ப் ஜே. வடிவேலன், முருங்கப்பாக்கம், புதுச்சேரி.

தொழில், திருமணம் பற்றி தெரிவிக்கவும்.

11-7-1978-ல் பிறந்தவர். மீன லக்னம், கன்னி ராசி, உத்திர நட்சத்திரம். ராசிக்கு நாகதோஷம் உள்ளது. மற்றும் 12-ஆமிட செவ்வாயும் தோஷம் தருகிறார். அனைத்து கிரகங்களும் ராகு- கேதுவுக்குள் இருப்பதால், காலசர்ப்ப தோஷம் உள்ளது. ராசியில் 5, 7-ஆம் அதிபதிகள் பரிவர்த்தனை. எனவே விருப்பத் திருமணம் அமையும். நடப்பு குரு தசை. இதில் சுக்கிர புக்தி 2025, ஜூன் வரை. இதற்குள் சற்று கலப்பு, காதல் மணமாக முடியும். உங்கள் தொழிலில் எப்போதும் ஆன்மிக சம்பந்தம், அரசுத் தொடர்பு இருந்துகொண்டே இருக்கும். சூரியனார் கோவிலுக்குச் சென்று அவ்வப்போது வணங்கவேண்டும். இவ்விதம் ராகு- கேது 7-ஆமிடத்தில் உள்ளவர்கள், காஞ்சிபுரம் ஸ்ரீமாகாளீஸ்வரர் ஆலயத்தில் சர்ப்பசாந்தி செய்வது நலம். மேலும் அருகிலுள்ள ஆலயத்திலுள்ள நாகர்களையும் வணங்கவேண்டும்.

Advertisment

ss

ப் செந்தில், விழுப்புரம்.

எனக்கு கல்வித் தடை முதல் எல்லா விஷயங்களும் தடை யாகிறது. சகோதரர்களுடனும் ஒற்றுமையற்ற நிலை. எந்தத் தொழிலும் நிரந்தரமாக அமையவில்லை. என் மனைவி மூலம்தான் வருமானம். எனக்கு ரேஷன் கடையில் வேலை கிடைக்க வாய்ப்புண்டா?

12-7-1976-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், மகர ராசி, உத்திராட நட்சத் திரம். ராசியில் சனி, சந்திரன் பரிவர்த் தனை. மேலும் 2-ஆம் ஸ்தானாதிபதி எனும் செல்வத்துக்குரிய அதிபதி 7-ல் உள்ளார். எனவே மனைவிமூலம் வருமானம் கிடைக்கிறது. அவர் அம்சத்தில் நீசம். எனவே உங்கள் கையில் பணப்புழக்கம் இல்லாத நிலை உள்ளது. தற்போது மகர ராசிக்கு ஏழரைச்சனி நடக்கிறது. நடப்பு குரு தசையில் சுக்கிர புக்தி. அடுத்து சூரிய புக்தி ஆரம்பித்த வுடன், கொஞ்சம் பணம் கொடுத்து, ஏதேனும் அரசுப் பதவியை, உங்கள் மனைவியின் உதவியுடன் பெற்றுவிடலாம். அடுத்துவரும் சனி தசை ஓரளவு நன்மைதரும். இவ்விதம் மிகுந்த பணக்கஷ்டம் உடையவர் கள் திருச்சி, லால்குடி- சத்திய மங்கலம் ஆலயத்திலுள்ள மரகதலிங்கமாக உள்ள ஸ்ரீ சுந்தரேஸ்வரரையும், அன்னை மீனாட்சி யையும் வணங்குவது சிறப்பு.

ப் சிவா, புதுச்சேரி.

ஐம்பது ஆண்டுகளாக மாத்திரை சாப்பிடாத நாளில்லை. கையில் காசு தங்கு வதில்லை. சர்க்கரை நோயும் உள்ளது. வீடு வாங்க நினைக்கிறேன். நிறைவேறுமா?

23-12-1951-ல் பிறந்தவர். மேஷ லக்னம், துலா ராசி, சித்திரை நட்சத்திரம். லக்னாதிபதி செவ்வாய் 6-ல் அமர்ந்து மறைந்ததும், அம்சத்தில் நீசம் பெற்றதும் அவரது பலக்குறைவைக் காண்பிக்கிறது. தனாதிபதி சுக்கிரன் ஆட்சிபெற்றாலும், அவரது சார அதிபதி 12-ல் மறைந்ததால், ஓரளவு பண வரவிருந்தாலும், பெருமளவு செலவும் உள்ளது. 6, 8-ஆம் அதிபதிகள் புதனும் செவ்வாயும் பரிவர்த்தனை. இதனால் நோய்த் தாக்கத்தால் அல்லல்படுகிறீர்கள். சனி 8-ஆம் வீட்டைப் பார்ப்பதால் நல்ல ஆயுள் பலமுண்டு. நடப்பு புதன் தசையில் சனி புக்தி 2025 வரை. அடுத்துவரும் கேது தசையில் கவனமாக இருக்கவேண்டும். 4-ஆம் அதிபதியின் அமைப்புப்படி, மனை, வீடு யோகம் குறைவுதான். இவ்விதம் சனி, செவ்வாய் சேர்ந்து, கர்மவினை தோஷம் இருப்பவர்கள் திருவாரூர் அருகிலுள்ள கரவீரபுரம் சென்று சண்டி கேஸ்வரரை வணங்கவும். அருகிலுள்ள சிவன் கோவி−லுள்ள சண்டிகேஸ்வரரையும் வணங்கவும். உழவாரப் பணி நல்லது.

ப் பாக்யராஜ், பண்ருட்டி.

என் அண்ணன் சந்தான கிருஷ்ணன் ஜாதகம் அனுப்பியுள்ளேன். 42 வயது முடிந்துவிட்டது. சிலர் இவருக்குத் திருமணம் நடக்காதென்று கூறுகின்றனர். எப்போது திருமணம் நடக்கும்?

சந்தான கிருஷ்ணன் 21-4-1980-ல் பிறந்தவர். மிதுன லக்னம், மிதுன ராசி, புனர்பூச நட்சத்திரம். லக்னத்துக்கு 3-ஆமிடத்தில் சனி, செவ்வாய், குரு, ராகு சேர்க்கை. இதில் குரு, செவ்வாய், ராகு என மூன்று கிரகங்களும் ஒரே நட்சத்திரத்தில் நிற்கின்றனர். கிரக யுத்தம் பெறுகின்றனர். இவர் இஷ்ட திருமணம் செய்யலாமா என யோசித்தே காலத்தைக் கடத்திவிட்டார். 26 வயதிற்குள், ஒரு மறுமணப் பெண்ணை விரும்பி, பிறகு தயங்கி விலகியிருப்பார். சனியின் பார்வை சுக்கிரனின்மேல் விழுகிறது. இவரது இந்த நிலைமைக்கு இதுவும் ஒரு காரணம். நடப்பு புதன் தசை. புதன் நீசம். 3-ஆவது நீச தசை விபத்தார தசை எனப்படும். இது 2024, ஜனவரிவரை உள்ளது. அதுவரை சற்று கவனம் தேவை. அடுத்துவரும் கேது தசை இவருக்கு ஒரு இணையைக் கொண்டுவந்து சேர்க்கும். மேற்கண்ட ஜாதகத்தில் 7-ஆம் அதிபதி குருவுடன் ராகு, செவ்வாய், சனி எனும் கொடும் பாவிகள் இணைவிருப்பதால், இந்த ஜாத கருக்கு திருமணமெனும் பிராப்தம் தடைப் படுகிறது. திருமணமென்ற ஒன்றில்லாமல், சேர்ந்துவாழ அமைப்புள்ளது. இதுவும் ஒருவித சந்நியாசி யோக ஜாதகமாகும். மேற்கண்ட ஜாதகம்போல் சுக்கிரன் 12-ல் அமர்ந்து, சனி பார்வையும் பெற்று சயன தோஷம் உள்ளவர்கள், திருவாரூர் அருகே யுள்ள, திருப்பெருவேளூர் என்ற மணக்கால் ஐயம்பேட்டை ஸ்ரீவைகுண்ட நாராயணப் பெருமாளுக்கு 24 நெய் தீபமேற்றி, திருமஞ்சனம் செய்து வழிபட சயன தோஷம் நீங்கும்.

ப் கே. வெங்கட்ராமன், பண்ருட்டி.

என் மூத்த பெண்ணைத் திருமணம் செய்துகொடுத்து ஐந்து ஆண்டுகள் ஆகியும் இதுவரை புத்திர பாக்கியம் கிடைக்கவில்லை. மகள், மருமகன் ஜாதகம் அனுப்பியுள்ளேன். எப்போது புத்திர பாக்கியம் கிடைக்கும்?

மகள் செல்வி 21-11-1996-ல் பிறந்தவர். மகர லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். இவரின் ஜாதகப்படி இவரது கர்ப்பப்பையில் கட்டி இருக்க வாய்ப்புள்ளது. 2023, நவம் பருக்குள் அது சம்பந்தமான ஒரு அறுவை சிகிச்சை செய்யவேண்டியிருக்கும். 2024, நவம்பருக்குப்பின் குழந்தை பாக்கியம் உண்டு. நடப்பு சுக்கிர தசை, சுய புக்தி. மருமகன் ரஞ்சித் 16-10-1991-ல் பிறந்தவர். தனுசு லக்னம், மகர ராசி, உத்திராட நட்சத்தி ரம். இவருடைய ஜாதக அமைப்புப் படி உயிரணுக்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும். அதற்குத் தகுந்த மருத்துவரை ஆலோசித்து மருந்து சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் வாய்ப்புண்டு. நடப்பு ராகு தசையில் சுக்கிர புக்தி 2025, ஜூன்வரை. இதற்குள் குழந்தை பாக்கியம் உண்டு. இருவர் ஜாதகத்திலும் தாமதக் குழந்தைப் பேறுக்கான அமைப்புள்ளது. இவ்விதம் புத்திர பாக்கியம் தாமதம் கொண்டோர் திருப்புல்லாணி சென்று வழிபடவேண்டும்.