Advertisment

உங்கள் கேள்வி ஆர்.மகாலட்சுமி பதில்கள்

/idhalgal/balajothidam/your-question-rmahalakshmi-answers-11

* எஸ். சுஜாதா, திருப்பூர்.

எனது மகள் மருத்துவம் படிக்கவேண்டு மென்று ஆசைப்பட்டு முயற்சி செய்தோம். நடக்கவில்லை. இப்போது பயோ டெக்னா லஜி படிக்கிறாள். மீண்டும் அடுத்த வருடம் மருத்துவப் படிப்புக்கு முயற்சி செய்ய லாமா? என் மகளுக்கு டாக்டர் யோகம் உண்டா? என் தோழியின் மகளுக்கு தாங்கள் கூறியதுதான் நடந்தது. என் மகளின் எதிர்காலம் எப்படியிருக்கும்?

Advertisment

மகள் ரிஷப லக்னம், பூராட நட்சத்திரம், தனுசு ராசி. 10-க்குடைய சனி 12-ல் நீசம். சனி, செவ்வாய் பரிவர்த்தனை. 2019 ஜனவரி முதல் சந்திர தசை ஆரம்பம். இது சில ஏமாற்றம், இழப்புகளை ஏற்படுத்தலாம். இருந்தாலும் "தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன

* எஸ். சுஜாதா, திருப்பூர்.

எனது மகள் மருத்துவம் படிக்கவேண்டு மென்று ஆசைப்பட்டு முயற்சி செய்தோம். நடக்கவில்லை. இப்போது பயோ டெக்னா லஜி படிக்கிறாள். மீண்டும் அடுத்த வருடம் மருத்துவப் படிப்புக்கு முயற்சி செய்ய லாமா? என் மகளுக்கு டாக்டர் யோகம் உண்டா? என் தோழியின் மகளுக்கு தாங்கள் கூறியதுதான் நடந்தது. என் மகளின் எதிர்காலம் எப்படியிருக்கும்?

Advertisment

மகள் ரிஷப லக்னம், பூராட நட்சத்திரம், தனுசு ராசி. 10-க்குடைய சனி 12-ல் நீசம். சனி, செவ்வாய் பரிவர்த்தனை. 2019 ஜனவரி முதல் சந்திர தசை ஆரம்பம். இது சில ஏமாற்றம், இழப்புகளை ஏற்படுத்தலாம். இருந்தாலும் "தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்' என்ற வள்ளுவரின் வாக்குப்படி முயன்றால் மருத்துவம் பயில வாய்ப்பு கிடைக்கும். செவலூர் பூமிநாத சுவாமி கோவிலில் ஒரு திங்கட்கிழமை அல்லது சனிக்கிழமை ருத்ரஹோமம் வளர்த்து 108 சங்காபிஷேக பூஜை செய்துவிட்டு மறுமுயற்சி எடுக்கலாம்.. அதுவரை பயோமெடிக்கல் தொடர்ந்து படிக்கட்டும். சிலர் பி.எஸ்.ஸி முடித்துவிட்டு எம்.பி.பி.எஸ் படிப்பதுண்டு. அப்படி நினைத் துக்கொள்ளவும்.

* செல்லம், குப்பம்.

என் மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்?

மகன் பூராட நட்சத்திரம், தனுசு ராசி, சிம்ம லக்னம். நாக தோஷம், சனி தோஷம், களஸ்திர தோஷம் மூன்றும் உள்ளது. 27 வயது முடிந்து 28 நடக்கிறது. பொறுமை யாகக் காத்திருக்கவும். 30 வயது தொடக்கத் தில் முறையான பரிகாரங்களைச் செய்து கொண்டு பெண்பார்க்க ஆரம்பிக்கலாம்.

aa

Advertisment

* ராஜன், ஆலங்குளம்

ஜோதிடம் கற்றுவருகிறேன். எனக்கு ஜோதிடத் தொழில் சரிவருமா?

உத்திராட நட்சத்திரம், மகர ராசி, மிதுன லக்னம். லக்னத்தில் கேதுவும், ராசியில் ராகுவும் இருப்பதால் ஜோதிடத்தையே தொழிலாகக் கொள்ளலாம். ஆர்வம், விடாமுயற்சி இரண்டும் இருந்தால் எல்லா கலையும் கைகூடும்.

* எம். சுந்தரமூர்த்தி, மதுரை.

ராகு தசையில் புதன் புக்தியில் வீடு, பூமி விற்ற வகையில் வந்த பணம் அனைத்தும் இழப்பாகி விட்டது. அடுத்த தசையாவது மனமகிழ்ச்சியாக இருக் குமா? முதல் மகளுக்கு முதல் திருமணம் ரத்தாகி விட்டது. இரண்டவது திருமணம் சரிவருமா? மனைவியின் ஆயுள், மாங்கல்ய பலம், ஆரோக் கியம் எப்படியிருக்கிறது?

உங்களுக்கு ராகு தசை முடியவேண்டும். அடுத்துவரும் குரு தசை 9-ல் உச்சம். இது மிக யோகமாக அமையும். மகளுக்கு லக்னத்தில் சனி, ராகு, 7-ல் குரு வக்ரம், கேது சம்பந்தம். அதனால் இருமண வாழ்வு என்பது விதி. இப்படிப்பட்ட ஜாதகிக்கு 27 வயதுக்குமேல் திருமணம் செய்திருக்க வேண்டும். முன்னதாக முடித்துவைத்தது தோஷம். மாங்கல்யம் நினைக்கவில்லை. அடுத்த குருப்பெயர்ச்சிக்குப்பிறகு திருமண ஏற்பாடு செய்யவும். மனைவிக்கு ஆயுள், மாங்கல்யம் தீர்க்கம். புதன் தசை ஆரோக் கியக் குறைவை ஏற்படுத்தும். புதன்கிழமை தோறும் பெருமாளையும் தன்வந்திரி பக வானையும் வழிபடவும். மகளுக்கு மறுமணம் சிறப்பாக நடக்க விழுப்புரம் மாவட்டம், திருக் கோவிலூர் அருகில் உள்ள திருவிடையாறு சென்று சுவாமி, அம்மனுக்கு மாலை மாற்றி அதை எடுத்துச்செல்ல வேண்டும்.

* ஆர். நாதன், கடலூர்.

கடந்த மூன்று மாதமாக அடிவயிற்றில் வலி இருந்துகொண்டே இருக்கிறது. மருந்து சாப்பிட்டும் பயனில்லை. ஆபரேஷன் செய்யும் சூழ்நிலை உண்டா?

உங்களுக்கு அட்டமச்சனி வந்துள்ளதால் ஆபரேஷன் செய்யும் சூழ்நிலை அவசியம் உண்டாகும். நல்ல கைராசியான டாக்டரிடம் காண்பிக்கவும். சிதம்பரம் அருகிலுள்ள வைத்தீஸ்வரன் கோவிலுக்கும், தன்வந்திரி பகவானுக்கும் பூஜை செய்யவும்.

bala300922
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe