Advertisment

உங்கள் கேள்வி ஆர்.மகாலட்சுமி பதில்கள்

/idhalgal/balajothidam/your-question-rmahalakshmi-answers-2

● முத்துக்குமார், திருச்சி.

நிரந்தர வேலை எப்போது கிடைக்கும்?

27-5-1984-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம். லக்னாதிபதி சூரியன் 10-ல் சுக்கிரன், ராகுவுடன். மேலும் தனாதிபதியும், விரயாதிபதியும் சேர்ந்திருக்க, அவர்களை சனி, செவ்வாய் பார்ப்பதால்தான் ஒரு நல்ல வேலை கிடைத்து கைகுளிர சம்பளம் வாங்கினோம் என்று அமையாமல் உள்ளது. இதில் நடப்பு விரயாதிபதி சந்திரன் தசை புதன் புக்தி. இதில் வேலையும் பணமும் கிடைத்து, உடனே கை நழுவியும் போய்விடும். உங்களுக்கு சந்திர தசை சுக்கிர புக்தியில் 2024-க்குப்பிறகு நல்ல நிரந்தர வேலையும், கையில் பணம் நிற்குமளவுக்கு சம்பளமும் கிடைக்கும். நிரந்தர வேலை கிடைக்க, கேரள மாநிலம், பாலக்காடு அருகில், கல்பாத்தி லட்சுமி நாராயணப் பெருமாளை பிரார்த்தனை செய்யவும். முதல் சம்பளத்தில் பெருமாளுக்கு காணிக்கை செலுத்தவும்.

Advertisment

● வெங்கடேசன், மணப்பாறை

எனது திருமணம் தாமதமாகிவருகிறது. எப்போது நடக்கும்?

5-10-1985-ல் பிறந்தவர். மீன லக்னம், மிதுன ராசி, மிருகசீரிட நட்சத்திரம். லக்னாதிபதி குரு நீசம். எனினும் வீடுகொடுத்த சனியின் உச்சத்தால் குரு நீ

● முத்துக்குமார், திருச்சி.

நிரந்தர வேலை எப்போது கிடைக்கும்?

27-5-1984-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம். லக்னாதிபதி சூரியன் 10-ல் சுக்கிரன், ராகுவுடன். மேலும் தனாதிபதியும், விரயாதிபதியும் சேர்ந்திருக்க, அவர்களை சனி, செவ்வாய் பார்ப்பதால்தான் ஒரு நல்ல வேலை கிடைத்து கைகுளிர சம்பளம் வாங்கினோம் என்று அமையாமல் உள்ளது. இதில் நடப்பு விரயாதிபதி சந்திரன் தசை புதன் புக்தி. இதில் வேலையும் பணமும் கிடைத்து, உடனே கை நழுவியும் போய்விடும். உங்களுக்கு சந்திர தசை சுக்கிர புக்தியில் 2024-க்குப்பிறகு நல்ல நிரந்தர வேலையும், கையில் பணம் நிற்குமளவுக்கு சம்பளமும் கிடைக்கும். நிரந்தர வேலை கிடைக்க, கேரள மாநிலம், பாலக்காடு அருகில், கல்பாத்தி லட்சுமி நாராயணப் பெருமாளை பிரார்த்தனை செய்யவும். முதல் சம்பளத்தில் பெருமாளுக்கு காணிக்கை செலுத்தவும்.

Advertisment

● வெங்கடேசன், மணப்பாறை

எனது திருமணம் தாமதமாகிவருகிறது. எப்போது நடக்கும்?

5-10-1985-ல் பிறந்தவர். மீன லக்னம், மிதுன ராசி, மிருகசீரிட நட்சத்திரம். லக்னாதிபதி குரு நீசம். எனினும் வீடுகொடுத்த சனியின் உச்சத்தால் குரு நீசபங்கம். இவரின் ஜாதகத் தில் 8-ஆமிடத்தில் புதன், கேது, சனி இணைவு. ஒரு காதல் தோல்வியுண்டு. லக்னத்துக்கு 2-ல் ராகு, 8-ல் கேது. நாகதோஷம் உள்ளது. நடப்பு குரு தசையில் ராகு புக்தி. இந்த ராகு புக்திக் குள், 2023, ஜனவரிக்குள் சற்றே கலப்பு சம்பந்தமான பெண் அமைவாள். வேறு இன அல்லது வேறு மொழி பேசும் பெண் அமைவாள். இவ்விதம், திருமணத்தடையுள்ளவர்கள் விழுப்புரம்- வளவனூர் அருகே சிறுவந்தாடு லட்சுமி நாராயணர் கோவிலில் மட்டைத் தேங்காயை வைத்து வழிபட்டு, வீட்டிற்குக் கொண்டுவந்து அதனை தினமும் வழி பட்டால் மூன்று மாதத்திற்குள் திருமணம் நடந்துவிடும்.

Advertisment

aa

● பி.ஆர். விஸ்வநாதன், பண்ருட்டி.

திருமண நாள் குறிக்கும்போது, மணமகன்- மணமகள் பிறப்பு ஜாதகப் படி பாதகாதிபதிகள் தற்போதைய கோட்சாரப்படி நலலவிதமாக இருந்தால் நல்லதா? அல்லது வேறெப்படி பார்க்க வேண்டும்?

திருமண நாள் குறிக்கும்போது, பெண், பையனுக்கு தாராபலமுள்ள நட்சத்திர நாளாகவும், அது சுபத் தன்மையுடையதாக வும் இருக்கவேண்டும். இருவர் நட்சத்திரத் திற்கும் சந்திராஷ்டமம் கூடாது. பஞ்சகம் சரியாக இருக்கவேண்டும். குறித்த லக்னம் சுபத்தன்மையுடன் இருப்பதும், அதன் 7-ஆம் வீடு சுத்தமாகவும் இருக்கவும் வேண்டும். லக்னத்துக்கு 8-ல் செவ்வாய், 6-ல் சுக்கிரன் கூடாது. இத்தனை விஷயத்தையும் கணக் கிட்டு, ஒரு முகூர்த்தம் குறிப்பதே பெரிய விஷயம். இந்த முகூர்த்த நேர நிர்ணயத்தின் போது, தயவுசெய்து பாதகாதிபதி விஷ யத்தை இழுக்கவேண்டாம். ஜாதகப் பலன் சொல்லும்போது மட்டும் பாதகாதிபதி களைக் கணக்கிடவேண்டும். முகூர்த்த நேரத் துக்கு அது தேவையில்லாத விஷயம்.

● ஆனந்தகிரி.

என் ஜாதகம், மனைவி, மகன் ஜாதகம் அனுப்பியுள்ளேன். தற்போது வியா பாரம் தொடங்கவுள்ளேன். யார் ஜாதகம் நன்றாக உள்ளது? யார் பெயரில் வியாபாரம் ஆரம்பிக்கலாம்?

ஆனந்தகிரி 15-5-1985-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். லக்னத்துக்கு 5-ல் சுக்கிரன் உச்சம். 12-ல் சனி உச்சம். அம்சத்தில் புதன் உச்சம். நடப்பு சுக்கிர தசையில் ராகு புக்தி. உங்கள் ஜாதகமே நன்றாக இருப்பதால், உங்கள் பெயரில் புதுத்தொழில் தொடங்குவது அல்லது விரிவாக்கம் செய்வது என ஆரம்பிக்கலாம். உங்கள் மீன ராசியில் குரு சஞ்சரிப் பதால், இப்போதே தொழில் விருத்தியடையும். இவ்விதம் புதுத்தொழில் துவங்கவும், தொழில் விருத் திக்கும் விழுப்புரம்- திருச்சி சாலையிலுள்ள பரிக்கல் லட்சுமி நரசிம்மரை வணங்கவேண்டும். மனைவி சண்முகப் ப்ரியா 11-1-1989-ல் பிறந்தவர். துலா லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்திரம். இவரது கும்ப ராசிக்கு ஏழரைச்சனி நடக்கிறது. மேலும் நடப்பு சனி தசையில் குரு புக்தி. அதனால் தற்போது வியாபார விஷயங்களில் இவர் பெயரை சேர்க்கவேண்டாம். அடுத்து 2024, ஜூலைமாதம் ஆரம்பிக் கும் புதன் தசையின்போது இவர் பெயரை சேர்த்துக் கொள்ளலாம். மகன் யுகன் சாய் 30-7-2020-ல் பிறந்தவன். துலா லக்னம், விருச்சிக ராசி, கேட்டை நடசத்திரம். நடப்பு புதன் தசை. இவன் ஜாதகப்படி தொழில் நன்றாக நடக்கும்.

● பெயர் வெளியிட விரும்பாத வாசகர், சென்னை.

என் ஜாதகத்தின்படி, நான் வணங்கவேண்டிய தெய்வம் பற்றிக் கூறவும்.

13-12-1966-ல் பிறந்தவர். கன்னி லக்னம், தனுசு ராசி, மூல நட்சத்திரம். உங்களுக்கு லக்னத்தில் செவ்வாயும், 2-ல் கேது, 8-ல் ராகு, 6-ல் சனியும் உள்ளனர். உங்கள் 8-ஆமிட ராகுவை சனி, செவ்வாய் இருவரும் பார்க்கின்றனர். நடப்பு ராகு தசை. எனவே, ஜாதகர் மாதந்தோறும் திருவாலங்காடு செல்வது நன்று. இவ்விதம் ஜாதகத்தில் பாவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொண்ட ஜாதகர்கள், வருடம் ஒருமுறை இராமேஸ்வரம் சென்று பரிகாரப் பூஜை செய்துகொள்வது நல்லது.

● எஸ்.ஆர். மணி, திருச்சி.

உணவு சம்பந்தமான தொழில் செய்கிறேன். வேலைக்கு ஆட்களைக்கூட வைத்துக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறேன். கொஞ்சம் பணம் ஏமாந்தும்விட்டேன். எப்போது நல்ல வழி பிறக்கும்?

22-2-1976-ல் பிறந்தவர். தனுசு லக்னம், விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரம். உங்கள் 2-ஆமிடத்தில் புதனும் சுக்கிரனும் உள்ளனர். எனவே உணவு சம்பந்த தொழில் உங்களுக்கு ஏற்புடையதுதான். அதையே தொடர்ந்து நடத்துங்கள். நடப்பு சுக்கிர தசையில் சுக்கிர புக்தி நடந்தது. 2022, ஜூனிலிருந்து சூரிய புக்தி ஆரம்பித்துவிட்டது. எனவே இனிமேல் தொழில் விருத்தியாகும். ஆட்களை வைத்து வேலை வாங்கும் அளவுக்கு உயர்வடைவீர்கள். சுக்கிரன் உங்களுக்கு 6-ஆமதிபதி யும் ஆவதால், அவ்வப்போது கழுத்துவலி அல்லது கணுக்கால் வலி வந்துபோகும். ஹோமியோ பதி போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்ளவும். பண வருவாய் ஏற்பட, திருவீழி மிழலை சென்று படிக்காசு வைத்து வழிபடவும். சிவபெருமானை மகாவிஷ்ணு வும் மகாலட்சுமியும் வழிபட்ட தலம் இதுவாகும்.

செல்: 94449 61845

bala290722
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe