Advertisment

உடலே உன் வீடு! - புதிய வாஸ்து சாஸ்திரம் (59) -லால்குடி கோபாலகிருஷ்ணன்

/idhalgal/balajothidam/your-body-your-home-new-vastu-shastra-59-lalgudi-gopalakrishnan

"சற்றேர குறைவாக யிருக்குமாகில்

சம்சாரம் தனிலிருந்தே ஞானியாவான்

மற்றவன் நல் நெற்றியிலே வரை நால் கீற்று

வழகு பெரு முன் கழுத்தில் வறை மூன்றாகில்.''

-அங்கக் குறி சாத்திரம்

பொருள்: மனிதர்களுக்கு, காது நீண்டு, அகன்று இருந்தால், செல்வம் நிலைக்கும். ஒருவரின் நெற்றி அகலம், அவருடைய நான்கு விரல் அளவுக்கு மேலிருக்க எல்லா நன்மை களையும் பெற்று இல்லறத்தில் நல்லறம் பேணுவான். அவ்வாறு அமையப்பெறாத வருக்கு இல்லறத்தைவிட துறவறமே இனிக் கும்.

காற்று சாதகமான திசையில் வீசும்வரை கடலோடிகள் காத்திருப்பதில்லை. பாய் மரத்தை மாற்றி பயணத்தை தொடருவார்கள். ஜனன ஜாதகத்தில் சாதகமான தசை அமையப் பெறாதவர்களும் வலிமையான, பாவ அமைப் பைக்கொண்டும், கோட்சார கிரக இயக்கங் களைக் கொண்டும், வெற்றிப் பயணத்தை மேற் கொள

"சற்றேர குறைவாக யிருக்குமாகில்

சம்சாரம் தனிலிருந்தே ஞானியாவான்

மற்றவன் நல் நெற்றியிலே வரை நால் கீற்று

வழகு பெரு முன் கழுத்தில் வறை மூன்றாகில்.''

-அங்கக் குறி சாத்திரம்

பொருள்: மனிதர்களுக்கு, காது நீண்டு, அகன்று இருந்தால், செல்வம் நிலைக்கும். ஒருவரின் நெற்றி அகலம், அவருடைய நான்கு விரல் அளவுக்கு மேலிருக்க எல்லா நன்மை களையும் பெற்று இல்லறத்தில் நல்லறம் பேணுவான். அவ்வாறு அமையப்பெறாத வருக்கு இல்லறத்தைவிட துறவறமே இனிக் கும்.

காற்று சாதகமான திசையில் வீசும்வரை கடலோடிகள் காத்திருப்பதில்லை. பாய் மரத்தை மாற்றி பயணத்தை தொடருவார்கள். ஜனன ஜாதகத்தில் சாதகமான தசை அமையப் பெறாதவர்களும் வலிமையான, பாவ அமைப் பைக்கொண்டும், கோட்சார கிரக இயக்கங் களைக் கொண்டும், வெற்றிப் பயணத்தை மேற் கொள்ளமுடியும் என்பதே ஜோதிடத்தின் அடிப்படை. பெரும்பாலும், எந்த மனிதருக் கும், ஒன்பது கிரகங்களின் தசையும் நடப்ப தில்லை. 120 ஆண்டுகள் வாழ்பவருக்கு மட்டுமே, எல்லா தசையும், புக்திகளும் சாத்திய மாகும். சாதகமான கிரகங்களின் சக்தி தானத்தால், நாம் விரும்பிய இலக்கை அடையலாமென்பதே உண்மை.

Advertisment

sv

அங்க சாத்திரம்

சாமுத்திரிகா சாஸ்திரம், லட்சண விபாகம், குண விபா கம், ரேகா விபாகம், ஆகிய மூன்று பாகங்களைக் கொண் டது. லட்சண விபாகம் என்பது ஒருவரது முக லட்சணம், உடல் அமைப்பு முதலியவற்றைக் கொண்டு அவரது எதிர்காலத்தை எடுத்துச் சொல்வது. குண விபாகம் என்பது நடை, உடை, பாவனைகளைக் கொண்டு அவரது வருங் காலத்தைச் சொல்வதாகும். ரேகா விபாகம் என்பது ஒருவரது தேகத்தில் உள்ள கோடுகள், கைரேகை, சுழிகள், மருக்கள், அடை யாளங்கள் போன்றவற்றைக் கொண்டு அவரது எதிர் காலத்தைக் கணிப்பதாகும்.

அங்க சாத்திரத்தில் முக அமைப்பே முக்கியமானது.

முகமே பஞ்ச பூதங்களும் ஒன்றாக அமைந்த இடமாக உள்ளது. பஞ்ச அங்கங்க ளாகிய, மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்தும் ஒருங்கே அமைந் திருக்கும் இடமாகிய முகமே பிரதானமானது.

ஜோதிட சாஸ்திரத்தின்படி, வலது கண்ணுக்கு சூரியனும், இடது கண்ணுக்கு சந்திரனும் காரகத்துவம் பெற்ற கிரகங்களாக அமைந்துள்ளனர். கண்பார்வைக்கு காரகத்துவம் பெறும் கிரகம் சுக்கிரன்தான். அசுப தொடர்புகள் இன்றி, ஒருவருக்கு சுக்கிரன் லக்னத்திலேயே அமைந்துவிட்டால், அப்படிப்பட்ட வர்களுக்கு களையான முகமும், அழகான கண்களும் அமையும்.

நவகிரகங்களும் நன்றாக இருந்தால் முக அமைப்பு அற்புத மாக இருக்கும். சந்திரன், சுக்கிரன் வலிமையுடன் இருந்தால் பெண்கள் அழகாக இருப்பார்கள். அங்க லட்சணங்கள் நல்ல முறையில் அமையும். மூக்கு, கண்கள், நெற்றி அமைப்பு போன்றவை சாமுத்ரிகா லட்சணத்திற்கு மிக முக்கியம்.

* ஆண்களின் தலையானது உயர்ந்தோ, பருத்தோ இருந்தால் அதிக செல்வம் இருக்குமாம்.

* தலையில் இரட்டை சுழி இருந்தால், விரும்பியது கிடைக் கும். தலையில் உள்ள இரண்டு சுழியும் வலது பக்கமாக இருக் கிறது என்றால், அவர்கள் வாழ்வில் நினைத்த எல்லாவற்றையும் சாதித்து காட்டுபவர்.

* இரண்டு சுழியும் இடப்பக்கம் என்றால், கடினமாக உழைத்து தான் முன்னேறுவார்கள்.

* இரண்டு சுழிகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசை பார்த்து இருந்தால், வாழ்க்கை போராட்டமாக அமையும்.

* அகலமான, எடுப்பான, உயர்ந்த நெற்றி அமைந்திருப் பின் ஞானமும் செல்வமும் உண்டு. நெற்றியில் பல ரேகைகள் இருந்தால், அதிர்ஷ்டம் உண்டாகும்.

* ஆண்களின் கண்கள், விசாலமாக இருந்தால் உலகை ஆள்வான். குறுகிய கண்கள் இருப்பின் அறிவு, ஆற்றல் குறைவாக இருக்கும்.

* அதேபோல் உயரமாய், நீண்டு, கூரிய முனையோடு சிறிய நாசித் துவாரங்கள் கொண்ட மூக்கு உடையவர்கள் பணம், பதவி, புகழ் உடையவர்களாக இருப்பர்.

* அழகான, சிறிய வாய் உடையவர்கள், அறிஞர்களாக பெரும் பதவியில் இருப்பார்கள்.

* நீளமான நாக்கு இருந்தால், சிறந்த பேச்சாளர்களாக இருப்பர்.

* நாக்கு நுனியில் கருப்புப் புள்ளிகள் இருப்பின் சொன்ன சொல் பலிக்கும்.

* காது மேல் செவி அகலமானால் முன் கோபம் இருக்கும்.

காது குறுகியிருந்தாலும் அதிர்ஷடம் உண்டாகும்.

* மேல் செவி உள்ளே மடங்கியிருந்தால், தந்திரமான எண்ணம் கொண்டவர்.

(தொடரும்)

bala040425
இதையும் படியுங்கள்
Subscribe