"ஐந்து நீண் டைந்து நேர்ந்தா றிடம் உயர்ந்தேழ் சிவந்து
முந்து மூன்ற கன்று மூன்று குறுகி மூன்றாழ்ந்திருக்கும்
அந்தமில் குணங்கள் முப்பானிரண்டொடும் அமைந்த மாந்தர்
இந்திரர் திருவி னோங்கி இனிது வீற்றிருப்பார் மாதோ.''
-சாமுந்திரிகா லட்சணம்
பொருள்: முப்பத்திரெண்டு லட்சணம் பொருந்திய உடலமைப்பு உடைய ஆண், இராஜயோகம் உடையவர். ஐந்து இடம் நீண்டிருக்க வேண்டும் (கண், கைகள், கண்ணம், முழங்கால், மூக்கு). ஐந்து இடம் மிருதுவாக இருக்கவேண்டும் (தலை முடி, விரல்கள், நகம், தோல், பற்கள்). ஆறு இடம் உயர்ந்திருக்கவேண்டும் (நெற்றி, தோள், வயிறு, அக்குள், மார்பு, புறங்கை). ஏழு இடம் சிவந்திருக்கவேண்டும் (உள்ளங்கை, உள்ளங்கால், கடைக்கண், அண்ணம், அதரம், உள் நாக்கு, வாய்). மூன்று இடம் விசாலமாக இருக்கவேண்டும். (மார்பு, இடுப்பு, ந
"ஐந்து நீண் டைந்து நேர்ந்தா றிடம் உயர்ந்தேழ் சிவந்து
முந்து மூன்ற கன்று மூன்று குறுகி மூன்றாழ்ந்திருக்கும்
அந்தமில் குணங்கள் முப்பானிரண்டொடும் அமைந்த மாந்தர்
இந்திரர் திருவி னோங்கி இனிது வீற்றிருப்பார் மாதோ.''
-சாமுந்திரிகா லட்சணம்
பொருள்: முப்பத்திரெண்டு லட்சணம் பொருந்திய உடலமைப்பு உடைய ஆண், இராஜயோகம் உடையவர். ஐந்து இடம் நீண்டிருக்க வேண்டும் (கண், கைகள், கண்ணம், முழங்கால், மூக்கு). ஐந்து இடம் மிருதுவாக இருக்கவேண்டும் (தலை முடி, விரல்கள், நகம், தோல், பற்கள்). ஆறு இடம் உயர்ந்திருக்கவேண்டும் (நெற்றி, தோள், வயிறு, அக்குள், மார்பு, புறங்கை). ஏழு இடம் சிவந்திருக்கவேண்டும் (உள்ளங்கை, உள்ளங்கால், கடைக்கண், அண்ணம், அதரம், உள் நாக்கு, வாய்). மூன்று இடம் விசாலமாக இருக்கவேண்டும். (மார்பு, இடுப்பு, நெற்றி). மூன்று இடம் குறுகி இருக்கவேண்டும் (கழுத்து, முழங்காலின் கீழ்பகுதி, இடுப்பு, தொடைகளின் இடைப்பகுதி). மூன்று இடம் தாழ்ந்து இருக்கவேண்டும் (தொப்புள், குய்யம், குரல்வளை). குளிர்காலத்தில் இதமளிக்கும் தீயின் வெப்பம், கோடையில் துன்பத்தையே தரும். அறுசுவை உணவும் காலமாற்றத்தால், வெறுக்கத்தக்கதாக மாறுகிறது. காலமே, நம் தேவைகளையும், வெற்றி- தோல்விகளையும், நிர்ணயிக்கிறது. காலத்தை அறிந்தால், ஞானத்தை (உலகத்தை) வெல்லலாம். இயற்கை நியதிகளின் அடிப்படையில் கால ஞானத்தை எடுத்துரைப்பதே ஜோதிடம்.
ஒரு மனிதனின் உடல் எவ்வாறு அமைகிறதோ அதைக்கொண்டு அவர் ஜனன ஜாதகத்தை அறிந்துகொள்ளமுடியும். ஒருவரின் உடல் உறுப்புகளின் லட்சணத்தைக்கொண்டு அவரது குணநலன்களை விரிவாக அறியலாம் என்பதே சாமுந்திரிகா லட்சணம் எனும் அங்க சாத்திரத்தின் அடிப்படை. திருமணப் பொருத்ததில் ஜென்ம நட்சத்திரத்தைக்கொண்டு, பொருத்தம் பார்பதைப்போல், அங்க லட்சணத்தைக்கொண்டும் பொருத்தம் பார்க்கும் முறையும் உண்டு. எந்த வகை ஆண்கள் எந்த வகைப் பெண்களை மணந்தால் இல்வாழ்க்கை சிறப்புற அமையும் என்று அங்க சாத்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆண்களின் உடல் மற்றும் குணம் சார்ந்த அமைப்பு
சாத்திரங்களில் கூறப்பட்டுள்ள முப்பத்திரெண்டு லட்சணங்களும் அமைந்த ஆண் மகன் அரிதாகவே இருப்பார். ஆனாலும், பொதுவான உடலமைப்பைக்கொண்டு, ஜனன ஜாதகத்தின் கிரக அமைப்புகளை ஆராயமுடியும்.
* உத்தம சாதி ஆண் (முயல்): இவர்கள் ஜனன ஜாதகத்தில் சந்திரன் அல்லது குரு, உச்சம் அல்லது ஆட்சியில் இருக்கும் அமைப்பு உடையவர்கள். அழகான உருண்டை முகமும், சிவந்த கண்களும், நடுத்தர உயரமும், தலையானது உயர்ந்தோ, பருத்தோ இருக்கும். மென்மையான உடல்வாகு உள்ளவராக இருப்பவர். தெய்வபக்தியும், மிகுந்த அன்பும், பெரியோரிடம் மரியாதையும், நல்லொழுக்கமும் கொண்டவர். மனதில் எப்போதும் அமைதியும், கருணையும் உடையவர். குளிர்ந்த உணவையே விரும்புவார்.
* மத்திம சாதி ஆண் (மான்): இவர்கள் ஜனன ஜாதகத்தில் செவ்வாய் அல்லது சூரியன், உச்சம் அல்லது ஆட்சியில் இருக்கும் அமைப்பு உடையவர். அழகிய முகமும், புன்னகை தவழும் உதடுகளும், பரந்த மார்பும், கடின உடல்வாகும் கொண்டவர். சமுதாயத்தில் உயர்ந்த அங்கிகாரமும், அதிகாரமும் உடையவர். தலைமை பொறுப்பை ஏற்கும் தகுதி இருக்கும். தெய்வ நம்பிக்கையுள்ளவர். பெரியோரை பெரிதும் மதிப்பவர். உரிமைக்கு குரல் கொடுப்பவர். கண்டிப்பும், மன உறுதியும் உள்ளவர்.
* அதம சாதி ஆண் (காளை): இவர்கள் ஜனன ஜாதகத்தில் சுக்கிரன் அல்லது புதன், உச்சம் அல்லது ஆட்சியில் இருக்கும் அமைப்பு உடையவர்கள். மலர்ந்த முகம், அகன்ற நெற்றி, நீண்ட நாக்கு, சிவந்த பருத்த மேனி, சிறிய கால்கள் கொண்டவர். அதிக பசி உடையவர். மனோதிடமும் தியாக உள்ளமும் உள்ளவர். பாவ- புண்ணியங்களுக்கு அஞ்சாதவர். கணித அறிவுமிகுந்தவர். காதல் மற்றும் கேளிக்கைகளில் அதிக விருப்பமுள்ளவர்.
* அதாகம சாதி ஆண் (குதிரை): இவர்கள், ஜனன ஜாதகத்தில் சனிபகவான், உச்சம் அல்லது ஆட்சியில் இருக்கும் அமைப்பு உடையவர்கள். கருத்து, பருத்த உடல்வாகும், நீண்ட உதடுகளும், காதுகளும், நெடிய உருவமும் கொண்டவன். பொறாமை குணம் உடையவர். தீராத காம வேட்கையும் உள்ளவர். பெரியோரை மதியாதவர். மிகுந்த கோபக்காரர். நிறைய உண்பவர்.
பஞ்சமா பாதகங்களைச் செய்ய தயங்காத வர். மரபு மீறிய உறவு கொள்வார்.
(தொடரும்)
செல்: 63819 58636