"நாலும் இரு மூன்றும் ஈர் ஐந்தும் ஈர் ஆறும்
கோலின் மேல் நின்ற குறிகள் பதினாறும்
மூலம் கண்டு ஆங்கே முடிந்த முதல் இரண்டும்
காலம் கண்டான் அடி காணலும் ஆமே''.
-திருமந்திரம், ஏழாம் தந்திரம்
பொருள்: நான்கு இதழ்கள்கொண்ட மூலாதாரமும், ஆறு இதழ்கள்கொண்ட சுவாதிட்டானமும், பத்து இதழ்கள் கொண்ட மணிப்பூரகமும், பன்னிரண்டு இதழ்கள் கொண்ட அநாகதமும், சுழுமுனை நாடியின் மேல் நிற்கின்ற இந்த சக்கரங்களாகிய குறிகளோடு பதினாறு இதழ்கள்கொண்ட விசுக்தியும் தாண்டி, துரியத்திற்கு மூலமாக இருக்கின்ற நீலநிற ஜோதியை கண்டு, நெற்றிக்கு நடுவில் புருவ மத்தியில் வினைகள் முடிவதற்கு முதலாக இருக்கின்ற ஆக்ஞா சக்கரத்தில் பிறவிக்கு காரணமாகிய நல்வினை- தீவினை ஆகிய இரண்டும் நீங்கும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vastu_10.jpg)
சூரியன் பகலிலும், சந்திரன் இரவிலும் தோன்றுகிறார்கள். ஆனால், காற்று இரவும் பகலும் இயங்குகிறது. அதனின் இயக்கம் எப்போதேனும் நிற்கிறதா? அதேபோல், ஜனன காலத்திலிருந்து முடிவுவரை, லக்னம் எனும் விதி, ஓயாமல் இயங்குகிறது. அதுவே, வாழ்க்கையில் தென்றலையும் புயலையும் தோற்றுவிக்கிறது. அந்த விதி செல்லும் கதியை அறிந்து, மதியால் வெல்லும்வழியே, ஜோதிடம் எனும் பூரண ஞானம்.
ஒரு உயிர், இந்த பூவுலகில் பிறப்பதற்குமுன் கடவுள் எனும் குயவரால் காலசக்கர சுழற்சியால், நம் உடல் வடிவமைக்கப்படுகிறது. எந்தப் பொருளுக்கும் வடிவமே, அதன் பயன்பாட்டை நிர்ணயிக்கிறது. உடல் வடிவத்தைக்கொண்டு இந்த பிறவியின் நோக்கத்தை அறியலாம். படைக்கப்பட்ட உடல் உறுப்புகளில் மாற்றம் செய்யமுடியாது என்பதால் உடலின் வாஸ்து தோஷம் தீர, அணிகலன்களால் பரிகாரம் தேடலாம்.
அணிகலன்
பண்டைய காலத்திலிருந்தே, பெண்களும் ஆண்களும் உடைகளால் மட்டுமின்றி அணிகலன்களால் தமது உடல்முழுவதையும் அலங்கரித்துக்கொள்ளும் வழக்கம் இருந்துள்ளது. தலை அணிகள், காதணிகள் கழுத்தணிகள், இடையணிகள், கையணிகள், விரலணிகள், காலணிகள், என உடலின், பலபகுதிகளில் அழகுக்காக அணியும் அணிகலன்கள் தோஷம் நீக்கும் படைக் கலனாகவும் விளங்குகிறது.உதாரணத்திற்கு தமிழ்நாட்டிலுள்ள பெண்களிடையே பாம்படம் (தண்டட்டி) எனும் காதணி அணியும் வழக்கம் இருக்கிறது. இந்த காதணி அணிந்தவர்கள் சிறந்த பார்வைத் திறனும், ஆரோக்கியமும் கொண்டவர்களாக திகழ்கிறார்கள். இந்த காதணியால், காதின் அழுத்தப்புள்ளிகள் தூண்டப்படுவதால், பல நோய்கள் விலகுவதாக, அக்கு பிரஷர் வைத்தியம் நிருபிக்கிறது.
மனித உடலில் ஆறு சக்கரங்கள் (சக்தி மையங்கள்) உள்ளன. அந்த மையங்களில், சக்தி ஓட்டம் கெடும்போது, உடலும், மனமும் கெட்டு, பல சோதனைகள் உண்டாகின்றன. சக்தி குறைபாட்டை போக்குவதற்காகவே, அணிகலன்களை அணியும் பழக்கம் வந்தது. நாளடைவில், அவை அழகு சாதனமாக மாறிவிட்டன. மூலாதாரம், சுவாதிஷ்டானம் (நிராகுலம்), மனிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்கினை ஆகிய ஆறுவழி தடங்களைக் கடந்து, துரியம் எனும் சகஸ்ராரத்தில் நிறைவு பெறுகிறது.
சகஸ்ராரத்திற்கான அணிகலன் (குரு)
என்ன நடக்கப்போகிறது என அல்லது எதைச் செய்யவேண்டும் என்று முன் கூட்டியே உணர்கின்ற சக்தி இதிலிருந்துதான் கிடைக்கிறது. (உச்சந்தலையில் அணிவது "பில்லை'.)
ஆக்ஞாவிற்கான அணிகலன் (செவ்வாய்)
இது, அறிவு சங்கல்பம், மனவலிமை ஆகியவற்றின் இருப்பிடம். (நெற்றியில் தொங்கவிடும் "நெற்றி சுட்டி'.)
விசுக்திக்கான அணிகலன் (சந்திரன்)
எண்ணங்களை வெளிப்படுத்துதல், படைப்பாற்றல் ஆகியவை இதன் ஆதிக்கத் துக்கு உட்பட்டவை. (கழுத்தில் "ஆரணி' என ஆபரணம் அணியப்படுவது.)
அனாகதத்திற்கான அணிகலன் (சுக்கிரன்)
அன்பு, பாசம், இரக்கம், சகோதரத்துவம், விசுவாசம், பக்தி ஆகிய அனைத்து நல்லியல்புகளின் இருப்பிடமும் இதுவே. (சங்கிலியோடு - பதக்கத்தை இணைத்து, மார்புவரை அணிவது.)
மணிபூரகத்துக்கான அணி (சூரியன்)
உடலின் மையமாக இதனை கருதலாம். இந்த பகுதியில் இருந்துதான் உடல் இயக்கச் சக்தி உடலெங்கும் செலுத்தப்படுகிறது ("ஒட்டியாணம்' இடையில் அணியப்படும்.)
சுவாதிஸ்டானத்திற்கான அணி (புதன்)
மற்றவர்களின் உணர்ச்சிப் போக்குகளை உணர்கின்ற சக்தியும் இந்த சக்கரத்துக்கு உண்டு.
(இடையில் தளர்வாய் தொங்கும் "மேகலை'.) மூலாதாரத்திற்கான அணி (சனி)
உயிர்வாழ வேண்டும் என்கிற ஆசையும், பிடிவாதமும் இங்கேதான் உற்பத்தி ஆகிறது. (அரை ஞான் கயிறு.)
இந்த அணிகலன்களை அணிவதால், பெண்களின் வாழ்க்கை வளமாக அமையும் என்பதே நம் முன்னோர் கருத்து.
(தொடரும்)
செல்: 63819 58636
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2025-04/vastu-t.jpg)