள்ள சீர்காழி சட்டைநாதரை வணங்கு வது நல்லது.
ப் சண்முகப்பிரியா, கும்பகோணம்.
என் மகள், எட்டாம் வகுப்புவரை ஆங்கிலப் பள்ளியில் படித்துவிட்டு, கொரோனா பிரச்சினையின்போது அதைத் தொடரமுடியாமல் இப்போது ஊரில் தமிழ்ப் பள்ளியில் சேர்த்துள் ளோம். பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி அடைவாளா?
மகள் 4-9-2007-ல் பிறந்தவள். கடக லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். லக்னாதிபதி சந்திரன் உச்ச வர்க்கோத்தமம். எந்த நிலையையும் இந்தப் பெண் சமாளித்துவிடுவாள். மற்றும் புதன் உச்சம். குருவின் பார்வை லக்னம், ராசிக்குக் கிடைக்கிறது. 2024, பிப்ரவரிவரை ராகு தசையில் ராகுபுக்தி. அதுவரையில் மகள் படிப்பு சற்று தடுமாற்றமாகத்தான் அமையும். ராகு 8--ருந்து தசை ஆரம்பித்துள்ளார். பிறகு வரும் குரு புக்தி இவளுக்கு இடமாறுதலையும், கல்வி மேன்மையையும் தரும். இந்தப் பெண்ணை கூடியமட்டும் பிறந்த இடத்திலிருந்து வேறிடத்தில் வாழவைப்பது நல்லது. இவ்விதம் ராகு தசை நடப்பவர்கள், திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் அருகேயுள்ள, அமிர்த நாராயண பெருமாள் கோவில்சென்று வணங்குவது சிறப்பு. கல்வியில் மேன்மைபெற, திரு இன்னம்பூர் ஸ்ரீ அட்சராப்யாஸர் என்னும் எழுத்தறி நாதரை வணங்கவேண்டும்.
செல்: 94449 61845
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-02/Q&A-t.jpg)