Advertisment

உடலே உன் வீடு! - புதிய வாஸ்து சாஸ்திரம் (60) -லால்குடி கோபாலகிருஷ்ணன்

/idhalgal/balajothidam/your-body-your-home-new-vastu-shastra-60-lalgudi-gopalakrishnan

"சங்கு சக்கரக்குறி உள தடக்கையில் தாளில்

எங்கும் இத்தனை இலக்கணம் யாவர்க்கும் இல்லை

செங்கண் விற்கரத்து இராமன் அத்திரு நெடுமாலே

இங்கு உதித்தனன் ஈண்டு அறம் நிறுத்துதற்கு இன்னும்''.

-கம்ப இராமாயணம்

பொருள்: இராமனுக்கு, கால்களிலும் சங்கு, சக்கர அடையாளங்கள் உள்ளன. இத்தகைய உயர்ந்த இலக்கணங்களை உடையவர்கள் மிகவும் அரிது. தெய்வீக அம்சம் உடையவரே, இந்த லட்சணங்களுடன் அவதரிப்பார்கள்.

களிமண்ணால் செய்யப்பட்ட யானையின் பதுமையை, யானையல்ல என்றறிந்து, அதை மண்ணாகப் பார்ப்பதுபோல், வாழ்க்கையின் நிகழ்வுகளை, கர்மாவின் விளைவுகளாக பார்க்கும் கலையே, ஜோதிடைக்கலை. கர்மம் விளங்காத வரை, வாழ்வின் மர்மம் விலகாது.

முக லட்சணம்

அங்க லட்சணம் எனப்படும், சாமுத்திரிகா லட்சணத்தினைக் கொண்டு, ஜாதகத்தைக் கணிக்கும் முறையே,

"சங்கு சக்கரக்குறி உள தடக்கையில் தாளில்

எங்கும் இத்தனை இலக்கணம் யாவர்க்கும் இல்லை

செங்கண் விற்கரத்து இராமன் அத்திரு நெடுமாலே

இங்கு உதித்தனன் ஈண்டு அறம் நிறுத்துதற்கு இன்னும்''.

-கம்ப இராமாயணம்

பொருள்: இராமனுக்கு, கால்களிலும் சங்கு, சக்கர அடையாளங்கள் உள்ளன. இத்தகைய உயர்ந்த இலக்கணங்களை உடையவர்கள் மிகவும் அரிது. தெய்வீக அம்சம் உடையவரே, இந்த லட்சணங்களுடன் அவதரிப்பார்கள்.

களிமண்ணால் செய்யப்பட்ட யானையின் பதுமையை, யானையல்ல என்றறிந்து, அதை மண்ணாகப் பார்ப்பதுபோல், வாழ்க்கையின் நிகழ்வுகளை, கர்மாவின் விளைவுகளாக பார்க்கும் கலையே, ஜோதிடைக்கலை. கர்மம் விளங்காத வரை, வாழ்வின் மர்மம் விலகாது.

முக லட்சணம்

அங்க லட்சணம் எனப்படும், சாமுத்திரிகா லட்சணத்தினைக் கொண்டு, ஜாதகத்தைக் கணிக்கும் முறையே, நஷ்ட ஜாதகத்தின், நடைமுறையிலுள்ளது. மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் முகத்திலுள்ள பஞ்ச அங்கங்களைக்கொண்டு, ஜாதகம் கணிக்கலாமென்பதே இதன் அடிப்படை. உதாரணத்திற்கு அடர்ந்த புருவம் உள்ள வர்களுக்கு மகர ராசியில் செவ்வாய் உச்சம் பெற்றிருக்கும். அகலமான புருவம் உள்ளவர்களுக்கு செவ்வாய் மேஷத் தில் (அல்லது) விருச்சிகத்தில் ஆட்சி பெற்றிருக்கும். முடியும் நகங்களும், செவ்வாயின் ஆதிக்கத்திலிருப்பதாலேயே மீசை வீரத்தின் அடையாளமாகக் கருதப் படுகிறது. இதேபோல், உபய ஸ்தானமாகிய காதுகளின் அமைப்பைக்கொண்டு, உபய ஸ்தானாதிபதிகளாகிய, புதன் மற்றும் குருவின் நிலைகளையறியலாம். அங்க லட்சணத்தைக்கொண்டு, அங்க வித்யா முறையில் நஷ்ட ஜாதகம் கணிப்பதே துல்லியமாக அமையும். (நஷ்ட ஜாதகம் - பிறந்த நேரம் தெரியாதவர்களுக்கு ஜாதகம் கணிக் கும் முறை.)

Advertisment

ss

கர்க முனிவர், மூதண்டர், சவணர், மணித்த முனிவர் போன்றோர் நஷ்ட ஜாதகத்தைக் கணிக்க அங்க அடையாளங்களைக் கொண்டு குறிக்கும் பல வழிமுறைகளைக் கையாண்டிருக்கிறார்கள்.

* பெருவிரல் ரேகைகளை எண்ணி அதனுடன் ஒன்றைக் கூட்டி, வரும் தொகையை ஒன்பதால் வகுக்க வரும், ஈவு, சூரியனிருக்கும் ராசியைக் காட்டும்.

Advertisment

அதன் மிகுதியை பன்னிரண்டால் பெருக்கி, வரும் தொகையை, இருபத்தி ஏழால் வகுக்க, சந்திரனிருக்கும் நட்சத்திரத்தை அறியலாம்.

* புருவங்கள் குறுகலாகவும், ஒடுக்கமாயும், ஒரே சீராகவும் இருந்தால் அவர்கள் நன்னடைத்தை உடையவர் களாவும், நேர்மை மிக்கவர்களாவும், நல்லொழுக்கம் மிக்கவர்களாவும் இருப் பார்கள். இவர்களுடைய ஜனன ஜாதகத்தில் செவ்வாய், குருபகவானின் தொடர்பிலிருப்பார்.

* வளைந்த கண்புருவங்கள் மூக்கின் அடிப்பாகம் வரை நெருங்காமல் இருந்தால் அவள் சிறந்த திறமைசாலியாகவும் நுண்ணிய அறிவுள்ளவளாகவும் இருப்பார்கள். இவர்களுடைய ஜனன ஜாதகத்தில் செவ்வாய், புதன் பகவானின் தொடர்பிலிருப்பார் கேது செவ்வாய்.

* இரண்டு புருவங்களுக்கும் மத்தியில் பள்ளம் இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் வறுமை தாண்டவமாடும். இவர்களுடைய ஜனன ஜாதகத்தில் செவ்வாய், கேது பகவானின் தொடர்பிலிருப்பார்.

* இரண்டு புருவங்களும் ஒன்றாக இணைந்திருந்தால் ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். இவர்களுடைய ஜனன ஜாதகத்தில் செவ்வாய், நீசம் அல்லது பகை பெற்றிருப்பார்.

* ஒன்றை ஒன்று தொடாமல் வில்லைப்போல் வளைந்திருந்தால் பெரிய செல்வந்தர்களாக விளங்குவர். இவர் களுடைய ஜனன ஜாதகத்தில், செவ்வாய், தன ஸ்தானாதிபதியுடன் தொடர்பிலிருப்பார்.

*கன்னத்தில் பள்ளம் இருந்தால் பொருள் வளம் பெற்றவராக இருப்பார்கள்.

* தாடையில் பள்ளம் இருந்தால் அவர்களுக்குப் பொதுநல ஈடுபாடு இருக்கும். பதவிகள் தேடிவரும். வாழ்வின் மையப் பகுதியிலிருந்து வருமானம் குவியத் தொடங்கும்.

* பெண்களுக்கு நாக்கு நுனி கூராக இருந்தால் வாக்கு சாதுர்யத்துடன் பிறரை கவரும் வகையில் பேசுபவர்களாக இருப் பார்களாம்.

* நாக்கு கறுத்திருந்தால் திருமண வாழ்க்கை இனிக்காது. ஆனாலும் வாக்கு பலிக்கும் காதுகள்.

* அளவில் சமமானலி மிருதுவான காதுகளுடைய பெண்கள் அதிக புகழை அடைவார்கள்.

* விசாலமானதாகவும் முகத்திற்கு பொருத்தமில்லாத பெரிய காதுகளைக் கொண்ட பெண்கள் சுறுசுறுப்பு குறைந்த வர்கள்.

* குட்டையான கழுத்தடையுடைய பெண்கள் முன்னேற்றத்தில் தடையுண் டாகும்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala110425
இதையும் படியுங்கள்
Subscribe