Advertisment

உடலே உன் வீடு! - புதிய வாஸ்து சாஸ்திரம் (25)

/idhalgal/balajothidam/your-body-your-home-new-vastu-shastra-25

"பண்டிதம் சட்ட வாதம் சங்கு தம் குரலமைப்பு

நண்டவம் பல்லியம் யாழ் நட்டுவம் நடன வைப்பு

கொண்டிடும் பாடல் நடிப்பு கூத்தோடு எழுத்து காட்டுதல்

சுண்டு தன் விரலின் கீழே தோன்றிடும் புதனின் மேடு.'

பொருள்: சுண்டு விரலுக்கு கீழே, இதய ரேகைக்கு மேலே, அமைந்த மேடே, புதன் மேடு. இந்த மேடு, சட்டவாதம், சாஸ்திர ஞானம், கலைகளில் வல்லமை போன்றவற்றைத் தெளிவாக விளக்கும்.

Advertisment

இதயமானது தோராயமாக மூடிய கை அளவுதான் இருக்கும். ஜீவன், ஒளிமயமாக, அவரவர் கட்டை விரல் அளவிலிருக்கும் (அங்குஷ்டம்). இதில் வடிவம் ஜீவாத்மா.

அதன் ஒளியே பரமாத்மா. நாம் வாழும் உலகை, ஜம்பு திவீபம் என்று நம் சாத்திரங்கள் வருணிக்கின்றன. (ஜம்பு நாகப்பழம்). கட்டை விரல் வடிவிலுள்ள ஜீவனும் சிவ லிங்கமும், நாம் வாழு

"பண்டிதம் சட்ட வாதம் சங்கு தம் குரலமைப்பு

நண்டவம் பல்லியம் யாழ் நட்டுவம் நடன வைப்பு

கொண்டிடும் பாடல் நடிப்பு கூத்தோடு எழுத்து காட்டுதல்

சுண்டு தன் விரலின் கீழே தோன்றிடும் புதனின் மேடு.'

பொருள்: சுண்டு விரலுக்கு கீழே, இதய ரேகைக்கு மேலே, அமைந்த மேடே, புதன் மேடு. இந்த மேடு, சட்டவாதம், சாஸ்திர ஞானம், கலைகளில் வல்லமை போன்றவற்றைத் தெளிவாக விளக்கும்.

Advertisment

இதயமானது தோராயமாக மூடிய கை அளவுதான் இருக்கும். ஜீவன், ஒளிமயமாக, அவரவர் கட்டை விரல் அளவிலிருக்கும் (அங்குஷ்டம்). இதில் வடிவம் ஜீவாத்மா.

அதன் ஒளியே பரமாத்மா. நாம் வாழும் உலகை, ஜம்பு திவீபம் என்று நம் சாத்திரங்கள் வருணிக்கின்றன. (ஜம்பு நாகப்பழம்). கட்டை விரல் வடிவிலுள்ள ஜீவனும் சிவ லிங்கமும், நாம் வாழும் உலகின் வடிவமும், ஒரே வடிவில் அமைந்திருப்பதே, பிரம்ம இரகசியம். அதனாலேயே கட்டை விரல் ரேகையைக்கொண்டு நாடி ஜோதிடத்தில் பலன் கூறமுடிகிறது. நம் வாழ்க்கையின் பாதையும், அதில் பயணமும், நம் கைக்குள் அடக்கம் என்பதே இயற்கையின் வினோதம். நம் கையளவுதான் நம் உலகம்.

புதன் மேடு- சுண்டு விரலுக்கு அடிப் பாகம்தான் புதன் மேடு. ஜாதகத்தில், கன்னி ராசியில் புதனும், அதற்கு எதிரேயுள்ள மீன ராசியில் சுக்கிரனும், உச்சமாவதைப்போல், சுக்கிர மேடும், புதன் மேடும், எதிரெதிரே அமைந்துள்ளதே, ஜாதகமும், கைரேகை சாத்திரமும், ஒரே உண்மைக்கு இரண்டு சாட்சிகள். சூரிய மேட்டுடன் சேர்ந்ததுபோல் புதன்மேடு அமைந்திருந்தால் புதாத்ய யோகத்தால் எளிய குடும்பத்தில் பிறந்தாலும் தன் வாழ்நாளில் பெரும் புகழை சேர்ப்பார்.

Advertisment

vasthu

* எழுத்தை ஆளும் கிரகம் புதன் என்பதால் ஒருவர் எழுத்தில் ஆளுமை செய்வதற்கு புதனின் அருள் மிகவும் அவசியம். புதன் மேடு வலுப்பெற்றவர்கள் தான் மனதில் நினைக்கும் விஷயத்தை அப்படியே எழுத்தில் கொண்டுவருவதில் வல்லவர்களாக இருப்பார்கள். உலகின் மிகச்சிறந்த எழுத்தாளர்கள் அனைவரும் புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களே.

* பத்திரிகைத் துறையில் ஈடுபடுத்துபவரும் புதன்தான். வலுப்பெற்ற புதன் மேடு ஒரு பத்திரிகையை திறம்பட நடத்தும் ஆற்றலைக்காட்டும்.

* புதன் மேடு குறுக்குக் கோடுகள் இல்லாமல் அமைந் தால்தான் ஜோதிடத்தி லும் கணிதத்திலும் பிரகாசிக்க முடியும்.

* புதன் மேடு, மிகவும் உயர்ந்து காணப்பட்டால் பிறரை விமர்சிப் பதையே தொழிலாக கொண்டிருப்பார்கள்.

* புதன் மேட்டில் தீவுக்குறியிருந்தால் துரதிஷ்டத்தைத் தரும்.

* சூரியமேடு, புதன்மேடு இரண்டையும் இணைக்கக்கூடிய ரேகை நல்ல அமைப்பில் இருந்தால் விஞ்ஞானியாக இருப்பார்.

புதன் ரேகை

இதனை ஆரோக்கிய ரேகை என்றும் கூறுவர். இது விதி ரேகையின் அருகே ஆரம்பித்து புதன் மேடு வரை செல்லும். உடலின் ஆரோக்கியத்தை, இந்த ரேகை எடுத்துக்காட்டும். புத்திரேகை, ஆயுள் ரேகை, இதய ரேகை ஆகியவற்றில் ஏதாவது குறைபாடு இருந்தாலும், இந்தப் புதன் ரேகை நன்றாக அமைந்திருந்தால், தோஷம் விலகும். புதன் மேடு பலவீனமாக இருந்தாலும் இந்த ரேகை பலமாக இருந்தால் புதன் மேட்டால் ஏற்படும் குறைபாடுகள் யாவும் விலகிவிடும். இந்த ரேகை தெளிவாகவும், மெல்லியதாகவும், ஓரளவு அழுத்தமாகவும் இருப்பது நல்லது. தீவு, பிளவு, வெட்டுக்குறி, சங்கிலிக்குறி போன்ற குறைபாடுகள் ஏதுமில்லாமல், இது அமைந்திந்தால் நல்ல பேச்சாற்றல் வியாபரத்திறமை ஆகியவற்றால் செல்வம் குவியும்.

* ஆரோக்கிய ரேகை, எந்த மேட்டில் இருந்தும் ஆரம்பமாகலாம். ஆனால், அது புதன் மேட்டில்தான் முடியும். புதன் மேட்டில் முடிவுற்றால்தான் அது ஆரோக்கிய ரேகை.

* குரு, சனி, செவ்வாய் மேடுகளிலிலும் ஆயுள் ரேகை, இதய ரேகை, விதிரேகை, மணிக்கட்டு ரேகைகள் ஆகியவற்றிலிருந்தும் துவங்கி புதன் மேட்டில் முடிவடையும்.

* சிலருக்கு ஆரோக்கிய ரேகை தெளிவில்லாமல் இருக்கலாம். அவர்களுக்கு இயற்கையிலேயே நோய் எதிர்ப்புச் சக்தியும், உடல் பலமும், மனோபலமும் இருக்கும். ஆரோக்கிய ரேகை தெளிவாக இல்லாதவர்களுக்கு ஆயுள் ரேகையைப் பார்த்தே பலன்களை அறியவேண்டும்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala020824
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe