"சுக்கிர மேட்டுக் கப்பு சூரிய மேட்டின் மீது

சக்கரத் தீவில் நின்றால் சதி வழக்கு எதிரியாக்கும்

அக்கணித்தடையில் அன்னார் விடுதலை அடைதற்கு

இன்னா விலங்கு மாட்டி சிறை புகக்காட்டும்.'

Advertisment

பொருள்: சுக்கிர மேட்டின் கிளை ரேகை சூரிய மேட்டில் ஏறி ஒரு தீவுக் குறியை உருவாக்கினால் ஒரு சதி வழக்கில் சிக்கி விலங்கிடப்பட்டு சிறை செல்வார். சுக்கிர மேட்டில் உருவாகும் கிளை ரேகை இதய ரேகைவரை சென்று தீவுக்குறியை உருவாக்கினால், ஆயுள் தண்டனை பெறுவார்.

சப்த தாதுக்களாகிய சாரம், ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, சுக்கிலம்- சுரோணிதம் என்னும் ஏழு சத்துக் களும் சரியான முறையில் அமைந்தால் நோயற்ற வாழ்வைப் பெறலாம் என்பதே ஆயுர்வேத மருத்துவத்தின் அடிப்படை யாகும். முக்கியமான ஏழு உயிர் சத்துக் களும் ராகு- கேது நீங்கலாக, சூரியன் முதலான ஏழு கிரகங்களையே குறிக்கும். இவற்றில் ஏற்படும் மாறுபாடுதான் ஆசை, பசி, நோய், இன்ப- துன்பம் ஆகிய அனைத்துக்கும் காரணமாகிறது. சப்த கிரகங்களே ஏழு உயிர் சத்துக்களும் அமைவதற்குக் காரணமாகின்றன. நாடி பார்த்து நோயறியும் மருத்துவர்போல் ஜோதிடரும் ஜாதகத்தில் ஒரு ராசியில் நூற்றைம்பது பிரிவுகளாக வியாபித்திருக் கும் நாடி அம்சத்தைக்கொண்டு துல்லிய மான பலனறியலாம். ஆண்களுக்கு வலக்கையிலும் பெண்களுக்கு இடக்கை யிலும் நாடி பார்ப்பதுபோல் கை ரேகை பார்ப்பது, மருத்துவத்திற்கும் ஜோதிடத்திற் கும் உள்ள ஒற்றுமையைக் காட்டும்.

கைரேகையும் புதிரான அடையாளங்களும்

Advertisment

நில வரைபடங்களில் முக்கியமான இடங்கள் பல குறியீடுகளால் விளக்கப் படுவதுபோல், வாழ்க்கையின் வரைபடமாக வுள்ள கைரேகையிலும் பல புதிரான அடையாளங்கள் தோன்றி நிகழ்வுகளை வருமுன் உரைக்கும்.

ss

தீவுக்குறி

கைரேகைகளில் தீவுக்குறி இருப்பது அந்த இடத்தில் அமைந்துள்ள ரேகை, மேடுகளின் நல்ல பலனைக் குறைத்து விடும்.

* ஆயுள் ரேகையில் தீவுக்குறி இருந்தால் அந்த குறிப்பிட்ட ஆயுளில் உடல் ஆரோக் கியத்தில் கேடும் ஆயுளுக்கு ஆபத்தும் ஏற்படும்.

* புக்தி ரேகையில் தீவுக்குறி இருந்தால் மனநோய் உண்டாகும்.

* இதய ரேகையில் சூரிய மேட்டின்கீழ் தீவுக்குறி இருந்தால் இதயப் பிரச்சினைக்கு காரணமாக அமையும்.

* விதி ரேகையில் தீவுக்குறி இருந்தால் வாழ்க்கை முன்னேற்றப் பாதையில் தடை களும், துன்பங்களும் உண்டாகும். எதிர் பாராத செல்வ இழப்பு ஏற்படும்.

* சூரிய ரேகையில் தீவுக்குறி இருந்தால் அரசாங்க விரோதமும் பதவி பறிபோதலும் உண்டாகும்.

* ஆரோக்கிய ரேகையில் தீவுக்குறி இருந்தால் தீராத நோய் உண்டாகும்.

நட்சத்திரக்குறி

பொதுவாக, சனி மேடு நீங்கலாக, மற்ற கிரக மேடுகளில் நட்சத்திரக்குறி இருந்தால் நற்பலனையே தரும்.

* சனி மேட்டில் நட்சத்திரக்குறி இருந்தால், எவ்வளவு செல்வாக்கு உடையவ ராக இருந்தாலும், வாழ்க்கையின் முடிவு கொடுமையானதாகவே இருக்கும்.

*சூரிய மேட்டில் நட்சத்திரக்குறி இருந்தால் புகழ்பெற்ற தலைவனாகலாம்.

அரசாங்க ஆதரவு கிடைக் கும்.

* புதன் மேட்டில் நட்சத்திரக்குறி இருந்தால் தொழிலில் அதிக லாபமும், மிகுந்த செல்வாக்கும் தேடி வரும். தகவல் தொடர்புத்துறையில் முன்னேற்றமும் உண்டாகும்.

* குரு மேட்டில் நட்சத்திரக்குறி இருந்தால், மதிப்பு, மரியாதை அதிகமாகக் கிடைக்கும்.

* குரு மேட்டிற்குக் கீழே ஆயுள் ரேகைக்குள் அடங்கிய செவ்வாய் மேட்டில் நட்சத்திரக்குறி இருந்தால், காவல்துறை அல்லது இராணுவத்தில் பெரிய பதவியில் இருப்பார்.

* புதன் மேட்டிற்குக் கீழே, இதய ரேகைக்கும் புத்தி ரேகைக்கும் நடுவேயுள்ள செவ்வாய் மேட்டில் நட்சத்திரக்குறி இருந்தால் வாழ்க்கையில், கடுமையான முயற்சிக்குப்பின், வெற்றியும் புகழும் அடைவார்கள்.

* சந்திர மேட்டில் நட்சத்திரக்குறி இருந்தால், புதுமையான சிந்தனைக்கு சொந்தக்காரராக இருப்பார். புதிய கண்டு பிப்புகளுக்குக் காரணமாவார்.

* சுக்கிர மேட்டில் நட்சத்திரக்குறி இருந்தால் வாழ்க்கையில் எல்லாத் துறையிலும் வெற்றியே உண்டாகும். தோல்வி அருகில் வராது.

ம்ருஹி (மான்) முத்திரை

கட்டைவிரல் நுனியை, மோதிர விரல் மற்றும் நடுவிரலின் முதல் ரேகைக் கோட்டில் வைத்து அழுத்தவேண்டும். மற்ற இரண்டு விரல்கள் நீட்டி இருக்கவேண்டும். உள்ளங்கை மேல்நோக்கிப் பார்த்தவாறு தொடையின்மேல் இரு கைகளிலும் முத்திரை பிடிக்கவேண்டும்..

பலன்

மனதை அமைதிப்படுத்தி,கவனத்தைக் கூர்மையாக்கும்.