""ஒரு உருவில் பரிபாசையாய உலகில் வரு மக்களுக்கு

அரு உருவில் படலமாக அவராயுள் கால்மெல்லாம்

கரு உருவில் வரைந்த வாழ்க்கை கைரேகை மெய்யேயாகும்

Advertisment

புரி உருவம் புரியாதார்க்குப் பொய்யென தோன்றும் தானே.''

- கமல முனி

பொருள்: இந்த உலகில் எங்கே பிறந் தாலும், தாயின் கருவிலிருக்கும் போதே, குழந்தையின் கைகளில் வரையப்பட்ட, தேவ இரகசிய மொழியே கைரேகை.

Advertisment

அதுவே, கருவறை முதல் கல்லறை வரை யுள்ள வாழ்க்கையைத் தீர்மாணிக்கும்.

வெவ்வேறு தாவரங்களின் இலைகள், வெவ்வேறு வடிவங்களையும், நரம்பு அமைப்பையும் பெற்றிருப்பதுபோல், நம் கைகளின் வடிவமும், கைரேகைஅமைப்பும் மாறுபடுகிறது. வெற்றியைத் தரும் இலையாகிய, வெற்றிலையிலும், ஆண், பெண், அலி எனும் வேறுபாடுகளுண்டு. இலை வளைவு வலப்பக்கம் அதிகமாக இருந்து, அடர் பச்சை நிறத்திலிருந்தால், அது ஆண் வெற்றிலை. இடப்பக்கம் அதிகம் வளைந்து, வெளிர் பச்சை நிறத்திலிருந்தால் அது பெண் வெற்றிலை. இரண்டு பக்கமும் சமவளைவு கொண்ட வெற்றிலை அலி வெற்றிலை. கைரேகை என்பது அவரவர் விதியைக்குறித்து, அவரவர் கைகளில் பிரம்மன் எழுதிய, சுருக்கெழுத்து வடிவமேயாகும். "உன் வாழ்க்கை, உன் கையில்' என்ற பழமொழியே, கைரேகை சாத்திரத்தின் குறியீடு.

விரல்களும் பஞ்சபூதங்களும்

நம்முடைய கட்டை விரல் என்பது நெருப்பையும், ஆட்காட்டி விரல் காற்றையும், நடு விரல் ஆகாயத்தையும், மோதிர விரல் நிலத்தையும், சிறுவிரல் நீரையும் குறிக்கிறது.

கட்டை விரல் (லக்னம்)

ஒருவரின் தனித்தன்மையை துல்லியமாகக் காட்டும் விரல்.

தடிமனான மற்றும் திடமான கட்டைவிரலைக் கொண்டவர் கொடுத்த வாக்குறுதி யைக் காப்பாற்றுவார்.

தட்டையான, மெல்லிய மற்றும் சீரற்ற கட்டைவிரல் கொண்ட வர்கள். பொறுமையற்றவர்களாக, கிடைக்காத இன்பத்தைத் தேடிக்கொண்டிருப்பார்கள்.

நீண்ட கட்டைவிரல் உள்ளவர்கள், கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அவர் களுக்கு நல்ல அதிர்ஷ்டமான வாழ்க்கை அமையும்.

குறுகிய கட்டைவிரல் உள்ளவர்கள் தற்பெருமை பேசுபவர்கள். அதிஷ்டம் குறைவு. வாழ்க்கையில் பல்வேறு தடைகளைக் கடந்தே முன்னேறுவார்கள்.

ஆள்காட்டி விரல் (குரு விரல்)

ஆள்காட்டி விரல், ஒருவரின் விருப்பத் தையும், அதிகாரத்தையும் குறிக்கிறது.

ஆள்காட்டி விரல் நடு விரலின் நீளத்துடன் பொருந்தினால், ஆடம்பர மாகச் செலவு செய்பவர்கள்.

நீண்ட ஆள்காட்டி விரல் உடைய வர்கள் அதிக அதிகாரத்தில், விருப்பம் கொண்டவர்கள். நிர்வாகத்தில் சிறந்தவர்.

குட்டையான ஆள்காட்டி விரல் உடையவர்கள் பொறாமைப்படுபவர்கள். சண்டை, சச்சரவுகளில் சிக்கி கொள்வார்கள்..

நடு விரல் (சனி விரல்)

நடுவிரல் ஒருவரின் விதியைக்குறிக்கிறது. வாழ்க்கையின், வெற்றி, தோல்விகளைத் தெரிவிக்கிறது.

நீண்ட, நேரான மற்றும் வட்டமான விரல்களைக்கொண்டவர்கள் தொழிலில் வெற்றி, குறையாத செல்வம் மற்றும் ஆரோக்கியமான உடலுடன் வாழ்கிறார்கள்.

நடுவிரல் குட்டையாகவும் மெல்லியதாகவும் இருந்தால், கடின உழைப்பாளியாக இருப்பார்.

மோதிர விரலை நோக்கி, நடு விரல் சாய்ந்தால் குடும்பத்தின்மீது அதிக அக்கரை கொண்டவர்.

நடுவிரல் அதிக தடிமனாக இருந்தால், பொறுமையற்றவர்களாகவும், எந்த வேலையையும் நிறைவு செய்யாதவர் களாகவும் இருப்பார்கள்.

மோதிர விரல் (சூரிய விரல்)

இது, ஆளுமையைக் குறிக்கிறது.

மோதிர விரல், நடுவிரலை நோக்கி சாய்ந்தால், தான் செய்யும் எந்த வேலையிலும் முழு ஈடுபாடு கொண்டவர்.

மோதிர விரல், நடுவிரலின் நீளத்துடன் பொருந்தினால், அது, சூதாட்டத்தில் அதிக விருப்பத்தைக் காட்டுகிறது.

மோதிர விரல், நடுவிரலுக்கு சம்மாகவோ, அதைவிட நீளமாகவோ இருந்தால், திட்டமிடுவதில் வல்லவர்கள்..

சுண்டு விரல் (புதன் விரல்)

இது உலக ஞானம், தகவல் தொடர்பு திறன் மற்றும் கலைகளில் ஆர்வம் போன்றவற்றை வெளிப்படுத்துவதாகும்.

சுண்டு விரல் மிகவும் குறுகியதாகவும், வளைந்ததாகவும் இருந்தால், அவருக்கு, புத்திரரால் பிரச் சினையுண்டாகும்.

(தொடரும்)

செல்: 63819 58636