* க. சித்ரா, புதுச்சேரி.
எனக்கு அரசு வேலை கிடைக்குமா? என்னைத் திருமணம் செய்துதருமாறு என் தாய்மாமன் என் தாயை வற்புறுத்துகிறார். அவர் என்னைவிட 14 வயது மூத்தவர். நீங்கள்தான் வழிகாட்ட வேண்டும்.
29-5-1997-ல் பிறந்தவர். ரிஷப லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்திரம். ராசிக்கு 2-ல் கேது, 8-ல் ராகு. லக்னத் துக்கு 4-ல் செவ்வாய். எனவே நாகதோஷம், செவ்வாய் தோஷம் இரண்டும் உள்ளது. நடப்பு 8-ஆமிட குரு தசை. சற்று சிரமம் இருக்கும்தான். குரு தசையில் சந்திரபுக்தி. இப்போது தனியார் துறையில் வேலைபார்க்க இயலும். 2024-க்குப்பிறகு அரசுப் பணி கிடைக்க வாய்ப்புண்டு. உங்கள் தாய்மாமனுடன் வலுக் கட்டாயமாகத் திருமணம் நடந்தால் அது பிரிவினையில் முடிந்துவிடும்; கவனம் தேவை. 8-ஆமிட தசையாக குரு தசை, செவ்வாய் சாரம் பெற்று நடப்பதால், திருச்செந்தூர் முருகனை வழிபடவேண்டும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Q&A_36.jpg)
* பொன்னி ராமநாதன், திருச்சி-7.
என் மகனுக்குத் திருமணமாகவில்லை. பல கோவில்களுக்கும் சென்று பரிகாரம் செய்துவிட்டோம். இந்தப் பிறவியில் அவனுக்குத் திருமணம் நடக்குமா?
சுந்தர மாணிக்கம் 3-11-1987-ல் பிறந்தவர். கடக லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். ராசியில் ராகு, 7-ல் கேது. மேலும் 7-ஆமிடத்தில் செவ்வாயும் உள்ளது. இந்த 7-ஆமிட செவ்வாய், கேது இணைவு நிறைய பெண் வீட்டாரை அஞ்ச வைத்திருக்கும். இதன்காரணமாக இவருக்குப் பெண் கொடுக்க யோசித்திருப்பார்கள். குடும்ப ஸ்தானாதிபதி சூரியன் நீசம். சனி, தனது பார்வையால் 7-ஆம் வீட்டையும் 2-ஆம் வீட்டையும் பார்த்து திருமணத்தைத் தாமதப்படுத்தியிருக்கிறார். இதற்கிடையில் ஒரு காதல் தோல்வியும் இருந்திருக்கும். எந்தவொரு ஜாதகத்திலும் லக்னாதிபதி யும், 7-ஆம் அதிபதியும் சேர்க்கைபெறுவது அவசியம். அப்போதுதான் திருமணமென்ற ஒன்று நடக்கும். இந்த ஜாதகத்தில் லக்னாதி பதி சந்திரன், 7-ஆம் அதிபதி சனியின் சாரத்தில் நிற்கிறார். எனவே தாமதத் திருமணம் கண்டிப்பாக உண்டு. நடப்பு சுக்கிர தசை 2022, மார்ச் மாதம் ஆரம்பித்துள்ளது. இதில் 2023, மார்ச் அல்லது 2024, மே மாதம் ஆகிய இரண்டு காலகட்டத்தில் ஏதாவதொன்றில் கண்டிப்பாகத் திருமணம் நடக்கும். வரும் பெண் கொஞ்சம் இனப் பிரிவு மாறிவருவார். சுமார் நிறமாக அமைவார். குலதெய்வத்துக்கு நன்கு வேண்டிக் கொள்ளவும்.
* பார்த்திபன், டி. செட்டியூர்.
சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டம். அரசு வேலை கிட்டுமா? சினிமா துறையில் நுழையலாமா?
13-7-1984-ல் பிறந்தவர். கும்ப லக்னம், மகர ராசி, உத்திராட நட்சத்திரம். உங்கள் ஜாதகத்தில் சனி உச்சம். அவர் லக்னாதிபதி மட்டுமல்ல; விரயாதிபதியுமாவார். உங்கள் 6-ஆம் அதிபதி சந்திரன் 12-ல் மறைவு. இதனால் எந்த வேலையும் உருப்படியாக நிலைக்காது. கடந்த 18 வருடமாக நடந்த ராகு தசை உங்களை மிகவும் கஷ்டப்படுத்தியிருக்கும். நடப்பு குரு தசை 2022, மார்ச்சிலிருந்து ஆரம்பம். குரு தசை குரு புக்தி இரண்டு வருடம் நடக்கும். இதில் நிறைய வேலை கிடைத்து, அத்தனையிலும் மாறிவிடும் சூழ்நிலை உருவாகும். அதன்பின் வரும் புக்திகள் அனுகூலமாக அமையும். நிறைய செலவு செய்தால், அரசு வேலை கிடைக்கும். கலைத்துறையில் நுழைய முடியுமே தவிர, அதைவைத்து காசு சம்பாதிக்க இயலாது. நடப்பு குரு தசை நல்ல பலன்தர ஏதேனும் சித்தரை வணங்கவும். இவ்விதம் வேலைத் தரக்கூடிய ஸ்தானாதி பதி சந்திரனாக அமைந்து, அவர் 12 எனும் விரயத்தில் அமைந்தவர்கள் பௌர்ணமி விரதமிருக்கவேண்டும். முடிந்தால் கிரிவலம் செல்லுங்கள். வாழ்வில் ஏதோவொரு வேலையில் நிரந்தரமாக அமைய இயலும்.
* வெ. பாபுகிருஷ்ணன், நெய்வேலி.
என்.எல்.சி-யில் நடத்திவந்த கடை, நிர்வாகத்தால் மூடப்பட்டது. வேறு கடை கிடைக்குமா? எப்போது? எனது மகன் நிஷாந்த் வெளிநாட்டில் பணி செய்கிறார். அங்கேயே தொடரலாமா? இங்கு அரசுப் பணி கிடைக்குமா? எப்போது திருமணம் நடக்கும்?
25-8-1973-ல் பிறந்தவர். தனுசு லக்னம், கடக ராசி, புனர்பூச நட்சத்திரம். உங்கள் தொழில் அதிபதி புதன் 9-ல். 10-ஆமிடத்தில் சுக்கிரன் நீசபங்கம். நடப்பு சுக்கிர தசை. இதில் இப்போது சூரிய புக்தி ஆரம்பித்துள்ளது. இப்போது மறுபடியும் கடை நிறக்கும் வாய்ப்பு வரும். இதன் பொருட்டு கொஞ்சம் அன்பளிப்புகள் கொடுக்கவேண்டியிருக்கும். ஆனாலும் பழைய கடையை இன்னும் சற்று குறுகலான இடத்தில் கொடுப்பார்கள். எனினும் வருமானம் வரும். கடன் தொல்லை நீங்கும். இவ்விதம் கடைபோட்டு வியாபாரம் நன்கு நடக்க விரும்புபவர்கள், திருவீழிமிழலை ஆலயத்தில் வழிபட்டு, அருகேயுள்ள ஐயம்பேட்டை செட்டியப்பரையும், படியளந்த நாயகியையும் வழிபடவேண்டும். மகன் நிஷாந்த் 7-4-1996-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரம். இவருக்கு லக்னத்துக்கு 2-ல் ராகு, 8-ல் கேது. மேலும் 8-ல் செவ்வாய். எனவே நாகதோஷம், செவ்வாய் தோஷம் உள்ளது. இவருக்கு எப்போதும் வெளிநாட்டுப் பணப்புழக்கம் இருக்கும். இங்கு வந்தாலும் அரசுப்பணி கிடைக்க வாய்ப்பில்லை. இவர் வெளிநாட்டில்தான் இருப்பார். நடப்பு புதன் தசையில் குரு புக்தி. அடுத்து 2024-ல் ஆரம்பிக்கும் சனி புக்தியில் திருமணம் நடக்கும். அனேகமாக காதல், கலப்புத் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. வெளிநாட்டில் வாழ்பவர்களின் வாழ்வு மேன்மைபெற, விநாயகரையும் ஆஞ்சனேயரையும் வழிபடுவது நல்லது.
* சரநாராயணன், கடலூர்.
பெற்றோருக்கு வீட்டிலேயே மருத்துவம் பார்க்கவேண்டிய நிலை. திருமணம் எப்போது நடக்கும். தாய்க்கு மனநிலை சரியாகுமா? சொந்தவீடு எப்போது அமையுமா?
நீங்கள் 28-1-1993-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். லக்னத்தில் ராகு, 7-ல் கேது, 8-ல் செவ்வாய். உங்களுடைய தாய்- தந்தையர் சம்பந்த அமைப்புப்படி, அவர்களால் நன்மைசெய்ய முடியாத காலகட்டம். நடப்பு கேது தசை. அது வருகிற வரன்களைப் பிரித்துவிடுகிறது. எனினும் 2023, ஜூன் மாதத்திற்குப்பிறகு வரும் குரு புக்தியில் வரன் அமையும். அவர் உங்களுக்கு மிகத் தெரிந்தவராக இருப்பார். சற்று இஷ்ட திருமணம்போல அமையும். சொந்த வீடு அமைவது கஷ்டம். 2026, ஜூன் வரை கேது தசை நடக்கும். அதுவரையில் பெற்றோர் உடல்நலன் முன்னேற்றம் சற்று மெதுவாகத்தான் இருக்கும். இவ்விதம் ஒரே குடும்பத்தில் நிறைய பிரச்சினைகள் உடையவர்கள், அனைத்து கிரகங்களையும் வணங்குவது சாலச் சிறந்தது. கும்பகோணம்- திருவாரூர் பாதையிலுளள் நாச்சியார் கோவில்சென்று, அங்குள்ள கல் கருடனை வழிபட, அனைத்து தீமைகளும் அகன்று வேண்டுவது நிறைவேறும். இதனால் அனைத்து கிரகங்களையும் வணங்கிய பலனுண்டு.
செல்: 94449 61845
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-09/Q&A-t_3.jpg)