Advertisment

உடலே உன் வீடு! - புதிய வாஸ்து சாஸ்திரம் (55)

/idhalgal/balajothidam/your-body-your-home-new-vastu-shastra-55

முப்பதும் முப்பதும் முப்பத் தறுவருஞ்

செப்ப மதிளுடைக் கோவிலுள் வாழ்பவர்

செப்ப மதிளுடைக் கோவில் சிதைந்தபின்

ஒப்ப அனைவரும் ஓட்டெடுத் தார்களே. -திருமூலர்

பொருள்: முப்பது, முப்பது, முப்பத்தாறும் கூடிய 96 தத்துவங்களும்; செப்பமதிலாகிய தோலும் போர்த்திய, உடலே கோயில். அந்தக் கோயில் சிதைந்த பின், 96 தத்துவங்களும், ஓடிவிடும்.

ஒரு கல்லில் வேண்டாதவற்றை அகற்றும்போது வேண்டிய சிற்பம் கிடைக்கிறது. வேண்டியவற்றை சேர்க்கும்போது அழகான ஓவியம் கிடைக்கிறது. தோல்வியைத் தரும் (4, 8, 12-பாவாதிபதிகள்) கிரக தோஷங்களை அகற்றினாலும் ஜனன ஜாதகத்தில் வெற்றியைத் தரும், உபஜெய ஸ்தானங்களை (3, 6, 10, 11-பாவங்களை) வலுப்பெற செய்தாலும், வாழ்வில் வெற்றி உண்டாகும். ஒருவரின் வெற்றியைத் தேடும் பயணத்தில் ஜாதக ஆய்வு, ஒரு மைல் கல்லாக

முப்பதும் முப்பதும் முப்பத் தறுவருஞ்

செப்ப மதிளுடைக் கோவிலுள் வாழ்பவர்

செப்ப மதிளுடைக் கோவில் சிதைந்தபின்

ஒப்ப அனைவரும் ஓட்டெடுத் தார்களே. -திருமூலர்

பொருள்: முப்பது, முப்பது, முப்பத்தாறும் கூடிய 96 தத்துவங்களும்; செப்பமதிலாகிய தோலும் போர்த்திய, உடலே கோயில். அந்தக் கோயில் சிதைந்த பின், 96 தத்துவங்களும், ஓடிவிடும்.

ஒரு கல்லில் வேண்டாதவற்றை அகற்றும்போது வேண்டிய சிற்பம் கிடைக்கிறது. வேண்டியவற்றை சேர்க்கும்போது அழகான ஓவியம் கிடைக்கிறது. தோல்வியைத் தரும் (4, 8, 12-பாவாதிபதிகள்) கிரக தோஷங்களை அகற்றினாலும் ஜனன ஜாதகத்தில் வெற்றியைத் தரும், உபஜெய ஸ்தானங்களை (3, 6, 10, 11-பாவங்களை) வலுப்பெற செய்தாலும், வாழ்வில் வெற்றி உண்டாகும். ஒருவரின் வெற்றியைத் தேடும் பயணத்தில் ஜாதக ஆய்வு, ஒரு மைல் கல்லாக அமைகிறது.

மனித உடலில் 96 வகையான செயல்கள் ஒரே சமயத்தில் நடைபெறுகின்றன. சித்தர்கள், இந்த செயல்களைத் தத்துவங்களாக வரையறுத்து, உடலையும், மனதையும் ஒருங்கிணைக்கும் தந்திரத்தை அருளினார்கள்.

தச வாயு- 10

"காயமே இது பொய்யடா, வெறும், காற்றடைத்த பையடா...''

-என்ற கடுவெளி சித்தரின் கருத்தே உண்மையாகும். தசவாயுக்களின். செயலே உடலின் செயல்பாடாக அமைகிறது.

Advertisment

gg

1. பிராணன்

மூக்கு வழியாக மூச்சு விடுதல். இது மேல் நோக்கி இயங்கும். மற்ற ஒன்பது வகை வாயுவிற்கும் இதுவே மூலாதாரம். இது குளிகன் எனும் உப கிரகத்தின் செயலாகக் கருதப்படுகிறது.

2. அபானன்

சுவாதிட்டானத்தில் இருந்து வெளிப் பட்டு மலம், சிறுநீறு போன்றவற்றை கீழ் நோக்கி தள்ளும், ஆசனவாயை சுருக்கும். அன்னத்தை சேர்க்கவேண்டிய இடத்தில் சேர்க்கும். இது கீழ்நோக்கி இயங்கும். இது சனி கிரகத்தின் ஆளுமைக்கு உட்பட்டது.

3. வியானன்

இது தொழில் காற்று மூளையின் கட்டளை களை அனைத்து உறுப்புகளுக்கும் கொண்டு செல்லும். தோளிலிருந்து எல்லா நரம்பிலும் அசையும் அசையா பொருளில் உறுப்புக்களை நீட்ட, மடக்க உணர்ச்சிகளை அறியவும், உண வின் சாரத்தை கொடுத்து உடலைக் காக்கும்.

இது புதன் கிரகத்தின் ஆளுமைக்கு உட்பட்டது.

4. உதானன்

உணவின் சாரத்தை கொண்டுசெல்லும். உடலை எழுந்து நிற்க உதவும். மேல்நோக்கி இயங்கும் வாயு. தொண்டையில் குரல் நரம்பு களை அதிரச்செய்து ஒலியை எழுப்புகிறது.

இது செவ்வாய் கிரகத்தின் ஆளுமைக்கு உட்பட்டது.

5. சமானன்

நாம் உண்ணும் உணவை ஜீரணிக்க உதவுகிறது. இந்த வாயு நாபியிலிருந்து கால் வரை பரவும். வாயுக்களை அதிகப்படாமல் சரி செய்யும். உண்ட உணவு செரித்தவுடன் ரத்தத்திற்கும் எல்லா உறுப்புகளுக்கும் பகிர்ந்து கொடுக்கும் வேலையை செய்கிறது. இது, சுக்கிர கிரகத்தின் ஆளுமைக்கு உட் பட்டது.

6. நாகன்

உடம்பில் சேர்ந்த நச்சுக்களை வெளியேற்று வது நாகன். இது அறிவை வளர்க்கும், கண்களை திறப்பதற்கும், இமைகள்மூட வேலை செய்யும். வாந்தி குமட்டல் போன்ற உணர்வுகளுக்கு காரணமாகிறது. இது ராகு கிரகத்தின் ஆளுமைக்கு உட்பட்டது

7. கூர்மன்

கண்ணில் நிற்கும் வாயு. கொட்டாவி, வாய் மூட, கண் இமைக்க, கண்ணீர் வர வழைக்கும். இது கேது கிரகத்தின் ஆளுமைக்கு உட்பட்டது.

8. கிருகரன்

நம் உடம்பில் எந்த அசுத்தத்தையும் நுழையவிடாது. தும்மல், இருமலை உண்டு பண்ண உதவும் வாயு இது. இது சூரியன் கிரகத்தின் ஆளுமைக்கு உட்பட்டது.

9. தேவதத்தன்

கொட்டாவி, விக்கல் போன்றவை ஏற்பட காரணமாகிறது. உடலை ஓய்வு நிலைக்கு தள்ளுவதும், இந்த வாயுதான். இது, சந்திரன் கிரகத்தின் ஆளுமைக்கு உட்பட்டது

10. தனஞ்செயன்

ஒருவர் உயிரோடு இருக்கும்பொழுது, தோலுக்கு கீழே இருந்து உடலுக்கு ஏற்படும் எந்தவித பாதிப்பையும் தாங்கி காப்பாற்றும். ஒருவர் உயிரோடு இருக்கும்போது மற்ற ஒன்பது வாயுக்களும் நன்றாக வேலை செய்யும். உயிர்பிரிந்த பின்னர் ஒன்பது வாயுக்களும் செயல்பாட்டை நிறுத்திய பின்னரும், தனஞ்செயன் வாயு செயல்படும். நுண்ணியிரிகள்மூலம் உடலை அழுகச் செய்யும். இது குரு கிரகத்தின் ஆளுமைக்கு உட்பட்டது.

ஆசயம் (உறைவிடம்)- 5

1. ஆமாசயம்: அன்னம், தண்ணீர் பருகுமிடம்.

2. ஜலாசயம்: அன்னம், தண்ணீர் இறங்கு மிடம்.

3. மலாசயம்: மலம் சேருமிடம்.

4. ஜலஞ்சயாசம்: சிறுநீர் சேருமிடம்.

5. சுக்கிலாசயம்: விந்து இருக்குமிடம்.

(தொடரும்)

செல்: 63819 58636

Advertisment
bala070325
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe