Advertisment

உடலே உன் வீடு! - புதிய வாஸ்து சாஸ்திரம் (40)

/idhalgal/balajothidam/your-body-your-home-new-vastu-shastra-40

"ஆர்பெற்ற ஆயுள் ரேகை அடியது கங்கணத்தில்

சீர் பெற்ற பல கட்டங்கள் செழிப்பாகத் தோன்றில் அன்னார்

பார்பெற்ற அதிர்ஷ்டம் தங்கி பரம்பரையாய் வாழ்ந்தோர்

பேர்பெற்ற குடும்பம் தன்னில் பிறந்தவராய் காட்டும் தானே.'

பொருள்: கங்கண மேட்டில், ஆயுள் ரேகை ஒட்டிய பாகத்தில் பல கட்டங்கள் அடுக்கடுக்காய் காணப்பட்டால், அவர் செல்வாக்கான குடும்பத்தில் பிறந்து, கிராம அதிகாரியாகப் பதவி வகிப்பார்.

பூ மாலையில் வாழை நார் கண்களுக் குப் புலப்படாது. அதேபோல் காலத்தால் தொடுக்கப்பட்ட நிகழ்வுகள் தெரிந்தாலும் காலத்தை நாம் புரிந்து கொள்வதில்லை. காலத்தின் இயக்கத்தையும் அதன் ரகசியத் தையும் புரிந்துகொள்ளும் கலையே ஜோதிடம். அதன் இரு பிரிவுகளே ஜாதகமும், கைரேகை சாத்திரமும்.

Advertisment

vv

கைரேகைய

"ஆர்பெற்ற ஆயுள் ரேகை அடியது கங்கணத்தில்

சீர் பெற்ற பல கட்டங்கள் செழிப்பாகத் தோன்றில் அன்னார்

பார்பெற்ற அதிர்ஷ்டம் தங்கி பரம்பரையாய் வாழ்ந்தோர்

பேர்பெற்ற குடும்பம் தன்னில் பிறந்தவராய் காட்டும் தானே.'

பொருள்: கங்கண மேட்டில், ஆயுள் ரேகை ஒட்டிய பாகத்தில் பல கட்டங்கள் அடுக்கடுக்காய் காணப்பட்டால், அவர் செல்வாக்கான குடும்பத்தில் பிறந்து, கிராம அதிகாரியாகப் பதவி வகிப்பார்.

பூ மாலையில் வாழை நார் கண்களுக் குப் புலப்படாது. அதேபோல் காலத்தால் தொடுக்கப்பட்ட நிகழ்வுகள் தெரிந்தாலும் காலத்தை நாம் புரிந்து கொள்வதில்லை. காலத்தின் இயக்கத்தையும் அதன் ரகசியத் தையும் புரிந்துகொள்ளும் கலையே ஜோதிடம். அதன் இரு பிரிவுகளே ஜாதகமும், கைரேகை சாத்திரமும்.

Advertisment

vv

கைரேகையும் புதிரான அடையாளங்களும்

மின்னலும், இடியும் ஒரே நேரத்தில் புறப்பட்டாலும், ஏக காலத்தில் புலப்படு வதில்லை. இடி விழுவதற்கான அறிகுறியை, மின்னல் முன்கூட்டியே கட்டியம் கூறும். கைரேகையின் குறியீடுகளை அறிந்து வரப்போகும் நிகழ்வுகளுக்கு கட்டியம் கூறும் கலையே கை ரேகை ஜோதிடம்.

* பர்வதம்: இந்த ரேகை மிகவும் அரிதானது. இதை "மலை' ரேகை என்றும் குறிப்பிடுவார்கள். இந்த ரேகை அமைப்பை உடையவர் கள் பெரும்பாலும் தலைமைப் பொறுப்பிலிருப்பார்கள். மன உறுதியும், உயர்ந்த நோக்கமும் அவருடைய தனிதன்மையைக் காட்டும்.

Advertisment

* குஞ்சம்: இது, நெற்கதிர்போலவும் காணப்படும். இந்த ரேகை அமைப்புடையவர், ஒரே நேரத்தில் பல சிந்தனைகளால் அலைக் கழிக்கப்படுவார். எதிலும் நிதானம் இருக்காது. பதர்போல் ரேகை இருந்தால் பதறிப்போவார்; காரியம் சிதறிப் போகும்.

* நீர்க்குடம்: சிலருக்கு சந்திர மேட்டில் நீர்க்குடம் போன்ற குறியீடு அமையும். இது செல்வச் செழிப்பைக் காட்டும் அறிகுறி. சேமிப்பில் கெட்டிக்காரராகவும் இருப்பார்.

* கலப்பை: உள்ளங்கையில், ஏர்க் கலப்பை போன்ற குறியீடு இருந்தால் ஆழ்ந்த சிந்தனை மனோதத்துவத்தில் ஆர்வம், ஆராய்ச்சிகளில் ஈடுபாடு போன்றவை பலனாக அமையும்.

* வாள்: போர்வாள் போன்ற குறியீடு செவ்வாய் மேட்டில் காணப்பட்டால் துணிவு மிகுந்தவர். அஞ்சாத நெஞ்சமுடையவர். இதே குறியீடு சனி மேட்டில் இருந்தால் வாழ்க்கை போராட்டமாகவே அமையும்.

* சாலமன் ரேகை அல்லது சக்திரேகை: இந்த ரேகை, ஆண்களுக்கு வலது கையிலும் பெண்களுக்கு இடது கையிலும் அமையும். குருமேட்டில் கீழ் நோக்கியவாறு கோடுகள் இருப்பதே சாலமன் ரேகையாகும். சிலருக்கு மோதிர வளையம்போல் அமையும். சாலமன் ரேகை அமைந்தால் எதிர்காலத்தை முன் கூட்டியே உணரும் சக்தி உடையவராக இருப்பார்.

பிற உயிர்களின் உணர்வுகளை அறிந்தவராகவும் இருப்பார். புலனாய்வுத் துறையிலும் துப்பறி யும் துறையிலும் சிறந்து விளங்குவார். இந்த வளையம் ஆழமாகவும் தெளிவாகவும் இருந்தால் அது அதிக புத்திசாலித்தனம் மற்றும் கூர்மையான உணர்வு இருப்பதைக் குறிக்கிறது. உயர் புகழையும் பதவியையும் அடையலாம்.

சாலமன் ரேகை, நுட்பமான அறிவின் அறிகுறியாக அமைவதால், அந்த அமைப்புள்ளவர் ஆசிரியர், வழக்கறிஞர், நீதிபதி, உளவியல் ஆலோசகர், ஆன்மிக குரு போன்ற பதவிகளை அலங்கரிக்கலாம்.

வியாழனின் வளையம் அரை வட்டத்தில் இருந்தால் அடிக்கடி உணர்ச்சிவசப்படுபவர். இசையில் சிறந்த சாதனையாளர்.

வியாழனின் வளையம் ஒளி மற்றும் தெளிவற்றதாக இருந்தால் எதிலும் ஆர்வம் அதிகம். ஆனால் செயலாற்றல் குறைவு.

சாலமனின் இரட்டை வளையம் இருந்தால், எந்த பிரச்சினையையும் எளிதில் சமாளிக்கும் ஆற்றலுடையவர். நுண்ணறிவு உள்ளவர். மற்றும் மற்றவர் மனதை எளிதில் புரிந்து கொள்ளக்கூடியவர்.

* அமானுஷ்ய ரேகை: உள்ளங்கையின் மையத்தில் இதயக் கோட்டிற்கும் புத்தி ரேகைக்கும் இடையில் காணப்படும் சிலுவை யைப் போன்ற ஒரு குறியே, அமானுஷ்ய ரேகை.

இது அமானுஷ்ய விஷயங்களில் அதிக ஆர்வத் தைக் குறிக்கும். சாலமன் ரேகையும், அமா னுஷ்ய சிலுவைக் குறியும் அமைந்தவர்கள் தெய்வீகத் தன்மையுடையவர்கள். அவர் களால் எதையும் சாதிக்கமுடியும்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala151124
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe