ப் சிவப்பிரகாசம், புதுவை.

எனது நண்பரின் மகன் ஜாதகம் அனுப்பியுள் ளேன் வேலை, திருமணம் பற்றிக் கூறவும்.

குமார் 11-12-1996-ல் பிறந்தவர். மேஷ லக்னம், தனுசு ராசி, மூல நட்சத்திரம். நடப்பு சூரிய தசை. செவ்வாய், சூரியன் பரிவர்த்தனை. சூரிய தசையில் 2022, அக்டோபர் மாதத்திற்குப்பிறகு வெளிநாட்டு சம்பந்த வேலை கிடைக்கும். இவருடைய திருமணம் 2023, செப்டம்பர் மாதத்திற்குப்பிறகு நடக்கும். அப்போது இவருக்கு வெளிநாட்டு வாய்ப்பும் கைகூடும். சூரியன், 8-ல் இருந்து தசை நடத்துவதால் பரிதியப்பர் கோவிலுக்குச் சென்று வழிபடவும். அருகிலுள்ள நவகிரக சூரியனுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் விளக்கேற்றவும். சனி, செவ்வாய் பார்வை உள்ளதால் இஷ்ட திருமணம் நடக்க வாய்ப்புள்ளது

ப் ஆர். பக்கிரிசாமி, தஞ்சாவூர்.

Advertisment

சொந்தமாக வீடு கட்டியுள்ளேன். அதனால் கடன் ஏற்பட்டுள்ளது. அது எப்பொழுது அடை படும்? மிகுந்த கஷ்டத்தில் உள்ளளேன்.

24-4-1950-ல் பிறந்தவர். மிதுன லக்னம், மிதுன ராசி, புனர்பூச நட்சத்திரம். சூரியன், செவ்வாய் பரிவர்த் தனை. நடப்பு சூரிய தசை. இதில் செவ்வாய் புக்தி 2023, மார்ச் வரை. இதற்குள் கடன் அடைந்துவிடும். சூரியன் உச்சநிலையில் தசை நடத்துவதால், இனிமேல், கஷ்டங்கள் காணாமல் போய்விடும். இவ்விதம் சூரிய தசை நடப்பவர்கள், சூரிய நாராயணரை வணங்குவதும், ஞாயிறுதோறும் சூரிய நமஸ்காரம் செய்வதும், தஞ்சை- சூரியனார் கோவில் சென்று வழிபடுவதும் நல்லது.

ப் ஆர். பக்கிரிசாமி; திருவிடைமருதூர்.

Advertisment

எனது இளைய மகன் ஜாதகம் அனுப்பியுள் ளேன். திருமணம் எப்போது நடக்கும்?

இளைய மகன் 29-4-1989-ல் பிறந்தவர். மிதுன லக்னம், மகர ராசி, திருவோண நட்சத்திரம். நாகதோஷம் உள்ளது. சனி, செவ்வாய் பார்வை. 7-ஆம் அதிபதியும் லக்னாதிபதியும் 12-ல் உள்ளனர். நடப்பு குரு தசையில், புதன் புக்தி 2024, ஜனவரிவரை. இதற்குள் இந்த ஜாதகர் தான் விரும்பிய பெண்ணைத் திருமணம் முடித்துக்கொள்ளலாம். ஏதாவது திருமணம். அல்லது கூட்டுத் திருமண நிகழ்ச்சிக்குப் போகும்போது இவர் திடீர் மாப்பிள்ளையாகவும் வாய்ப்புண்டு. இவ்வாறு திருமணம் நடக்க வாய்ப்பிருந்தாலும், 7-ஆம் அதிபதி குருவாக இருப்பதால் பெண் நல்லவிதமாகவே அமைவார். இவ்விதம் குரு தசை நடந்து, திருமணத்திற் காகக் காத்துக்கொண்டிருப்போர், சிவனும் பார்வதியும் சேர்ந்துள்ள திருமணக்கோல சுவாமி, அம்பாளை வணங்கவும்.

f

ப் ஒரு வாசகி, சென்னை.

அம்மா, என் பேத்திக்கு எவ்வளவு வரன் வந்தாலும் எதுவும் அமையவில்லை. காளஹஸ்திக்கும் போய்வந்து விட்டோம். எப்போது திருமணம் நடக்கும்?

பேத்தி கனிமொழி 7-10-1996-ல் பிறந்தவர். துலா லக்னம், கடக ராசி, ஆயில்ய நட்சத்திரம். 7-ஆம் அதிபதி செவ்வாய் நீசபங்கம். சனி 8-ஆமிடமான மாங்கல்ய ஸ்தானத்தைப் பார்ப்பதால் திருமணம் தாமதமாகிறது. நடப்பு சுக்கிர தசை. இதில் சந்திர புக்தி 2024, ஆகஸ்ட் வரை. இதற்குள் திருமண ஏற்பாடுகள் நடந்து, பின் நின்றுபோன ஒரு வரனுடன் இவருக்குத் திருமணம் நடக்கும். ஒரு வெள்ளிக்கிழமையன்று வயதான தம்பதி களுக்கு புடவை, வேஷ்டி, தாம்பூலம், அன்னமிட்டுக் கொடுத்து வணங்கவும். இவ்விதம் செவ்வாய், சந்திரன் சேர்க்கை யுள்ளவர்கள், சென்னிமலை (ஈரோடு மாவட் டம்) முருகரை வணங்கவும். மூலவர் சென்னிமலை முருகன் செவ்வாய் கிரகமாகவே அமர்ந்துள்ளார். இவரை சுற்றிவந்து வணங்குவது நல்லது.

ப் ஜி. கிரிஜா, திருச்சி.

திருமணம் முடிந்த நாளிலிருந்து எந்தவிதப் பலனும் ஏற்படவில்லை. தாயின் வீட்டில்தான் இருக்கிறேன். எனது உடல் நிலை சரியில்லை. எனது கணவருடன் சேர்ந்துவாழ முடியுமா?

நீங்கள் 13-11-1992-ல் பிறந்தவர். மிதுன லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். நடப்பு குரு தசையில் செவ்வாய் புக்தி. உடல் சுகக் கேடும், கணவருடன் பிரிவும் உள்ளது. 2023, ஜூலைவரை இவ்விதம் இருக்கும். பின் திருமண வாழ்வும், உடல் நிலையும் ஓரளவு சரியாகும். திருமண வாழ்வின் நிறைவு 2025, நவம்பர் மாதத்திற்குப்பிறகு சரியாகும். சற்று மென்மையாகப் பேசவும். பெருமாளை வணங்கவும். கணவர் சரவணகுமார் 20-9-1986-ல் பிறந்த வர். கன்னி லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத் திரம். நடப்பு சூரிய தசை, புதன் புக்தி. இவரும் 2023, ஆகஸ்ட் மாதம், மனைவியுடன் அமைதி யாக வாழ ஆரம்பித்துவிடுவார்; கவலை வேண்டாம். ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய பகவானை வணங்கவேண்டும்.

ப் ஜி. கோகுல்நாத், திருச்சி.

என் எதிர்காலம் பற்றிக் கூறவும்.

16-3-1989-ல் பிறந்தவர். கன்னி லக்னம், மிதுன ராசி, புனர்பூச நட்சத்திரம். நடப்பு புதன் தசை. 6-ல் இருந்து புதன் தசை நடத்துவதால், உணவு அலர்ஜி சம்பந்தமான பாதிப்புகள் இருக்கும். இது உங்கள் 45 வயதுவரை இருக்கும். லட்சுமி நரசிம்மரை வணங்கவேண்டும். புதன் தசை முடிவதற்குள் வெளியூர், வெளிநாட்டுக்கு வேலை விஷயமாக செல்லும் வாய்ப்புண்டு.

ப் பெயர் சொல்ல விரும்பாத வாசகர், சென்னை.

நான் வேலையி-ருந்து ஓய்வுபெற்று விட்டேன். அதே அலுவலகத்தில் பணி நீட்டிப்பு கிடைக்குமா? உடல்நிலை பற்றிக்கூறவும்.

1-8-1958-ல் பிறந்தவர். தனுசு லக்னம், கும்ப ராசி, அவிட்ட நடசத்திரம். நடப்பு புதன் தசையில் ராகு புக்தி 2023, செப்டம்பர் வரை நடக்கிறது. அதற்குள் ஒரு பதவி மேன்மைக்கு வாய்ப்புள்ளது. கூடவே உடல்நலக் கேடும் உண்டு. இவ்விதம் புதன் தசை நடப்பவர்கள் திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர்- திருக்குறுங்குடி தலம் சென்று வழிபடலாம்.

ப் டி.சி. குருசாமி, திருச்சி.

எனக்கு ஆயுள் பலம் எப்படி? வாழ்க்கை யில் இனிமேலாவது யோகம் வருமா?

27-7-1959-ல் பிறந்தவர். ரிஷப லக்னம், மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம். சனி 8-ஆமிடத்தில் இருப்பதால் பூரண ஆயுள் பலமுள்ள ஜாதகம் எனலாம். நடப்பு ராகு தசை. இது 67 வயதில் முடியும்வரை ஏதோவொரு விரயம், அலைச்சல், மனக் கஷ்டம் இருந்துகொண்டே இருக்கும். அதற்குப்பிறகு வரும் குரு தசை, ஓரளவு நல்ல பலன்கள் கொடுக்கும். இவ்விதம் வாழ்நாள் முழுவதும் கஷ்டப் படுகிறவர்கள், கோவிலை சுத்தம் செய்வது, குளங்களை முடிந்தமட்டும் சீர்செய்வது, பறவைகள், பசுக்களுக்கு தீவனமளிப்பது என எளிய செயல்களைச் செய்வதன்மூலம், முன்ஜென்ம பாவம் தொலைக்கலாம். இந்த ஜென்ம வாழ்விற்கும் வெளிச்சம் கிடைக்கும்.

ப் டி நெப்போலியன், கும்பகோணம்.

அம்மா, நான் தற்சமயம் ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கி றேன். அதில் தேர்ச்சிபெறமுடியுமா? திரும ணம் பற்றிக் கூறுங்கள். என் பெற்றோ ரின் எதிர்காலம் பற்றிக் கூறவும்.

4-3-1991-ல் பிறந்தவர். கும்ப லக்னம், கன்னி ராசி, சித்திரை நட்சத்திரம். உங்கள் ஜாதகப் படி, ஐ.ஏ.எஸ் என்ற மேல்நிலை அளவிற்கு தேர்ச்சியடைய முடியாது. எனினும் அதற்கு அடுத்த நிலை தேர்ச்சிபெறுவீர்கள். அனேக மாக வெளிநாடு, வனம் சார்ந்த கல்வி தேர்ச்சியாக அமையும். காதல், கலப்புத் திருமணமாக அமையும். உங்கள் பெற்றோரை நீங்கள் நன்கு கவனித்துக் கொண்டாலும், அருகில் இருக்கவில்லையே எனும் குறை இருந்துகொண்டே இருக்கும். உங்கள் தேவாலயத்திற்கு விளக்கு வாங்கிக் கொடுக்கவும்.

செல்: 94449 61845