Advertisment

உங்கள் கேள்வி ஆர்.மகாலட்சுமி பதில்கள்

/idhalgal/balajothidam/your-question-rmahalakshmi-answers-29

ப் என்.வி.என். சாக்ரட்டீஸ், சென்னை-15.

என் மூத்த மகன், மருமகள் ஜாதகம் அனுப்பியுள்ளேன். அவர் களின் குடும்ப ஒற்றுமை, மகனின் தொழில் அமைப்பு, ஆயுள்பலம் பற்றிக் கூறவும்.

Advertisment

மகன் எஸ். யோகராஜ் 22-2-1987-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம். லக்னத்தில் சனியும் சந்திரனும் ஒரே நட்சத்திரக் கா-ல் நிற்கின்றனர். நடப்பு சந்திர தசையில் சுயபுக்தி உள்ளது. சந்திரனின் நீசம், குரு பார்வையால் பங்கமாகிறது. எனவே ஜாதகர் இந்த சந்திர தசையில், எந்த விஷயத்தையும் ஒரே முறையில் செய்து முடிக்கமாட்டார். எல்லா விஷயங்களும் முத-ல் தடையை ஏற்படுத்திவிட்டு பின்தான் முடியும். சந்திர தசை 2022, ஆகஸ்ட்டில் ஆரம்பித்து பத்து வருடங்கள் நடக்கும். மத்திமமான பலன்கள் கிடைக்கும். இவ்விதம் சந்திர தசை நடப்பவர்கள், திங்கட்கிழமைதோறும் விரதமிருந்து, அம்பாளையும் சிவனையும் வணங்க வேண்டும். மேலும் திருப்பதி சென்று வருவது நல்லது. மருமகள் எம். தேவி, 20-6-1995-ல் பிறந்தவர். துலா லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். இவருடைய ஜாதகத்திலும் சனி, சந்திரன் இணைவுள்ளது. நடப்பு கேது தசை. விநாயகரை வணங்க, நல்ல பலன்கள் கிடைக்கும். சனி கும்ப ராசிக்கு மாறியவுடன், இவருக்கு ஏழரைச்சனி ஆரம்பித்துவிடும். சற்று செலவும், அலைச்சலும் இருக்கும். சனிக்கிழமை சனீஸ்வர ப

ப் என்.வி.என். சாக்ரட்டீஸ், சென்னை-15.

என் மூத்த மகன், மருமகள் ஜாதகம் அனுப்பியுள்ளேன். அவர் களின் குடும்ப ஒற்றுமை, மகனின் தொழில் அமைப்பு, ஆயுள்பலம் பற்றிக் கூறவும்.

Advertisment

மகன் எஸ். யோகராஜ் 22-2-1987-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம். லக்னத்தில் சனியும் சந்திரனும் ஒரே நட்சத்திரக் கா-ல் நிற்கின்றனர். நடப்பு சந்திர தசையில் சுயபுக்தி உள்ளது. சந்திரனின் நீசம், குரு பார்வையால் பங்கமாகிறது. எனவே ஜாதகர் இந்த சந்திர தசையில், எந்த விஷயத்தையும் ஒரே முறையில் செய்து முடிக்கமாட்டார். எல்லா விஷயங்களும் முத-ல் தடையை ஏற்படுத்திவிட்டு பின்தான் முடியும். சந்திர தசை 2022, ஆகஸ்ட்டில் ஆரம்பித்து பத்து வருடங்கள் நடக்கும். மத்திமமான பலன்கள் கிடைக்கும். இவ்விதம் சந்திர தசை நடப்பவர்கள், திங்கட்கிழமைதோறும் விரதமிருந்து, அம்பாளையும் சிவனையும் வணங்க வேண்டும். மேலும் திருப்பதி சென்று வருவது நல்லது. மருமகள் எம். தேவி, 20-6-1995-ல் பிறந்தவர். துலா லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். இவருடைய ஜாதகத்திலும் சனி, சந்திரன் இணைவுள்ளது. நடப்பு கேது தசை. விநாயகரை வணங்க, நல்ல பலன்கள் கிடைக்கும். சனி கும்ப ராசிக்கு மாறியவுடன், இவருக்கு ஏழரைச்சனி ஆரம்பித்துவிடும். சற்று செலவும், அலைச்சலும் இருக்கும். சனிக்கிழமை சனீஸ்வர பகவானை வழிபடுங்கள். 2023 அக்டோபரி-ருந்து ஒரு வருடம் கேது தசையில் ராகு புக்தி நடக்கும். அப்போது சற்று கவனமாக இருக்கவேண்டும். துர்க்கையை வணங்குவது நன்று. கணவன்- மனைவி இருவருக்கும் நிதானமாகக் காலம் ஓடும்.

ப் ஏ.என். செல்வராஜ், பெருந்துறை.

என் மகன் ஜாதகம் அனுப்பியுள்ளேன். அவரது திருமணம் எப்போது நடக்கும்? உறவிலா- அந்நியத்திலா?

எஸ். அண்ணாமலை 11-9-2000-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், மகர ராசி, அவிட்ட நட்சத்திரம். லக்னத்துக்கு 2-ல் கேது, 8-ல் ராகு. நாகதோஷ ஜாதகம். ராசிக்கு 8-ல் செவ்வாய், சூரியனுடன் உள்ளார். செவ்வாய் தோஷமும் உண்டு. நடப்பு ராகு தசை 2024 மார்ச்சில் முடியும். பின் வரும் குரு தசை இவருக்கு வேலை, திருமணம் தரும். சொந்தத்தில் விருப்பமான பெண்ணைத் திருமணம் செய்வார். 7-ஆம் அதிபதி சுக்கிரன் நீசபங்கம். திருமணத்தின்போது, தா-தானம் செய்வது நல்லது. இவ்விதம் பல தோஷம்- நாகதோஷம், செவ்வாய் தோஷம், களஸ்திர தோஷம் ஒருங்கே உடையவர்கள் இராமேஸ்வரத்திலுள்ள 22 தீர்த்தலுங்களில் நீராடி, ராமநாத சுவாமியை வழிபாடு செய்தால் அனைத்து தோஷமும் விலகும்.

Advertisment

a

ப் ராசாமணி, காட்பாடி.

என் மகன் ஜாதகமும் பெண் ஜாதகமும் அனுப்பியுள்ளேன். பெண் ணுக்கு மாங்கல்ய ஸ்தானத்தில் சனி இருப்பதால், திருமணம் செய்தால் மாப்பிள்ளைக்கு கஷ்டம் ஏற்படுமா?

பையன் மனோ 8-8-1994-ல் பிறந்தவர். கும்ப லக்னம், சிம்ம ராசி, மக நட்சத்திரம். இவருக்கு நாகதோஷம், செவ்வாய் தோஷம் இல்லை. பெண் அருணா 11-1-1995-ல் பிறந்தவர். கடக லக்னம், மேஷ ராசி, கார்த்திகை நட்சத்திரம். பெண்ணிற்கு ராசியில் கேது, 7-ல் ராகு. நாக தோஷம் உள்ளது. லக்னத்திற்கு 2-ல் செவ்வாய் உள்ளது. லக்னத்திற்கு 8-ல் சனி இருப்பினும், அது ஆட்சியென்பதால் பாதகம் கிடையாது. எது எப்படியிருப்பினும் இரு ஜாதகத்தையும் சேர்ப்பது ஏற்புடையதல்ல.

ப் எம், கார்த்திக், சென்னை-15.

ஆயுள், தொழில், பணம், விளையாட் டுத் துறை பற்றிக் கூறவும்.

23-4-1987-ல் பிறந்தவர். கும்ப லக்னம், கும்ப ராசி, அவிட்ட நட்சத்திரம். உங்கள் தொழில் பற்றிக் கேட்டிருக்கிறீர்கள். 2023, பிப்ரவரியில் இருந்து சனி தசை ஆரம்பிக்கிறது. தொழில் மாற்றம் வரும். பணவரவு, "வரவு எட்டணா- செலவு பத்தணா' என்கிற நிலையில் இருக்கும். சனி தசையில் சுயபுக்தி சென்றவுடன் வீடு கட்ட இயலும். விளையாட்டுத் துறையில் சாதிக்கமுடியுமா எனக் கேட்டுள்ளீர்கள். விளையாட்டுத் துறை என வரும்போது, ஜாதகரின் 5-ஆமிடத்தைக் காணவேண்டும். உங்கள் 5-ஆமிட புதன், உச்ச சூரியனுடன் இருப்பதால் உங்களுக்கு விளையாட்டுத்துறையில் ஆர்வமும் திறமையும் இருப்பது உறுதியாகிறது. எடுத்து வைத்தாலும் கொடுத்து வைக்கவேண்டுமென இருக்கிறதல்லவா? இவரின் புதன் எனும் கிரகம், ராகு, செவ்வாய் என இரு கிரகங்களுக்கிடையே சிக்கி பாப கர்த்தாரி யோகம் பெறுகிறார். எனவே முழு முயற்சியுடன் ஈடுபட்டால், ஓரளவு முன்னேற்றம் கிடைக்கும். இவ்விதம், விளையாட்டுத் துறையில் மேன்மை கிடைக்க, திருவாரூர்- நீடாமங்கலம்- பூவனூர் தலம் சென்று வழிபடுவது நல்லது.

ப் ஆர். தங்கவேலு, இராமநாதபுரம்.

என் மகள், மருமகன் ஜாதகம் அனுப்பியுள்ளேன். இருவரும் பிரிந் துள்ளார்கள். எப்போது குடும்பத்துடன் இணையும் வாய்ப்பு கிடைக்கும்?

மகள் 21-2-1989-ல் பிறந்தவர். மகர லக்னம், சிம்ம ராசி, மக நட்சத்திரம். இவருக்கு லக்னத் துக்கு 2-ல் சூரியன், ராகு, 8-ல் சந்திரன், கேது என முழுமையான நாகதோஷம் மற்றும் கிரகண தோஷம் உள்ளது. செவ்வாய் தோஷமும் உள்ளது. நடப்பு சந்திர தசை எட்டாமிடத்தில் இருந்து நடத்துகிறது 2023, ஆகஸ்ட் மாதத்திற்குப்பிறகு குழந்தையின் பொருட்டு, இருவரும் ஒன்றுசேரும் வாய்ப்பு உருவாகும். மருமகன் 24-6-1986-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், மகர ராசி, திருவோண நட்சத்திரம். இவருக்கு நாகதோஷம் கிடையாது. 2-ல் செவ்வாய். எனவே செவ்வாய் தோஷம் மட்டும் உள்ளது. இவரின் மகர ராசிக்கு ஏழரைச்சனி நடக்கிறது. நடப்பு குரு தசையில் சனி புக்தி. இதில் இவர் குடும்பத்துடன் சேரும் வாய்ப்புள்ளது. பேரன் 21-11-2019-ல் பிறந்துள்ளான். மிதுன லக்னம், சிம்ம ராசி, உத்திர நட்சத்திரம். இந்தச் சிறுவனுக்கு காலசர்ப்ப தோஷம். மற்றும் கிரக யுத்த தோஷமும் உள்ளது. மேலும், குருவும் சனியும் சேர்ந்திருப்பதால் பிரம்மஹத்தி தோஷமும் உண்டு. நடப்பு சூரிய தசை 6-ஆமிடத்தில் இருந்து நடக்கிறது. இதனால் குடும்பம் அல்லல்படுகிறது. இப்போதைக்கு தந்தை- தாய் சேர்வார்கள். எனினும் 2025, மே மாதத்திற்குப்பிறகே குடும்பத்தில் ஒற்றுமை என்ற ஒன்று உருவாகும். இவனுடைய தாயார் ஜாதகத்திலும் 2025, அக்டோபர் மாதத்திற்குப்பிறகு வரும் செவ்வாய் தசையே நிம்மதியைத் தரும். பையன் ஜாதகத்தை திருப்பட்டூர் கோவி-ல் வைத்து பூஜை செய்யவும். மேலும் ஏதாவது கோவி-ல், இவனை யாருக்காவது தத்துக்கொடுத்து, பின் முடிந்த தட்சிணை கொடுத்து பெற்றுக்கொள்ளவும். இந்தப் பையனின் தாயாருக்கு நிறைய கிரக தோஷம் இருப்பதால், மதுரை- இராமேஸ்வரம் சாலையில், இடைக்காட்டூர் சித்தர் கோவி-லுள்ள நவகிரகங்களை வழிபடவேண்டும்.

ப் இளஞ்செழியன், திருவாரூர்.

எனது தொழில் பற்றிக் கூறவும்.

28-9-1973-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், கன்னி ராசி, சித்திரை நட்சத்திரம். உங்கள் ஜாதக அமைப்பைப் பொருத்தவரை, புதன் உச்ச வர்க்கோத்தமம் பெற்றுள்ளார். எனவே எந்தத் தொழில் ஆரம்பித்தாலும், அது வாக்கு சம்பந்தம் கொண்டதாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.

இவ்விதம் தொழில் மேன்மையடைய விரும்புகிறவர்கள், மதுரை- திருமோகூர் சக்கரத்தாழ்வாரை நெய் தீபமேற்றி வழிபட வேண்டும்.

செல்: 94449 61845

bala030223
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe