Advertisment

உடலே உன் வீடு! - புதிய வாஸ்து சாஸ்திரம் (56) -லால்குடி கோபாலகிருஷ்ணன்

/idhalgal/balajothidam/your-body-your-home-new-vastu-shastra-56-lalgudi-gopalakrishnan

வர் அமைச்சருள் தொண்ணூற் றறுவர்கள்

ஐந்து இடம்ஆளக் கருதுவர்

ஐவரும் ஐந்து சினத்தோடே நின்றிடில்

ஐவர்க்கு இறை இறுத்து ஆற்றகிலேனே.''

-திருமூலர்

பொருள்: ஐந்து புலன்களே மனம் எனும் அரசனுக்கு ஐந்து அமைச்சர்களாக அமைகின்றன. ஐந்து புலன்களும் ஆட்சிபுரிய கருதும் இடங்கள் ஐந்துபொறிகளாகும். அந்த ஐவரும் சினத்தோடே நின்றிடில்- நோய் எனும் துன்பம் சூழும்.

பட்டுப்புழு, தானே தன்னைச் சுற்றிக் கூட்டை அமைத்து, அதனுள் அகப்பட்டுக்கொள்ளும். மனிதன், மனமெனும் மாயவலையைப் பின்னி, தன்னுள்ளே தன்னையே சிறைப்படுத்திக் கொள்கி றான். தனக்குத்தானே பகையாகிறான். அந்த மாய வலையை அறிந்து, அவனை மீட்கும் கலையே ஜோதிடம். உடலையும், மனதையும் ஆட்சி செய்யும் 96 தத்துவங்களில் ஏதாவது மாற்றம் ஏற்படின் நோய் ஏற்படுகிறது. ஐம்பூதங்களும் சரிவர இயங

வர் அமைச்சருள் தொண்ணூற் றறுவர்கள்

ஐந்து இடம்ஆளக் கருதுவர்

ஐவரும் ஐந்து சினத்தோடே நின்றிடில்

ஐவர்க்கு இறை இறுத்து ஆற்றகிலேனே.''

-திருமூலர்

பொருள்: ஐந்து புலன்களே மனம் எனும் அரசனுக்கு ஐந்து அமைச்சர்களாக அமைகின்றன. ஐந்து புலன்களும் ஆட்சிபுரிய கருதும் இடங்கள் ஐந்துபொறிகளாகும். அந்த ஐவரும் சினத்தோடே நின்றிடில்- நோய் எனும் துன்பம் சூழும்.

பட்டுப்புழு, தானே தன்னைச் சுற்றிக் கூட்டை அமைத்து, அதனுள் அகப்பட்டுக்கொள்ளும். மனிதன், மனமெனும் மாயவலையைப் பின்னி, தன்னுள்ளே தன்னையே சிறைப்படுத்திக் கொள்கி றான். தனக்குத்தானே பகையாகிறான். அந்த மாய வலையை அறிந்து, அவனை மீட்கும் கலையே ஜோதிடம். உடலையும், மனதையும் ஆட்சி செய்யும் 96 தத்துவங்களில் ஏதாவது மாற்றம் ஏற்படின் நோய் ஏற்படுகிறது. ஐம்பூதங்களும் சரிவர இயங்காவிடில் இயக்கம் பாதிக்கும்.

கோசங்கள்- 5

உணவு உடலை மூச்சு உடல் இயக்குகிறது. மூச்சு உடலை உணர்வு உடல் இயக்குகிறது. உணர்வு உடலை அறிவு உடல் இயக்குகிறது. அறிவு உடலை அதற்கு மே-ருக்கின்ற இம்மை உடலும், இம்மை உடலை அதற்கு மே-ருக்கின்ற மறுமை உடலும் இயக்குகின்றது. கோசங்கள், கோட்டையின் மதில்சுவர்கள்போல், நம்மைக் காத்து நிற்கின்றன.

1. அன்னமய கோசம்: உடல் அழியாமல் பாதுகாக்கும்.

2. பிராணமய கோசம்: பிராண வாயும் கர்மேந்திரியங்களும் சேர்ந்து கனவில் சூட்சும சரீரத்துடன் சேர்ந்து விணைபுரியும்.

3. மனோமய கோசம்: மலமும் கண்மேந்திரிய மும் கனவில் சூட்சும சரீரத்தில் சேர்ந்து செயல் படும்.

4. விஞ்ஞானமய கோசம்: புத்தியும் பொறி களும் சேர்ந்து கனவில் சூட்சும சரீரத்தில் செயல் படும் 5. ஆனந்தமய கோசம்: காரண சரீரத்துக்கு ஆதாரமாக இருந்து, பிராண, மனோமய, விஞ்ஞான மய கோசத்துடன் சூட்சும சரீரம் நிலைத்து நிற்கும்

Advertisment

ss

ஆதாரங்கள்- 6

1. மூலாதாரம்: குதத்துக்கும், குய்யத்துக்கும் மத்தியிலுள்ள திரிகோண ஸ்தானம்.

2. சுவாதிஷ்டானம்: முதுகுத்தண்டின் அடிப்பகுதி சமீபம், ஆண்குறி அல்லது பெண்குறி அடிபகுதியிலுள்ள நாற்கோண ஸ்தானம்.

3. மணிபூரகம்: நாபிச்தானத்திற்கு மேலுள்ள பிறைபோல் வளைந்த ஸ்தானம்.

4. அனாஹதம்: ஹிருதய ஸ்தானத் திலுள்ள முக்கோண ஸ்தானம்.

5. விசுத்தி: கண்டத்தில் உள்ளது, அறுங்கோனஸ்தானம்.

6. ஆக்ஞா: முகத்திலுள்ள புருவ மத்தி- திரிகோண உச்ச ஸ்தானம்.

மண்டலம்- 3

Advertisment

1. அக்னி மண்டலம்: மூலாதாரத்தில் இருந்து இளகி நாபி வரையில் முயற்சி செய்யும்.

2. ஆதித்த மண்டலம்: நாபியில் இருந்து கண்டம்வரை ஸ்திரம் செய்யும்.

3. சந்திர மண்டலம்: கண்ட ஸ்தானத் தில் இருந்து புருவ மத்தி வரை ஸ்திரமாகும்.

மலங்கள்- 3

1. ஆணவ மலம்: ஸ்தூல சரீரத்தை நான்தான் என்று நினைத்து இருக்கும்.

2. காமிய மலம்: கண்ணால் கண்டவற்றை எல்லாம் இச்சிக்கும்.

3. மாயா மலம்: தனக்கு நேரும் நிலையை தானறியாமலே செய்தல், கோபம் கொள்ளல்.

முப்பிணிகள்

1. வாதம்: வாயுவின் கோபம்.

2. பித்தம்: அக்னியின் கோபம்.

3. சிலேத்துமம்: அப்புவின் கோபம்.

ஈஷணை (ஆசைகள்) -3

1. தாரேஷனை: பெண்ணாசை (ஆணாசை) அதிகம் கொள்ளல்.

2. புத்திரேஷனை: புத்திர, புத்திரிமீது அதிக ஆசை.

3. அர்தேஷனை: பொருள்கள்மீது அதிக ஆசை வைத்தல்.

குணங்கள்- 3

1. சாத்வீகம்: நிறம் வெண்மை, சகலரும் மதிப்பர், அமிர்த குணம், இதில் லயித்து இருப் பவர் தத்துவ ஞான நிஷ்டை அடைவர்.

2. ராஜஸ குணம்: நிறம் சிவப்பு, இக்குணம் படைத்தவர் அகங்காரம் ஆணவமுடன் இருப்பார்.

3. தாமச குணம்: நிறம் கருப்பு, இவர்கள் அதிக உணவு சோம்பல், நித்திரை, மிகுந்த கோபம், எதிலும் நிலை இன்மையுடையவர்.

மனதின் விகாரங்கள்- 8

1. காமம்: அதிக ஆசை கொள்ளல்.

2. குரோதம்: பகை கொள்ளல், அன்பில்லாமை.

3. லோபம்: பிறர்க்கு ஈயாதவர், கருமி.

4. மோகம்: பலவற்றிலும் ஆசைப்படுதல்.

5. மதம்: பிறரை மதியாதிருத்தல்.

6. மாச்சரியம்: மனதில் சதா விரோத எண்ணங்கள்.

7. இடும்பை: எல்லாரையும் உதாசீனபடுத்துதல்.

8. அஸ்சூயை: பொறாமைக் குணம்.

அவஸ்தைகள்- 5

1. நினைவு (ஐம்புலன் வழி அறியப்படும்).

2. கனவு நிலை.

3. உறக்கம் (சொல்லப்புலப்படாத நித்திரை நிலை).

4. பேருறக்கம் (தன்னை மறத்தல்).

5. உயிர்- அடக்கம் (ஆழ்மயக்க நிலை).

மொத்தமாக 96 தத்துவங்களை அறிந்துக்கொண்டால், உடல் மற்றும் மனதின் இயக்கத்தை அறியலாம்.

bala140325
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe