Advertisment

உங்கள் கேள்வி ஆர்.மகாலட்சுமி பதில்கள்

/idhalgal/balajothidam/your-question-rmahalakshmi-answers-3

● மலர்விழி, ஒட்டன்சத்திரம்.

கணவரும் மாமியாரும் வீட்டை விட்டு வெளியேறச் சொல்கின்றனர். என்ன செய்வது?

12-1-1983-ல் பிறந்தவர். ரிஷப லக்னம், துலா ராசி, சுவாதி நட்சத்திரம். குடும்ப ஸ்தானாதிபதி புதன் 8-ல் மறைவு. உங்கள் சொற்கள், பேச்சு உங்களுக்கு எதிராகத் திரும்பிவிடும். லக்னத்தில் ராகு, 7-ல் கேது. சனியும் சந்திரனும் ஒரே நட்சத்திரக் காலில் உள்ளதால், எண்ணச் சிதறல் உங்களுக்கு உண்டு. களஸ்திரகாரகன் சுக்கிரன் இரு பாவருக்கு இடையே உள்ளதால், மண வாழ்க்கை சற்று இடர்ப்பாடு கொண்டதாக உள்ளது. நடப்பு சனி தசையில் கேது புக்தி. 2023, பிப்ரவரிக்குள் நீங்கள் வீட்டைவிட்டு வெளியேறும் நிலை ஏற்படும். நீங்கள் அனேகமாக மருத்துவம் சம்பந்த வேலை செய்வீர்கள் என்று நினைக் கிறேன். உங்கள் ஜாதக அமைப்புப்படி, தனியாளாக, உங்கள் குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவீர்கள். யாராவது சித்தரை வணங்கவும். கணவர் நந்தகோபால்: 4-5-1976-ல் பிறந்தவர். கும்ப லக்னம், மிதுன ராசி, புனர் பூச நட்சத்திரம் நடப்பு 8-ஆமிட தசை புதன் தசை. அதில் 12-ஆமிட சனி புக்தி. இவர் மனம் ஒருநிலையில் இல்லாமல், எல்லாரிடமும் சண்டை யிட்டுப் பிரிந்து வாழும் நிலையில் உள்ளார். கூடிய சீக்கிரம் இவரும் வீட்டைவிட்டு வெளியேறும் நிலை ஏற்படும். இவருக்கு வேண்டப் பட்டவர்கள் பெருமாளை வணங்க வேண்டும். மகள் ஹர்ஷி

● மலர்விழி, ஒட்டன்சத்திரம்.

கணவரும் மாமியாரும் வீட்டை விட்டு வெளியேறச் சொல்கின்றனர். என்ன செய்வது?

12-1-1983-ல் பிறந்தவர். ரிஷப லக்னம், துலா ராசி, சுவாதி நட்சத்திரம். குடும்ப ஸ்தானாதிபதி புதன் 8-ல் மறைவு. உங்கள் சொற்கள், பேச்சு உங்களுக்கு எதிராகத் திரும்பிவிடும். லக்னத்தில் ராகு, 7-ல் கேது. சனியும் சந்திரனும் ஒரே நட்சத்திரக் காலில் உள்ளதால், எண்ணச் சிதறல் உங்களுக்கு உண்டு. களஸ்திரகாரகன் சுக்கிரன் இரு பாவருக்கு இடையே உள்ளதால், மண வாழ்க்கை சற்று இடர்ப்பாடு கொண்டதாக உள்ளது. நடப்பு சனி தசையில் கேது புக்தி. 2023, பிப்ரவரிக்குள் நீங்கள் வீட்டைவிட்டு வெளியேறும் நிலை ஏற்படும். நீங்கள் அனேகமாக மருத்துவம் சம்பந்த வேலை செய்வீர்கள் என்று நினைக் கிறேன். உங்கள் ஜாதக அமைப்புப்படி, தனியாளாக, உங்கள் குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவீர்கள். யாராவது சித்தரை வணங்கவும். கணவர் நந்தகோபால்: 4-5-1976-ல் பிறந்தவர். கும்ப லக்னம், மிதுன ராசி, புனர் பூச நட்சத்திரம் நடப்பு 8-ஆமிட தசை புதன் தசை. அதில் 12-ஆமிட சனி புக்தி. இவர் மனம் ஒருநிலையில் இல்லாமல், எல்லாரிடமும் சண்டை யிட்டுப் பிரிந்து வாழும் நிலையில் உள்ளார். கூடிய சீக்கிரம் இவரும் வீட்டைவிட்டு வெளியேறும் நிலை ஏற்படும். இவருக்கு வேண்டப் பட்டவர்கள் பெருமாளை வணங்க வேண்டும். மகள் ஹர்ஷினி: 23-3-2013-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், கடக ராசி. ஆயில்ய நட்சத்திரம். ஜாதகத்தில் சந்திரன் 12-ல் சூரியன் 8-ல். மேலும் 4, 9-ன் அதிபதி செவ்வாய் 8-ல் மறைவு. இந்தக் குழந்தையின் பெற்றோர் பிரிவுக்கு இதுவும் ஒரு காரணம். இவ்வாறு பிரியவில்லையென் றால், யாராவது ஒருவர் நிரந்தரமாகப் பிரியும் நிலை வரலாம். இந்த தற்காலிகப் பிரிவு நல்லதே. நடப்பு புதன் தசை பெருமாளை வணங்கவும். மகன் சாய்ராம்: 24-8-2020-ல் பிறந்த வர். கடக லக்னம், துலா ராசி, சுவாதி நட்சத்திரம். நடப்பு ராகு தசை. ராகு 12-ல் இருந்து தசை நடத்துகிறார். சற்று அல் லாட்டம் கொடுக்கிறார். துர்க்கையை வணங்கவேண்டும்.

Advertisment

w

● ராஜேந்திரன்.

எனக்கு கல்லீரல், அல்சர் பிரச்சினை உள்ளது. எப்போது சரியாகும்? ஆயுள் எப்படி? எனது சம்பள பாக்கி எப்போது கிட்டும்? மாமனார் மிகவும் பலவீனமாக நடக்கமுடியாமல் இருக்கிறார். குணம் கிடைக்குமா?

20-12-1951-ல் பிறந்தவர். கும்ப லக்னம், சிம்ம ராசி, பூர நட்சத்திரம். 8-ஆமிடத்திற்கு சனிக்கும் குரு பார்வை கிடைப்பதால், தீர்க்காயுள் ஜாதகம். நடப்பு சனி தசையில் சனி புக்தி. சனி உங்களின் லக்னாதிபதி அவர் 8-ஆமிடத்தில் இருந்து தசை நடத்துவதால் அடிவயிறு சம்பந்தமான கோளாறுகளைக் கொடுத்திருக்கிறார். 2023, செப்டம்பரில் ஆரம்பிக்கும் புதன் புக்தியில் சற்று கவனமாக இருத்தல் அவசியம். குரு மீன ராசியில் இருந்து மாறுவதற்குள், உங்கள் சம்பள பாக்கி வந்துவிடும். இவ்விதம் அல்சர் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்கள் உள்ளவர்கள், கடலூர்- பண்ருட்டி சாலையிலுள்ள திருவதிகை சென்று வணங்கவும். மாமனார் தா.குருசாமி: 23-3-1932-ல் பிறந்தவர் கடக லக்னம், கன்னி ராசி ஹஸ்த நட்சத்திரம். ஜாதகருக்கு தற்போது 91 வயது நடந்துகொண்டிருக்கிறது. ஒரு ஜாதகத்தில் ஆயுள் பாவம் பற்றித் தெரிந்துகொள்ள, அவரின் 8 மற்றும் 3-ஆம் அதிபதிகளை கவனிக்கவேண்டும். இவரின் சனி மற்றும் புதன் இருவரும் உச்ச குருவின் பார்வையைப் பெறுவதால், நிறை ஆயுள் ஜாதகமாகும். நடப்பு சுக்கிர தசை. இவர் கடக லக்னத்துக்கு பாதகாதிபதியாகி, கர்மஸ்தானத்தில் அமர்ந்து தசை நடத்திக்கொண்டிருக்கிறார். சுக்கிர தசையில் சந்திர புக்தி. சந்திரன், கேது ஜாதகரை மட்டுப்படுத்தியுள்ளது. 2023, ஜூலை மாதம் ஆரம்பிக்கும் செவ்வாய் புக்தியில் கவனம் தேவை. ஆயுள் பற்றி கூறும் அதிகாரம் எல்லாம்வல்ல ஈசனுக்கே உண்டு. இவ்விதம் சரீர பலவீனம் உள்ளவர்கள் கோவை அருகே வெள்ளலூர் சித்த லிங்கேஸ்வரர் ஆலயத்தை வழிபடுவது மிகவும் நல்லது.

● சங்கீதா, பெங்களூர்.

என் கணவருக்கு நான் இரண்டாவது மனைவி. (கணவர் விவாகரத்து பெற்றவர்) திருமணம் முடிந்து ஆறு ஆண்டுகளாகியும் மணவாழ்வில் நிம்மதியில்லை. குழந்தை பாக்கியம் கிட்டுமா?

கடக லக்னம், கடக ராசி, ஆயில்ய நட்சத்திரம். ராகு தோஷம், செவ்வாய் தோஷம் கிடையாது. குரு 8-ல் மறைவு. களஸ்திரகாரகன் சுக்கிரன் இரு பாவியருக்கு- சனி, கேதுவுக்கிடையே அகப்பட்டு பாவகரத்தாரி யோகம் பெறுகிறார். உங்கள் மணவாழ்க்கை கொஞ்சம் அப்படி, இப்படி என சற்று தடுமாற்றமாகவே இருக்கும். நடப்பு சுக்கிர தசை. அதில் குரு புக்தி. அதனால் வீட்டில் சண்டை, நிம்மதியின்மை உள்ளது. 2022, செப்டம்பர் மாதம் சுக்கிர தசையில் சனி புக்தி ஆரம்பம் இக்கால கட்டத்தில் குழந்தை பிறப்பு உண்டாவதால், வீட்டில் மண வாழ்வில் மகிழ்ச்சி கூடும். பிரிவு தேவையில்லை. கணவர் கார்த்திக்: 8-11-1984-ல் பிறந்தவர் கும்ப லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். ராசியில் செவ்வாய், சனி உச்சம். அம்சத்தில் சுக்கிரன், சூரியன், செவ்வாய் உச்சம். இந்த கிரக அமைப்பு இந்த ஜாதகரை, மிகவும் "ஈ.கோ' பிடித்தவராக, தான் எனும் குணம் கொண்டவராக மாற்றிவிடும். மேலும் இவர் ஜாதகத்தில் ராசிக்கு நாகதோஷமும், பரிகார செவ்வாய் தோஷமும் உள்ளது. சனி, சந்திரன் பார்வை இரண்டாம் மணம் கொடுத்துள்ளது. நடப்பு ராகு தசையில் ராகு புக்தி 2024, ஜனவரி வரை. அதற்குள் ஒரு ஆண் குழந்தைக்கு வாய்ப்புள்ளது. குழந்தை பிறந்த வுடன் இவர் குடும்பத்தில் சண்டையின்றி அமைதி யாகிவிடுவார். இவ்விதம், ஒரே வீட்டிற்குள் எலியும் பூனையுமாக வாழும் தம்பதிகள் விருதுநகர்- சிவகாசி செல்லும் சாலையிலுள்ள திருத்தங்கல் எனும் பெருமாள் கோவில் சென்று வணங்கவேண்டும். இந்தக் கோவிலில் கருடன், தனது பகையான பாம்பைக் கையில் வைத்துள்ளார். பாற்கடலைக் கடைய பயன்பட்ட வாசுகி எனும் பாம்பாகும். எனவே இவரை தரிசித்தால், தம்பதிகள் பகை நீங்கி, ஒற்றுமையுடன் வாழலாம்.

● அருணாசலம், வடலூர்.

எதிர்கால வாழ்வுக்குத் தேவையான பொருளாதார வசதி அமையுமா? சொந்த வீடு அமையும் வாய்ப்புள்ளதா?

7-4-1959-ல் சிம்ம லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். லக்னாதிபதி சூரியன் 8-ல் மறைவு. கூடவே சந்திரன், கேது; நீச பங்க புதனும் மறைவு. இந்த 8-ஆம் வீட்டை, குரு பார்ப்பதால், ஆயுள் விருத்தி ஜாதகமிது. நடப்பு செவ்வாய் தசை. இதில் ராகு புக்தி 2022, நவம்பர் வரை. இதில் வெளி நாடு அல்லது ஒரு முஸ்லீம் அன்பர்மூலம் எதிர்பாராத நன்மை கிடைக்க வாய்ப்புண்டு. மேலும் செவ்வாய் தசையில் உங்கள் பகுதி அரசியலில் ஈடுபட்டு கொஞ்சம் காசு பணம் கையில் புரளும் யோகம் உண்டு. செவ்வாய தசை முடிவதற்குள் பூர்வீக இடத்தில் ஒரு பழைய வீட்டை வாங்கும் வாய்ப்புண் டாகும். இவ்விதம் பணவரவு அதிகரிக்க விரும்பு வோர், அருகிலுள்ள வள்ளி- தெய்வானையுடன்கூடிய முருகருக்கு ஒன்பது செவ்வாய்க் கிழமைகள் நெய் தீபமேற்றி வழிபடவேண்டும்.

செல்: 94449 61845

bala050822
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe