Advertisment

உடலே உன் வீடு! - புதிய வாஸ்து சாஸ்திரம் (26)

/idhalgal/balajothidam/your-body-your-home-new-vastu-shastra-26

"அமைபடும் மக்கள் பேறு அலைகடல் பயண வாசம்

கமழ் தரும் களபத்தாகும் களத்திர சொத்து யோகம்

குமைபடும் லீலை இன்பம் கொக்கோகம்

அனைத்தும் காட்டும்

சமுத்திரம் என்னும் அன்னார் சந்திர மேடுதானே..'

பொருள்: சுண்டு விரலுக்கு நேர் கீழே, கங்கண மேட்டுக்கு மேலே, அமைந்த மேடே, சந்திர மேடு. இந்த மேடு, கடல் கடந்த பயணம், காமம், ஆடம்பரமான வாழ்க்கை, புத்திர பாக்கியத்தையும் தெளிவாக விளக்கும்.

Advertisment

நம் உடலின் அனைத்து உறுப்புகளின், பிரதிபலிப் புப் புள்ளிகள், நம் உள்ளங்கைகளில் உள்ளன. இதுவே, சீன மருத்துவமாகிய அக்குபஞ்சர் மருத்துவத்தின் அடிப்படை. சந்திரன்தான் "யின்' தத்துவம் (இடது கை). சூரியன்தான் "யாங்' தத்துவம்- (வலது கை). கைரேகை ஜோதிடத்தில், சுட்டிக் காட்டப்படும், கிரக மேடுகளின் காரகங்களும்,

"அமைபடும் மக்கள் பேறு அலைகடல் பயண வாசம்

கமழ் தரும் களபத்தாகும் களத்திர சொத்து யோகம்

குமைபடும் லீலை இன்பம் கொக்கோகம்

அனைத்தும் காட்டும்

சமுத்திரம் என்னும் அன்னார் சந்திர மேடுதானே..'

பொருள்: சுண்டு விரலுக்கு நேர் கீழே, கங்கண மேட்டுக்கு மேலே, அமைந்த மேடே, சந்திர மேடு. இந்த மேடு, கடல் கடந்த பயணம், காமம், ஆடம்பரமான வாழ்க்கை, புத்திர பாக்கியத்தையும் தெளிவாக விளக்கும்.

Advertisment

நம் உடலின் அனைத்து உறுப்புகளின், பிரதிபலிப் புப் புள்ளிகள், நம் உள்ளங்கைகளில் உள்ளன. இதுவே, சீன மருத்துவமாகிய அக்குபஞ்சர் மருத்துவத்தின் அடிப்படை. சந்திரன்தான் "யின்' தத்துவம் (இடது கை). சூரியன்தான் "யாங்' தத்துவம்- (வலது கை). கைரேகை ஜோதிடத்தில், சுட்டிக் காட்டப்படும், கிரக மேடுகளின் காரகங்களும், ரேகை அமைப்பு காட்டும், ஆரோக்கிய குறியீடுகளும், அக்குபஞ்சர் புள்ளிகளும் ஒன்று படுவது வியப்பானது.

Advertisment

yy

சந்திர மேடு

நமது உள்ளங்கையில் மணிக் கட்டின் கீழ்ப்புற ஓரத்தில் இருந்து உள்ளங்கையின் வெளிப்புற ஓரத்தில் உயர்ந்திருக்கும் பகுதியே சந்திர மேடு. இது, சுக்கிர மேட்டின் எதிர்புறம் அமைந்திருக்கும். மனோ காரகனாகிய சந்திரன் வலு பெற்றால்தான், வாழ்க்கையில் இன்பத்தை அனுபவிக்க முடியும்.

ஜாதகத்தில் சந்திரன் பலம்மிக்கவராக அமைந்தால், உள்ளங்கையில், சந்திர மேட்டின் அமைப்பு சீராக அமைந்திருக்கும். அவர் லட்சுமி தேவி கடாட்சம் பெற்றவராக இருப்பார்.

* சந்திர மேடு மிகவும் உப்பலாக மேல் நோக்கி இருந்தால், அந்த ஜாதகர் எப்போதும் அதிக சிந்தனையுடன் இருப்பார்.

* விதி ரேகை, சந்திர மேட்டில் இருந்து, அபூர்வமாக உற்பத்தியாகி, சனி மேட்டை அடைந்து முடிவு பெற்றிருந் தால், அந்த நபர், தன் மனைவியால் வாழ்க்கையில் வெற்றிபெறுவார்.

* சந்திர மேட்டில் நட்சத்திரக் குறி, பெருக்கல் குறி, வட்டம், கருப்பு மச்சம் உள்ளவர்களுக்கு, தண்ணீரில் ஆபத்து உண்டு.

* சந்திர மேட்டின் கீழிருந்து மேல்நோக்கி செல்லும் ரேகை இருந் தால் அந்த ஜாதகர் அடிக்கடி பயணங் கள் மேற்கொள்வார். அதிகமான வெளிநாடு களுக்கு சென்று வரக்கூடிய வாய்ப்பு இந்த ரேகை கொண்டவர்களுக்கு அதிகம் உண்டு.

அரசாங்கத்தில் அமைச்சர் போன்ற பதவி களும் வகிக்கக்கூடும்.

* சந்திர மேட்டில் வெளிப்புறத்திலிருந்து உட்புறத்தை நோக்கி செல்லும் சமநிலையான ரேகை இருந்தால், அந்த நபரின் திருமணம் அயல்தேசத்தில் நடக்கக்கூடும். மேலும் தன் வாழ்நாள் முழுவதும் அந்த நாட்டிலேயே அவர் வசிக்கக் கூடும். சந்திர மேட்டில் பெருக் கல் குறி போன்ற ரேகைகள் இருந்தால் வெளிநாடு செல்லும் யோகம் இருக்காது. அப்படி செல்வதற்கான முயற்சிகளும் தோல்வியுறும்.

* இந்த மேட்டில் சிறு கருப்பு நிற புள்ளிகள் இருந்தால் நுரையீரல் தொடர்பான வியாதிகள் ஏற்படும். சந்திர மேடு உயர்ந்து இல்லாமல் வெளிரிய நிறத்தோடு, எவ்விதமான ரேகைகளும் இல்லாவிட்டால், சற்று குழப்பமான மனநிலையை கொண்டவராக இருப்பார். அவரின் வாழ்வில் எந்தவிதமான பெரிய முன்னேற்றங்களும் இல்லாமல் சாதாரண நிலையிலேயே இருக் கும்.

* சந்திர மேடும், உள் செவ்வாய் மேடும் இணையும் இடத்தில் நட்சத்திரக் குறியீடு அல்லது சதுரக் குறியீடு இருந்தால், எதிர்காலத்தை அறியும் சக்தி இருக்கும்.

* சந்திர மேட்டில். ஒரு செங்குத்துக் கோடு, தனித்திருந்தால், அதிக காமத்தால் தொல்லை உண்டாகும். சிலருக்கு, அமைதியான உறக்கம் வராத நிலையும், தீய கனவு களும் உண்டாகும். அந்த ரேகை, ஒரு குறுக்கு ரேகையால் வெட்டுப்பட்டால், கை, கால், மூட்டுக்களில் நோய் வரும்.

* சந்திர மேட்டில், திரிசூல ரேகை அமைந்திருந்தால், கற்பனை, கலைகளில் மேம்பட்டு காணப்படுவார்கள்.

* வளைக் குறியின் அமைப்பு.

சந்திர மேட்டில் காணப்பட்டால், சிறுநீரகம் தொடர்பான நோயில் சிக்குவார். கரும்புள்ளி அமைந்தால், மன நோயால் பாதிக்கப்படுவார்.

* சந்திர மேட்டிலிருந்து, ஒரு நேர் கோடு, புதன் மேட்டை இணைத்தால், வியாபாரத்தில் சிறந்து விளங்கலாம். சூரிய மேட்டை தொடர்பு கொண்டால், அரசு ஆலோசகரக பதவி பெறலாம். சனி மேட்டை நோக்கி சென்றால், தொழிற்சங்கத் தலைவராகலாம்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala090824
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe