உங்கள் கேள்வி ஆர்.மகாலட்சுமி பதில்கள்

/idhalgal/balajothidam/your-question-rmahalakshmi-answers-16

ப் சேதுராமன், தூத்துக்குடி.

தொழிலில் நிறைய பிரச்சினைகள் உள்ளன. அது எப்போது தீரும்?

20-4-1966-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம். நடப்பு ராகு தசையில் சனி புக்தி. ராகு 10-ஆமிடம் எனும் தொழில் ஸ்தானத்திலிருந்து தசை நடத்துகிறார். இப்போது தொழிலில் பிரச்சினை வராம லிருந்தால்தான் அதிசயம். ராகு தசை, சனி புக்தி 2023, செப்டம்பர்வரை. அதுவரை சற்று தொல்லைதான். அடுத்து வரும் புதன் புக்தி சற்று சிரமங்களுக்குப்பிறகு நன்மைகளைக் கொடுக்கும். தொழிலில் மேன்மை யடைய விரும்புவோர் மதுரை- திருமோகூர் சக்கரத் தாழ்வரை வழிபடவேண்டும். மேலும் ராகு தசையில் சனி புக்தி நடப்பவர்கள் திருவாலங்காடு சென்று நடராஜரை தரிசிக்கவும். அல்லது உங்கள் ஊரிலுள்ள நடராஜப் பெருமானை வணங்கவும்.

ப் சீனிவாசன், செஞ்சி.

தொழில் மிகவும் நஷ்டத்தில் உள்ளது. எப்போது விடிவுகாலம் பிறக்கும்?

25-9-1976-ல் பிறந்தவர். ரிஷப லக்னம், துலா ராசி, சித்திரை நட்சத்திரம். நடப்பு சனி தசை. இதில் தற்போது சூரிய புக்தி ஆரம்பம். இந்த கால கட்டத்தில் தொழில் சற்று சுமாராகப் போகும். அடுத்துவரும் சந்திர புக்தி நிறைய வேலை வாய்ப்புகள் தரும். உங்களின் 9, 10-க்குடைய

ப் சேதுராமன், தூத்துக்குடி.

தொழிலில் நிறைய பிரச்சினைகள் உள்ளன. அது எப்போது தீரும்?

20-4-1966-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம். நடப்பு ராகு தசையில் சனி புக்தி. ராகு 10-ஆமிடம் எனும் தொழில் ஸ்தானத்திலிருந்து தசை நடத்துகிறார். இப்போது தொழிலில் பிரச்சினை வராம லிருந்தால்தான் அதிசயம். ராகு தசை, சனி புக்தி 2023, செப்டம்பர்வரை. அதுவரை சற்று தொல்லைதான். அடுத்து வரும் புதன் புக்தி சற்று சிரமங்களுக்குப்பிறகு நன்மைகளைக் கொடுக்கும். தொழிலில் மேன்மை யடைய விரும்புவோர் மதுரை- திருமோகூர் சக்கரத் தாழ்வரை வழிபடவேண்டும். மேலும் ராகு தசையில் சனி புக்தி நடப்பவர்கள் திருவாலங்காடு சென்று நடராஜரை தரிசிக்கவும். அல்லது உங்கள் ஊரிலுள்ள நடராஜப் பெருமானை வணங்கவும்.

ப் சீனிவாசன், செஞ்சி.

தொழில் மிகவும் நஷ்டத்தில் உள்ளது. எப்போது விடிவுகாலம் பிறக்கும்?

25-9-1976-ல் பிறந்தவர். ரிஷப லக்னம், துலா ராசி, சித்திரை நட்சத்திரம். நடப்பு சனி தசை. இதில் தற்போது சூரிய புக்தி ஆரம்பம். இந்த கால கட்டத்தில் தொழில் சற்று சுமாராகப் போகும். அடுத்துவரும் சந்திர புக்தி நிறைய வேலை வாய்ப்புகள் தரும். உங்களின் 9, 10-க்குடைய சனி 3-ஆமிடத்தில் உள்ளதால் ஆட்டோமொபைல்ஸ் தொழில் சரியாகவே வரும். இவ்விதம் சனி தசை நடப்பவர்கள் கும்ப கோணம், திரு ஆதனூர் தலத்தில் அமைந் துள்ள ஆஞ்சனேயரை வழிபடவேண்டும்.

ds

ப் சகாயராஜ, தென்காசி.

தொழில் மற்றும் சொத்துப் பிரச்சினை உள்ளது. அது எப்போது தீரும்?

14-2-1981-ல் பிறந்தவர். ரிஷப லக்னம், மிதுன ராசி, மிருகசீரிட நட்சத்திரம். நடப்பு சனி தசையில் கேது புக்தி 2023 வரை உள்ளது. இதில் சற்று சிரமம் இருக்கும். அடுத்துவரும் சுக்கிர புக்தியில் உங்களது தொழில் மேன்மையடையும். அப்போது சொத்துப் பிரச்சினையும் தீரும். மேலும் உங்களது மிதுன ராசிக்கு அஷ்டமச்சனி நடந்துகொண்டுள்ளது. அதுவும் சங்கடங் களுக்கு ஒரு காரணமாகும். சனி, கும்பத்திற்கு மாறியவுடன், மாற்றங்கள் தெரியும். வயதான தொழிலாளருக்கு உதவுவது நல்லது.

ப் கணேசன், சென்னை.

பால்ய ஜோதிடம், விருத்த வைத்தியம் என்று ஏன் கூறுகிறார்கள்?

ஜோதிடம் சம்பந்தப்பட்ட பாடத்தை, கல்வியை சிறு பிராயத்திலேயே கற்க ஆரம் பித்துவிடவேண்டும். அப்போதுதான் ஜாதகங் களைப் பார்த்துப் பார்த்து அதிலேயே ஊறி, ஜோதிட நுணுக்கங்களைக் கற்றுத் தெளிய இயலும். மேலும் பலாபலன்கள் சொல்வது தன்வயப்படும். இதுவே வைத்தியத்திற்கு சற்று வயதாவதுதான் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் திருமணம், குழந்தைப் பிறப்பு சிக்கல் என இவற்றை அறிவதற்கு அனுபவம் தேவை. இதற்கு சற்று வயதாவதுதான் நல்லதாகவும், பொருத்தமாகவும் இருக்கும். எனவேதான் பால்ய ஜோதிடம், விருத்த வைத்தியம் எனக் கூறியிருக்கிறார்கள்.

ப் பாக்கியம், திருவொற்றியூர்.

"அஷ்டமச்சனி அழுதாலும் விடாது' என்கிறார்கள். அஷ்டமச்சனி அவ்வளவு கொடுமையாக இருக்குமா? எந்த ராசிக் காவது விதிவிலக்கு இருக்கிறதா?

ஒரு ராசிக்கு 8-ஆமிடத்தில் சனி சஞ்சரிக் கும்போது அதனை அஷ்டமச்சனி என்பர். இந்த கோட்சார சனி நிஜமாகவே மிகவும் பாடாய்ப்படுத்திவிடுகிறது. சனி யாருக்கும் விதிவிலக்கு தருவதுமில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். ஒரு மனிதனுக்கு, அவனைச் சுற்றியுள்ளவர்களில் யார் நல்லவர்- யார் கெட்டவர் என்பதையெல்லாம் சனி புரிய வைத்துவிடுவார். வாழ்க்கையின் உண்மை களை நிதர்சனமாக, ஓங்கி அறைந்து உரக்க உணரச் செய்வார். எனவே அஷ்டமச்சனி தரும் துன்பங்களை வாழ்க்கைப் பாடம் என்றே எடுத்துக்கொள்ளவேண்டும்.

ப் ராணி, திருச்சி.

எனக்கு அரசு வேலை கிடைக்குமா? எப்போது கிடைக்கும்? நான் தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை பார்க்கிறேன்.

13-7-1982-ல் பிறந்தவர். மேஷ லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். நடப்பு சந்திர தசை. உங்களின் 6-ஆம் அதிபதி புதன் சூரியனுடன் சேர்ந்திருப்பதால், அரசு வேலைக்கு வாய்ப்புண்டு. ஆனால் உடனிருக் கும் ராகு எதிர்மறை வழிகளில் அதனைக் கொடுக்கச் செய்வார். எனவே நடப்பு சந்திர தசை ராகு புக்தியில், 2024-க்குள் அரசு வேலைக்கு வாய்ப்பு வரும். ஆனால் நீங்கள் கொஞ்சம் பணம் செலவழிக்க வேண்டியிருக் கும். இவ்விதம் அரசுப் பணிக்கு ஆசைப் படுவோர் காஞ்சிபுரம், திருப்பு-வனம் வியாக்ரபுரீஸ்வரர் ஆலயத்தில் எழுந் தருளியுள்ள தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.

ப் குமார், மதுரை.

எனக்கு அரசு வேலை நிரந்தரமாகுமா? வேறு தொழில் செய்யலாமா? எனக்கு இசையில் விருப்பம் உள்ளது. அந்தத் துறையில் முன்னேற முடியுமா?

15-3-1978-ல் பிறந்தவர். மீன லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். உங்களுக்கு காலசர்ப்ப தோஷ ஜாதகமாக உள்ளது. லக்னத்தில் சூரியன், கேதுவுடன் உள்ளதால், அரசுப்பணி கிடைத்தாலும், அதில் நிம்மதியிருக்காது. அல்லது அதைவிட்டு விலக நேரிடும். உங்களுக்கு 5-ஆம் அதிபதி சந்திரன் உச்சம். எனவே இசை, கலைத்துறையில் தாரளமாக ஈடுபடுங்கள். பெரிய அளவு மேன்மை, சில தடங்கலுடன் கிடைக்கும். நடப்பு குரு தசையில் சூரிய புக்தி 2023 வரை. அடுத்து வரும் சந்திர புக்தி கலை சம்பந்தமான முன்னேற்றம் தரும். இவ்விதம் கலை சம்பந்த மேன்மை வேண்டுவோர் சுக்கிரனை வழிபடுவது நல்லது. மணக்கால் அய்யம்பேட்டை, வைகுண்டப் பெருமாள் கோவிலில் வேண்டிக்கொள்வது நல்லது. மேலும், மொச்சைப் பயன்பாடும், தானமும் நல்லது.

ப் கல்பனா, திருச்சி.

எனக்கு மணவாழ்வு சரியில்லை. என் எதிர்காலம் என்னாகும்?

26-10-1983-ல் பிறந்தவர். மேஷ லக்னம், மிதுன ராசி, மிருகசீரிட நட்சத்திரம். உங்களின் மணவாழ்வைக் குறிக்கும் 7-ஆம் வீட்டில் சனி உச்சம்; சூரியன் நீசபங்கம். மேலும் கூடவே 6-ஆம் அதிபதி புதனும் உள்ளார். உங்களின் சுக்கிரன், சூரியன் பரிவர்த்தனையாக உள்ளனர். நடப்பு சனி தசையில் புதன் புக்தி 2024, மே மாதம் வரை. இதில் நீங்கள் வழக்குகளை சந்திப்பதும், இடமாற்றமும் பெறுவீர்கள். சொந்த ஊரில் உங்கள் தொழிலைத் தொடர்வீர்கள். 2025-க்குப்பிறகு மறுமண வாய்ப்புண்டு. இவ்விதம் பெண்கள் திருமண வாழ்வில் அல்லல்பட்டுக்கொண்டிருந்தாலும் அல்லது மறுமணத்திற்கு யோசித்துக் கொண்டிருப்ப வர்களும் மயிலாடுதுறை- மாப்படி சுமங்கலி காளியை வணங்கவேண்டும்.

செல்: 94449 61845

bala041122
இதையும் படியுங்கள்
Subscribe