Advertisment

உங்கள் கேள்வி ஆர்.மகாலட்சுமி பதில்கள்

/idhalgal/balajothidam/your-question-rmahalakshmi-answers-23

ப் கே. ரவிச்சந்திரன், திண்டுக்கல்.

என் ஜாதகம் அனுப்பியுள்ளேன். எனக்கு செப்டம்பர் 14-ஆம் தேதியன்று சிறு விபத்து நேர்ந்தது. விபத்திற்குக் காரணம் செவ்வாயா ராகுவா? அல்லது கேது விபத்திற்குக் காரணமா? மாத்திரை சாப்பிடுவதை எப்போது நிறுத்தலாம்? என் மனைவி காலமாகிவிட்டார். கடைசிக்காலம் எப்படியிருக்கும்? நான் சிலருக்கு ஜோதிடம் பார்க்கிறேன். கிரகப் பீடையாக இருக்குமோ? சில ஜோதிடர்களின் வாழ்க்கை நன்றாக இல்லை என்கிறார்கள். அது உண்மையா?

Advertisment

நீங்கள் 6-10-1964-ல் பிறந்தவர். ரிஷப லக்னம், துலா ராசி, சித்திரை நட்சத்திரம். நடப்பு புதன் தசையில் கேது புக்தி. இது ஆரம்பித்தவுடன் உங்களுக்கு விபத்து நேர்ந்துள்ளது. இது கேது 8-ல் இருப்பதால் ஏற்பட்ட வினையாகும். மாத்திரை சாப்பிடு வது குறித்து மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளவும். கேது புக்தி 2023, செப்டம்பர் வரை உள்ளது. அதுவரை எங்கும் அடிபடாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். புதன் தசையில் கடைசியாக வரும் சனி புக்தியில் சற்று கவனமாக இருக்கவேண்டும். ஜோதிடம் பார்த்ததால் கிரக பீடையாக இருக்குமா என கேட்டிருக்கிறீர்கள். மேலும் ஜோதிடர்களின் வாழ்வு நன்றாக இல்லை என்கிறார்கள்;

ப் கே. ரவிச்சந்திரன், திண்டுக்கல்.

என் ஜாதகம் அனுப்பியுள்ளேன். எனக்கு செப்டம்பர் 14-ஆம் தேதியன்று சிறு விபத்து நேர்ந்தது. விபத்திற்குக் காரணம் செவ்வாயா ராகுவா? அல்லது கேது விபத்திற்குக் காரணமா? மாத்திரை சாப்பிடுவதை எப்போது நிறுத்தலாம்? என் மனைவி காலமாகிவிட்டார். கடைசிக்காலம் எப்படியிருக்கும்? நான் சிலருக்கு ஜோதிடம் பார்க்கிறேன். கிரகப் பீடையாக இருக்குமோ? சில ஜோதிடர்களின் வாழ்க்கை நன்றாக இல்லை என்கிறார்கள். அது உண்மையா?

Advertisment

நீங்கள் 6-10-1964-ல் பிறந்தவர். ரிஷப லக்னம், துலா ராசி, சித்திரை நட்சத்திரம். நடப்பு புதன் தசையில் கேது புக்தி. இது ஆரம்பித்தவுடன் உங்களுக்கு விபத்து நேர்ந்துள்ளது. இது கேது 8-ல் இருப்பதால் ஏற்பட்ட வினையாகும். மாத்திரை சாப்பிடு வது குறித்து மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளவும். கேது புக்தி 2023, செப்டம்பர் வரை உள்ளது. அதுவரை எங்கும் அடிபடாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். புதன் தசையில் கடைசியாக வரும் சனி புக்தியில் சற்று கவனமாக இருக்கவேண்டும். ஜோதிடம் பார்த்ததால் கிரக பீடையாக இருக்குமா என கேட்டிருக்கிறீர்கள். மேலும் ஜோதிடர்களின் வாழ்வு நன்றாக இல்லை என்கிறார்கள்; உண்மையா எனவும் கேட்டிருக்கிறீர்கள். தெய்வம், கிரகங்களைப் பணிந்து, பயந்து வாழ்ந்தால் எந்த பீடையும் ஏற்படாது. பணம் மட்டுமே குறிக்கோளாக இருப்பின், வாழ்க்கையின் எதிர்மறை நிகழ்வை சந்திக்கவேண்டியிருக்கும். எல்லாம் சரிதான். ஜோதிடம் தெரிந்தவராக இருந்தும், அம்சம், தசா இருப்பு என எதுவும் எழுதாமல் அனுப்பியிருக்கிறீர்களே- இது எவ்வித நியாயம்?

Advertisment

ப் திருவாசகன்.

எனக்குத் திருமணம் எப்போது நடக்கும்? எதிர்கால வாழ்க்கை பற்றிக் கூறவும்.

நீங்கள் 26-3-1989-ல் பிறந்தவர். ரிஷப லக்னம், துலா ராசி, விசாக நட்சத்திரம். நடப்பு புதன் தசை. இதில் கேது புக்தி 2023, செப்டம்பர் வரை. பிறகு வரும் சுக்கிர புக்தியில் திருமணம் நடக்கும். இந்த புதன் தசை நீசத்திலிருந்து நடக்கிறது. எனினும் உச்ச சுக்கிர சம்பந்தம், நீசபங்கம் கொடுத்துள்ளது. எனவே எல்லா விஷயங்களும், முதலில் தடங்கல் ஏற்பட்டு பின் நல்லவிதமாக நடக்கும். இவ்விதம் புதன் பாதிப்படைந்து, அதன் தசை நடப்பவர்கள். மதுரை சிம்மக்கல் ஆதி சொக்கநாதரை வணங்கவேண்டும். மேலும் அருகிலுள்ள கோவிலில் விஷ்ணுவை வணங்கவும். புதன் கிரகத்துக்கு முழு பாசிப்பயறை கையளவு வைத்து, புதன்கிழமைதோறும் வணங்கவேண்டும்.

ப் ஆனந்தகிரி.

அம்மா, என் ஜாதகத்தை அனுப்பியுள்ளேன். மூன்றுலட்சம் கடன் உள்ளது. தொழிலில் நஷ்டம். தோல் நோயும், சிறுநீர்த் தொற்றுநோயும் உள்ளது. என் சங்கடங்கள் எப்போது சரியாகும்?

நீங்கள் 15-5-1985-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், மீன ராசி. உத்திரட்டாதி நட்சத்திரம். ஆரோக்கிய ஸ்தானாதிபதி குரு நீசம். நடப்பு சுக்கிர தசை. சுக்கிரன் விரயமாதிபதியாவார். இந்த சுக்கிரன் உங்களின் விரயாதிபதியாகி, 5-ல் உச்சமாகி தசை நடத்துவதால், உங்களுக்கு ஏதோ ஒருவகை செலவு, அலைச்சல் இருந்துகொண்டே இருக்கும். சனி உங்களின் மீன ராசிக்கு விரய சனியாக வரும்போது, இன்னும் அலைச்சல், செலவு அதிகமாகும். இப்போது சுக்கிர தசையில் ராகு புக்தி. இது 2024, அக்டோபர்வரை இருக்கும். அதுவரை நோய்த் தாக்கம் இருந்துகொண்டுதான் இருக்கும். அதன்பிறகு ஓரளவு சமாளித்துவிடுவீர்கள். இந்த ராகு புக்தியில் பூர்வீகம் சம்பந்தமானஏதோவொன்றை விற்றுக் கடனை அடைத்துவிடுவீர்கள். இவ்விதம் தொடர்ந்து துன்பங்களுடன் அல்லாடுகிறவர்கள் சதுர்த்தி திதியில் விநாயகருக்கு. அறுகம்புல் மாலை சாற்றி வழிபட துன்பங்கள் தொலையும். தன்வந்திரி பகவானை வழிபட நோய் தாக்கம் தீரும்.

aa

ப் ஜி. நிர்மலாதேவி, நாகப்பட்டினம்.

எனது மகன் ஜி. விஜயராஜின் திருமணம் எப்போது நடக்கும்? திருமணம் நடக்க என்ன செய்ய வேண்டும்?

மகன் 16-6-1987-ல் பிறந்தவர். கன்னி லக்னம், மகர ராசி, அவிட்ட நட்சத்திரம். லக்னத் தில் கேது- 7-ல் ராகு- நாகதோஷம். மேலும் 10-ஆமிடத்தில் மாங்கல்ய அதிபதியும், விரயாதிபதியும் சேர்க்கை. திருமணம் தாமதமாவது ஒருவகையில் நல்லதுதான். சனி, சந்திரன் இணைவு புனர்பூ யோகம் கொடுக்கிறது. திருமணத்திற்குமுன் தாலிதானம் அவசியம். உங்கள் உறவில் நன்கு தெரிந்த பெண் அமைவார். மகர ராசிக்கு ஏழரைச்சனி நடக்கிறது. நடப்பு குரு தசையில் ராகு புக்தி 2024, மார்ச் வரை. இதில் குரு, மேஷத்திற்கு மாறுவதற்குள் அனேகமாக திருமணம் நடந்துவிடும். இவ்விதம் திருமணத்தடை உள்ளவர்கள் கும்பகோணம்- திருமறைக்காடு சென்று வணங்கவும். குலதெய்வத்திற்கு தாலியும், சேலையும், மாலையும் காணிக்கையளிப்பதாக வேண்டிக்கொள்ளவும்.

ப் சி. முருகன், கோவை.

ஏழரைச்சனி எப்படியிருக்கும்?

1-1-1955-ல் பிறந்தவர். ரிஷப லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். நடப்பு செவ்வாய் தசையில் ராகு புக்தி. சற்று தொல்லைதான். அடுத்துவரும் குரு புக்தியும் சுமாரான பலன்தான் கொடுக்கும் ஏனெனில் உச்ச குருவை உச்ச சனி பார்க்கிறார். இதில் மீன ராசிக்கு ஏழûச்சனி ஆரம்பம். இது உங்களுக்கு அனேகமாக 3-ஆம் சுற்று சனியாக இருக்கக்கூடும். எனவே கவனம் தேவை. இவ்விதம் சனி பாதிப்புடையவர்கள் கும்பகோணம், திருவாரூர் அருகிலுள்ள திருநறையூர் மங்கள சனீஸ்வரரை வணங்கவேண்டும், மீன ராசிக்கு ஏழரைச்சனிப் பலன்களை, சனிப்பெயர்ச்சிப் புத்தகம்மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ப் டி. பாலசுகந்தி, அருப்புக்கோட்டை.

என் மூத்த மகனின் கல்வி, திருமணம் பற்றிக் கூறவும்.

மகன் பிரவின் பாலாஜி 7-3-1997-ல் பிறந்த வர். கன்னி லக்னம், கும்ப ராசி, அவிட்ட நட்சத்திரம். கும்ப ராசிக்கு ஏழரைச்சனி நடக்கிறது. தற்போது குரு தசையில் புதன் புக்தி. இது 16-8-2023 வரை இருக்கும். இதில் சற்று கல்வித்தடை, தடுமாற்றம் இருக்கும். பின் 2024 ஆகஸ்ட் மாதம் வரும் சுக்கிர புக்தியில் வெளிநாட்டுப் பயணம் வரும். இவருடைய திருமணம் காதல்- கலப்பு மணமாக அமையும். 27 வயதிற்குப்பின் திருமணமாகும். கல்வித்தடைகள் நீங்க காலை, மாலையில் ஸ்ரீ ஹயக்கிரீவர் ஸ்துதி கூறி வணங்கலாம். வெளிநாடு செல்லும் தடைகள் அகல, சிங்கம்புணரி பிரான்மலை பைரவரை வணங்கவும்.

செல்: 94449 61845

bala231222
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe