Advertisment

உங்கள் கேள்வி ஆர்.மகாலட்சுமி பதில்கள்

/idhalgal/balajothidam/your-question-rmahalakshmi-answers-14

* கனகவல்-, தேவகோட்டை.

தற்போது கண் பிரச்சினையாகி, கண் சரியாகத் தெரியவில்லை. கணவரை மருத்துவமனையில் சேர்த்திருக்கி றேன். எதிர்காலம் என்னாகும்?

Advertisment

3-9-1956-ல் பிறந்தவர். துலா லக்னம், கடக ராசி, ஆயில்ய நட்சத்திரம். நடப்பு ராகு தசை. ராகு லக்னத்துக்கு 2-ல் இருந்து தசை நடத்துவதால், குடும்பக் கஷ்டமும், கண் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. நடப்பு புதன் புக்தி. புதன் நீச நிலையில் 12-ல் உள்ளார். எனவே வேண்டாத அலைச்சல் கள், விரயம், தங்குமிட பிரச்சினை என பாடாய்ப்படுத்தும். இது 2023, ஜூலை வரை இருக்கும். அடுத்துவரும் கேது புக்தியும் விசேஷமாக சொல்வதற்கில்லை. நீங்கள் உங்கள் பகுதி அரசியல்வாதியை அணுகி, அரசு உதவிபெற முயற்சி செய்யுங்கள். அது ஓரளவிற்குக் கூடிவரும். ராகு தசை நடப்பதால், அருகிலுள்ள மாரியம்மன் போன்று, ஒரு அம்மனை வணங்கவும். முடிந்தால் விளக்கேற்றி வணங்கவும்.

* லதா, மதுரை.

என் மகன் திருமணம் எப்போது நடக்கும்? சொந்தத் தொழில் ஆரம்பிக்க லாமா?

அருண் ராஜ் 3-3-1995-ல் பிறந்தவர். மிதுன லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். இவரின் தொழில் ஸ்தானாதி பதி குரு அம்சத்தில் நீசம

* கனகவல்-, தேவகோட்டை.

தற்போது கண் பிரச்சினையாகி, கண் சரியாகத் தெரியவில்லை. கணவரை மருத்துவமனையில் சேர்த்திருக்கி றேன். எதிர்காலம் என்னாகும்?

Advertisment

3-9-1956-ல் பிறந்தவர். துலா லக்னம், கடக ராசி, ஆயில்ய நட்சத்திரம். நடப்பு ராகு தசை. ராகு லக்னத்துக்கு 2-ல் இருந்து தசை நடத்துவதால், குடும்பக் கஷ்டமும், கண் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. நடப்பு புதன் புக்தி. புதன் நீச நிலையில் 12-ல் உள்ளார். எனவே வேண்டாத அலைச்சல் கள், விரயம், தங்குமிட பிரச்சினை என பாடாய்ப்படுத்தும். இது 2023, ஜூலை வரை இருக்கும். அடுத்துவரும் கேது புக்தியும் விசேஷமாக சொல்வதற்கில்லை. நீங்கள் உங்கள் பகுதி அரசியல்வாதியை அணுகி, அரசு உதவிபெற முயற்சி செய்யுங்கள். அது ஓரளவிற்குக் கூடிவரும். ராகு தசை நடப்பதால், அருகிலுள்ள மாரியம்மன் போன்று, ஒரு அம்மனை வணங்கவும். முடிந்தால் விளக்கேற்றி வணங்கவும்.

* லதா, மதுரை.

என் மகன் திருமணம் எப்போது நடக்கும்? சொந்தத் தொழில் ஆரம்பிக்க லாமா?

அருண் ராஜ் 3-3-1995-ல் பிறந்தவர். மிதுன லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். இவரின் தொழில் ஸ்தானாதி பதி குரு அம்சத்தில் நீசம். எனவே இவர் மாத சம்பளத்திற்கே சென்றுவரட்டும். நடப்பு கேது தசை. இதில் 2022, அக்டோபர்முதல் சந்திர புக்தி ஆரம்பம். இது ஏழு மாதம் நடக்கும். இதற்குள் திருமணம் முடிந்துவிடும். நல்ல வேலை, தொடர்ந்து பணிபுரிவது என இவ்வித விஷயங்களுக்கு பிரதோஷ காலத்தில் நெய்தீபமேற்ற வேண்டும். சிவனை வணங்கி, நந்திகேஸ்வரருக்கு அறுகம்புல் மாலைபோட்டு வணங்கவும்.

aa

Advertisment

* சண்முகப்ரியா, கும்பகோணம்.

அம்மா, வணக்கம். இவ்வளவு காலமும் வாடகை வீட்டில் வசித்து துன்பப்படு கிறேன். எனக்கு சொந்த வீடு பாக்கியம் கிடைக்குமா?

பூர்வீக சொத்திலும் பிரச்சினை இருக்கிறது. அதில் எனக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய பாகம் கிடைக்குமா? தற்போது மிகுந்த சிரமப் பட்டு வெளிநாடு சென்று கடினமான பணிபுரிந்துவருகிறேன். இன்னும் ஓராண்டு நான்கு மாதங்கள் அக்ரிமென்ட் உள்ளது. அது முடிந்து நான் தமிழகம் திரும்பும் போது நான் சொந்தமாக ஒரு குடிசை வீட்டிலாவது படுத்துறங்கும் பாக்கியம் கிடைக்குமா? உங்கள் பதிலை வைத்து என் மனதை நான் தேற்றிக்கொள்வேன்.

16-1-1985-ல் பிறந்தவர். கன்னி லக்னம், விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரம். நடப்பு சுக்கிர தசை. இதில் 2024, செப்டம்பர் மாதத்திற்குப் பின்வரும் சூரிய புக்தியில், அரசு சார்ந்த, சற்று பழைய வீட்டை வாங்க இயலும். புது வீடு வாங்கினால் நிலைக்காது. பழைய வீடு மட்டுமே ஒரளவிற்கு ஆகிவரும். இவ்விதம், சொந்தவீட்டு ஆசை உள்ளவர் கள் சென்னை சிறுவாபுரி முருகன் கோவில் சென்று வழிபடவும்.

* பி. சுசிகரன், ஜோலார்பேட்டை.

இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது விபத்து ஏற்பட்டு குதிக்காலின் மேற்புறமுள்ள தசைநார் அறுந்துவிட்டது. அதனால் நடக்கமுடியவில்லை. அறுவை சிகிச்சை அவசியம் என்கிறார்கள். ஆனால் அது வெற்றிகரமாக நடக்கும் என்று உறுதியாகக் கூறமுடியாது என்றும் சொல் கிறார்கள். உங்கள் பதிலை எதிர்பார்க்கி றேன்.

7-7-1969-ல் பிறந்தவர். ரிஷப லக்னம், மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம். லக்னாதிபதி சுக்கிரன் ஆட்சி. அம்சத்தில் உச்சம் மற்றும் ராசியில் குரு பார்வையில் உள்ளார். சனி நீசமாகி 12-ல் சந்திரனுடன் உள்ளார். நடப்பு ராகு தசையில் சனி புக்தி. எப்போதும் எவருக்கும் ராகு, சனி தசா புக்திகள் விரும்பக் கூடியதல்ல. அதுவும் இந்த ஜாதகருக்கு சனி நீசம் வேறு. நடப்பு சுக்கிரன் அந்தரம்- கண்டிப்பாக ஒரு அறுவை சிகிச்சையைக் கொடுக்கும். சனி 12-ல் இருப்பதால் கால் பாதம் சம்பந்தமான அறுவை சிகிச்சை செய்யவேண்டி வரும். குரு பார்வை தசாநாத ருக்கும், அந்தரநாதருக்கும் இருப்பதால், அறுவை சிகிச்சை நல்லவிதமாகவே நடக்கும். ராகு தசை, சனி புக்தி ஆதலால், பைரவருக்கு, சிவப்புத் துணியில் 27 மிளகு வைத்துக்கட்டி, இலுப்பை எண்ணெய் ஊற்றி, திரிபோட்டு விளக்கேற்றவும். செவ்வாய்க் கிழமை செய்யலாம். ஏதாவது இனிப்பு வைத்து வணங்கி, அங்கேயே விநியோகம் செய்துவிடவும். குலதெய்வத்துக்கு வேண்டிக் கொள்ளவும்.

* ஏ. செல்வராஜ், சீனிவாசநகர், சென்னை-63.

என் மகன் எஸ். லோகேஸ்வரன் ஜாதகம் அனுப்பியுள்ளேன். அவரின் திருமணம், உடல்நலம், தொழில், என்ன தசை நடக்கிறது என்பன பற்றிக் கூறவும்.

எஸ். லோகேஸ்வரன் 16-10-1989-ல் பிறந்த வர். மீன லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். இவருடைய ஜாதகத்தில் சனி, செவ்வாய் பார்வை உள்ளது. மேலும் சனி 7-ஆமிடத்தையும், 7-ஆம் அதிபதியையும் பார்த்து, திருமணத்தைத் தாமதப்படுத்துகி றார். மீன லக்னத்துக்கு 7-ல் செவ்வாய்- கடுமையான தோஷமாகும். இதனால் திருமணம் தாமதமாகிறது. நடப்பு ராகு தசையில் குரு புக்தி. இது 2023, ஆகஸ்ட் வரை உள்ளது. இதற்குள் திருமணமாகிவிடும். இவர் எப்போதும் அறிவுசார்ந்த வேலை செய்வார். எதிர்காலத்தில் சொந்தத் தொழில் ஈடுபாடு வரும். விருப்பத் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. திருமணம் தாமதமாகிறவர்கள், சென்னை அருகிலுள்ள திருவிடந்தை சென்று பரிகார பூஜை செய்யவும். மேலும் இந்த ஜாதகரைப்போல ராகு தசை நடப்பவர்கள், சென்னை திருவேற்காடு கருமாரியம்மனை முடிந்தபோதெல்லாம் தரிசனம் செய்வது நல்லது.

* பி. மோகன், சேந்தமங்கலம்.

அம்மா, ஒருவர் ஜாதகத்தில் 12-ல் கேது இருந்தால் அது அவருக்கு கடைசி பிறவி என்று கூறுகிறார்களே- உண்மையா?

12-ல் கேது இருந்தால் மோட்சம் என்று சில ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் கூற்று 100 சதவிகிதம் உண்மையாக இருக்குமா என்பதில் சற்று நெருடல் உள்ளது. எந்தவொரு பலன் உரைக்கும் போதும், பலவித கோணங்களில் அணுகிக் கூறுதல் சிறப்பு. ஒரேயொரு "பாயின்ட்' பார்த்துவிட்டுப் பலன் கூறக்கூடாது. மற்ற கிரக நிலைகளையும் ஆராயவேண்டும். எது எப்படியிருப்பினும், 12-ல் கேது மோட்சம் தருவார் என்று கூறுவதும், கேட்பதும் சந்தோஷமாக இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே.

செல்: 94449 61845

bala211022
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe