"மேலுமிக் கணிதம் தந்த விரல் முனை ஐந்தின்மீதும்
ஏல்வினை முகடு கொண்ட ஏழ் திடல் மத்திமீதும்
வால் அணி மடிப்பு தோன்றில் மத்திமப் பலனைக் காட்டும்
தோல் சுழி தோன்றில் மேடு சுபப் பலன் காட்டும் தானே.'
பொருள்: கிரக மேடுகளின் மத்தியில் கீற்று ரேகைகள் அமைந்தால், மத்திமப் பலனையும், அதைச் சுற்றி சுழி அமைந்தால் சிறப்புப் பலனையும் தரும்.
வாழ்க்கை ஒரு புதிர். சோதனை என்ற சொல்லில் சாதனை என்ற வெற்றி வாக்கியம் ஒளிந்திருப்பதுபோல், ஒவ்வொரு பிரச்சினைக்குள்ளும், அதற்கான தீர்வு, மறைமுகமாக சொல்லப்படுகிறது. பூட்டை யாரும் தனியாக வாங்குவதில்லை, சாவியுடன் சேர்த்தே வாங்குகிறோம்.
கேள்வியும், பதிலும், வெற்றியும், தோல்வியும் என இரட்டை குழந்தை களாகவே பிறக்கின்றன.
ஜாதகக் கட்டம் தெரிந்தவர், சதுரங்கக்

ஜாதகக் கட்டம் தெரிந்தவர், சதுரங்கக் கட்டத்தில் விதியை வெல்கிறார்.
கைரேகையும் புதிரான அடையாளங்களும்
மருத்துவர் நோயாளியின் கையைப் பிடித்து நாடி சோதனையால் நோயை அறிவது போல் கைரேகை ஜோதிடர் உள்ளங்கையில் அமையும் கிரக மேடுகளையும் அவற்றை இணைக்கும் ரேகைகளையும் கொண்டு வாழ்வின் நிகழ்வுகளை அறிகிறார்.
உள்ளங்கையில் அமைந்துள்ள இதய ரேகை, புத்தி ரேகை, ஆயுள் ரேகை போன்றவை பலருக்கும் ஒரேமாதிரி அமைய வாய்ப்புண்டு. ஆனால், கட்டைவிரல் ரேகைகள் ஒரே மாதிரி அமைவதில்லை. உருவத்தில் ஒற்றுமையுள்ள இரட்டைக் குழந்தைகளுக்கும் கட்டைவிரல் ரேகைகள் மாறுபடும். பெருவிரல் ரேகைகளின் அமைப்பு எண்ணிலடங்காதவையாக இருந்தாலும், அடிப்படையான அமைப்பை ஓரளவு பகுத்து அறியலாம். பெருவிரலின் மேல் பகுதியில் முதல் அங்குலாஸ்தியில் அமையும் ரேகையே, தனித்தன்மை வாய்ந்தது. நாடிஜோதிடத்தில் பெருவிரலின் ரேகையைக்கொண்டே ஒருவரின் வாழ்க்கை நிகழ்வுகளைக் கணிக்கி றார்கள்.
* கூடார வடிவு: இந்த வகை யான கைரேகைகள் கூடாரம்போல் அமைந்திருக்கும். இந்த அமைப்பைக் கொண்டவர்கள் ஆழ் மனதிலுள்ள ரகசியங்களை வெளிகாட்டாதவர்கள். அடிக்கடி குழப்பமடைவார்கள். அவர்களின் மன ஓட்டத்தை எளிதில் கணிக்கமுடியாது. இவர்கள் சவால்களை விரும்புவார்கள். பலசமயம் இவர்கள் தாங்களாகவே தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட்டு மாட்டிக்கொள்வார்கள். சில நேரங்களில் பலரையும் நம்பி, தவறான வழிகாட்டுத லால் கெட்ட பெயரை சம்பாதித்துக்கொள்வர். மிகவும் அரிதாக சிலருக்கு இந்த அமைப்பு கூர்முனையாக அமையாமல் வளைந்து காணப்படும். இதுபோன்ற அமைப்புடையவர்கள் எதிலும் முடிவெடுக்கத் தயங்கி, காலம் தாழ்த்துவார்கள். சுழல் ரேகை: ஆற்றில் உண்டாகும் நீர்ச் சுழல் போல் அமையும் ரேகை அமைப்பே சுழல் ரேகை.
* இரு மைய சுழல் ரேகை: இந்த வகையான கைரேகையைக் கொண்டவர்கள், அனைவருடனும் இணக்கமாக இருப்பார்கள். அவர்கள் மனம் திறந்த புத்தகம்போல் எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். மனதில் நினைத்ததை ஒளிவு மறைவில்லாமல் வெளிக்காட்டக் கூடியவர்கள். ஆனாலும், எதிலும் முழு கவனத்தையும் செலுத்த முடியாதவர்களாக இருப்பார்கள். பிறரை எடைபோடுவதில் வல்லவராகத் திகழ்வர். விரைவாக முடிவெடுப்பதும் எடுத்த வேலையை கண்ணும் கருத்துமாக முடிப்பதும் இவர்கள் இயல்பு.
* ஒரு மைய சுழல் ரேகை: ஒரே மையப்புள்ளியைச் சுற்றி சுழல் வடிவம் கொண்டால் அது அரிதான அமைப்பாகும்.
இந்த வகையான ரேகை அமைப்பு உள்ளவர்கள் சுய விளம்பரத்தை விரும்பு வார்கள். சுயநலம்மிக்கவர்கள். தன்னுடைய மகிழ்ச்சிக்காக எதையும் செய்யத் துணிந்தவர் கள். சர்வாதிகார எண்ணம் உடையவர்கள். மற்றவர்களை கட்டுப்படுத்த விரும்புவார்கள். ஆனால் தன் சுதந்திரத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.
* உள்நோக்கிய சுழல் ரேகை: இந்த ரேகை இருப்பவர்கள் கூட்டத்தைக் கண்டு அஞ்சுபவர்களாக இருப்பார்கள். பொது நிகழ்ச்சிகளைத் தவிர்த்து, தங்களைத் தனிமைப் படுத்திக்கொள்வார்கள்.
ஆனாலும், ஒளிவு, மறைவு இல்லாமல், தங்கள் கருத்தைக் கூறக்கூடியவர்கள். தனிப்பட்ட திறமையால், பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யக்கூடியவராகவும் இருப்பார்கள். இவர்கள், பெரும்பாலும், விஞ்ஞானிகளாகவும், ஆராய்ச்சியாளர்களாகவும் இருப்பார்கள். அமைதியாகவும், ஆற்றலுடையவராகவும் விளங்குவர்.
(தொடரும்)
செல்: 63819 58636