Advertisment

உடலே உன் வீடு! - புதிய வாஸ்து சாஸ்திரம் (48

/idhalgal/balajothidam/your-body-your-home-new-vastu-shastra-48

"உதவிசேர் ஆயுள் ரேகை ஓங்கிய கப்பிலொன்று

புதனவர் மேட்டை நோக்கில் புகட்டிய காலந்தன்னில்

கதியவர்க்கு இசை யாழ் கூத்து கட்டியம் நடிப்பு என்றோ

பதவியைக் காட்டும் இன்றேல் பாடகர் பிழைப்பு தானே.'

பொருள்: ஆயுள்ரேகையில் கிளை ரேகை தோன்றி, புதன்மேட்டை நோக்கிச் சென்றால் கலைகளில் ஆர்வமும் பாடகராகும் வாய்ப்பும் உண்டாகும்.

வாழ்க்கைப் பயணத்தில் விதியே வீதியாகிறது. உயிருடன் சேர்ந்த உடலே வாகனம், மனமே வாகன ஓட்டிபாதை உள்ளவரை பயணம் தொடரும். விதியையும் சுயமுயற்சியையும் இணைத்துப் பார்க்க உதவும் வழிகாட்டியே ஜோதிடம்.

Advertisment

vss

ஆசையெனும் இச்சா சக்தியும் (சந்திரன்)

அறிவொளியாகிய ஞான சக்தியும் (சூரியன்), ஆற்றலெனும் கிரியா சக்தியும் (லக்னம்) இணைந்ததே திரிபுரமாகிய வாழ்க்கை.

"உதவிசேர் ஆயுள் ரேகை ஓங்கிய கப்பிலொன்று

புதனவர் மேட்டை நோக்கில் புகட்டிய காலந்தன்னில்

கதியவர்க்கு இசை யாழ் கூத்து கட்டியம் நடிப்பு என்றோ

பதவியைக் காட்டும் இன்றேல் பாடகர் பிழைப்பு தானே.'

பொருள்: ஆயுள்ரேகையில் கிளை ரேகை தோன்றி, புதன்மேட்டை நோக்கிச் சென்றால் கலைகளில் ஆர்வமும் பாடகராகும் வாய்ப்பும் உண்டாகும்.

வாழ்க்கைப் பயணத்தில் விதியே வீதியாகிறது. உயிருடன் சேர்ந்த உடலே வாகனம், மனமே வாகன ஓட்டிபாதை உள்ளவரை பயணம் தொடரும். விதியையும் சுயமுயற்சியையும் இணைத்துப் பார்க்க உதவும் வழிகாட்டியே ஜோதிடம்.

Advertisment

vss

ஆசையெனும் இச்சா சக்தியும் (சந்திரன்)

அறிவொளியாகிய ஞான சக்தியும் (சூரியன்), ஆற்றலெனும் கிரியா சக்தியும் (லக்னம்) இணைந்ததே திரிபுரமாகிய வாழ்க்கை. இதுவே, திரிசூலத்தின் தத்துவ மாகும். ஜனன ஜாதகத்தில் திரிசூலமாக அமைவது, லக்ன திரிகோணங்களே. கைரேகையிலுள்ள திரிசூல அடையாளம் ஒருவருக்கு தனித்துவமான வெற்றியைத் தரும் சின்னமாகும்.

விரல் அமைப்பு

மோதிர விரல் பலன் மோதிர விரல்: (சூரிய விரல்)- நடுத்தர விரலுக்கும் சுண்டு விரலுக்கும் இடையில் அமைந்துள்ள நான்காவது விரலாகும்.

இதை பவித்திர விரல் என்றும் குறிப்பிடு வார்கள். பூஜை செய்யும்பொழுது தர்ப்பை யாலான பவித்திரத்தை இந்த விரலில் அணிகிறோம். இதற்கு "அனாமிகா' என்று பெயர். ஒருவரின் புகழ், பெருமை இந்த விரலின் அமைப்பால் தெரியும். மோதிர விரலால் விபூதி அல்லது குங்குமத்தை நெற்றியில் அணிந்து கொள்பவர்களுக்கு உலகமே வசப்படும். அவர்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியைப் பெறும்.

கை ரேகையில் மோதிர விரல்

* மோதிர விரலுக்கும் இதயத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு இது இதயத் திற்குச் செல்லும் நரம்புடன் நெருங்கிய தொடர்புடையது. பாசம் மற்றும் அன்பின் உணர்வுகளை பிரதிபலிப்பது.

* படைப்பாற்றல் மற்றும் கலைத் திறமையை எடுத்துக்காட்டும் விரலாக அமைகிறது.

* இடதுகை மோதிர விரலில் மோதிரம் அணியும்போது சுய அன்பு மற்றும் சுய மதிப்பு மற்றும் தன் நம்பிக்கை அதிகரிக்கும்.

* சனி விரலுக்கும் (நடு விரல்) சூரிய விரலுக்கும் (மோதிர விரல்) அதிக இடைவெளி இருந்தால் புகழை விட செல்வத்தில் விருப்பம் உள்ளவர்கள் செல்வத்தைப் பெருக்குவதற்காக அவமானத் தையும் ஏற்றுக்கொள்வார்கள்.

* சூரிய விரலுக்கும் (மோதிர விரல்), புதன் விரலுக்கும் (சுண்டு விரல்), மத்தியில் இடைவெளி அதிகமாக இருந்தால் பிறருக்குத் தீங்கிழைப் பவர்கள்.

* சூரிய விரலும், குரு விரலும், ஒரே நீளத்திலிருப்பதே சிறந்தது.

* குரு விரலைவிட, சூரிய விரல் நீண்டி ருப்பவர்கள், ராஜ யோகத்தைப் பெறுவார்கள்.

* சூரிய விரலும், சனி விரலும் ஒரே நீளத்திலிருப்பவர்கள் சூதாட்டத்தில் விருப்பமுடையவர்கள்.

* நுனி கூர்மையான மோதிர விரலை உடையவர்கள், அப்பாவிகளாகவும், உலக அனுபவம் குறைந்தவர்களாகவும் இருப்பார்கள்.

* மோதிர விரலின் நுனி அகலமாக அமைந் தால் கலை ஆர்வம் மிக்கவர்கள்.

சூரிய விரல்

அங்குலாஸ்தி: அளவு ப் முதலாம் அங்குலாஸ்தி: நீளமாக இருந்தால் எதையும் சாதிக்கக் கூடியவர் கள். திட்டமிட்டு செயலாற்றி வெற்றிபெறு வார்கள். ஓவியம் வரைவதில் வல்லவர்கள். குட்டையான அங்குலாஸ்தி உடையவர் கள், அவசர புத்தி உடையவர்கள். பதட்டத் தால் காரியம் வீணாகும்.

* இரண்டாம் அங்குலாஸ்தி: நீளமாக இருந்தால் எதையும் சுய முயற்சியால் அடையக்கூடியவர்கள். பகுத்தறிவுவாதிகள். பொறியியல் துறையில் முத்திரை பதிப்பார். குட்டையான அங்குலாஸ்தி உடையவர் கள், அதிஷ்டத்தை நம்பி முயற்சியைக் கைவிட்டவர்கள்.

Advertisment

*மூன்றாம் அங்குலாஸ்தி: நீளமாக இருந்தால் தன் திறமையை வெளிப் படுத்திக் கொள்ள தெரியாதவர்கள். பேராசைக் காரர்கள். குட்டையான அங்குலாஸ்தி உடைய வர்கள். வாய் சொல்லில் வீரர்கள். தங்கள் வாக்கு வண்மையால் பிறரை கவர்ந்து விடுவார்கள். மோதிர விரல் குறியீடுகள்

*கரும் புள்ளி இருந்தால் அடிமை வாழ்க்கை அமையும். மதிப்பு, மரியாதை குறையும்.

*சக்கரக்குறி காணப்பட்டால் ராஜ போகத்தில் வாழ்வார்.

bala170125
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe