Advertisment

உடலே உன் வீடு! - புதிய வாஸ்து சாஸ்திரம் (52)

/idhalgal/balajothidam/your-body-your-home-new-vastu-shastra-52

"உலகம் வேறு, நீ வேறு அல்ல.

உள்ளது ஒன்றே- அத்வைதம்

மண் திணிந்த நிலனும்

நிலம் ஏந்திய விசும்பும்

விசும்பு தைவரு வளியும்

வளித் தலை இய தீயும்

தீ முரணிய நீரும் என்றாங்கு

ஐம்பெரும் பூதத்து இயற்கை.''

-புறநானூறு

சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மாறுபட்டாலும், ஒளி என்ற சொல்லுக்கு பொருள் ஒன்றுதான். குளம், நதி, கடல் மாறுபட்டாலும், நீர் என்ற சொல்லுக்கு பொருள் ஒன்றுதான். தென்றல், புயல் என்று மாறுபட்டாலும், காற்று என்ற சொல்லுக்கு பொருள் ஒன்றுதான். மலை, சமவெளி, பள்ளத்தாக்கு மாறுபட்டாலும், நிலம் என்ற சொல்லுக்கு பொருள் ஒன்றுதான். உலகின் எந்த பகுதியில் வாழ்ந்தாலும், எல்லோருக்கும் ஆகாயம் ஒன்றுதான். பிரபஞ்சத்தில் எதை பகுத்தாலும், பஞ்சபூத தத்துவத்திலடங்கும். அண்டத்தில் இயங்கும் ஆற்றலுக்கும் உடலுக்கும் தொடர்பு இருப்பதால் அண

"உலகம் வேறு, நீ வேறு அல்ல.

உள்ளது ஒன்றே- அத்வைதம்

மண் திணிந்த நிலனும்

நிலம் ஏந்திய விசும்பும்

விசும்பு தைவரு வளியும்

வளித் தலை இய தீயும்

தீ முரணிய நீரும் என்றாங்கு

ஐம்பெரும் பூதத்து இயற்கை.''

-புறநானூறு

சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மாறுபட்டாலும், ஒளி என்ற சொல்லுக்கு பொருள் ஒன்றுதான். குளம், நதி, கடல் மாறுபட்டாலும், நீர் என்ற சொல்லுக்கு பொருள் ஒன்றுதான். தென்றல், புயல் என்று மாறுபட்டாலும், காற்று என்ற சொல்லுக்கு பொருள் ஒன்றுதான். மலை, சமவெளி, பள்ளத்தாக்கு மாறுபட்டாலும், நிலம் என்ற சொல்லுக்கு பொருள் ஒன்றுதான். உலகின் எந்த பகுதியில் வாழ்ந்தாலும், எல்லோருக்கும் ஆகாயம் ஒன்றுதான். பிரபஞ்சத்தில் எதை பகுத்தாலும், பஞ்சபூத தத்துவத்திலடங்கும். அண்டத்தில் இயங்கும் ஆற்றலுக்கும் உடலுக்கும் தொடர்பு இருப்பதால் அண்டம் வேறு, பிண்டம் வேறு என்னும் பாகுபாடு இயற்கை நியதியில் இல்லை.

Advertisment

vv

ஜாதகம், கை ரேகைக் கலை, பஞ்சபட்சி சாத்திரம், ஜாமக் கோள் பிரசன்னம் என்று பல சாத்திரங்கள் இருந்தாலும், அடிப்படை ஒன்றுதான். எல்லம், பஞ்சபூத தத்துவத்திலடங்கும். உடலின் தோஷங்களாகிய வாதம், பித்தம், சிலேஷமத்தை யும், மனதின் விகாரங்களாகிய தமோ, இரஜோ, சத்துவகுணங்களையும் தோற்றுவிப்பது, பஞ்சபூதங்களே. கிரகங்களும், நட்சத்திரங்களும், பன்னிரன்டு ராசிகளும், நம் உடலும், மனமும், உயிரும் இதே தத்துவத்தில் இயங்குகின்றன.

ஒவ்வொறு ராசியிலும் இடம்பெறும் ஒன்பது நட்சத்திர பாதங்களும் பன்னிரன்டு ராசிகளிலும் வியாபித்து, நூற்றியெட்டு வர்ம புள்ளி களாக அமைகின்றன. இதில் ஒரு ராசியிலுள்ள ஒரு நட்சத்திர பாதம் மட்டுமே, நவாம்சத்தில் வர்கோத்தம மாகும். அந்த நட்சத்திர பாதமே பன்னிரன்டு படுவர்மங்கள் (உயிர்நிலை) மற்ற தொன்னூற்றியாறும் தொடு வர்மங்கள் (உணர்வு நிலை). பன்னிரன்டு பாவங்களும், நம் உடலின் ஒவ்வொறு செயல் பாட்டை விளக்கும். உதாரணத்திற்கு ஒரு ஜாதகத்தில் மூன்றாம் பாவம், மூளைக்கு செய்திகளை எடுத்துச்செல்லும், புலன் நரம்புகள் (ள்ங்ய்ள்ர்ழ்ஹ் ய்ங்ன்ழ்ர்ய்ள்) எனப்படும். நரம்பு கலத்தையும், ஒன்பதாம் பாவம், மூளையின் கட்டளை களை உடலுறுப்புகளுக்கு எடுத்துச் செல்லும் இயக்க நரம்புகள் (ஙர்ற்ர்ழ் ய்ங்ன்ழ்ர்ய்ள்) எனப்படும் நரம்பு கலத்தையும் குறிக்கும். ஒரு ஜாதகருக்கு மூன்று மற்றும் ஒன்பதாம் பாவங்கள், வலிமையிழந்த சனி, வலிமை யுள்ள செவ்வாயின் தொடர்பால் பாதிக்கப் பட்டால், முடக்கு வாதம் எனும் நரம்பு மண்டல செயலிழப்பு ஏற்படும். உடலின் உள்ளுறுப்புகளை ஆளும் கிரகங்களும், வெளி உறுப்புகளையாளும் இருபத்தியேழு நட்சத்திரங்களும், ஆறாம் பாவத்தி லினைந்து கெடு பலன்களைத் தரும்போது உண்டாகும் விளைவே நோயாகும். இதே விளைவு மனோகாரகனாகிய, சந்திரனைத் தொடர்பு கொள்ளும்போது கவலை யாகிறது.

கோள்களும் நோய்களும் சூரியன்

உடல் சார்ந்தது: வலக்கண் நோய், இதய நோய், மூல நோய், வயிற்றுக்கடுப்பு.

மனம் சார்ந்தது: வீண்ஆடம்பரம், மமதை, சர்வாதிகாரம்.

சந்திரன்

உடல் சார்ந்தது: இடது கண் நோய், நுளம்புக் காய்ச்சல் (தொற்று நோய்) மனம் சார்ந்தது: மன நோய், குழப்பம், கவலை.

செவ்வாய்

உடல் சார்ந்தது: தீக்காயம், விஷ அபாயம், வெட்டைச் சூடு, இரத்த வாந்தி, இரத்த- கொதிப்பு.

மனம் சார்ந்தது: பிறரை- மதியாமை, அகங்காரம், இரக்கமில்லா- மனம்.

புதன்

உடல் சார்ந்தது: கழுத்து வலி, வெண் குட்டம், மூளைக் காய்ச்சல், காது வலி, ஒற்றைத்தலைவலி. மனம் சார்ந்தது: புத்தி- பேதலிப்பது, பக்குவமில்லாத- சிந்தனை.

குரு

உடல் சார்ந்தது: வாயுக் கோளாறு, உடல் பருமன், மூச்சடைப்பு, புற்று நோய், தலை வழுக்கை.

மனம் சார்ந்தது: சோர்வு, மன-தளர்ச்சி.

சுக்கிரன்

உடல் சார்ந்தது: நீர்த்தாரை, பிறப் புறுப்புக் குறைபாடு, மேகநோய், தேமல், வெள்ளைப்படுதல், வீரியக்குறைவு.

மனம் சார்ந்தது: தன்னிலை- மறத்தல், திருப்தி இல்லாத மனம்.

சனி

உடல் சார்ந்தது: வயிற்று வலி, சளித் தொல்லை, மூட்டுவலி, யானைக்கால், பக்கவாதம், வலிப்பு நோய், நீரிழிவு.

மனம் சார்ந்தது: பிறரை குறைகூறுதல், குற்ற உணர்ச்சி.

ராகு

உடல் சார்ந்தது: புற்றுநோய், இரைப்பு, விஷக்கடி.

மனம் சார்ந்தது: வீண்சண்டை, விபரீத எண்ணங்கள்.

கேது

உடல் சார்ந்தது: அஜீரணம், மாத விடாய்க் கோளாறு, கரு சிதைவு.

மனம் சார்ந்தது: விரக்தி, தற்கொலை எண்ணம், கொடூர மனம், பழிவாங்கும் எண்ணம்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala140225
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe