"சுக்கிர மேட்டின்மீது தோன்றும் சதுரக் கட்டம்
அக்கரமொன்று கூடி ஆருடு விளக்கம் போன்றால்
சொக்கட்டன் ரேகையாகும் சூதாட காட்டும் இன்றேல்
தக்க சீட்டாடக் காட்டும் சாதகர் வாழ்வில் தானே'.
பொருள்: சுக்கிர மேட்டுக்கு நடுவில், பல சிறு கட்டங்கள் கூடி சொக்கட் டான் கட்டம்போலவோ, சதுரங்கப் பலகைபோலவோ அமைந்தால் சூதாட்டத்தில் ஆர்வமுண்டாகும்.
ஏழு ஸ்வரங்கள் பல ராகங்களைத் தோற்றுவிப்பதுபோல், வானவில்லின் ஏழு வண்ணங்களே பல வர்ணஜாலங்களை உருவாக்குவதுபோல் ராகு- கேது நீங்கலாக, ஏழு கிரகங்களின் கலவையே எல்லா மனிதப் பிறவிகளையும் படைத்து, ஆட்சிசெய்கிறது. ஏழு கிரகங்களின் ஆளுமையைப் பெற்ற நாட்களும் அதன் உபப் பிரிவாகவுள்ள ஹோரைகளுமே எல்லா நிகழ்வுகளுக்கும் காரண மாகின்றன. கை ரேகையும், ஜாதகமும் இதன் பிரதிபலிப்பாகவே அமைகின்றன என்பதே உண்மை.
கைரேகையும் புதிரான அடையாளங்களும்
கைரேகைகளிலும், சப்த மேடுகளிலும் தோன்றும் குறியீடுகள் வெற்றி, தோல்விகளை அடிக்கோடிட்டுக் காட்டும். கோடு, சதுரம், பெருக்கல் குறி, தீவுக்குறி, சொக்கட்டான் குறி, வலைப்பின்னல், கரும்புள்ளி, குறுக்கு நெடுக்குக் கோடுகள், முக்கோணம், வட்டம் போன்றவையே முக்கியமான குறியீடுகள். கோடு
* சூரிய மேட்டில் அமையும் ஒற்றைக் கோடு- மிகுந்த செல்வம், கௌரவம், மரியாதை ஆகியவற்றைக் காட்டும். பல கோடுகள்: கலைகளில் ஆர்வத்தையும் மற்றும் உயர் அரச பதவியையும் தரும். குறுக்கு நெடுக்குக் கோடுகள்: கலைத் துறையில் ஏமாற்றத்தைக் காட்டும்.
* புதன் மேட்டில் ஒரு கோடு- செல்வம், செல்வாக்கைக் கோடிட்டுக் காட்டும். பல கோடுகள்: வியாபாரத்தில் திறமையையும், வெற்றியையும் உறுதிசெய்யும். குறுக்கு நெடுக்குக் கோடுகள்: பல தொழில்களில் ஈடுபட்டு தோல்வியடைவதைக் காட்டும்.
* சுக்கிர மேட்டில் ஒரு கோடு- பேராசை அதீத காம இச்சையைத் தெளிவாக்கும். பல கோடுகள்: எல்லா முயற்சிகளிலும் வெற்றியைக் குறிக்கும். குறுக்கு நெடுக்குக்கோடுகள்: காதலில் தோல்வி, பிறரை நம்பி ஏமாறுதல், ஆரோக்கியத்தில் தொல்லை போன்றவற்றை விளக்கிக்கூறும்.
* செவ்வாய் மேட்டில் ஒரு கோடு- எதற்கும் அஞ்சாத தைரியத்தைத் தரும். பல கோடுகள்: பிறரைத் துன்புறுத்தி அதில் மகிழ்ச்சி காணும் கொடூர குணத்தைக் காட்டும். குறுக்கு நெடுக்குக் கோடுகள்: பிறரை வம்புக்கிழுக்கும் போர் குணத்தைக் குறிக்கும்.
* சந்திர மேட்டில் ஒரு கோடு- கற்பனைத் திறனையும், பல கோடுகள் அழகை ரசிக்கும் குணத்தையும் காட்டும். குறுக்கு நெடுக்கான கோடுகள்: மனக்குழப்பம், அச்சம், தெளிவற்ற சிந்தனையைக் குறிக்கும்..
* குரு மேட்டில் ஒரு கோடு- ஒழுக்கத் தையும், கல்வியில் ஈடுபாட்டையும் தெரிவிக்கும்.
பல கோடுகள்: ஆன்மிகத்தில் ஈடுபாடு, அதிக மத நம்பிக்கை போன்றவற்றைக் குறிக்கும்.
குறுக்கு நெடுக்கான கோடுகள்: தீய பழக்கங் களால் வாழ்க்கை வீணாவதை சுட்டிக் காட்டும்.
* சனி மேட்டில், ஒரு கோடு- நீண்ட ஆயுளை உறுதிசெய்யும். பல கோடுகள்: கடின உழைப்பைக் குறிக்கும். குறுக்கு நெடுக்கான கோடுகள்: எல்லா முயற்சிகளிலும் தோல்வி யடையும் துரதிஷ்டத்தைத் தெளிவாக்கும்.
கரும்புள்ளி
* சூரிய மேட்டில் கரும்புள்ளி காணப் பட்டால், ஏமாற்றம், இழப்பு, அவமானம், அரசு பகை, தண்டனை போன்றவையே பலனாக அமையும்.
* புதன் மேட்டில் கரும்புள்ளி இருந்தால், வியாபாரத்தில் திடீர் நஷ்டம், முதலீடு நாசமாகுதல், செய்தொழிலில் தொல்லை போன்றவற்றைத் தவிர்க்க முடியாது.
* சுக்கிர மேட்டில் அமையும் கரும்புள்ளி, சொத்து, சுகம் இழத்தல், மனைவி அல்லது கணவரால் தொல்லை, ஆசைகள் நிறைவேறாமல் போகும்நிலை உண்டாகும்.
* செவ்வாய் மேட்டில் அமையும் கரும்புள்ளி, சண்டை அல்லது விபத்தால் காயம் உண்டாகும். உடலில் ரத்தம் சம்பந்த மான நோய் வருவதற்கு வாய்ப்புண்டு.
* குரு மேட்டில் அமையும் கரும்புள்ளி கல்வியில் தோல்வி, தந்தையுடன் பகை, தீய நட்பு போன்றவற்றைக் குறிக்கும்.
ப் சனி மேட்டில் அமையும் கரும்புள்ளி, வாதநோயின் அறிகுறியாகும். தீய பழக்கத்தால், பெரும் பொருள் இழப்பும் உண்டாகும்.
* சந்திர மேட்டில் அமையும் கரும்புள்ளி, கணவன்- மனைவிக்குள் உண்டாகும் சந்தேகத் தையும், சண்டை, சச்சரவுகளையும், அதனால் வரும் மன அழுத்தத்தையும் குறிக்கும்.
(தொடரும்)
செல்: 63819 58636