Advertisment

உடலே உன் வீடு! - புதிய வாஸ்து சாஸ்திரம் (50)

/idhalgal/balajothidam/your-body-your-home-new-vastu-shastra-50

"கிளைத்திடும் இதயகப்பு கீழ் நோக்கி வளைந்து சென்று

வலுத்திடும் தார மேட்டில் பங்கிரை பதிந்து நின்றால்

அனாத்திடும் கிளை மேல் நோக்கி ஆயுளின் அதிஷ்டம் தன்னில்

களத்திரம் இருக்க மற்றோர் காதலைக் காட்டும்தானே.'

பொருள்: இதய ரேகையின் கீழ் பாகத்தில் கிளை ரேகை தோன்றி சுக்கிர மேட்டை நோக்கினால் திருமண வாழ்க் கையை மீறிய உறவு உண்டாகும்.

விதைக்கிற காலத்தில் வயலுக்கு போகாதவர் அறுவடை காலத்தில் வயலுக்கு செல்வதால் பயனில்லை. எந்தத் தொழிலை செய்தாலும், பருவத்தே பயிர் செய்யாவிட்டால், வெற்றி, காணல் நீராக மாறும். முயற்சி எடுப்பதற்குமுன், காலம் சாதகமாக உள்ளதா? என்பதை அறிவிக்கும் அறிவே ஜோதிடம். கைரேகைக் கலையும்- ஜாதகக் கணிதமும் இரு கைகள்போல் காலக்கணிதத்தை பற்றி நிற்பவை.

"கிளைத்திடும் இதயகப்பு கீழ் நோக்கி வளைந்து சென்று

வலுத்திடும் தார மேட்டில் பங்கிரை பதிந்து நின்றால்

அனாத்திடும் கிளை மேல் நோக்கி ஆயுளின் அதிஷ்டம் தன்னில்

களத்திரம் இருக்க மற்றோர் காதலைக் காட்டும்தானே.'

பொருள்: இதய ரேகையின் கீழ் பாகத்தில் கிளை ரேகை தோன்றி சுக்கிர மேட்டை நோக்கினால் திருமண வாழ்க் கையை மீறிய உறவு உண்டாகும்.

விதைக்கிற காலத்தில் வயலுக்கு போகாதவர் அறுவடை காலத்தில் வயலுக்கு செல்வதால் பயனில்லை. எந்தத் தொழிலை செய்தாலும், பருவத்தே பயிர் செய்யாவிட்டால், வெற்றி, காணல் நீராக மாறும். முயற்சி எடுப்பதற்குமுன், காலம் சாதகமாக உள்ளதா? என்பதை அறிவிக்கும் அறிவே ஜோதிடம். கைரேகைக் கலையும்- ஜாதகக் கணிதமும் இரு கைகள்போல் காலக்கணிதத்தை பற்றி நிற்பவை. இரு கண்களைப்போல, எதிர்காலத்தை தரிசிப்பவை.

Advertisment

vvv

கைரேகையும் ஜாதக கணிதமும்

* உள்ளங்கையில் ஏழு முக்கிய கிரகங் களின் மேடுகள் அமைந்துள்ளன. இந்த மேடுகளின் அமைப்பே, ஒருவரின் ஜாதகத்தில் அந்த குறிப்பிட்ட கிரகத்தின் வலிமை, உச்சம், நீசம், அஸ்தங்கம் போன்ற வற்றைக் காட்டும்.

* சந்திரன்: மூளை, அறிவு, மனம் தொடர்புடையது. ஜாதகத்தில் சந்திரன் கடகத்திலோ ரிஷபத்திலோ அமைந்து. லக்னத்திற்கு பாதக னாக இல்லாமலிருந்தால், சந்திர மேடு நன்கு அமைந் திருக்கும். இந்த அமைப்பு உடையவர்கள் கற்பனை, எழுத்து, இலக்கிய ஆர்வம் போன்றவற்றில் சிறந்து விளங்குவார்.

* சுக்கிரன்: உணர்வுபூர்வ அன்பு, பாசம், காதல், காமம், கோபம், குரோதம் தொடர்புடைய கிரகம். ரிஷபம், துலாம், மீன ராசியுடன் தொடர்புடையவர் களுக்கும், சுக்கிரன் அஸ்தங்கம் அடையா மல், வலுத்திருந்தால் சுக்கிர மேடு, பருமனாக, சதைப்பற்றுள்ளதாக அமை யும். ஜாதகத்தில் சுக்கிரன், ராகுவுடன் கூடியிருக்க, சுக்கிர மேட்டில் பின்னல், சதுரம், கரும்புள்ளி ஆகியவை அமைந்து, தகாத உறவில் நாட்டம், காதல் தோல்வி போன்றவற்றைக் காட்டும்.

* சூரியன்: அந்தஸ்து, கௌரவம், புகழ் போன்றவற்றைக் குறிக்கும் கிரகம். சூரியன் ஜாதகத்தில் உச்சம், ஆட்சி பெற்றிருந் தால் அந்த அமைப்புடைய ஜாதகரின் கையில், சூரிய மேடு உயர்ந்து அதில், அழுத்த மான செங்குத்துக் கோடு அமைந்திருக்கும். பாதுகாப்பான வாழ்க்கையும் அளவில்லா புகழும் பலன்களாக அமையும்.

* குரு: மத குரு, பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், ஆன்மிகம் போன்றவற்றைக் குறிப்பவர் குருபகவான். ஜாதகத்தில் தனுசு, மீனம், கடகத்தில் அமர்ந்தால், அந்த ஜாதகரின் கையில், குரு மேடு, வலுத்திருக் கும். குரு மேடு நன்கு அமைந்து, அந்த மேட்டில் அமையும், இணை கோடுகள் ஆசிரியர் பணியையும், பெருக்கல் குறி மேடைப்பேச்சு வல்லமையையும், நட்சத்திரக் குறி அரசியல் அதிகாரத்தையும் சுட்டிக் காட்டும்.

* புதன்: வியாபாரம், திட்டமிடுதல், புத்திசாலித்தனம், உபதேசம், தகவல் பரிமாற்றம், தொலைத்தொடர்பு போன்றவற்றிற்கு காரணமாக அமையும் கிரகம். ஜனன கன்னி, மிதுன ராசிகளில் புதன் வலுத்து இருந்தால், புதன் மேடும், புதன் விரலும், நன்றாக அமையும். உள்ளங்கை யில் புதன்மேடு சிறப்பாக அமைந்து. புதன் விரலும், சதுர முனையுள்ளதாக அமைந்தால், வியாபரம் தகவல் தொடர்புதுறையில் சிறந்து விளங்குவார்.

* செவ்வாய்: அஞ்சா நெஞ்சம், செயலில் உறுதி, எதிலும் வெற்றி ஆகியவையே செவ்வாய் கிரகத்தின் குணங்களாக அமைபவை. ஜனன ஜாதகத்தில் மேஷம், விருச்சிகம், மகரத்தில் செவ்வாய் பாதகமில்லாமலிருந்தால், கீழ் செவ்வாய் மேடும், மேல் செவ்வாய் மேடும் நன்றாக பள்ளமில்லாமல் அமையும். செவ்வாய் மேடு நன்கு அமைந்தவர்கள், பாதுகாப்புத்துறையில் பணி செய்யும் தகுதி உடையவர்கள்.

* சனி: ஆயுள், பொதுஜன ஆதரவு போன்ற வற்றிற்கு காரகனாக அமையும் கிரகமே சனி பகவான். மகர, கும்ப, துலாத்தில் ஆளுமை பெற்ற சனிபகவான், ஜனன ஜாதகத்தில் பலம் பொருந்தியிருந்தால் நடுவிரலின்கீழ் அமையும் சனி மேடு, நங்கு அமையும். சனி மேடு சிறப்பாக அமைந்தால், கடின உழைப்பு, எதையும் சமாளிக்கும் திறமையும் உண்டாகும்.

(தொடரும்)

bala310125
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe