Advertisment

உடலே உன் வீடு! - புதிய வாஸ்து சாஸ்திரம் (44)

/idhalgal/balajothidam/your-body-your-home-new-vastu-shastra-44

"மிஞ்சிய யோகமென்ப சனி குரு அருக்கன் மேட்டில்

எஞ்சிய பாகமின்றி ஏறி நேர் நீண்ட ரேகை

அருஞ்சுடர் பொருந்தி நின்றால் ஆயுளின் அதிர்ஷ்டம் தன்னில்

நஞ்சில் அவர் போர் கீர்த்தி நாடெல்லாம் புகழும்தானே.'

பொருள்: குரு, சனி, சூரியனின் கிரகமேடுகள் விம்மிப்பருத்து அவைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட நேர்க்கோடுகள் அமைந் தால் உலகம் புகழும் உத்தமராக வாழ்வார்.

புதையல் இருக்கும் நிலத்தில் பயிர்செய்து வயிறு வளர்ப்பதுபோல் பொன்னாலான திருவோட்டில் பிச்சையெடுப்பதுபோல் மனிதர்கள் தங்களுடைய தனித்துவமான திறமைகளை மறந்து, துன்பப்படுகிறார்கள். இவ்வுலகில் படைக்கப்பட்ட எல்லா உயிர்களும் சிறப்பானவையே. கோவிலில் மணி வெண்கலம் எழுப்பும் மங்கள ஒலி யைத் தங்கத்தால் தரமுடியாது. ஒரு ஜா

"மிஞ்சிய யோகமென்ப சனி குரு அருக்கன் மேட்டில்

எஞ்சிய பாகமின்றி ஏறி நேர் நீண்ட ரேகை

அருஞ்சுடர் பொருந்தி நின்றால் ஆயுளின் அதிர்ஷ்டம் தன்னில்

நஞ்சில் அவர் போர் கீர்த்தி நாடெல்லாம் புகழும்தானே.'

பொருள்: குரு, சனி, சூரியனின் கிரகமேடுகள் விம்மிப்பருத்து அவைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட நேர்க்கோடுகள் அமைந் தால் உலகம் புகழும் உத்தமராக வாழ்வார்.

புதையல் இருக்கும் நிலத்தில் பயிர்செய்து வயிறு வளர்ப்பதுபோல் பொன்னாலான திருவோட்டில் பிச்சையெடுப்பதுபோல் மனிதர்கள் தங்களுடைய தனித்துவமான திறமைகளை மறந்து, துன்பப்படுகிறார்கள். இவ்வுலகில் படைக்கப்பட்ட எல்லா உயிர்களும் சிறப்பானவையே. கோவிலில் மணி வெண்கலம் எழுப்பும் மங்கள ஒலி யைத் தங்கத்தால் தரமுடியாது. ஒரு ஜாதகர் இந்த உலகில் பிறந்த காரணத்தையும் அவர் திறமைகளையும் அறிந்து கூறும் விஞ்ஞானமே ஜோதிடம். உள்ளங்கையில் அமைந்துள்ள சந்திர மேடு எண்ணங் களின் வெளிப்பாடுகளையும், சுக்கிர மேடு அவருடைய கொடுப்பினைப் பலன்களையும் தெரிவிக்கும். அறிவையும் அதிர்ஷ்டத்தையும் அளந்து பார்க்கும் கலையே கைரேகை ஜோதிடம்.

Advertisment

cc

கைரேகையும் புதிரான அடையாளங்களும்

பெருவிரல் ரேகைகள் தனித் தன்மையுடைவை. கடுகைத் துளைத்து ஏழு கடல்களையும் புகுத்தியதுபோல், எண்ணிலடங்காத செய்திகளைத் தெரிவிக்கக்கூடியதாக விளங்குவதே கட்டைவிரல் ரேகைகள். வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளும் கட்டைவிரல் ரேகையில் குறுஞ்செய்திகளாக வடிவமைக்கப் பட்டுள்ளன.

ஒருவரின் கட்டைவிரலைப் பார்த்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் அவர்கள் மறைக்கும் குணங்கள் என்பதைக்கூட கண்டறிந்துவிடலாம். கட்டைவிரல் ரேகையில் இருக்கும் சின்னங்கள் அடையாளங்கள் சிறிய கோடுகள் புள்ளிககைக்கொண்டு அறிவாற்றல், பண்புகள் போன்றவற்றைத் துல்லியமாகக் கூறலாம். ஒருவரின் கட்டை விரலின் அளவு ஆள்காட்டி விரலின் கீழே இருக்கும் மூன்றாவது கோட்டிற்கு சமமாகவோ அதைவிட உயர்ந்தோ இருந்தால் அது நீண்ட கட்டைவிரல். ஆள்காட்டி விரலின் மூன்றாவது கோட்டிற்குக் கீழே இருந்தால் அது குட்டையான கட்டைவிரல். நீண்ட கட்டைவிரல் அறிவின் அடையாளம். சிறிய கட்டைவிரல் அன்பு, கருணை, மனித நேயத்தின் அடையாளம்.

ப் குட்டையான கட்டைவிரல்: இவர்கள் சுயமாகச் சிந்தித்துச் செயலாற்ற முடியாதவர்கள். எப்போதுமே பிறரின் விருப்பத்திற்கு மதிப்பு கொடுப்பவர்கள். உணர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் தருபவர்கள். கலைத்துறைகளில் ஈடுபாடு கொண்டவர்கள்.

ப் நீளமான கட்டை விரல்: தன்னம்பிக்கையும், சாமர்த்தியமும் அதிகம் கொண்டவர்கள். அதிகாரம் செலுத்தும் ஆற்றல் உள்ளவர்கள். அறிவாற்றலுக்கு முக்கியத்துவம் தருபவர்கள். துணிவு உள்ளவர்கள். ஆராய்ச்சித் துறையில் சிறந்து விளங்கும் அறிஞர்களுக்கு நீண்ட கட்டைவிரல் இருக்கும்.

ப் கடினமான கட்டைவிரல்: கட்டைவிரல் நேராகவும் தடித்தும் இருந்தால் அவர்கள் இந்த வகையைச் சேர்ந்தவர்கள். பிடிவாதக் குணமுள்ளவர்கள். பிறர் உணர்வுக்கு மதிப்புத் தராதவர்கள். தன் திறமையில் மட்டுமே நம்பிக்கைக் கொண்டவர்கள்.

ப் மிருதுவாக வளையும் கட்டைவிரல்: சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக்கொண்டு வாழத்தெரிந்தவர்கள். பணம் சேர்ப்பதில் பற்று கொண்டவர்கள். சுயநலம் அதிகம் கொண்டிருப்பவர்கள்.

கட்டைவிரல் ரேகை வடிவம்

ப் சுருள் வட்டம்: இந்த ரேகை கையில் இருப்பவர்கள் தனிமையை விரும்புபவராக இருப்பார்கள். இவர்கள் எப்போதும் தன்னைதானே உற்சாகப்படுத்தித் கொள்வார்கள். இவர்களின் மனப் போக்கை யாரும் உணரமாட்டார். பிறரிடம் கருத்துகளை பரிமாறிக்கொள்வதில் ஆர்வம் இல்லாதவர்.

ப் மயில் கண் ரேகை: இந்த ரேகை அபூர்வமான ஒன்று. இந்த ரேகை இருப்பவர்கள் உயர்ந்த நற்குணங்களும் தலைமைப்பண்பும் கொண்டவர்களாக இருப்பார்கள். சர்வாதிகார போக்கை உடையவர்கள். திட்டமிட்டு செயலாற்று பவர்கள். அற்புதமான கலைத்திறமை உடையவர்களாக இருப்பார்கள்.

(தொடரும்)

செல்: 63819 58636

Advertisment
bala131224
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe