Advertisment

உங்கள் கேள்வி ஆர்.மகாலட்சுமி பதில்கள்

/idhalgal/balajothidam/your-question-rmahalakshmi-answers-1

● எஸ். சுதா, சுரண்டை.

என் ஜாதகமும் கணவர் ஜாதக மும் அனுப்பியுள்ளேன். என் கணவருக்கு எப்போது நிலையான வேலை அமையும் அல்லது தொழில் செய்யலாமா? சொந்த வீடு அமையும் யோகமுண்டா?

Advertisment

நீங்கள் 27-12-1995-ல் பிறந்தவர். தனுசு லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்திரம். காலசர்ப்ப தோஷ ஜாதகம். லக்னத்தில் செவ்வாய், புதன், சூரியன், குரு என நான்கு கிரகச் சேர்க்கை. கிரகயுத்த ஜாதகம். இதில் செவ்வாயும், புதனும் ஒரே நட்சத்திர பாதத்தில் நின்று அதியுத்தம் பெறுகிறார்கள். உங்கள் வாழ்க்கைப் படியில், ஒரு படி ஏற அது பலபடி சறுக்கலாக அமையும். தற்போது ஏழரைச்சனி. நடப்பு சனி தசையில் புதன் புக்தி ஓடுகிறது. இதில் நீங்கள் உங்கள் தந்தையின் ஏதோவொரு கலையைக் கற்றுக்கொள்வீர்கள். அதன்மூலம் வாழ்க்கையை செம்மைப் படுத்துவீர்கள். ஏழரைச்சனி விலகிய பின் வாழ்க்கையில் வசந்தம் வீசும். உங்கள் ஜாதகப்படி வீடு யோகம் இல்லை. இவ்விதம் ஏழரைச்சனியில் சந்திரனுக்கு 12-ல் விரயச்சனி நடக்கும்போது பைரவருக்கு தேங்காயில் நெய் தீபமும், ஜென்மச்சனி நடக்கும்பேது எலுமிச்சை மூடியில் நல்லெண்ணெய் தீபமும், பாதச்சனி (சந்திரனுக்கு 2-ல்) ஓடும்போது வெண் பூசணியில் தேங்காய் எண்ணெய் தீபமும் ஏற்றி வணங்க ஏழரைச்சனி பாதிப்பு நீங்கும். கணவர் சங்கர் 6-3-1991-ல் பிறந்தவர். தனுசு லக்னம், லக்னத்துக்கு 2-ல் சனி. 8-ல் உச்ச குரு, கேது, சுக்கிரன் உச்சம். புதன் நீசபங்கம். அம்சத்தில் செவ்வாய் நீசம். தற்போது இவருக்கு நீசபங்க புதன் தசை ஓடிக்கொண்டிருக்கிறது. சனியின் பார்வையிலும் புதன் உள்ளார். எனவே, இவருக்கு வேலை சரியாக நிலைக்கவில்லை

● எஸ். சுதா, சுரண்டை.

என் ஜாதகமும் கணவர் ஜாதக மும் அனுப்பியுள்ளேன். என் கணவருக்கு எப்போது நிலையான வேலை அமையும் அல்லது தொழில் செய்யலாமா? சொந்த வீடு அமையும் யோகமுண்டா?

Advertisment

நீங்கள் 27-12-1995-ல் பிறந்தவர். தனுசு லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்திரம். காலசர்ப்ப தோஷ ஜாதகம். லக்னத்தில் செவ்வாய், புதன், சூரியன், குரு என நான்கு கிரகச் சேர்க்கை. கிரகயுத்த ஜாதகம். இதில் செவ்வாயும், புதனும் ஒரே நட்சத்திர பாதத்தில் நின்று அதியுத்தம் பெறுகிறார்கள். உங்கள் வாழ்க்கைப் படியில், ஒரு படி ஏற அது பலபடி சறுக்கலாக அமையும். தற்போது ஏழரைச்சனி. நடப்பு சனி தசையில் புதன் புக்தி ஓடுகிறது. இதில் நீங்கள் உங்கள் தந்தையின் ஏதோவொரு கலையைக் கற்றுக்கொள்வீர்கள். அதன்மூலம் வாழ்க்கையை செம்மைப் படுத்துவீர்கள். ஏழரைச்சனி விலகிய பின் வாழ்க்கையில் வசந்தம் வீசும். உங்கள் ஜாதகப்படி வீடு யோகம் இல்லை. இவ்விதம் ஏழரைச்சனியில் சந்திரனுக்கு 12-ல் விரயச்சனி நடக்கும்போது பைரவருக்கு தேங்காயில் நெய் தீபமும், ஜென்மச்சனி நடக்கும்பேது எலுமிச்சை மூடியில் நல்லெண்ணெய் தீபமும், பாதச்சனி (சந்திரனுக்கு 2-ல்) ஓடும்போது வெண் பூசணியில் தேங்காய் எண்ணெய் தீபமும் ஏற்றி வணங்க ஏழரைச்சனி பாதிப்பு நீங்கும். கணவர் சங்கர் 6-3-1991-ல் பிறந்தவர். தனுசு லக்னம், லக்னத்துக்கு 2-ல் சனி. 8-ல் உச்ச குரு, கேது, சுக்கிரன் உச்சம். புதன் நீசபங்கம். அம்சத்தில் செவ்வாய் நீசம். தற்போது இவருக்கு நீசபங்க புதன் தசை ஓடிக்கொண்டிருக்கிறது. சனியின் பார்வையிலும் புதன் உள்ளார். எனவே, இவருக்கு வேலை சரியாக நிலைக்கவில்லை. நடப்பு புதன் தசையில் குரு புக்தி 2024, மார்ச்வரை இருக்கும். அதற்குள் சொந்த முயற்சியில் ஒரு தொழிலைத் தொடங்கிவிடுவார். முயற்சியின் வெற்றி மெதுவாகத்தான் கிடைக்கும். கேது தசை முடிந்து சுக்கிர தசை வரும்போது இவர் நான்கு பேருக்கு வேலை கொடுக்குமளவுக்கு உயர்ந்து விடுவார். இவர் ஜாதகப்படி வீடு வாங்கும் யோகமுண்டு. இவ்விதம் நீச புதன் தசை நடப்பவர்கள், மதுரை, சிம்மக்கல் ஆதி சொக்கநாதரை புதன்கிழமைகளில் வழிபடுவது நல்லது.

qq

● ரா. மாரிமுத்து, பேராவூரணி.

என் ஜாதகம், மனைவி, மகள் ஜாதகங்களை அனுப்பியுள்ளேன். விவரம் தெரிந்த நாள்முதல் இன்றுவரை போராட்டமான வாழ்க்கைதான். உடல் உழைப்பையே நம்பி வாழும் எனக்கு இனிமேலாவது முன்னேற்றம் ஏற்படுமா? மகளின் எதிர்காலம் எவ்வாறிருக்கும்? வீடுகட்டும் யோகமுள்ளதா?

நீங்கள் 5-5-1964-ல் பிறந்தவர். கன்னி லக்னம், மகர ராசி, அவிட்ட நட்சத்திரம். லக்னாதிபதி புதன் 7-ல் நீச வர்க்கோத்தமம். எந்தவொரு ஜாதகத்துக்கும் லக்னாதிபதி ஓரளவாவது சரியாக இருத்தல் அவசியம். சூரியன் 12-ஆமதிபதியாகி, உச்சமாகி 8-ல் மறைவு. உடன் செவ்வாயும் குருவும் 8-ல் மறைவு. சந்திரன், சனி மற்றும் கேதுவுக்கிடையே சிக்கிக்கொண்டு பாப கர்த்தாரி யோகத்தில் உள்ளார். இதனால் நீங்கள் நினைத்த எந்த வொரு நற்செயலும் நடக்கவியலாமல் கத்தரித்துவிடுகிறது. நடப்பு ஏழரைச்சனி. மேலும் புதன் தசையில் புதன் புக்தி ஆரம்பம். இதில் நீங்கள் அழுகும் பொருட்களான பழம், பூ, காய்கறி வியாபாரம் அல்லது இடிந்த கட்டடங்களில் என வேலை செய்ய இயலும். 4-ஆமதிபதி 8-ல் மறைந்துவிட்டதால், வீடு கட்டும் வாய்ப்பு கைகூடுவது சற்று சிரமம்தான். இவ்விதம் தீராத கஷ்டங்கள் தீர, ஸ்ரீபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபமேற்றி வழிபட, காலத்தினால் தீர்க்கமுடியாத துன்பம் விலகும். மனைவி பரிமளா 22-9-1978-ல் பிறந்த வர். துலா லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். ராசிக் கட்டத்தில் சனி உச்சம், குரு உச்சம், புதன் உச்சம். இவ்விதம் மூன்று கிரகங்கள் உச்சம் பெற்றவரின் கணவர் மிகவும் சிரமப்படுகிறேன் என்று எழுதியுள்ளீர்கள். இது உண்மையல்ல. நடப்பு குரு 10-ஆமிடத்தி-ருந்து தசை நடத்துகிறார். குரு தசையில் சுக்கிர புக்தி. கொஞ்சம் உடல் உபாதைகள் இருக்கக்கூடும். இவரின் ஜாதகப்படி வீடு, வாங்கும் யோக முண்டு. மகள் கற்பக நாயகி 7-11-2008-ல் பிறந்தவர். கடக லக்னம், கன்னி ராசி, ஹஸ்த நட்சத்திரம். லக்னத்துக்கு 2-ல் கேது, 8-ல் ராகு. நாகதோஷம் மற்றும் செவ்வாய் தோஷமுள்ளது. சூரியன் நீசம். சுக்கிரன், புதனுடன் பரிவர்த்தனையால் நீசபங்கம். நடப்பு ராகு தசை 8-ஆமிடத்தி-ருந்து நடக்கிறது. கவனமாக இருக்கவேண்டும். ராகு தசையில் சனி புக்தி 2024, ஏப்ரல்வரை. சனிக்கிழமை தோறும் கருடாழ்வாரை வணங்குதல் சிறப்பு. ஏதோவொருவகையில் படித்து முடித்துவிடுவாள். அரசுவேலை கிடைப்பதில் சிரமம் உண்டு. திருவெண் காடு- புதன் க்ஷேத்திரம் சென்று வணங்க வும்.

● லதா, சென்னை.

எனக்கு உடல்நிலை சரியில்லை. அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்கிறார்கள்.

11-4-1973-ல் பிறந்தவர். கடக லக்னம், கடக ராசி, பூச நட்சத்திரம். ராசியில் சுக்கிரன், செவ்வாய் உச்சம். புதன் நீசபங்கம்; குரு நீசபங்கம். நடப்பு சுக்கிர தசையில் கேது புக்தி. பாதகாதிபதி தசையில் விரயாதிபதி புக்தி. கேது 12-ல் உள்ளார். எனவே மருத்துவமனை செலவு கண்டிப்பாக உண்டு. சுக்கிர தசை 2022, நவம்பருக்குள் முடிகிறது. அதற்குள் மருத்துவமனை சம்பந்த அறுவை சிகிச்சையை முடித்துக்கொள்வது நல்லது. அடுத்துவரும் சூரிய தசை மாரகாதிபதி தசை. எனவே சூரிய தசை ஆரம்பிப்பதற்குள் இந்த வேலைகளை முடித்துவிடவும். உங்கள் ஆயுள் அதிபதி சனி 11-ல் இருப்பதும், எட்டாம் வீட்டைப் பார்ப்பதும் ஆயுள் விருத்தியைக் குறிக்கிறது. ஒருமுறை திருக்கடையூர் சென்று வணங்குவதாகப் பிரார்த்தனை செய்துகொள்ளவும்.

● எம். சித்ரா, கருப்பூர்.

எனக்கு குழந்தை பாக்கியம் எப்போது கிட்டும்?

10-5-1997-ல் பிறந்தவர். தனுசு லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். லக்னாதிபதி குரு நீசபங்கம். சூரியன் உச்சம். செவ்வாய், சூரியன் பரிவர்த்தனை. சனி, கேதுவுடன் ராகு பார்வையில் உள்ளார். மிதுன ராசிக்கு அஷ்டமச்சனி நடந்துகொண்டுள்ளது. நடப்பு சனி தசையில் சனி புக்தி 2024, ஆகஸ்ட்வரை உள்ளது. கணவர் எம். மகேஷ்வரன் 25-2-1997-ல் பிறந்தவர். ரிஷப லக்னம், கன்னி ராசி, ஹஸ்த நட்சத்திரம். ஜாதகத்தில் குரு 9-ல் நீசபங்கம். சனி கேதுவுடன் மற்றும் ராகு, செவ்வாய், சந்திரன் 5-ல் உள்ளனர். இது குழந்தைப் பிறப்பைத் தாமதப்படுத்தும். எனினும் குரு பார்வை இருப்பதால், பரிகாரங்கள்மூலம் குழந்தை பிறக்க வாய்ப்புண்டு. நடப்பு ராகு தசையில் சுக்கிர புக்தி 2025 டிசம்பர் வரை. நீங்கள் செய்யவேண்டிய பரிகாரங்கள்: இராமேஸ்வரம் சென்று புத்திர தோஷம் நீக்கும் யாகங்களைச் செய்யவேண்டும். திருநாகேஸ்வரம் சென்று இருவரும் வணங்கவேண்டும். சமயபுரம் அம்மனுக்கு வேண்டிக்கொள்ளவும். திருக்கருகாவூர் சென்று பிரார்த்தனை செய்துகொள்ளவும். செவ்வாய்க்கிழமைதோறும் இருவரும் முருகரைக் குறித்து விரதமிருக்கவேண்டும். இவ்வாறு இறைபக்தியுடன் இருந்தால் 2025-க்குள் குழந்தை பிறக்கும் வாய்ப்புண்டு. கணவருக்கு பித்ரு தோஷம் உள்ளதால் அதற்கும் பரிகாரம் செய்யவேண்டும்.

● எம். ஐயப்பன், பழைய பேட்டை, திருநெல்வே-.

அரசியலில் முன்னேறுவேனா? திருமணம் நடக்குமா?

15-3-1975-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். லக்னாதிபதி சூரியன் 8-ல் மறைவு. மேலும் 8-ஆம் வீட்டில், குரு, சந்திரன், சுக்கிரன், சூரியன் உள்ளனர். இதில் சுக்கிரன் உச்ச வர்க்கோத்தமம். 8-ஆமிடம் மறைவு ஸ்தானம். அதில் ஒரு உச்ச கிரகம் அமர்ந்தது- ஒரு விளக்கை ஏற்றி குடத் தைப் போட்டுக் கவிழ்த்து வைத்ததுபோல் ஆகிவிட்டது. செவ்வாய் 6-ல் உச்சம். நடப்பு செவ்வாய் தசை. இதில் உங்கள் பகுதிக்கு மட்டுமே தெரிந்த அரசியல்வாதியாவீர்கள். செவ்வாய் தசை சனி புக்தியில் (2023-ல்) நான்கு பேருக்குத் தெரிந்த அரசியல்வாதி ஆகிவிடுவீர்கள். உங்கள் ஜாதகத்தில் சூரியன் மறைவு. எனவே எம்.எல்.ஏ., எம்.பி., ஆவது சற்று சிரமம். ஆனாலும் அவர்களை விடவும் அதிகமாக பணம் சம்பாதித்துவிடுவீர்கள். அது போதுமே. பிறகு திருமணம் பற்றிக் கேட்டிருக்கிறீர்கள். 7, 11-ஆமதிபதிகள் பரிவர்த்தனை. 7-ஆமதிபதி மனைவியையும், 11-ஆமதிபதி இணையையும் குறிக்கும். இரண்டும் பரிவர்த்தனை. இதற்கும்மேல் கூற ஒன்றுமில்லை. சூரியனின் மறைவு தோஷம் நீங்க தஞ்சை அருகிலுள்ள, திருக்கண்டியூர் வீரட்டம் என்னும் தலத்தில் பரிகாரம் செய்துகொள்வது அவசியம்.

செல்: 94449 61845

bala220722
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe