Advertisment

உடலே உன் வீடு (புதிய வாஸ்து சாஸ்திரம்)(2) லால்குடி கோபாலகிருஷ்ணன்

/idhalgal/balajothidam/your-body-your-house-new-vastu-shastra-2-lalgudi-gopalakrishnan

"உள்ளம் பெருங்கோவில்! ஊனுடம்பு ஆலயம்!

வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்!

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவ-ங்கம்!

கள்ளப் புலன் ஐந்தும் காளாமணி விளக்கே.''

-திருமந்திரம்

இடத்திற்கு இடம் காலத்திலும், தூரத்திலும், மாறுபாடு உள்ளது. வேறு நாடுகளுக்கு இன்று விமான பயணத்தைத் தொடங்கி நேற்று சென்றடையும் உண்மைக்கு மாறான நிலையைக் காண்கிறோம். அப்போது நாம் கணிக்கும் காலம் என்பது சரியானதில்லை. சென்னை போன்ற பெரு நகரங்களில் ஒரே நேரத்தில் வெவ்வேறு பகுதிகளில் பிறந்தவர் களுக்கு லக்னம், ஒரே பாகை, கலை, விகலையில் அமையும் வாய்ப்பு உண்டு. ஆனால், அவரவர் வாழ்க்கையில் விதி மாறுபடுகிறது.

Advertisment

vasthu

அட்சரேகை, தீர்க்கரேகை என்ற கற்பனைக் கோடுகளைக்கொண்டு கால -தூரத்தை கணக்கிட வேண்டியுள்ளது. ஒரு இடத்தை (அல்லது) பொருளை தொடர்புபடுத்தாமல் மற

"உள்ளம் பெருங்கோவில்! ஊனுடம்பு ஆலயம்!

வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்!

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவ-ங்கம்!

கள்ளப் புலன் ஐந்தும் காளாமணி விளக்கே.''

-திருமந்திரம்

இடத்திற்கு இடம் காலத்திலும், தூரத்திலும், மாறுபாடு உள்ளது. வேறு நாடுகளுக்கு இன்று விமான பயணத்தைத் தொடங்கி நேற்று சென்றடையும் உண்மைக்கு மாறான நிலையைக் காண்கிறோம். அப்போது நாம் கணிக்கும் காலம் என்பது சரியானதில்லை. சென்னை போன்ற பெரு நகரங்களில் ஒரே நேரத்தில் வெவ்வேறு பகுதிகளில் பிறந்தவர் களுக்கு லக்னம், ஒரே பாகை, கலை, விகலையில் அமையும் வாய்ப்பு உண்டு. ஆனால், அவரவர் வாழ்க்கையில் விதி மாறுபடுகிறது.

Advertisment

vasthu

அட்சரேகை, தீர்க்கரேகை என்ற கற்பனைக் கோடுகளைக்கொண்டு கால -தூரத்தை கணக்கிட வேண்டியுள்ளது. ஒரு இடத்தை (அல்லது) பொருளை தொடர்புபடுத்தாமல் மற்றவற்றைக் கணக்கிட முடியவில்லை. கிரகணம்- ஒரே காலத்தில் எல்லா இடத்திலும் இந்த பூமியில் நிகழ்வதில்லை.

இதுதவிர, பலவித பஞ்சாங்கங்கள் வெவ் வேறு அயனாம்ச, கணிதமுறைகளைக்காட்டி வேறுபடுகின்றன. இந்த நோக்கத்தில் பார்த்தால் பஞ்சாங்க கணிதம் துல்-யமானதாக இல்லை.

பிரசன்ன ஜோதிடம், அங்க லட்சணம், சர ஜோதிடம், கட்டைவிரல் ரேகை, சகுனம், நிமித்தம் ஆகியவற்றைக்கொண்டே ஜாதகரின் லக்னத்தை சரிபார்க்க வேண்டிய கட்டாயம் எழுகிறது.

ஜோதிடத்தை உருவாக்கிய மகான்கள் பெரும்பாலும் துறவிகளாக, இல்லற வாழ்வின் நிகழ்வுகளான திருமணம், வீடுகட்டுதல் போன்ற நிகழ்வுகளில் கவனம் செலுத்தாமல் காடு, மலை, குகைகளில் தனித்தே வாழ்ந்தார்கள்.

ஜோதிடம் எதற்காக, எவ்வாறு உருவாக்கப்பட்டது என்ற உண்மையை உணர்ந்தால் இரகசியம் புரியும். உயிர் மூச்சாகிய இடகலை, பிங்கலை (சந்திரக்கலை - சூரியகலை) ஆகியவற்றை மையமாகக்கொண்டே, காலக் கணிதம் தோன்றியிருக்கவேண்டும். மகான்கள் தங்களின் வாசி- யோகப் பயிற்சிக்காக, அஷ்டாங்க யோகம், அஷ்டமா சித்துக்கள், ரசவாதம், வைத்தி யம், மாந்திரீகம், யாகம், போன்றவற்றிற்கான கால அளவுகளுக்காகவே ஜோதிடத்தை உருவாக்கினார்கள் என்பதே உண்மை பஞ்சபூத தத்துவமும், உயிர்மூச்சு, உடலமைப்பு, உணர்ச்சி, ஜனனம், மரணம் ஆகியவை இந்த பூமிப் பந்தின் எல்லா இடத்தும் ஒரே மாதிரியான உண்மையைக் காட்டுகின்றன. மூச்சுவிடும் வரை, எல்லாரும் சிவம், மூச்சு நின்றால் சவம். சுவாசமே, உயிரோட்டத்தின் அறிகுறி. அதை அடிப்படை யாகக் கொண்டே ஜோதிடம் உருவானது.

சரம் (மூச்சு- வாசி) பார்த்து ஜோதிடம் சொல்லும் கலை நம்நாட்டில் குறைந்துவிட்டது. இதன்பொருள் ஜாதக அமைப்பினைப் பார்த்தால் புரிந்துகொள்ளலாம்.

சராசரியாக, ஒரு நிமிடத்துக்கு 15 மூச்சு வீதம், ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு. ஒரு நாளுக்கு 21,600 மூச்சுக்கள் ஓடுகின்றன. 360 பாகைகளை- கலைகளாக, மாற்றினால், வருவதும், 21,600. (360ல60=21,600) இப்படி மூச்சு ஒரே கதியில் ஓடி விதியை உருவாக்குகிறது. ஒரு நாழிகையான 24 நிமிடங்களில் 360 மூச்சுக்கள் ஓடும். அந்த 360 மூச்சுக்களும் ஜாதகத்தின் 360 பாகைகளையே குறிக்கும். அதற்குள் நவகிரகங்களின் செயலாற்றல் ஒருசுற்று முடிந்துவிடும். அதனாலேயே ஒரு நாழிகைக்கு 24 நிமிடமானது. உலகிலுள்ள ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கால இடைவெளியில் ஜனன ஜாதகத்திற்கு ஏற்றார்போல் இடகலை ஐந்தும் (சுக்கிரன், புதன், குரு, சனி, செவ்வாய்)- பிங்கலை ஐந்தும் (செவ்வாய், சனி, குரு, புதன், சுக்கிரன்) மாறி ஓடும். அவ்வாறு ஓடும் பிராணன்- முக்கிய நாடிகளான, தச- நாடிகளையும், உப- நாடிகளான- 72000 நாடிகளையும் உயிர்ப்பிக்கும்.

இவ்வுலகிற்கும் நமக்குமுள்ள ஒரே அடிப்படைத் தொடர்பு மூச்சுக் காற்று என்பதால் உடல்நலம்- மனம்- விதி போன்றவற்றை அதுவே தீர்மானிக்கிறது. ஜோதிடர்கள், காலையில் துயிலெழுந்ததும், தனது சுவாசத்தை ஆராய்ந்து, அது எந்த நாடியில் போகிறது என்றும், எந்த பஞ்சபூத தத்துவத்தில் செல்கிறது என்பதையும் அறிந்தால், அன்றைய நிகழ்வுகளையறியலாம். நம் மனதில், ஒரு எண்ணம் உதயமாகும் போது, எந்தக் கலையில், (சூரிய/சந்திர) (வலது/ இடது மூக்கு) மூச்சு ஓடுகிறது என்பதையறிந்தால், அந்தக் காரியம் வெற்றி பெறுமா? தோல்வியடையுமா? என்பதையறியலாம்.

மூச்சுக்காற்றின் இரகசியத்தையறிந்தால் மரணத் தையே வெல்லமுடியும் என்பது திருமூலர் வாக்கு.

"காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்கு

கூற்றை உதைக்கும் குறியது வாமே.'

-திருமந்திரம்

செல்: 63819 58636

Advertisment
bala230224
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe