Advertisment

உடலே உன் வீடு! - புதிய வாஸ்து சாஸ்திரம் (30)

/idhalgal/balajothidam/your-body-your-home-new-vastu-shastra-30

"மிருகக் கடி செந்நாய் பாம்பு விஷக்கடி பெண் நோய் நஞ்சு

கருவிழி ஊனம் மந்தம் தற்கொலை திடீராபத்து

புரிமுடம் காட்டும் அன்னார் புதன் சனி திரட்டினோடு

ரவித்திடல் கீழ் அமையும் இருதய ரேகை தானே.'

பொருள்: புதன், சூரியன், சனி மேடுகளுக்கு கீழே, வளைந்து தோன்று ரேகையே, இதய ரேகை. இதுவே, மிருகத்தால் வரும் ஆபத்து, தற்கொலை, விபத்து போன்றவற்றைசுட்டிக்காட்டும்.

Advertisment

பூவில் தேன் நிறைந்துள்ளது என்றாலும், தேனிக்கள் மூல மாகவே தேனை பெறவேண்டியுள்ளது. கட-ல் கரிப்பு சுவை யுள்ள நீர் பொங்கி வழிந்தாலும், அதை உண்ணும் நீராக மாற்ற மேகங்கள் தேவைப்படுகின்றன. அதேபோல், ஒருவருக்கு ஜாத கத்தில் பலவிதமான யோகங்களிருந்தாலும் அந்த யோகத்தை அனுபவிக்கும், தசாபுக்தியும், அனுகூலமான, கோட்சார அமைப்பும், அவர் வாழ்நாளில் அமையவேண்டும். கை ரேகை சத்திரத்தின், ஆயுள் கணக்கீடில் சரியான கோணத்தில், யோகம் தரும் ரேகைகளி

"மிருகக் கடி செந்நாய் பாம்பு விஷக்கடி பெண் நோய் நஞ்சு

கருவிழி ஊனம் மந்தம் தற்கொலை திடீராபத்து

புரிமுடம் காட்டும் அன்னார் புதன் சனி திரட்டினோடு

ரவித்திடல் கீழ் அமையும் இருதய ரேகை தானே.'

பொருள்: புதன், சூரியன், சனி மேடுகளுக்கு கீழே, வளைந்து தோன்று ரேகையே, இதய ரேகை. இதுவே, மிருகத்தால் வரும் ஆபத்து, தற்கொலை, விபத்து போன்றவற்றைசுட்டிக்காட்டும்.

Advertisment

பூவில் தேன் நிறைந்துள்ளது என்றாலும், தேனிக்கள் மூல மாகவே தேனை பெறவேண்டியுள்ளது. கட-ல் கரிப்பு சுவை யுள்ள நீர் பொங்கி வழிந்தாலும், அதை உண்ணும் நீராக மாற்ற மேகங்கள் தேவைப்படுகின்றன. அதேபோல், ஒருவருக்கு ஜாத கத்தில் பலவிதமான யோகங்களிருந்தாலும் அந்த யோகத்தை அனுபவிக்கும், தசாபுக்தியும், அனுகூலமான, கோட்சார அமைப்பும், அவர் வாழ்நாளில் அமையவேண்டும். கை ரேகை சத்திரத்தின், ஆயுள் கணக்கீடில் சரியான கோணத்தில், யோகம் தரும் ரேகைகளின் இணைவு அமையவேண்டும்.

Advertisment

ss

இதய ரேகை

உள்ளங்கையில் சுண்டுவிரலுக்கு சற்றுக்கீழாக, வெளிப்புற ஓரத்தில் தொடங்கி, ஆள் காட்டி விரலை நோக்கிச்செல்லும் ரேகைதான் "இதய ரேகை'. இது, காதல் ரேகை அல்லது உணர்ச்சி ரேகை என்றும் அழைக்கப்படுகிறது. இது கைரேகைகளில் மிக முக்கியமான ஒன்றாகும். இது ஒரு நபரின் ஆளுமை, உணர்ச்சிகள் மற்றும் வாழ்க்கைப் பாதையை வெளிப்படுத்தும்.

* இந்த ரேகை சமமாக வும் சீராகவும், தீவுகளின்றி காணப்பட்டால் நல்ல ரத்த ஓட்டத்தையும் ஆரோக் கியமான இதயத்தையும் உடையவராக திகழ்வர். இந்த ரேகை உடைந்து காணப்பட்டால் அந்த நபருக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

* இந்த ரேகையில் தீவுகள், பெரியதாகக் காணப்பட்டாலும், கரும்புள்ளி இருந்தாலும், இதய நோயால் பாதிப்பு உண்டு.

* நீண்ட இதய ரேகை உள்ளவர் அதிக கருணை உணர்வும், இரக்க குணமும் கொண்டவர். பிறருக்கு மிகவும் உதவும் குணம் கொண்டவர். இவர்கள் எளிதில் காதல் வயப்படுவார்கள்.

* குறுகிய இதய ரேகை உள்ளவர், சுயநலத்தில் மட்டுமே அக்கரை கொண்டவராகவும், சுதந்திர உணர்வு மிக்க வராகவும் இருப்பார். எளிதில் உணர்ச்சிவசப்படாதவர்.

* சிலருக்கு, இதய ரேகை, ஆட்காட்டி விரல் அல்லது நடுவிரலை நோக்கி மேல்நோக்கி வளைந்திருக்கும். அவர்கள், பாச உணர்வு மிக்கவர்களாகவும், நன்றி உணர்வுகளை அதிகமாக வெளிப்படுத்தக் கூடியவராகவும் இருப்பார். பிறரை கவர்ந்திழுக்கும் திறனைக் கொண்டவர்களாகவும் இருப்பார்.

* இதய ரேகை நேராகவும் நடுவிலுள்ள புத்தி ரேகைக்கு இணையாகவும் இருந்தால், எச்சரிக்கையான அணுகுமுறை உள்ளவர்கள். உணர்வுகளைவிட பகுத்தறிவுக்கு முன்னுரிமை கொடுப்பவர்கள். முரட்டுத்தனம் உடையவர் கள். இவர்களை காதலால் வீழ்த்தமுடியாது.

* இந்த ரேகை நடுவிரலின் அடிப்பகுதி வரை நீண்டிருந்தால் அந்நபர் உடல், மனவலிமை மிக்கவராக இருப்பார். போர்க்குணம் கொண்டவராகவும் இருப்பார்.

* இதய ரேகை மோதிர விரலின் அடிவரை மட்டுமே நீண்டிருந்தால் சிந்தனைத் திறன் குறைவாக இருக்கும். தீய, எண்ணங்களை கொண்டவர்களாக இருப்பார்கள். ஆயுள் காலமும் குறைவாகவே இருக்கும்.

* சிலருக்கு அபூர்வமாக இதய ரேகை, மிக மெல்லியதாக இருக்கும். இந்த அமைப்பைக் கொண்டவர்கள் மிக கொடூர குணங்களைக் கொண்டவர்களாகவும், தந்திர சாலிகளாகவும் இருப்பார்கள்.

* இதய ரேகையிலும், விதி ரேகையிலும், ஒருவருக்கு, தீவு போன்ற குறி தென்பட்டால், திருமண வாழ்வில் பல துன்பங்கள் உண்டாகும்.

* இதய ரேகையின் முடிவில், சிறு கிளைகளாகப் பிரிந்தால், வாழ்க்கையில் காதல் தோல்வியால் வருந்துவார்கள்.

ப் புதன், சூரிய, சனி மேடுகளை ஒட்டி, நெருக்கமாக, இதய ரேகை அமைந்தால், பொறாமை குணமுடையவர்கள்.

ப் இதய ரேகை, சனி மேட்டிற்கு மத்தியில் முடிந்தால், புத்தி கூர்மையுடையவர்.

* இதய ரேகை வாள்போல் அமைந்து குரு மேட்டில் கூர்மையாக முடிந்தால், எல்லாருடனும் பாசம் உள்ளவர்களாகவும், பிறருக்காக எந்த தியாகத்தையும் செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள்.

* இதய ரேகையின் முடிவில், இரண்டு கிளைகள் பிரிந்து ஒன்று குரு மேட்டில் சென்று முடிந்தால், மனச் சாட்சிக்கு விரோதமில்லாமல் நடப்பார்கள்.

* இதய ரேகை, சனி மேட்டில் முடிந்தால் அவர்கள் அப்பாவித் தனமான குணம் உள்ளவர். சனி மேட்டில் இருந்து கீழாக வளைந்து புத்தி ரேகை வரை தொட்டால் துரதிர்ஷ்டம் உண்டாகும். விதி ரேகையோடு சனி மேட்டிற்கு கீழேயே கலந்தால், விபத்தால் மரணம் ஏற்படக் கூடும்.

லிங்க முத்திரை இரு கைகளையும் சேர்த்து விரல்கள் ஒன்றுக்கொன்று பின்னிருப்பதுபோல் சேர்த்துக்கொள்ளவும். இடதுக்கை கட்டை விரல் நேராகவும் வலதுக்கை கட்டை விரல் மற்றும் ஆள்காட்டிவிரல் நடுவில் இருக்குமாறும் வைத்துக்கொள்ளவேன்டும்.

பலன்

மனதின் மந்த நிலை மாறி, உற்சாகம் பெருகும்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala060924
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe