"விரல்கள் ஒன்றின்மேல் ஒன்றிருக்க
காதலன் வீழ்ந்திடும், அகன்றால் நற்
பொருள் அகன்றிடும், கடைவிரல்
நிலத்திடை பொருந்திடா தெனிற் காதல்
பெருகு கேள்வரை ஒறுத்திடும்,
பெரு விரற்கு அடுத்த மென் விரல் நீளின்
அரிய நன் மணம் ஆற்றுமுன்
பலரோடும் அன்புர புணர்கிற்பாள்.''
-சாமுத்திரிகா லட்சணம்
பொருள்: பெண்களுக்கு கால்விரல்கள், ஒன்றோடு ஒன்று சேர்ந்திருந்தால், விரல்களின் இடைவெளி, அளவுக்கதிகமாக அகண்டு இருந்தால், செல்வம் நிலைக்காது. கடைசி விரல், நிலத்தில் படியாமலிருந்தால், கணவனுடன் விரோதம் உள்ளவள். பெரு விரலுக்கு அடுத்த விரல், மெலிந்து, நீண்டு, நிலத்தில் படியாமலிருந்தால், சிற்றின்பத்தில் அதிக ஆர்வமுடையவள்.
காலம் நதிபோல் ஓடி முடிவில்லாத காலக்கடலில் கலக்கிறது. மறுபடியும் கடலிலிருந்து உருவாகும். நீராவி, மேகமாக மாறி, மழையாக இந்த பூமிக்கு திரும்பி வருவதுபோல், மோக மழையால் மனிதர்கள் மறுபடி, மறுபடி பிறக்கிறார் கள். வாழ்க்கை என்பதே காலப் பயணம்தான். ஜோதிடம் என்னும், காலக் கணிதத்தின்மூலம் வினைப் பயனையறிந்து, செயலாற்றலாமென்பதே உண்மை.
அங்க சாத்திரம்
சாமுத்திரிகா லட்சணம், மனித உடலில் ஒவ்வோர் அங்கமும் எப்படி அமைந்திருக்க வேண்டுமென்று இலக்கணம் வகுத்துள்ளது. சாமுத்திரிகா லட்சணம் என்பது பெண்களையும், ஆண்களையும், அவர்களின் குணங்களையும் எளிதாக அறிந்துகொள்ள ஏதுவாக அமைக்கப்பட்ட ஒரு கலை. திருமணம் போன்ற சுப காரியங்களுக்கு ஆண்- பெண் பொருத்தம் பார்ப்பதற்கும் அவர்களின் மண வாழ்க்கை திருப்திகரமாகவும், மகிழ்ச்சியுடையதாக அமைத்துக் கொள்வதற்கும் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட அற்புதக் கலைதான் சாமுத்திரிகா லட்சணம் நான்கு வகைப் பெண்கள் ஜென்ம நட்சத்திரத்தின் அடிப்படை யில் பெண்களின் குணங்களை, எட்டு விதமாக பகுத்திருக்கிறார்கள். சாமுத்திரிகா லட்சணத்தின் அடிப்படையில் உடலமைப்பைக்கொண்டு நான்குவித பிரிவுகளாக பகுத்துள்ளார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vasthu_61.jpg)
* பத்மினி: இவர்கள் ஜனன ஜாதகத்தில் சந்திரன் அல்லது குரு, உச்சம் அல்லது ஆட்சியில் இருக்கும் அமைப்புடையவர்கள். இந்த வகையான பெண்களில் உயர்ந்த வகையைச் சேர்ந்தவர் கள். கற்பு நெறி தவறாதவளாக வும் கணவனிடம் மாறாத காதல் கொண்டவளாகவும், தெய்வபக்தியுள்ளவளாகவும் இருப்பாள். மென்மையான தேகம் கொண்டவள். இச்சாதிப் பெண்கள் இளம் சந்திரனைப் போன்ற முகமும், மெலிந்த உடலும் கொண்டவர்கள். அனைவரிடமும் அன்பு செலுத்துபவர்களாகவும், வெண்மை நிற உடையையும், வெண்மையான மலரையும் விரும்பி அணிபவர்கள்.
* சித்தினி: இவர்கள் ஜனன ஜாத கத்தில், செவ்வாய் அல்லது சூரியன், உச்சம் அல்லது ஆட்சியில் இருக்கும்.
அற்புதமான அழகும், மிகுந்த அன்பும், தெய்வ பக்தியும் உள்ளவள். நேர்மையும், மன உறுதியும், வாக்கு நாணயமும் உடையவள். எந்தப் பிரச்சினையையும் துணிவுடன் எதிர்கொள்வார். தாமரை மலர் போன்ற கண்களும், கூரிய மூக்கும், பருத்த உதடுகளும், நடுத்தர உயரமும் கொண்டவள். பல வண்ண ஆடைகளை உடுத்துவதிலும், வாசனைத் திரவியங்களை பூசிக்கொள்வதிலும் விருப்பமுடையவர்.
* சங்கினி: இவர்கள் ஜனன ஜாதகத் தில் சுக்கிரன் அல்லது புதன், உச்சம் அல்லது ஆட்சியில் இருக்கும் அமைப்பு டையவர்கள். பேரழகும், நீண்ட விழி களும், நிமிர்ந்த மூக்கும், சங்குக் கழுத்தும், உயரமான உடல்வாகும் கொண்டவள். உடல் முழுவதும் ரோமமும், உஷ்ண மான உடல்வாகும், நீண்ட கூந்தலும் உடையவள். சிகப்பு, கருப்பு வண்ண ஆடைகளை விரும்பியணியும் இச்சாதிப் பெண். மிகுந்த முன்கோபமும், பெரியோரை மதியாத குணமும் கொண்டவள். சிற்றின்பத்தில் அதிக நாட்டம் கொண்டவர்.
* அத்தினி: இவர்கள் ஜனன ஜாதகத் தில் சனிபகவான், உச்சம் அல்லது ஆட்சியில் இருக்கும் அமைப்புடைய வர்கள். அழகு குறைந்தவளாகவும், பருத்த உதடுகள், சிவந்த கண்கள், நீண்ட புருவம், பரட்டை தலை, குட்டையான கழுத்து, தடித்த உருவம், பருத்த தோள்கள், தடித்த குரலோடு இருப்பாள். மரபுமீறி உறவுகொள்வதில் விருப்பமுடையவர். கணவனைப் பிரிந்து வாழ்வார். குடும்ப உறவுகளைப்பற்றி கவலை கொள்ளமாட்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2025-03/vasthu-t_1.jpg)